அஹ்லுல்பைத் Headline Animator

Monday, April 8, 2013

86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும், நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி. அதிர்ச்சி தரும் சித்திரவதைகள்.


86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும்நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி.
அதிர்ச்சி தரும் சித்திரவதைகள்.

ஆக்கம் :ஹைதர் அலி 
 
டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி..ஆபியா 2003 மார்ச்30ல்பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல்போனார்.
 

டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில்,ஆப்கானிஸ்தானின் பக்ரம் (Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாகசெய்திகள் கசியத்துவங்கின.
கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத்தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ்மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படிPrisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும்சிறைக்காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும்ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண்கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலாத அளவுக்குதுன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர், ஜூலை 6, 2008இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கையாளராகவிருந்த இவோன் ரிட்லி.செய்திச் சேகரிப்பிற்க்காக சிறைச்சாலை சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப்போனார். நொடி கூட தாமதிக்காமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து இச்செய்தியை வெளி உலகிற்குக்கொண்டுவந்தார்.

அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும்அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம் என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி. அப்பெண்யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டெடுப்பதற்க்காக பாகிஸ்தான் விரைந்தார். இதேவேளை,முஆசம் பெக் என்ற முந்தைய குவாண்டனாமோ சிறைவாசி தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார். தான்இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின்குவாண்டனாமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண், பலஆண்  காவலர்களால் கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாகதனது நூலில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ‘ஜஸ்டிஸ் கட்சி’யின் தலைவரான இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர்ஆபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார். 

அவர் பெற்ற வதைகள் மிகவும் பயங்கரமானதும் மனிதாபிமானம் உள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுகொள்ள முடியாதாஅராஜகங்கள் அவர் பெற்ற வதைகளில் சில Dr. ஆபியா சிந்தீக்கியின் தாய் இப்படி கூறுகின்றார் ஆறு பேர் வதை முகாமுக்குவருவார்கள் அவர்கள் பலவந்தமா ஆபியாவை நிர்வாண படுத்தி பாலியல் வதை செய்வார்கள் அந்த நிலையில் இரத்தம் ஓடும்வரைதுப்பாகிகளின் பின் புடியினால் மிக மோசமாக அறைவார்கள் நிர்வாண படுத்தப்பட்ட ஆபியாவை கட்டில் ஒன்றில் கால்களையும் ,கைகளையும் கட்டி கால்களிலும் , தலையிலும் வர்ணிக்க முடியாத சித்திர வதைகளை செய்வார்கள் அவரின் உடலில் அறியபடாததிரவங்களை ஊசியின் ஊடாக செலுத்துவார்கள் உடைகளை பலவந்தமாக நீக்கி வதை முகாமில் அவரின் தலை முடியில் பிடித்துஇழுத்து வதைப்பார்கள் எல்லா வற்றுக்கும் மேலாக அவரை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறுவதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார். 

அவர் சிதைக்க பட்டார், அவரின் மானம் சிதைக்கப்பட்டது ,அவரின் குடும்பம் சிதைக்க பட்டது மூன்று குழந்தைகளுடன் கடத்த பட்டஆபியா வர்ணிக்க முடியாத வதைகளை அனுபவித்தார் , கணவனை இழந்தார் இவருடன் கடத்த பட்ட மூன்று குழந்தைகளில் ஒருபெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் எங்கு இருகின்றார்கள் என்ற விபரம் இன்னும் எவருக்கும் தெரியாது.

அனைத்தையும் இழந்த ஆபியா வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்தஅமெரிக்க பயங்கரவாதிகள், ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆபியா அமெரிக்காவின் நியூயார்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். 

அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது. சக்கர நாற்காலியொன்றில் ஆபியா கொண்டுவரப்பட்ட காட்சி அங்கிருந்தசகலரையும் கண்ணீர் மல்கச்செய்தது. சிறைச்சாலை சீருடை, குவாண்டனாமோவில்
அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கியுடன் வந்தவர், அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கிதலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையையும் மறைத்துக் கொண்ட ஆபியாவின் இஸ்லாமிய உணர்வுகண்டு பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர். 

அமெரிக்க புலனாய்வு ஜன்ட்டுகாளால் ஆப்கானிஸ்தான் இரகசிய சிறையில் அடைக்கப்பட்திருந்த போது ஒரு FBI அதிகாரியிடம்துப்பாகியை பறித்து அந்த FBI அதிகாரியையும் ஒரு இராணுவ அதிகாரியையும் சுட்டார் என்றும் , பேரழிவு தாக்குதல் - mass-casualty attacks- என்று எழுதப்பட்ட ஒரு ஆவணம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்த பட்டு 86 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளதுஅமெரிக்க அநீதி மன்றம்.
 
இந்த சகோதரி சிறை மரணித்து விட்டதாக செய்திகள் வந்தது, ஆனால் வேறு சில செய்தில் உயிருடன் இருபதாக வருகிறது. 

அல்லாஹ் அறிந்தாவன் யா அல்லாஹ் இந்த சகோதரிக்கும் அவர் குழந்தைகளுக்கும் உன் கருணையை பரிபுரனமாகவழங்குவாயாக உலகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு அக்கிரமகாரங்கலின் தீங்கை விட்டு முழுமையான பாதுகாவலைகொடுப்பாயாக மேலும் அக்கொடுமையார்களின் சூழ்ச்சியை முறியடிப்பாயாக இந்த அக்கிரமகாரர்களுக்கு உன்புறத்தில் இருந்துதண்டனையை விரைந்து அனுப்புவாயாக.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகளுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான்அவர்களுக்கூரிய தண்டனை அல்லாஹவிடம் இருக்கிறது இன்னும் அதற்குரிய தண்டனை வெகு தூரத்தில் இல்லை.
 
 
HYDER ALI - HRM
Psychologist
Resource Development Training Consultant. 

7 comments:

Dr.Anburaj said...

படிக்கவே மனம் கூசுகின்றது. பல மனிதர்களின் மனது இன்னும் கற்காலத்திலேயே உள்ளது.குறிப்பான காவல்துறை , ராணுவம் போன்ற அமைப்பில் உள்ளவர்களின் மனது .............................. ” அன்பு” ஒளி பரவும் அளவு உலகம் நன்மை பெறும். ஆப்கானிஸ்தான் சிறையில் அதிகாரிகளாக ஆப்கானிஸ்தானிய முஸ்லீம்கள் யாருமே இல்லையா ? ஒரு இயக்கச் சிந்தனை உள்ளவர்கள் மற்ற இயக்கத்தவர்களை அழிப்பது அந்த இயக்கத்தின் மேல் கொண்ட பற்று ஆர்பம் என்று பொருள்படுத்தப்படு்ம் தரம் கெட்ட மனநிலைதான் இன்றளவும் நிலவுகின்றது. கொடூரமான செயல்களைச் செய்யும் துர்புத்திக்கு அமெரிக்கர்களும் யுதர்களும் மட்டும் சொந்தக்காரர்கள் அல்ல. பலர் பார்க்க சிறு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்று அதை காணொளிப்படமாக எடுத்து வெலைதளத்தில் வெளியிட்டக் கொடுமைகளை அரேபிய மதவாதிகளும் நிறையவே செய்துள்ள தங்களுக்கும் தெரியும்.கடவுள் ஒன்றும் முஸ்லீம்களின் தனிச் சொத்து அல்ல.”உலகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு அக்கிரமகாரங்கலின் தீங்கை விட்டு முழுமையான பாதுகாவலைகொடுப்பாயாக! மேலும் அக்கொடுமையார்களின் சூழ்ச்சியை முறியடிப்பாயாகஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகளுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான்அவர்களுக்கூரிய தண்டனை அல்லாஹவிடம் இருக்கிறது இன்னும் அதற்குரிய தண்டனை வெகு தூரத்தில் இல்லை”.என்ற கடைசி பத்தி பொருத்தமானதாக இல்லை.

எல்லாரும் இன்புற்று யிருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்றார் தாயமானர் என்ற ஞானப் பெருமகனார். இத்தகைய போதனைகள் நாட்டில் பெருக வேண்டும். அன்பு அன்பு அன்பு ஒன்றே வன்முறைக்கு மருந்து.

Dr.Anburaj said...

அன்புக்கு ஒரு உதாரணம்.இறைவனிடம் தொழுகை
இறைமகன் பிரான்சீஸ் அசீசி
Lord, make me an instrument of your peace;
where there is hatred, let me sow love;
when there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
and where there is sadness, joy.
Grant that I may not so much seek
to be consoled as to console;
to be understood, as to understand,
to be loved as to love;
for it is in giving that we receive,
it is in pardoning that we are pardoned,
and it is in dying [to ourselves] that we are born to eternal life.

Dr.Anburaj said...

கைஒன்றை செய்ய விழி ஒன்றை காண கருத்தொன்றை எண்ண;பொய் ஒன்றை வஞ்சக நா ஒன்றை பேச புலால் கமழும் மெய் ஒன்றை சார செவி ஒன்றை கேட்க விரும்பும்யான் செய் கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

புலன்களை அடக்கும் முறையே பூசை தவிர, நம் ஆசை நிறைவேற்ற இறைவனால் கூட ஆகாது என்பதை இந்த பாடல் சொல்கிறது :

நாமெல்லாம் மரப்பாவை என்னும் பொழுது, நம்மை அசைப்பவனை பார்த்து இப்படி செய்யாதே அப்படி செய்யாதே என்று கேட்க முடியுமா?


அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன ? ஆவதில்லை தொழுதால் பயனென்ன ? நின்னை ஒருவர் கடவுரைத்த பழுதால் பயனென்ன ? நன்மையும் தீமையும் பங்கையதொன் எழுதாப்படி வருமோ? சலியாதிரு என் ஏழை நெஞ்சே!


நன்மையும் தீமையும் இறைவனின் சூத்திர கயிர் அசைப்பில் உள்ளதை அறிந்து
நாம் இரண்டையும் ஏற்றுகொள்ளவேண்டும்


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு.


எந்த ஒரு செயலையும் நாம் முடித்த பின்பு ஏற்படக்கூடிய இரு விளைவுகள் நம்மை சேராது அது இறைவனையே சேரும் என்று உணர்ந்தவர்கள் இறைவன் பொருள் தெரிந்து புகழ் பெறுகின்றார்கள்.


ஒன்று என்றிரு, தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெலாம் அன்று ரென்றிரு, பசித்தோர் முகம் பார், நல்லறமும் நட்பும் நன்று என்றிரு , நடு நீங்காமலே நமகிட்டபடி என்று என்றும் இரு, மனமே உனக்கு உபதேசமிதே.
Dr.Anburaj said...

மெரிக்காவிலுள்ள நியு ஆர்லியன்ஸ் நகரில் குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இனிப்பு கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் ஆண்டுதோறும் 1.8 லட்சம் மக்கள் இறப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி என்பவர் கூறுகையில்,""சர்க்கரைப் பொருள்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் எடை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகின்றன. 2010-ம் ஆண்டுக்கான ஆய்வின்படி குளிர்பானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுள் 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் 44 ஆயிரம் பேர் இதய நோய்களாலும் 6,000 பேர் புற்றுநோயாலும் இறந்தது தெரியவந்துள்ளது. குறைந்த அளவில் குளிர்பானம் அருந்தும் ஜப்பானியர்களுள் 10 லட்சம் பேர்களுக்கு 10 பேர் மட்டுமே மரணமடைகின்றனர்'' என்று அவர் தெரிவிக்கிறார்.

Dr.Anburaj said...

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.


Dr.Anburaj said...

சித்தர்கள் இராச்சியம்-நோய் வர முன் காப்பது எப்படி?

உடலை நிலை நிறுத்துவதற்க்காகப் பயன்பட்ட பொருட்கள் உடல் தாதுக்கள் என்று சொல்லும் சித்தர்கள், ஐம் பூதங்களின் சேர்க்கையே உடல் தாதுக்கள் என்கிறார்கள்.

உடலைப் பேணிப் பாதுகாப்பவைகளை மூன்றுவிதமாகப் பிரித்து, அவற்றை வாதம், பித்தம், கபம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இவை உடலில் சமநிலையில் இருக்கவேண்டும் என்று சொல்லும் அவர்கள், இவை முறையே 4:2:1 என்பதே சரியான அளவு என்றும் குறித்துள்ளனர்.

அகம் அல்லது புறத் தன்மைகளின் வேறுபாடுகளாலும், உணவு வேறு பாடுகளாலும், வாழக்கை முறை மாறுபாடுகளாலும் இந்த அளவுகளில் ஏற்படும் மாற்றமே நோயாகிறது என்கிறார்கள்.

இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வராதிருக்க "வருமுன் காப்போம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் சித்தர்கள் நோய் வராதிருக்க கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை வகுத்து தந்துள்ளனர்.

நோய் வராதிருக்கும் வழியைக் காட்டும் பாடல்...

"பாலுண்போம் எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம்
பகல் புணரோம் பகல் துயிலோம் பருவ முத்த
வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்
இரண்டடக்கோம் ஒன்றைவிட்டோம் இடதுகையில் படுப்போம்
மூலஞ்சேர் கறிநுக ரோம் மூத்த தயிர் உண்ணோம்
முதனாளில் சமைத்தகறி அமுதேனினும் அருந்தோம்
நாலந்தான் அடைந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்குமிடத்தே"

பாலை அதிகளவில் பருக வேண்டும், எண்ணெய்த் தன்மையான உணவுகளைச் சாப்பிடும் நாளில் மட்டும் வெந்நீரில் குளித்து , பகலில் புணர்ச்சி நீக்கி, பகலில் தூங்காது, இள வெய்யிலில் இருக்காது, இருவேளை உண்டு, ஒருவேளை உணவைத் தவிர்த்து, மூலத்தை அதிகப் படுத்தும் உணவு வகைகளைத் தவிர்த்து, புளித்த தயிரையும் தவிர்த்து, முதல் நாள் சமைத்த உணவுகள் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாது, பசிக்கும் போது மட்டுமே உணவருந்தி இருந்தால் எமனுக்கு நாம் இருக்கும் இடத்தில் வேலை இருக்காது என்பது பொருள்.Dr.Anburaj said...

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தா ர். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிரா மத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப் படுத்தல்கள். புத்தரோ அமைதி யாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்க ளுக்கே அவமானமாகி விட்டது. “யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசி யில் கேட்டேவிட்டார்கள். புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராம த்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார் கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்துவிட்டுப் போகப்போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
.................................................................................................


Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad