அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, April 16, 2013

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"


"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.12 comments:

Dr.Anburaj said...

அற்புதம்.தங்கள் கருத்துக்கு நன்றி.தமிழ் இன்பம் பயில நமது தளத்திற்கு ஆசை வந்து விட்டது.அரேபியாவை சற்று மறந்து தமிழ் இலக்கியம் பிற காவியங்கள் அறிவியல் தகவல்களை ரசிக்கவேண்டியது மனதின் மனதிற்கு மிக அவசியம்.
பத்து... பத்து...

By dn

First Published : 14 April 2013 02:45 AM IST

சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து ஆகிய இப்பத்துகள் அனைத்தும் முதுமொழிக் காஞ்சி என்ற நீதி நூலினுள் உள்ளன. இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார். இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நீதியும் பழமொழிகளைப் போல அமைந்திருப்பதால் இது முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. முதுமொழி என்றால் பழமொழி. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. முதல் பத்தாகிய சிறந்த பத்தில் உள்ள பத்து அடிகளில் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்ததால் இது சிறந்த பத்தாயிற்று. அப் பத்தைக் காண்போம்!முதல் பத்து - சிறந்த பத்து1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை!

கடல் சூழ்ந்த இவ்வுலகத்து மக்கள் அனைவருக்கும் கல்வி கற்றலைவிட ஒழுக்கமுடையவராக இருப்பதே சிறந்ததாகும்.2. காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்!

பிறர்க்கு அன்பு காட்டுவதிலும் செயல்களால் அவர் போற்றும்படி உயர்ந்த மதிப்பினைப் பெறுதல்

வேண்டும். அதுவே, அன்பை விட மிக்கச் சிறப்புடையதாகும்.3. மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை!

ஒருவர் அறிவைப் பெற்றிருப்பதைவிட தான்

கற்ற கல்வியை மறவாமல் இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.4. வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை!

வண்மை என்பது வளம் பொருந்திய செல்வம். வாய்மை என்பது உண்மை, மெய்மை. பலவகைத் தீமைகளை விளைவிக்கக்கூடிய செல்வத்தை ஒருவர் பெற்றிருப்பதைவிட, நன்மையைச் செய்யும் வாய்மை உடையவராக இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.5. இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை!

ஒருவனுக்கு இளமை இன்பத்தைவிட நோயில்லாத வாழ்க்கையினால் உண்டாகின்ற இன்பமே மிகச்சிறந்த இன்பமாகும்.6. நலன்உடை மையின் நாணுச் சிறந்தன்று!

நலன் என்பது அழகு; நாணு என்பது நாணம். ஒருவர் அழகுடையவராக இருப்பதைக் காட்டிலும் நாணம் உடையவராக இருப்பதே மிகவும் சிறப்புடையது.7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று!

குலன் என்பது குடிப்பிறப்பு; கற்பு என்பது கல்வி. ஒருவன் உயர்குடியில் பிறந்தவனாக இருப்பதைவிட, கல்வி உடையவனாக இருப்பதே மிகவும் சிறப்புடையது.8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று!

ஒன்றைக் கற்றறிவதைவிடக் கற்றறிந்த பெரியோரை

அணுகி அவருக்கு வழிபாடு செய்வதே மிகவும்

சிறந்ததாகும்.9. செற்றாரைச் செறுத்தலின் தன்செய்கை சிறந்தன்று!

செற்றார் என்பவர் பகைவர்; செறுத்தல் என்பது அப்பகைவரை அழித்தல். அரசர்க்குத் தம்முடைய பகைவர்களை அழித்தலைவிட தங்களுடைய நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதே மிக்க சிறப்பைத் தரும்.10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று!

முன் என்பது முற்காலம் (இளமைக் காலம்); பின் என்பது பிற்காலம் (முதுமைக் காலம்). செல்வமானது இளமையில் பெருகிப் பின்பு குறைவதைவிட, முதுமையில், முன்பு உள்ள நிலையில் குறையாமல் இருப்பதே மிக்க சிறப்புடையது.
நன்றி தினமணி தமிழ்மணி

Dr.Anburaj said...

சுவனத்தில் என்ன கிடைக்கும்
சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்
சுவனவாழ்கையில் கிடைக்கும் எல்லாப் பாக்கியங்களை விட இறைவனைக் கானும் காட்சியே பெரிய பாக்கியம்.
சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்து விடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்?) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் (அல்லாஹ்வை காண்பார்கள்) தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்படமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி: ஸுஹைப் (ரலி)
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்ற நீங்கள் உங்கள் இரட்சகனை பார்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

சுவர்க்கத்தில் 1000 படித்தரங்களுண்டு ஒவ்வொன்றுக்கும் இடைபட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரம் போல் இருக்கிறது. ஃபிர்தவ்ஸ் என்பதுதான் உயர்வான படித்தரமாகும். இதிலிருந்து தான் சுவர்க்கத்தில் 4 ஆறுகள் புறப்படுகின்றன. அதன் மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷு இருக்கிறது. நீங்கள் அல்லாஹ்விடம் துஆசெய்தால் ஃபிர்தவ்ஸையே கேளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாதத் இப்னு ஸாமித் (ரலி)

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்த கண்ணும் (இதுவரை) கண்டிராத எந்த காதும் செவியுற்றிராத எந்த உள்ளத்திலும் தோன்றிடாதவைகளால் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (32:17) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி)
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. 32:17

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

அவர்கள் வெண்முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர் (55:72)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)

(அவர்கள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (56:35 )

அப்பெண்களைக் கன்னிகளாகவும், (56:36)

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், (56:37)

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:38)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: சுவனத்துப் பெண்களுடைய கால்களின் வெண்மை எழுபது ஆடைகளுக்கும் அப்பால் இருந்ததும் காணப்படக் கூடியதாக இருக்கும் (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையும் காணமுடியும். அவர்கள் பவளமும் முத்துமாக இருப்பார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்:இப்னு மஸ்வூத் (ரலி)

நபி(ஸல்) அவர்கள்: சுவனத்தில் இறைவிசுவாசிகளுக்கு எத்தனையோ பெண்களுடன் உறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படும் என்ற போது நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதரே! இது இயலுமா? என்று கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அன்று) நூறு பேர்களின் பலம் வழங்கப்படும் என்று கூறினார்கள். (திர்மிதி, இப்னுஹிப்பான்: அனஸ் (ரலி)

சுவனத்துப் பெண்களில் ஒரு பெண் இப்பூமியில் உள்ளவர்களுக்குக் காட்சி அளித்தால், சுவனத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதிகளைப் பிரகாசிக்கச் செய்வாள். அந்த இரண்டிற்கும் இடையே நறுமணம் வீசச் செய்வாள். அவள் தலையில் உள்ள முக்காடு இவ்வுலகையும், அதில் உள்ளவற்றையும் விடமேலானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அஹ்மத்: அனஸ் (ரலி)

Dr.Anburaj said...

எனது முந்தைய பதிவுகளில் கேட்ட கேள்விக்கு தாங்கள் மிகவும் மழுப்பலாகப் பதில் சொல்லியிருந்தீர்கள். முஸ்லீம்ஆக வாழ்ந்து பின் முஸ்லீம் மதத்தைத்துறந்த அலி சேனாவின் கருத்து அரேபிய இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என்பதற்கு மேற்கண்ட -அரேபிய மத வலைதளங்களில் எடுத்த கட்டுரையின் பத்தி நிரூபணம். திருமணம் என்ற பந்தமின்றி காட்டுவாசிகள் போல்சுவர்க்கத்தில் -சுவனத்தில் -காமக்கூத்தாடலாம் என்பது குரானின் - கண்மணி பொன்மணி அரபுமணி முகம்மதுவின் போதனைதான் என்பது உண்மைதான் போலிருக்கின்றது.இத்தகைய தகவல்களைப் படிப்பதற்கு சங்கடமாக இருக்கின்றது. சுவனத்தில் பேரழகு பெண்களோடு திருமணம்யின்றி காமக்களியாட்டம் போடலாம் என்றால் சுவனம்ஏதற்கு ? எனக்கு அப்படி ஒரு சுவனம் வேண்டாம்.வேண்டவே வேண்டாம்.

காபீராகிய -இந்துவாகிய நாங்கள் சுவனம் செல்ல மாட்டோமே! நியாயத்தீர்ப்பு நாளில் சிலை வணக்கம் செய்த குற்றத்திற்கு கோடானு கோடி கோடி இந்துக்களுக்கு நரகம்தான் அரேபிய கடவுள் அல்லாவின் தீர்ப்பு என்று கண்மணி முகம்மது ஏற்கனவே அறவித்துவிட்டாரே ! எங்களுக்குதான் சுவனமே கிடையாதே.பிறகு எனக்கு சுவனம் வேண்டாம் என்றுச் சொல்ல என்னத் தேவையிருக்கின்றது.வாழ்க அரேபியா ! சுவனமும் அரேபியாதான். ...... பெண் என்றால் காமநுகர்ச்சி மட்டும்தான் என்ற அரேபிய பிற்போக்கு கருத்து சுவனத்திலும் நிலவுகின்றது.

Dr.Anburaj said...

நபி(ஸல்) அவர்கள்: சுவனத்தில் இறைவிசுவாசிகளுக்கு எத்தனையோ பெண்களுடன் உறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படும் என்ற போது நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதரே! இது இயலுமா? என்று கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அன்று) நூறு பேர்களின் பலம் வழங்கப்படும் என்று கூறினார்கள். (திர்மிதி, இப்னுஹிப்பான்: அனஸ் (ரலி)
.........அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர் (55:72)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)(அவர்கள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (56:35 )
அப்பெண்களைக் கன்னிகளாகவும், (56:36)........

ஆக சுவனம் என்பது ஒரு அரேபிய பணக்காரனின் அந்தப்புரம்தான். இந்தியாவை ஆண்ட பல மன்னர்களின்
அந்தப்புரமும் காமக்கிழத்திகளால் நிறைந்துக் காணப்பட்டது. பெண்களின் கண்ணீரால்தான் பல சாம்ராஜ்யங்கள் அழிந்தன என்பது வரலாறு.
இராமாணாம் என்ற ஒரு கட்டுக்கதை இலக்கியம் மட்டும்தான் பெண்ணை காமநுகர்வு பொருளாகக் காட்டாமல் அன்பின் வடிவாகக் காட்டுகிறது.யுத்தத்தில் வெற்றிபெற்ற இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியை வைப்பாட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. சமூக நிலையை பிரதிபலிப்பதுதான் இலக்கியம். ராகவனின் படைகள் தோற்ற இலங்கைப்படையினரின் பெண்களை மனைவியை சகோதரிகளை ............. செய்யவில்லை.சத்ரபதி சிவாஜி அப்படியே நடந்துகொண்டார்.

Dr.Anburaj said...

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

மேலதிக தகவலுக்கு எனது "வேதனை தரும்
நன்றி

தமிழர்களின் சிந்தனைக் களஞ்சியம் என்ற வலைதளம்.

Dr.Anburaj said...

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

By ஆர். பரணீதரன்

First Published : 21 April 2013 11:58 PM IST

ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் "சும்மா' உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தாற்காலிகமாக வேறு பணியைச் செய்து நம் உடலையும், மனதையும் உற்சாகப்படுத்திக் கொள்வதாகும்.

காலம் பொன் போன்றது; மனிதன் தன் வாழ்க்கையில் பணம், பதவி, பொன், பொருள் என எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம். ஆனால், காலம் என்ற ஒன்றை மட்டும் மீண்டும் பெறவே முடியாது.

ஓய்வு என்ற பெயரால் காலத்தை வீணடிக்கும் சோம்பேறித்தனமே நம் முன்னேற்றங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

ஓய்வுபற்றிய இந்த சோம்பேறிக் கோட்பாடு, நமது குழந்தைகள் இதயத்திலும் வேரூன்றத் தொடங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் படித்துக் களைத்து, தேர்வுகளும் முடிந்துவிட்டதால், வரும் மே மாதம் முழுவதும் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி, காலை பொழுது விடிந்தது முதல், இரவு உறங்கச் செல்லும்வரை தொலைக்காட்சி பெட்டியே கதியெனக் கிடந்து தங்கள் உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கின்றனர். அல்லது கொளுத்தும் கோடை வெயில் முழுவதும் என் தலையில்தான் என கையில் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடிவிடுகின்றனர்.

மாணவர்களின் இதுபோன்ற விடுமுறைக் காலங்களைப் பயனுள்ளதாக மாற்றுவது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது. ஒவ்வொரு விடுமுறையிலும் மாணவன் கற்றுக் கொள்ளும் ஏதேனும் ஒரு விஷயம், அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயனளிக்குமாறு அவர்களின் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் அப்பாவுக்கு, அம்மாவுக்கு, அண்ணனுக்கு என நான்கைந்து செல்போன்கள் உள்ளன. அவற்றில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய உதவும் செல்போன் சர்வீஸிங் பயிற்சிக்கு ஆண் பிள்ளைகளை அனுப்பலாம். இதன் மூலம் தங்கள் வீட்டு செல்போன் மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் செல்போன்களைப் பழுது நீக்கி, பகுதிநேர தொழிலாகக் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையாகவே அவருக்கு அத் துறையில் ஆர்வம் எற்பட்டு, எதிர்காலத்தில் மிகச் சிறந்த பொறியாளராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ கூட வர வாய்ப்புள்ளது.

பெண் குழந்தைகளைத் தையல் பயிற்சிக்கு அனுப்புவதன் மூலம் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான ஆடைகளை அவர்களே தைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினருக்கும் தைத்துக் கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.

தன்னுயிரை மட்டுமின்றி, ஆபத்துக் காலங்களில் பிற உயிர்களையும் காக்க உதவும் நீச்சல் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள் பழுதுநீக்கும் பயிற்சி, தற்காப்பு கலைப் பயிற்சி மற்றும் மகளிருக்கான சமையல், கணிப்பொறி, தட்டச்சுப் பயிற்சி என கோடை காலப் பயிற்சிகள் ஏராளமாக உள்ளன. சிறு குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கணிதம், கையெழுத்துப் பயிற்சி என தினசரி 2 மணி நேரம் ஒதுக்கினாலே போதும், அவை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நற்பயனை அளிக்கும். இவ்வாறு பல துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் எத் துறையில் ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களை அத் துறையிலேயே ஈடுபடுத்தி வாழ்வை வளமாக்க முடியும்.

ஆனால், நாமோ நம் நேரத்தையெல்லாம், டி.வி. மற்றும் கணிப்பொறி முன் பலி கொடுத்துவிட்டு, ஓய்வு என்ற பெயரில் சோம்பேறியாக வாழவே நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம்.

நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் கூறியபடி, ஒரு மாணவன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் புத்தகப் படிப்பையும், 4 மணி நேரம் தொழில் படிப்பையும் பயில வேண்டும், அதுவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

இல்லையில்லை! நாங்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலாதான் செல்வோம் என்றாலும் தவறில்லை. ஆனால், அந்தச் சுற்றுலாவும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியோ, பழமையான கோவில்களைப் பற்றியோ குழந்தைகளுக்கு அக்கறையுடன் விவரியுங்கள். நமது நாட்டின் பாரம்பரியக் கலாசாரப் பெருமைகளை உணர்த்தும் இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள்.

மேற்கூறிய எதையும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, முடிந்தால் உங்கள் உறவினர்களின் வீடுகளுக்காவது விடுமுறைக்குச் சென்று வாருங்கள். அப்போது தான் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என உறவுகளின் மகத்துவத்தைக் குழந்தைகள் உணர்வார்கள். வீணாக தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து மனதையும், வெயிலில் அலைந்து உடலையும் கெடுத்துக் கொள்ளாமல் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்திய திருப்தி நமக்குக் கிடைக்கும்.
நன்றி தினமணி

Dr.Anburaj said...

வினையான விளையாட்டு

”விளையாட்டு வினையாகும்” என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அது என்ன விளையாட்டு வினையாகும் ? எப்படி விளையாட்டு என்பது வினையாக மாறும்?

அதைப் பார்க்க கம்ப ராமாயணத்துக்குப் போவோம்.

இராமனும் சீதையும் வனத்தில் வசித்த காலம். பர்ண சாலைக்கு வெளியே இராமன் அமர்ந்திருக்கிறான். சீதை உள்ளே வேலையாக இருக்கிறாள். அப்போது அங்கே வருகிறாள் சூர்ப்பணகை. இராமனைக் காண்கிறாள். காதல் கொள்கிறாள். இவன் யாரென விசாரிப்போம் என ஆவலுடனும், காதலுடனும், அளவில்லாத காமத்துடனும் இராமனை நோக்கி வருகிறாள்.

” கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி

மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத்

தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று(ஓர்)

மானின் விழிபெற்று மயில்வந்த தென வந்தாள்.”

கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின் விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்தாள் சூர்ப்பணகை.

இராமன்

வேறு கவனமாயிருந்த இராமன் காதில், சிலம்பு, மேகலை, முத்தாரம் முதலிய ஆபரணங்கள் திடீரென்று ஒலித்து ஒரு பெண்ணின் வருகையை அறிவிக்கின்றன. அவன் உடனே அந்த ஓசை வரும் இடத்தைப் பார்க்கிறான்.

” விண் அருள வந்ததொரு மெல்லமுதம் என்ன”

வந்து தோன்றிய அவளது மோகன வடிவத்தைப் பார்த்து “இவர் யாரோ? இந்த அழகுக்கு எல்லையும் உண்டோ?” என்று பிரமிக்கிறான்.

சூர்ப்பணகை அருகில் வந்து இராமன் முகத்தை நோக்குகிறாள். உடனே நாணம் கொண்டு சற்று ஒதுங்கி நிற்கிறாள். அவளுடைய வேல் போன்ற கண்கள் அவன் அழகை விழுங்குகின்றன.

இப்போது இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? திடீரென்று மாயாவி போல் வந்த இவள் யார், எங்கிருந்து வந்தாள், எப்படி வந்தாள், இவளது நோக்கம் என்ன என சற்று சிந்தித்து எச்சரிகையாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் இராமன் அப்படிச் செய்யவில்லை. அவன் அவளுக்கு நல்வரவு கூறி உபசரித்து, ” உங்கள் ஊர் எது? உங்கள் பெயர் என்ன? உறவினர்கள் யாவர்?” என்று வினவுகிறான்.

அதற்கு சூர்ப்பணகை, நான் பிரம்மதேவனுடைய பேரனுடைய மகள். சிவபெருமானின் தோழனாகிய குபேரனின் தங்கை என்கிறாள். தன் பெயரைக் கேட்டவுடன் இராமன் மயங்க வேண்டுமென எண்ணி ”காமவல்லி” என்ற ஒரு பொய்ப் பெயரைத் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளுகிறாள்.

இராமனின் கேள்விகளுக்கு பதில் சொன்னதுடன், தான் கணவனை இழந்தவள் என்பதை மறைத்து ”மணமாகாத கன்னிப் பெண்” என்றும் பொய் புகல்கிறாள். அதைக் கேட்டபிறகுதான் இராமனுக்குச் சந்தேகம் வருகிறது. ஆனாலும் “இன்னும் சிறிது விசாரிப்போம்” என்று நினைத்து, மேலும் அவளுடன் பலவாறாகப் பேசுகிறான். ” நீ ஒரு துணையுமில்லாமல் இங்கே தனியாக வந்தது ஏன்” என்று கேட்கிறான்.

உடனே சூர்ப்பணகை மிகவும் பவ்யமாக ”உங்களால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது” என்கிறாள். “காரியத்தைச் சொல்; இயலுமானால் செய்வேன்” என்று இராமன் சொன்னதும் அவள்,

” தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்பதென்ப(து)

ஆமெனல் ஆவதன்றால் அருங்குல மகளிர்க்கம்மா

ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய்வேன் யாருமில்லேன்

காமன் என்றொருவன் செய்யும் வன்மையைக் காத்தி யென்றாள்.”

என்கிறாள்.

வெளிப்படையாக இராமன் மேல் உள்ள வேட்கையை சற்றே நாகரிகம் கலந்த வார்த்தைகள் கொண்டு பசப்பு மொழியில் தெரிவிக்கிறாள் சூர்ப்பனகை.

அதைக் கேட்ட இராமன் துணுக்குற்று, “இவள் நாணம் இல்லாதவள்; நல்லவளும் அல்லள்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு பதில் சொல்லாமல் அமர்ந்திருக்கிறான்.

உடனே மேலும் பலவாறாக அவனிடம் பேசுகிறாள் சூர்ப்பனகை.

அவளைப் பற்றிய உண்மையைக் கண்டறிய ஆவல் கொண்ட இராமன், ”நீ பிராமண குலம் ஆயிற்றே. உன்னை நான் மணந்து கொள்வது வருணாசிரம தர்மத்தை மீறுவதாகுமே” என்கிறான். (கவனிக்க: இராமன் ஒரு ஷத்திரிய அரசன். இராவணன் பிராமணன்)

உடனே சூர்ப்பணகை. அதனால் என்ன, என் தாய் ராட்சஸ ராஜகுலத்தைச் சேர்ந்தவள் என்கிறாள். (கவனிக்க: பிராமணத் தந்தைக்கும் ராட்சஸத் தாய்க்கும் பிறந்தவர்கள் தான் இராவணன், சூர்ப்பனகை, விபீஷணன் போன்றோர். அந்தக் காலத்திலேயே இவ்வாறான கலப்பு மணங்கள் மிகுந்திருக்கின்றன)

Dr.Anburaj said...

பொருட்பால் - அரசியல் - காலமறிதல்
குறள் 481:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

கலைஞர் உரை:

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மு.வ உரை:

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

Translation:

A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.

Explanation:

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time
குறள் 490:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

கலைஞர் உரை:

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

மு.வ உரை:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

Translation:

As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

Explanation:

At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.


Dr.Anburaj said...

படித்துச்சுவைத்தவை 3

பகவத் கீதையின் ஸாராம்சம்

“கர்மண் ஏவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன
மாகர்ம பலஹேதுர்பூ மா தே ஸங்கோஸ்த்வகர்மணி”
நாம் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது, பலன் அமைவது நம் வசத்தில் இல்லை என்பது தெரிந்தாலும், பலனை எதிர்பார்த்துதான் நாம் செயல் புரிகிறோம். இந்த எதிர்பார்ப்பு, நம் விருப்பு, வெறுப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டது. இந்த எதிர்பார்ப்பு பொதுவாக அனைவருக்குமே உள்ளது என்பதால், இது பிரச்சனை அல்ல. பலன் கிடைக்கும்போது நாம் அதை எதிர்கொள்ளும் விதம்தான் பிரச்சனையை உருவாக்குகிறது.

ஆனால், ‘பலனை மனதில் கொண்டு செயல்படு. அந்தப் பலனை அடைவதற்குத் தகுந்த மாதிரி திட்டமிடு’. நன்கு செயல்படு. ஆனால், பலன் நீ எதிபார்த்த மாதிரி அமைவதில்லை என்றால், உணர்ச்சி வசப்படாதே, அதை ஏற்றுக்கொள்வதில் கோபம், சலிப்பு, தளர்வு, வெறுப்பு போன்ற எதிர்ப்பு உணர்வுகள் கொள்ளாதே.’ இந்த ஸ்லோகத்தை இவ்வாறுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிடைத்ததை பகவத் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனிதப் பிறவி
மனிதப் பிறவியைத் தவிர ஏனைய எல்லாப் பிறப்பிலும் உடம்பு குறுக்கே வளார்கின்றது. ஆடு, மாடு, யானை, பூனை, புலி, எலி என்ற எல்லாவற்றையும் பாருங்கள். அவை குறுக்கே வளர்கின்றன. மனிதன் ஒருவன்தான் மேல் நோக்கி வளர்கின்றான். முதுகு, கழுத்து, சிரம் என்பவற்றை நேரே அமைத்து பத்மாசனத்திலிருந்து ஜபம், தியானம், யோகம் புரிவதற்கு இம்மானிட உடம்பினாலேயே இயலும்.

ஏனைய உடம்புகள் அதற்கு ஏற்றனவல்ல. ஆதலினாலேயே அரிது அரிது மானிடராதல் அரிது என்கின்றார் ஒளவையார்.

நாம் உயர்வு பெற வேண்டுமானால்
நாம் எல்லோரும் உயர்ந்திருக்க வேண்டும். நம் வாழ்வு உயர வேண்டும் என்றுதான் கருதுகின்றோமேயன்றி அதற்குரிய வழிவகைகளை நாம் நன்கு சிந்திக்கின்றோமில்லை. சிந்தித்து அதனைச் செயல்முறையில் கொண்டு வருகின்றோமில்லை.
பணமும், படிப்பும், குணமும், பதவியும் நமக்கு நிச்சயமாய் உயர்வைத் தரமாட்டா. எனவே அவைகளை உயர்த்தும் முயற்சியுடன் நின்றுவிடக் கூடாது.
வேறு என்ன செய்தால் விரைவில் உயர்ச்சி பெறலாம் என்று அறிவுள்ளவார்களுக்குத் தோன்றும்?
நமது உள்ளம் உயர்ந்தால் நாம் உயர்வு பெற முடியும்.
நாம் கடவுளிடத்தும், மனைவி மக்களிடத்தும், நண்பர்களிடத்தும் அன்பு வைக்க வேண்டுமே தவிர ஆசை வைக்கக் கூடாது. இப்போ உங்கள் உள்ளத்தைச் சோதித்துப் பாருங்கள். அன்பு பிறவியைக் கொடுக்கும். ஆசை நிறைந்த உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் விளையமாட்டா. அங்கு கோபம், மயக்கம் என்பன வரும். ஆகவே நமது ஆசைகளை முதலில் களைய வேண்டும். திடீர் என்று ஒரே நாளில் இதனைச் செய்தல் இயலாதுதான் படிப்படியாக விடவேண்டும்.

அன்பு, ஆசை, அருள்
அன்பு என்றால் என்ன, அதன் சொரூபம் யாது என்று சிறிது சிந்திப்போம்.
ஒருவன் தன் மனைவி பிள்ளைகளுக்கு உடை, நகை போன்றவற்றை வாங்கிக் கொடுக்கின்றான் என்றால் அதை அன்பு என்றுவிட முடியாது. தான் கண்டு மகிழ வேண்டும் என்ற பயன் கருதிச் செய்வதனால் அது ஆசையாகும். தன் பிள்ளையைப் படிப்பிக்கின்றான் அது தன் முதமைப் பருவத்தில் தன்னைக் காப்பாற்றும் என்று. நண்பர்களுக்கு உயர்ந்த விருந்தளிக்கிறான் தன்னை மெச்சுவதற்காக.கடவுளிடம் போகின்றான் கடவுள் மீது கொண்ட அன்பாலா தனது ஆசைகளை நிறைவேற்றவே இப்போ நீங்கள் உங்கள் உள்ளத்திலே சிந்தித்துப் பாருங்கள் உங்களிடம் எவ்வளவு அன்பு உள்ளது என்று. எனவே இவை யாவும் ஆசைகளே.
அன்பு உடையவரே மனிதர், ஆசையுடையவார்கள் மனித விலங்குகள். அந்த அன்பு அருளாக மாற வேண்டும்.
அழுகின்ற குழந்தைக்குத் தாய் பால் கொடுத்தால் அது அன்பாகும். தெருவிலே அழுகின்ற குழந்தைக்குப் பாலும் பழமும் கொடுத்தால் அது அருளாகும்.

ஆசையுடையார்- விலங்கு
அன்புடையார்- மனிதர்
அருளுடையார்- தேவர்

தியாகம்.
அருளின் உச்சியில் பழுப்பது தியாகம். தியாகத்தின் சிகரத்தில் நின்றவர் காந்தியடிகள். அவருடைய வாழ்வு முழுவதும் தியாகந்தான். அவருடைய சொற்களில் தியாக மணிகள் உதிர்ந்தன. செயலில் தியாகப் பழங்கள் பழுத்தன. அவர் இறுதியில் தம் உயிரையே தியாகம் புரிந்து அமர வாழ்வு பெற்றுவிட்டார். அவரது தியாகம் இமயமலை போல் உயர்ந்து நிற்கின்றது. தன்னலமில்லாத நன்னலமுடைய அத்தியாகம் என்றும் குன்றாத மணி விளக்காக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. கல்லையும் கனிவிக்கும் அத்தியாகம் சொல்லையும் கடந்து துலங்குகின்றது.
சொல்லிலும் செயலிலும் பொதுநலம் பேண வேண்டும். கடவுளிடம் வேண்டுகின்ற போதுங் கூட, கடவுளே என்னை, என் குடும்பத்தைக் காப்பாற்று என்று கேட்கக் கூடாது. எல்லோரையும் காப்பாற்று உயிர்கள் யாவும் வாழ அருள் செய் என்று தியாக உணர்ச்சியுடன் கேட்டால் அது மனிதனைப் புனிதனாக்கும்.

Dr.Anburaj said...

கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;
நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்
ஆகவே செய்யின், அமிர்து. 2

கற்பு - கற்றல்
நற்பு - நன்மை

கற்புடைய பெண் அவன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள், கற்றுப் பொறிகளைந்தையும் அடக்கியவன் உலகத்திற்கு அமிர்தம் போன்றவன், நற்செய்கைகளையுடைய நாடுகள் அந்நாட்டிற்கு நன்மையைச் செய்யும் வேந்தனுக்கு அமிர்தம் போன்றது, அவனுக்கு நன்மை செய்யும் சேவகன் அவனுக்கு அமிர்தமாகும்.
உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டு
இடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழிய
வேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை;
ஈண்டின், இயையும் திரு. 4

திரு - செல்வம்
ஈகை - கொடுத்தல்

ஒருவன் தன் பிறவியை ஒழிக்க தவமும், புகழையடைய ஈகையும், உள்ளத் தூய்மையாய் இருக்க, அறிந்தும் அறியாமையும், பிறர் மனையாளை விரும்பாமையும், நாடோறும் வருவாய் சிறிதாக இருந்தாலும் செல்வமும் வேண்டிய அளவு வந்து சேரும்.

படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்
இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்
கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு. 5

நடை - ஒழுக்கம்
வன்கண் - வீரம்

படைக்கு அழகானது யானைப்படை, பெண் இடைக்கு அழகானது சிறுமை, அரசனுக்கும் ஒழுக்கத்ததுக்கும் அழகு நடுவு நிலை மாறாத சொல்லாகும். படைவீரர்க்கு அழகு அஞ்சாமை ஆகும்.

பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும்
முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால்
பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன்
காத்து உண்பான் காணான், பிணி. 6

பற்று - சார்பு
சான்றவன் - பெரியோன்

தவமுடையவன், கடவுள் நூலை உணர்ந்து ஒழுகுபவன்; எல்லாம் உணர்ந்தவன் தலைவனாவான்; அந்தணன் பிறர்க்கு பகுத்துக் கொடுத்து உண்பான்; பெரியோன் பழியை விலக்கி வாழ்வான்; தமக்கு நல்லனவற்றை அறிந்து உண்பவன் நோய்வாய்பட மாட்டான்.

கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை;
எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக்
கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான், நன்று என்றல் வனப்பு. 7

வனப்பு - அழகு
கிளர் - விளங்குகின்ற

கண்ணுக்கழகு கண்ணோட்டம், காலுக்கழகு பிறரிடம் இரக்க செல்லாமை, ஆராய்ச்சிக்கு அழகு தன் கருத்துக்களைத் துணிந்து சொல்லுதல், இசைக்கு அழகு கேட்பவர் நன்று என்று கூறுதல், அரசனுக்கு அழகு குடிமக்கள் அவனை நல்லவனென்று கூறுதல்.

கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்;
நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக்
கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான்
உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. 8

கொடுங்கரி - பொய்ச் சான்று

உயிர்களைக் கொன்று உண்பானுடைய நாக்கு, பொய்ச்சான்று சொல்வானுடைய நாக்கு அற்றுப்போகும். கற்றுணர்ந்தவர் முன் கல்லாதானுடைய நாக்கு அடங்கும். தான் சொல்லிய சொல்லைக் கேட்காதவன் முன் சொன்னவன் நாக்கு எழாது. உதவி செய்தவன் செய்த தீமையைச் சொல்லாத சான்றோன் நாக்கு பிறருக்கு அதனைக் கூறும்.
உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டு
இடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழிய
வேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை;
ஈண்டின், இயையும் திரு. 4

திரு - செல்வம்
ஈகை - கொடுத்தல்

ஒருவன் தன் பிறவியை ஒழிக்க தவமும், புகழையடைய ஈகையும், உள்ளத் தூய்மையாய் இருக்க, அறிந்தும் அறியாமையும், பிறர் மனையாளை விரும்பாமையும், நாடோறும் வருவாய் சிறிதாக இருந்தாலும் செல்வமும் வேண்டிய அளவு வந்து சேரும்.

படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்
இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்
கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு. 5

நடை - ஒழுக்கம்
வன்கண் - வீரம்

படைக்கு அழகானது யானைப்படை, பெண் இடைக்கு அழகானது சிறுமை, அரசனுக்கும் ஒழுக்கத்ததுக்கும் அழகு நடுவு நிலை மாறாத சொல்லாகும். படைவீரர்க்கு அழகு அஞ்சாமை ஆகும்.

பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும்
முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால்
பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன்
காத்து உண்பான் காணான், பிணி. 6

பற்று - சார்பு
சான்றவன் - பெரியோன்

தவமுடையவன், கடவுள் நூலை உணர்ந்து ஒழுகுபவன்; எல்லாம் உணர்ந்தவன் தலைவனாவான்; அந்தணன் பிறர்க்கு பகுத்துக் கொடுத்து உண்பான்; பெரியோன் பழியை விலக்கி வாழ்வான்; தமக்கு நல்லனவற்றை அறிந்து உண்பவன் நோய்வாய்பட மாட்டான்.

Dr.Anburaj said...

பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்; பிழைத்த,
பகை, கெட வாழ்வதும், பல் பொருளால் பல்லார்
நகை கெட வாழ்வதும், நன்று. 14

இழைத்த - பிறர் செய்த

பிறர் செய்த தவற்றைப் பொறுத்தல் பெருமை, பிறர் செய்த தீமையை நினைத்துக் கொண்டே இருத்தல் சிறுமை. பிறரிடம் பகை கொள்ளாது வாழ்தலும், செல்வரும் நல்லோரும் ஏளனம் செய்யாது வாழ்வது நன்மையுடையதாகும்.

Dr.Anburaj said...

இலங்கை மண்ணில் இப்பிரச்சனை உண்டா ?
எச்சிலால் ஏற்படும் கிருமித் தொற்று!

இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் உமிழ்நீரை விரல்களால் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணுவது, பேருந்து நடத்துநர்கள் உமிழ்நீரால் விரல்களை நனைத்து டிக்கெட் விநியோகம் செய்வது, மாணவர்களும் ஆசிரியர்களும் விரல்களை உமிழ்நீரில் தோய்த்து புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டுவது, சூப்பர் மார்க்கெட்களில் பாலிதீன் கவர்களைப் பிரிப்பதற்காக உமிழ்நீரில் தொட்ட விரல்களைப் பயன்படுத்துவது போன்ற ஆரோக்கியக் குறைவான செயல்களில் ஈடுபடுகிறார்கள். எச்சிலால் ஏற்படும் கிருமித் தொற்றுகளால் உண்டாகும் வியாதிகள் பற்றி ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?
எஸ்.அனந்தராமன்,
புட்டபர்த்தி.
நோய்கள் ஏற்படுவதற்கான காரணத்தை நிஜம் என்றும் ஆகந்துகம் என்றும் இருவகையாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. தவறான உணவு அல்லது செய்கையால் உடல் உட்புற தோஷங்களாகிய வாத, பித்த கபங்கள் சீற்றமடைந்து தாதுக்களையும் மலங்களையும் கேடு அடையச் செய்து நோய்களை உருவாக்குவது "நிஜம்' என்றும், வெளிப்புறக் காரணங்களாகிய பூதம், விஷம், வாயு, காயம், முறிவு முதலியவற்றால் தோன்றுபவையும், காமம், குரோதம், பயம் முதலிய மனம்சார்ந்த காரணங்களால் தோன்றுபவையுமான எல்லா நோய்களும் "ஆகந்துக'மென்றும் குறிப்பிடுகிறது. நீங்கள் குறிப்பிடும் வகை "ஆகந்துகம்' என்ற வகையைச் சேர்ந்ததாகும்.
கைக்கு கை மாறும் பணத்தில் கண்களுக்குப் புலப்படாத எண்ணற்ற கிருமிகளும் அழுக்குகளும் இருக்கும்நிலையில், கைவிரலை உமிழ்நீரில் நனைத்து எண்ணி, மறுபடியும் அதே விரலை வாயிலுள்ள உமிழ்நீரில் நனைத்தால், ரூபாய் நோட்டுகளிலுள்ள அழுக்குகளும் கிருமிகளும் வாயினுள்ளே வந்து சேர்ந்து விடும். வயிற்றுப் பகுதிக்கு அரணாக, வாயினுள் அமைந்துள்ள எச்சில் சுரப்பிகள், ருசி கோளங்கள், டான்சில், அடினாய்டு, உள்நாக்கு, பற்கள் போன்ற பகுதிகளை இந்தக் கிருமிகளும், அழுக்குகளும் தாக்கக் கூடிய ஆபத்தை வீணாக வரவழைத்துக் கொள்ளும் தவறான பழக்கமாகும் இது. ஏதேனும் வழியாக அவை மூளைப் பகுதிக்குச் சென்றுவிட்டால் மூளையைக் கவசம் போல் பாதுகாக்கும் சவ்வுப் பகுதியில் தாக்கினால், கடுமையான மூளை உபாதைகளைச் சந்திக்க வேண்டி வரும். சுரப்பிகள் தடித்து வீங்கிச் செயலாற்றும் திறன் குன்றிப் போவதால் ஏற்படும் உபாதைகளை நீக்குவதற்காக கடும் உணவுக் கட்டுப்பாடும் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வயிற்றினுள் சென்றுவிட்டால் இனம் புரியாத வலி, வாந்தி, பேதி போன்ற உபாதைகளையும், காய்ச்சல், தோலில் தடிப்பு, அரிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
இதற்கு மாற்று வழியாக, நீரால் நனைத்த பஞ்சு டப்பியை தொட்டு, நோட்டு எண்ணுவதை சில இடங்களில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அமர்ந்து இருக்கக் கூடியவர்களுக்கு இதை எளிதாகச் செய்ய முடியும் நடத்துநர், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பவர்கள் இதை ஒரு சிறிய வடிவத்தில் கழுத்திலிருந்து கட்டித் தொங்கவிட்டு, அதன் மூலம் ரூபாய் நோட்டுகளையோ, பாலிதீன் கவர்களையோ தொட்டு அவற்றைப் பிரித்துக் கொடுத்தால் அவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பது மட்டுமல்ல, அதை வாங்குபவருக்கும் அருவருப்பை ஏற்படுத்தாது. இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் முடியும்.
நீங்கள் குறிப்பிடும் தவறான இந்தச் செய்கையால் நோய்க் கிருமிகளும் அழுக்குகளும் வாயினுள் சென்று அவ்விடத்தில் ஏதேனும் நோய்களைத் தோற்றுவித்தால், "கபளக்கிரஹம்' என்ற ஒரு சிகிச்சை முறையால், உபாதைகளை நம்மால் குறைக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. கருங்காலிக்கட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப் பட்டை, வேலம்பட்டை ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதமெடுத்து, 400 மி.லி. தண்ணீரில் கலந்து, கொதிக்கவிட்டு, 200 மி.லி. ஆனதும், குளிர்ந்த பிறகு, வடிகட்டி வாயினுள் விட்டு, அசைத்துக் குலுக்கித் துப்பி விடுதலுக்கு கபளக்கிரஹம் என்று பெயராகும். சுவையறியாமை, வாயில் உண்டாகும் அழுக்கு, கெட்ட நாற்றம், சுரப்பிகளில் ஏற்படும் கிருமித் தொற்று போன்றவை இதன் மூலம் குணமாகும்.
அலைபேசியையும், அடையாள அட்டையையும் நாடா மூலம் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வது சகஜமாகிப் போன இக்காலத்தில் நீரால் நனைத்த பஞ்சு டப்பியையும் தொங்கவிட்டுக் கொண்டு பயன்படுத்தினால், அதற்கு நல்ல வரவேற்பு பொதுமக்களிடம் இருந்து நிச்சயம் கிடைக்குமே தவிர, யாரும் குறை சொல்லமாட்டார்கள் என்பது உறுதி.
நன்றி தினமணி

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad