அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, September 1, 2012

முடிவில் தொடங்கிய ஆரம்பம்..........சரியா?..........தவறா?மௌலவி பாஸ்லான்,
இலக்கம் :34,
பாகீர் மாகார் மாவத்த,
பேருவலை.

அதி கௌரவத்துக்குரிய மௌலவி பஸ்லான் அவர்களுக்கு...,

 2012 ஆம் வருட மே மாதம் 27 ஆம் திகதி நாம் எழுதி வெளியிட்டு வைத்த "அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் -ஆமினா -நரகவாதிகளா? " நூலில் நிறைய பிழைகள் இருப்பதாக 2012 ஆகஸ்ட் நோன்பு மாத நடுப்பகுதி நள்ளிரவு நீங்கள் எங்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூறினீர்கள்.

அன்றிரவே நாம் உங்களிடம் அந்தத் தவறுகளை நமக்கு எழுதி அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டியிருந்தோம்.

நீங்களும் உடனே எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டீர்கள்.ஆனால், இன்று 2012 ஆம் வருடம்  செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி ஆகியும் உங்களிடம் இருந்து எதுவித தகவலும் நம்மை வந்து சேரவில்லை என்பதை உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

நீங்கள் நாம் எழுதி வெளியிட்ட நூலில் நிறைய தவறுகள் இருப்பதாக பொதுவாக கூறியிருப்பதால் நாம் நமது நூலில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களில் நீங்கள் குறிப்பிடும் தவறுகளை தயவு செய்து நமது கவனத்துக்குக் கொண்டு வருமாறு மீன்டும் தயவுடன் வேண்டுகிறோம்.

முன்னுரை :
நாம் நமது நூல் முன்னுரையில் - maxsolberkan மிசனரியினரின் சதியை அம்பலப் படுத்தியிருந்தோம்................அது சரியா?........தவறா?

நுழையும் முன் :
 "அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ்- ஆமினா- நரகவாதிகளா?" நூலில் நுழையும் முன்  பகுதியில் கண்ணியத்துக்குரிய அந்தத் தம்பதிகளின் பெயர் கூறும் கட்டங்களில் -அலைஹிஸ்ஸலாம் அல்லது அலைஹா ஸலாம் என்று விளிக்க வேண்டும் என்று விளக்கியிருந்தோம்........அது சரியா?.........தவறா?

முதலாவது அத்தியாயம்:
அல் குர்ஆனின்  26 ஆவது அத்தியாயம் 219ஆவது ஆயத் அஷ் சுஅரா கண்ணியத்துக்குரிய நபிகளாரின் கண்ணியத்துக்குரிய மூதாதையரின் இறை விசுவாசத்தை உறுதிப் படுத்துகின்ற ஆயத் என்று நிருவியிருந்தோம்.........அது சரியா?.........தவறா?

இரண்டாவது அத்தியாயம்:
அல் குர் ஆனின் வேறு சில ஆயத்துக்களை எடுத்துக் காட்டி அண்ணல் நபியின் மூதாதையர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்த மூமின்கள் என்று நிருவியிருந்தோம். அது சரியா?.........தவறா?

மூன்றாவது அத்தியாயம:
அண்ணல் நபியின் அருமைப் பெற்றோரும் அவரது மூதாதையரும் உண்மையான மூமின்கள் என்ற கூற்றுக்கு வலு சேர்க்கின்ற ஹதீஸ் ஆதாரங்களை எழுதியிருந்தோம். அது சரியா?..........தவறா?

நான்காவது அத்தியாயம்:
நபிமார்களின் கண்ணியத்துக்குரிய பெற்றோரைப் பற்றி குறிப்பிடுகின்ற சில அல் குர்ஆன் ஆயத்துக்களை குறிப்பிட்டிருந்தோம்.அது சரியா?.......தவறா?

ஐந்தாவது அத்தியாயம்:
அண்ணல் நபியின் பாட்டனார் அப்துல் முத்தலிப் மூமின் என்று நாம் இந்த அத்தியாயத்தில் நிருவியிருந்தோம்.அது சரியா?....தவறா?

ஆறாவது அத்தியாயம்:
அண்ணல் நபியின் முப் பாட்டனார் அப்துல் மனாப் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்த மூமின் என்று நிறுவிய அத்தியாயம் இதுவாகும்.அது சரியா?.......தவறா?

ஏழாவது அத்தியாயம்:
ஹதீஸ்களைத் திரட்டி பதிவு செய்து வைத்த மதிப்புக்குரிய இமாம்களின் நுண்ணறிவை மெச்சியிருந்த அத்தியாயம் இதுவாகும்.அது சரியா?.........தவறா?

எட்டாவது அத்தியாயம்:
நபிகளாரின் பெற்றோருக்கு எதிரான ஹதீஸ் அறிவிப்புக்களில் காணப் படுகின்ற பலவீனமான பகுதிகளை இந்த அத்தியாயத்தில் இனம் காட்டி விளக்கியிருந்தோம்.அது சரியா?.........தவறா?

ஒன்பதாவது அத்தியாயம்:
அண்ணல் நபியுடன் நாம் கொள்ளும் தொடர்பு நம்மை சுவனத்தில் கொண்டு சேர்க்கும் என்று விளக்கி அதற்குரிய ஆதாரங்களையும் தந்திருந்தோம்.அது சரியா?...........தவறா?

பத்தாவது அத்தியாயம்:
அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர்களின் கண்ணியத்தை சீர் குலைக்கின்ற ஹதீஸ் அறிவிப்புக்களின் முரண் பட்ட பதிவுகளை நாம் விளக்கியிருந்தப் பகுதி இதுவாகும்.அது சரியா?..........தவறா?

பதின் ஒன்றாவது அத்தியாயம்:
அண்ணல் நபியின் சுன்னாவைக் கவனமாகப் பின்பற்றுவோர் அஹ்லுஸ் சுன்னாக்கள் என்றும்,அமீர் முஆவியாவின் ஆதரவாளர்கள் சுன்னத் வல் ஜமாத்தினர் என்றும் வேறுபடுத்தி ஆழமாக விளக்கியிருந்தோம்.அது சரியா?........தவறா?

பன்னிரெண்டாவது அத்தியாயம்:
அபூதாலிப் (ரலி) அல்லாஹ்வை விசுவாசித்த மூமின் என்று நாம் கூறிய அத்தியாயம் இதுவாகும். அது சரியா?.........தவறா?

பதின்மூன்றாவது அத்தியாயம்:
அமெரிக்க பன்னாட்டுக் கம்பனிகளின் சூழ்ச்சிகள் சம்பந்தமாகவும் , அந்தக் கம்பனிகளின் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொண்ட சில இஸ்லாமிய அறிஞர்களைப் பற்றியும் நாம் விளக்கியிருந்த அத்தியாயம் இதுவாகும்.அது சரியா?..........தவறா?

பதின் நான்காவது அத்தியாயம்:
இஸ்லாமிய வரலாற்றில் இருக்கின்ற கசப்பான பகுதிகளை -பனு உமையாக்களின் அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான அராஜகமான செயல்களை நமது உலமாக்கள் அடக்கி வாசிப்பதாக நாம் இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.அது சரியா?........தவறா?

 பதின் ஐந்தாவது அத்தியாயம்:
ஹிந்தாவின் ஒழுக்கம் சிதைந்த குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அண்ணல் நபிகளாரின் குடும்பத்தினரின் ஒழுக்கம் பிசகாத வாழ்க்கையைப் பற்றியும் நாம் விளக்கியிருந்தப் பகுதி இதுவாகும்.அது சரியா?........தவறா?


பதின் ஆறாவது அத்தியாயம்:
அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான செயல்கள் அண்ணல் நபியின் மறைவுடனேயே ஆரம்பமாகிவிட்டதாக நாம் விளக்கியிருந்த அத்தியாயம் இதுவாகும்.அது சரியா?........தவறா?

பதினேழாவது அத்தியாயம்:
டாக்டர் சாகீர் நாய்க்குக்கும் நமது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டு இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை நாம் விளக்கியிருந்த அத்தியாயம் இதுவாகும்.அது சரியா?........தவறா?

பின்னுரை:
ஒரு சிறு மழலை அண்ணல் நபிகளாரின் அருமைப் பெற்றோர் சுவனவாதிகள்தாம் என்பதை அச்சொட்டாக விளக்கி சொன்ன விதத்தை நாம் இங்கே குறிப்பிட்டிருந்தோம்.அது சரியா?.........தவறா?

நமது பெருமதிப்புக்குரிய ஹசரத் அவர்கள் நமது இந்தக் கடிதத்துக்கு இக்கடிதம் கிடைத்து பதின் நான்கு நாள்களுக்குள் பதில் தர வேண்டும் என்று விணயமாக வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
அன்புடன்,

ஒப்பம்.
அஹ்லுல்பைத் தமிழ்த் தளம்.


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad