அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, July 28, 2012

அன்புராஜுக்கு பதில் சொல்லிவிட்ட இமாம் அலி........


....

மறுமை நாளின் அவசியம் சம்பந்தமாக அல் குர்ஆன் ஆதாரங்களையும், மனித செயல் விளைவுகளின் எதிர் விளைவுகளையும் முன்நிறுத்தி நாம் சொன்ன பதிலில் நமது நண்பர் அன்புராஜ் திருப்திக் கொள்ளவில்லை என்பதை அவரது பின்னூட்டம் நமக்கு தெளிவு படுத்தியது.

அவர் சொல்லுவது சரி.

அல் குர்ஆன் ஆதாரங்கள் அவருக்கு அவசியம் இல்லை.

அது அல் குர்ஆனை இறைவனின் திரு வேதம் என்று நம்புபவர்களின் பிரச்சினை.

ஒரு இந்து சகோதரருக்கு அல்லது பௌத்த சகோதரருக்கு அல் குர்ஆனின்  ஆதாரங்கள் அவசியம் இல்லை.

இந் நிலையில் அதென்ன மறுமை நாள் என்றொரு நாளின் அவசியம் சம்பந்தமாக நாம் நம்பிக்கை வைக்க மறுக்கும் அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்களை எடுத்து சொல்லி நழுவுகிறீர்கள் .......என்ற தோரணையில் அல்லது அது போன்றதொரு கருத்தை அவரது பின்னூட்டம் முன்வைத்தது.

தர்க்கவியலாக மறுமையின் அவசியத்தை அல்லது அந்த நம்பிக்கையின் அழகான செயல் விளைவுகளை நமது பதிலில் அவர் எதிர்பார்த்திருக்கிறார்.

அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்ற சிந்தனையில் இமாம் அலியின் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தக் கதை இதுதான்.

இமாம் அலியுடைய காலத்தில் பிரபலமான ஒரு நாத்திகன் வாழ்ந்திருக்கிறான்.

அவன் இறைவனை நம்பவில்லை.

இறைவனை விசுவாசிக்கும் மக்களைக் கண்டால் அவனது வாதத் திறமையால் அவன் அவர்களின் இறை விசுவாசத்தைக் கேள்விக் குறியாககி விடுவான்.

இறைவனை விசுவாசிக்கும் பாமரர்கள் அவனைக் கண்டால் 'நமக்கெதற்கு வீண் வம்பு' என்று ஒளிந்து விடுவார்கள்.


அந்த நாத்திகனுடன் இறைவனின் உள்ளமை குறித்து விவாதம் செய்ய ஒருவரும் முன் வரவில்லை.


ஒரு நாள், அவன் தற்செயலாக இமாம் அலியை பாதையில் சந்தித்தான்.


இமாம் அலியுடைய இறை விசுவாசத்தின் உறுதியைப் பற்றி அவன் அறிந்திருந்தான்.


அவன் இமாம் அலியை வம்புக்கிழுக்கும் நோக்குடன் மனிதன் மரணித்து மண்ணுடன் மண்ணாக உக்கிப் போனதன் பின்னர் மீண்டும் உயிர்க் கொடுத்து நியாயத் தீர்ப்பு நாளில் எழுப்பப் படுவதைப் பற்றியும், அதன் பின்னர் அவனது செயல்களை விசாரித்து அந்த மனிதனை நரகத்துக்கு அல்லது சுவர்க்கத்துக்கு அனுப்பப் படுவது எவ் விதத்திலும் சாத்தியம் இல்லை என்று நமது அலி ஷீனா வைப் போல அல்லது அலி ஷீனாவை நம்பும் நமது நண்பர் அன்புராஜைப் போல நியாயங்கள் சொல்லத் தொடங்கினான்.


இமாம் அலி அமைதியாக அவன் சொல்லும் நியாயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


அந்த நாத்திகன் அவன் பக்க நியாயங்களை சொல்லி முடித்ததன் பின்னர் இமாம் அலி அவனுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.


அவர் அந்த நாத்திகனிடம்..."நண்பரே! நீங்கள் சொல்லுவதே உண்மை என்று ஒரு வாதத்துக்கு நினைத்துக் கொள்வோம்.


"அதன் படி நாம் இருவரும் மரணித்ததன் பின்னர் உக்கி மண்ணுடன் மண்ணாக கலந்து போனதன் பின்னர் நாம் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படாது போனால் இறைவனை விசுவாசித்து அவன் சொல்லிய பிரகாரம் வாழ்ந்து  மரணித்துப் போன எனக்கு ஒரு நட்டமும் இல்லை.அதே போல இறைவனை விசுவாசிக்காது மனம் போன போக்கில் வாழ்ந்து மரணித்துப் போன உங்களுக்கும் ஒரு நட்டமும் இல்லை.


"ஆனால்,தப்பித் தவறி நாம் நம்புவது போல மறுமை நாள் என்றொரு நாள் இருந்து நாம் இருவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு  நமது செயல்களுக்கு நியாயம் சொல்லவேண்டிய சூழல் உருவாகினால் நான் தப்பி விடுவேன்.நீங்கள் இறைவனிடம் மாட்டிக் கொள்வீர்கள்.


"நம் இருவரின் நம்பிக்கைகளிலும் எது சிறந்தது என்று இப்பொழுதாவது புரிந்ததா?" என்றார்.


நாத்திகன் மௌனித்துப் போனான்.

4 comments:

C.Sugumar said...

I am not an atheist. In a mathematical calculation,if in one step, the calculation is done as such 5+5=25 ,we can strongly conclude that the answer is wrong. Similarly Koranic teaching must not contradict with well established truth.Judgement day contradicts with so many established truths- all are contained in my letter. Please refute my points one by one quoting each point verbatum .I want answer for split-up details. Please ...

C.Sugumar said...

Mr.Imam Ali was sober and had cool nerves.i appreciate him.But let us delve deep into the subject. We never go unrewarded for our deeds-good or Bad. " How"-- is the question ?
I am sure it is not heaven/Hell.Religion should evolve.Once scientists all over had believed that atom was undividable.Further researches had shown that atom is dividable. That kind of innovation is essential in religion also to find out a theory which explains all objections.
Belive in god.But we need not keep on believing .........

Dr.Anburaj said...

மறுமை நாளின் அவசியம் சம்பந்தமாக அல் குர்ஆன் ஆதாரங்களையும், மனித செயல் விளைவுகளின் எதிர் விளைவுகளையும் முன்நிறுத்தி நாம் சொன்ன பதிலில் நமது நண்பர் அன்புராஜ் திருப்திக் கொள்ளவில்லை என்பதை அவரது பின்னூட்டம் நமக்கு தெளிவு படுத்தியது.
அவர் சொல்லுவது சரி.அல் குர்ஆன் ஆதாரங்கள் அவருக்கு அவசியம் இல்லை.அது அல் குர்ஆனை இறைவனின் திரு வேதம் என்று நம்புபவர்களின் பிரச்சினை.I cannnnot Believe blindly not only in Koran But also any Hindu scripture.If a idea /concept contained in Koran contradicts universal truths,What would you do ?.Do not say Imam Ali had already solved that.It is wise to answer all questions one by one.

Dr.Anburaj said...

It is strange no reader of Ahlulbaith wrote anything .I request and appeal to all the readers of our Web to write their comments and participate in this lively and highly illuminating debate.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad