அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, July 28, 2012

மறுமை நாளின் அவசியம்........

மறுமை நாளின் அவசியம்மனம் பேதலித்த அலி ஷீனாவின் நொண்டிச் சாட்டுக்கான பதில் பதிவு.....!

யாரோ சொன்னதாக யாரோ சொன்னார்கள்...........


"தப்பு என்பது தவறுதலாக செய்வது.........தவறு என்பது தெரிந்து செய்வது........"


அலி ஷீனாவின் கருத்துகளால் கவரப் பட்டு தனக்குத் தாமே தாம் செய்யும் தவறுகளுக்கு தவறான நியாயம் கற்பித்துக் கொண்டிருப்பவர்களிடம் நமது கேள்வி......


"நாம் தப்பு செய்கிறோமா?.....தவறு செய்கிறோமா?"

நாத்திகனாக இருந்து ஆத்திகனான ஒரு கவிஞனின் அறிவுப் புலம்பல் இறைவனின் மகிமையை, அவனது எல்லையில்லா ஆற்றலைப் புரிந்த நிலையில் யாத்த ஒரு கவி வரி மிக அற்புதமாக இப்படி இந் நிமிடமும் ஒலித்துக்  கொண்டிருக்கிறது..........


"பூஜ்ஜியத்துக்குள்ளே -ஒரு 
இராச்சியத்தை ஆண்டுகொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன்........
அவனைப் புரிந்துக் கொண்டால் 
அவன்தான் இறைவன்...."

இறைவனின் உள்ளமையிலும் இருப்பிலும் நமக்கு எதுவித சந்தேகமும் இல்லை.

நண்பர் அன்புராஜின் நிலையும் நமது நிலையும் இறைவனின் இருப்பிலும் உள்ளமையிலும் ஒன்றுதான்.

எனினும்,  அலி  ஷீனாவின் மனம் பேதலித்த உளறலினால் மறுமை நாள் என்றொரு நாள் இருப்பது சாத்தியமா என்று புள்ளியாக அன்புராஜின் உள்ளத்தில்  ஒரு தடுமாற்றம்.


இனி,மறுமை நாள் என்றொரு நாள் சாத்தியம் என்ற நமது விடயத்துக்கு வருவோம்.இறுதித் தீர்ப்பு நாள் சம்பந்தமான விவாதங்களில் ஈடுபடும் புனித வேத நூல்களில் அல் குர் ஆனில் மட்டுமே அந்த நாள் சம்பந்தமான விவரமான குறிப்புகள் காணப்படுகின்றன.

புனித அல் குர்ஆனில் நூற்றுக் கணக்கான இடங்களில் வெவ்வேறு பதப் பிரயோகங்களினூடாக அல் குர்ஆன் இறுதித் தீர்ப்பு நாள் சம்பந்தமாக மனித சமூகத்துடன் பேசுகின்றது.


அந் நாளில் மனித இனம் எதிர்கொள்ளப் போகின்ற பயங்கரமான சூழ்நிலைகளைப் பற்றி சில சந்தர்ப்பங்களில் சுருக்கமாகவும் மற்றைய சந்தர்ப்பங்களில் விரிவாகவும் அல் குர்ஆன் உரையாற்றுகின்றது. 


மனித செயல்களுக்கான கைம்மாறு கிடைக்கும் அந்நாளின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை அந்நாளின் மீது மனிதன் வைக்க வேண்டிய விசுவாசம் இறை நம்பிக்கையின் மட்டத்தில் வைத்து கணிக்கப் படுவதாகவும் இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் உள்ளது.


இதில் நம்பிக்கை தொலைத்தவர்கள், அதாவது மீண்டும் உயிருடன் எழுப்பப் படுவதை மறுப்பவர்கள் இஸ்லாத்தின் எல்லைக் கோட்டுக்கு வெளியே இருப்பவர்களாகவும் நித்தியமான இழப்பைத் தவிர அவர்களுக்கு எதுவித விமோசனமும் இல்லை என்றும் அல் குர்ஆன் தெட்டத் தெளிவாக தெளிவு படுத்துகிறது.


இதுதான் நிஜம்.


ஏனெனில்,இறைவனின் செயல்களில் மதிப்பீடு இல்லாவிட்டால், செயல்களுக்குரிய நற்கூலியும் தண்டனையும் இல்லாவிட்டால்,இறைவனின் கட்டளைகள் அவனது ஏவல் விலக்கல்கள் அடங்கிய வேதத் தூது வலுவிழந்துப் போகும்.


அந்நிலை நபித்துவத்தினதும் வேதத் தூதினதும் இருப்பும் இல்லாமையும் வித்தியாசமற்றதாகி விடும். 


நிஜத்தில் அதன் இருப்பை விடவும் இல்லாமை விரும்பத் தக்கதாகி விடும்.


அதாவது,கட்டுப் பாடுகளையும், சுதந்திரம் என்று மனித மனம் விரும்பும் கட்டுப் பாடற்ற ஆசைகளையும் துறந்து இறைவனது சட்டத்தின் விதிகளை பின்பற்றுதல் சாத்தியமில்லை.

இறைவனின் சட்டத்திற்கு கீழ்ப் படிவதால் தாக்கம் எதுவும் ஏற்படாதெனில் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அதற்காக வேண்டி தங்களின் இயல்பான சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

இந்த வாதத்தின் மூலம் இறுதித் தீர்ப்பு நாளைக் குறிப்பிடுவதும்,அதனை நினைவுகூர்வதும் மத அழைப்பு விடுக்கும் கொள்கைக்கு சமனென்பது தெளிவாகிறது.

இறுதித் தீர்ப்பு நாளில் நம்பிக்கை வைத்தல் என்பது மிகவும் வலுவானதொரு அம்சமாகும்.

அந்நம்பிக்கை நன்னெறியை நாடுமாறும்,ஒழுக்கக் கேட்டையும்,பாவச் செயல்களையும் தவிர்ந்துக் கொள்ளுமாறும் மனிதனைத் தூண்டுகிறது.

அதே போல, இறுதித் தீர்ப்பு நாளைப் பற்றி மறந்து விடுவது அல்லது அதில் நம்பிக்கை வைக்க மறுப்பது சிறிய ,பெரிய அனைத்து தீமைகளுக்கும் மூல காரணமாகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது புனிதத் திருமறையில் இவ்வாறு கூறியுள்ளான்.

"............நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருந்து தவறுகிறார்களோ அவர்கள் (கேள்வி) கணக்கு கேட்கும் நாளை மறந்து விடுவதன் காரணமாக அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு." (அல் குர்ஆன்: 38 : 26 )

இத் திரு வசனத்தில் இருந்து கேள்வி கணக்கு கேட்கும் நாளை மறந்து விடுவதே அனைத்து வழிக் கேடுகளுக்கும் மூல காரணமென்பது தெளிவாகிறது.

இப் பிரபஞ்சமும்,மனிதனும் படைக்கப் பட்டதன் நோக்கம் பற்றி நாம் சிந்தனை செய்தால் இறுதித் தீர்ப்பு நாளொன்று இருக்கும் என்பது பிரத்தியட்சமாகும்.

படைப்பைப் பற்றி நாம் சிந்தனை செய்யும் போது, அத்தியாவசியமாய் ஒருவகை இயக்கமாகவும் அமையும் எந்தவொரு செயலுக்கும் மாறாதவொரு குறிக்கோளும் நோக்கமும் இல்லாமலில்லை என்பதை அவதானிக்க முடியும்.

ஒரு செயல் சுயாதீனமாய் தன்னில் தானே முடிவதில்லை.

செயல் என்பது எப்பொழுதும் ஒரு முடிவை இலக்கிட்ட ஆரம்பமாக இருக்கிறது.

அந்த இலக்கின் காரணமாகவே அச்செயல் இருப்புப் பெறுகிறது.

உடலை வலிமையூட்டும் விளையாட்டுப் போட்டிகளை அவதானித்துப் பாருங்கள்.

எதுவுமற்றதாய் தோன்றும் பிள்ளைகளின் சாதாரண விளையாட்டுப் போட்டிகளில்கூட உடலின் இயக்கத்துக்கு இசைவான குறிக்கோளொன்று  இலக்கிடப் படுகிறது.

ஒருவகை இயக்கமாக அமையும் அந்த விளையாட்டின் செயல்களின் முடிவை நோக்கி அந்த விளையாட்டு விளையாடப் படுகிறதோ அதுவே அந்த செயலின் குறிக்கோள் எனலாம்.

குழந்தைகளின் விளையாட்டில் கற்பனையான ஒரு குறிக்கோள் உண்டு.

அக்குறிக்கோளை அடைவதே அவ்விளையாட்டின் நோக்கம்.

உலகமும் மனிதனும் படைக்கப் பட்டது இறைவனின் செயல்.

இச்செயல், எத்தகைய நோக்கமும் குறிக்கோளுமின்றி நிகழ்கிறதென்பது சாத்தியமில்லை.

உலகையும் மனிதனையும் படைத்ததற்கு ஒரு நோக்கமும் குறிக்கோளும் நிச்சயமாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் இவற்றின் பலாபலன்கள் இறைவனைச் சேர்வதில்லை.

அவன் எத்தகைய தேவையுமற்றவன்.

எனவே,அந்த செயல்களின் விளைவுகள் படைப்பினங்களையே சேர்கின்றன.

இவ்வாறு உலகம் நிலைகொண்டிருக்கும் பிரபஞ்சமும்,உலகில் நிலைகொண்டிருக்கும் மனிதனும் அழிவையோ கெடுதியையோ அறியாத பரிபூரண, நிலையான யதார்த்தம் நோக்கி நெறிப் படுத்தப் பட்டுள்ளார்களென கூற முடியும்.

மதக் கல்வியினதும்,ஒழுக்கப் பயிற்சியினதும் கண்ணோட்டத்தில் நாம் மனித செயல்களின் விளைவுகளைக் கவனித்தால் மனிதர்கள் மத வழிக் காட்டலின் விளைவாகவும் ஒழுக்க நெறிப் பயிற்ச்சியின் விளைவாகவும் நல்லவர்கள் என்றும் தீயவர்கள் என்றும் இரு பிரிவினர்களில் பிரிந்துப் போகிறார்கள்.

என்றாலும், இவ்வுலகில் இந்த இரு சாரருக்கும் இடையில் வித்தியாசம் பாராட்டப் படுவதில்லை.

ஆச்சரியமாக, இந்த உலகில் துன் மார்க்கர்களும் அநீதர்களுமே தங்களின் வரையரையில்லா சுதந்திரத்தின் காரணமாக அல்லது கட்டுப் பாடிழந்த செயல்களின் காரணமாக வெற்றியையும் ஆளுமையையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதற்கு நேர் மாற்றமாக,நன்மை செய்யும் பொழுது,அல்லது கட்டுப் பாடுடன் வாழ முற்படும் பொழுது எதிர்ப்பையும்,தடைகளையும்,சோதனைகளையும் எதிர் கொண்டு சமாளிக்க வேண்டியுள்ளது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த உலகத்தின் நியதி இவ்வாறுதான் இருக்கிறது.

இந் நிலையில்,இறை நீதியைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதரும் தத் தமது செயல்களுக்கு லுக்கு ஏற்றதொரு வெகுமதியைப் பெறுவதற்கு நீதம் செலுத்தப் படுகின்ற இன்னொரு உலகின் இருப்பு அவசியமாகின்றது.

இவ்வாறு, படைப்பினதும் இறை சட்டங்களினதும் நோக்கத்தை மிகக் கவனமாக ஆராய்கையில் ஒவ்வொரு மனிதனும் இறுதித் தீர்ப்பு நாளை எதிர் கொண்டேயாக வேண்டுமென்று புலனாகும்.

ஏக வல்ல அல்லாஹுத் தஆலா அதனை அல் குர்ஆனில் இவ்வாறு தெளிவு படுத்துகிறான்.

"வானங்களையும் பூமியையும் அதற்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. நிச்சயமாக தக்க காரணத்திற்காக வேயன்றி , இவைகளை நாம் படைக்கவில்லை.எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துக் கொள்வதில்லை." 
(அல் குர்ஆன்: 44 ஆவது அத்தியாயம் 38-39 ஆவது திரு வசனங்கள்.)


மனித செயல் விளைவுகளின் விசாரணை முடிவுகளைப் பற்றி அல் குர்ஆன் இப்படி பேசுகிறது.


"அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது,பயபக்தியுடையோரை பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?"
 (அல் குர்ஆன்: 38 ஆவது அத்தியாயம் 28 ஆவது திரு வசனம்.)


எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடன் இருப்பதும்,மரணமடைவதும் சமமாகுமா?அவர்கள் முடிவு செய்துக் கொண்டது மிகவும் கெட்டதாகும்"
(அல் குர்ஆன்: 45 ஆவது அத்தியாயம் 21 ஆவது திரு வசனம்.)


என்றாலும் நண்பர் அன்புராஜின் இன்னொரு பதிவு இப்படி பதிந்தது.

Judgement day is impossible for the following reasons. 1.The Moral code on which Judgement would be delivered should have given to the Human being when he was created/ appeared on the earth in a perfect language well known to him.It is not so 2.Pre historic man lived like animals.He is evolving socially and culturally.
3.Even today in Andaman islands there are people who live naked and knows no moral code.How would God Judge them ? Based on Arabian standard ie Koran..They are blessed with no Prophet/Avatars rishis Imams ...etc.Is it fair to Judge them on the Judgement day along with you Mr.Abdul Razaak ? If God did that,Is it not a injustice ? God / Allah is so cruel and blind to them to have left them without culture and spirituality.Allah is so deadly partition that He has shown the right (?)path to Arabian Penisula and neglected several parts of the world.Allah must be put to hardest section of Hell for His negligence and partition attitude.If a Andaman tribal man who woyuld rise from the dead on judgement day,asked God why have you been so unfair to me by allowing to lead a life of a animal ,What Allah would say to him? How is Allah going to Justify his wrong doings ?இந்தக் கேள்விக்கு அல்லது கேள்விகளுக்கு அஹ்லுல்பைத் தமிழ் தளம் சொல்லப் போகும் பதில் என்ன?


கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.


பதிலுடன் சந்திக்கிறோம்.

5 comments:

Dr.Anburaj said...

.Your title shows your deficiency.Essentials of Judgement day.....It must be justifications for Judgement Day. All my questions put forth against Judgement day is my own only. Ali sina does not raise any questions against judgementday . for all such questions his answer is AGNOISTISM. Your arguments are too shallow and childish-suitable to cheat a child. " Koran says so " is no answer.Please come out of Koran first and adduce evidances which logically conclude in J.Day.Hindu and its braches have produced men and women of exalted character.They did not believe in Judgement Day. So the belief in judgement day is a precondition for a cultured life is fallacious and needs debunking.The glorious Hindu society - Buddhists,Sikhs,is a concrete proof to prove that One can remain highly moral without believing in Judgement Day.

Dr.Anburaj said...

இந்தக் கேள்விக்கு அல்லது கேள்விகளுக்கு அஹ்லுல்பைத் தமிழ் தளம் சொல்லப் போகும் பதில் என்ன?கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
பதிலுடன் சந்திக்கிறோம்.Please refer to my letter - Judgement day is a nonsense -based on Genes .Please answer that questions also.

Dr.Anburaj said...

Allah has created not only men and women But also enuchs-Thirunagaigal. What is their role in our society /Thirunangaigal ?
2.Severe Physical handicap since birth- why ?
3. One child is blessed with all facilities and luxuries But the child in a somalian /Andaman tribal family etc are blessed with provery...etc.
Why this injustice ? Genes and previous Educations are responsible for normal/abnormal behaviour. How would judge all those children in the Judgement Day ?

Dr.Anburaj said...

Please include children born with chromasomal disorder

Dr.Anburaj said...

நியாய தீர்ப்பு நாள் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று நான் தங்களுக்கு ஏற்கனவே பல காரண்ங்கள் எழுதியிருந்தேன்.
கிழே சொன்ன சம்பவம் உண்மையா ?
பொய்யாகிப்போன முகம்மதுவின் போதனைகள் என்றுச்சொல்லலாமா ?

//muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

Book 041, Number 7051:
அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”//

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad