அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, May 11, 2013

மனித சமூகத்திற்கு குர் ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்?

ஆக்கம் : டாக்டர் அன்புராஜ் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படை குர்ஆன். எனவே இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …
(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …
(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)

இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி. தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.
(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,
இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …
(குர்ஆன் 2: 4)
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(குர்ஆன் 3:84) 

9 comments:

Dr.Anburaj said...

குரான் என்ற அரேபிய புத்தகம் காலாவதியாகிவிட்டது என்பது என் கருத்து. அதுவோல் எந்த ஒரு புத்தகமும் எந்த ஒரு சமய தலைவர் மட்டும் உலகிற்கு வழகாட்டியாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை.
நீர் நிலம் சத்துக்கள் வெளிச்சம் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொண்டு பனைவிதை பனையாகவும், தேங்காய் தென்னையாகவும் வளர்வதைப்போல் , அரேபியாவில் உள்ள எண்ணெய்வளம் உலகிற்கு பயன்படுவதைப்போல், பிறநாடுகளில் உள்ள மனிதவளம் மற்றும் ஏராளமாக பொருட்களால் அரேபிய பயன்பெறுவதைப்போல் அனைத்து சமய நூல்களுயும் பயன் படுத்தி பரஸ்பரம் கலாச்சார வாழ்வை தரம் உயர்த்திக் கொள்ள வேண்டும். அல்லாவிற்கு எல்லா மனிதர்களும் ஒன்றே.அரேபிய கலாச்சாரத்தைப்பின்பற்றுபவனுக்கு உயரிடம் கொடுக்கின்றான் என்பது அல்லாவை அரேபியனாக்கும் அரேபிய வல்லாதிக்க நயவஞசகதிட்டம் ஆகும்.
அரேபியகுரான் தன்னைப்படிப்பவர்களுக்கு எல்லோரும் இன்புற்றுயிருப்பதையல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே என்று கற்றுக் கொடுக்கவில்லை.அரேபிய கலாச்சாரத்தைப்பின்பற்றாதவனை காபீர்என்று வெறுக்கக் கற்றுக் கொடுக்கின்றது.கௌதமர் அன்பில்லாத வசனங்களைப் பேசியதில்லை. தாயுமானவர் திருமுலர் போன்றவர்களும் அப்படியே.
அரேபியாவிற்கு கௌதமரின் தாயுமானவரின் அன்பு உள்ளம் வேண்டும். அது கொடுக்கக் படவில்லையெனில் அரேபிய இரத்தக்களறி அரேபிய பெனிசுலாவில் ஒருபோது்ம் நிற்காது. அரேபிய இலக்கியங்கள் போன்றப்டும் இடங்களிலும் இரத்தக்களறி நிற்காது.உம் பாக்கிஸ்தான் பங்களாதேஷ்.

Dr.Anburaj said...

இந்து மதத்தைப்புரிந்து கொள்வோம்

முஸ்லீம்களின் பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.
இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்

இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.


இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம்.

Ansari.Arain.Awan.Bohra.Dawoodi Bohra.Dekkani.Dudekula.Ehle-Hadith.Hanabali.Hanafi.Ismaili.Khoja.Labbai.Lebbai.Lodhi.Malik
Mapila.Maraicar.Memon.Mugal.Mughal.Pathan.Quresh.Qureshi
Rajput.Rowther.Salafi.Shafi.Sheikh.Shia.Siddiqui.Sunni Hanafi
Sunni Malik.Sunni Shafi.Syed

ஒரு முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு.

ஈராக்கின் கோரப்படுகொலைகளுக்கு மூலக்காரணம் அங்கே நிலவிய ஷியா , சுன்னி பிரிவுச்சண்டையே! அதை அமெரிக்கா நரித்தனமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை. இன்றைக்கும் அமெரிக்கா பிழைத்து வருவது என்னெய் விற்பனைக்கு ஷேக்குகள் அமெரிக்க டாலரை உபயோகிப்பதால் தான்.) ஈராக்கைச் சுற்றியுள்ள மற்ற முஸ்லீம் நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே அமெரிக்கா அந்நாட்டை அழித்தது என்றால் மிகையில்லை. அதிபர் சதாம் உசேனின் படுகொலைக்கு அவரின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியும், சுன்னி ஷியா பிரிவினை.
ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்குள் எத்தனைக் கொடிய கொலைகள். இந்துக்கள் மட்டுமே ஜாதிப்பிரிவினை கொண்டு சண்டை இட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் கொண்ட மதங்களுக்குள்ளேயே இத்தனை பிரிவுகள் இருக்கின்றன

இந்துக்களில் இருக்கும் பிரிவினர்களிடையே எழும் ஜாதி மோதல்கள் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்காக எழும் உரிமைப் போராட்டங்களாகவே பார்க்கப்படுகின்றனவே அன்றி அவை மதரீதியான பிரிவினை அல்ல. பொருளாதார ரீதியாக அனைத்து இந்துக்களும் சமமான வளர்ச்சி பெற்று விட்டால் இந்து மதத்தின் பிரிவுகள் தானே மங்கிப்போகலாம்.

பலஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்துக்களின் வாழ்கையில் - . என்னிலடங்கா கடவுளர்கள் உள்ளனர். பல வகையான மகான்களும், ரிஷிகளும், ஆச்சாரிய குருமார்களு இருக்கின்றனர். பல்வேறு வகையாக தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. இந்து தர்மத்தின் படி வாழும் மக்கள் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களாக இருக்கின்றனர். ஆயிரக்கனக்கான கோவில்கள் இருக்கின்றன. இந்த வெவ்வேறு மொழி பேசும் கோடிக்கனக்கான மக்கள், பல நூறு தெய்வங்களையும் பல்வேறு கோவில்களையும் ஒன்றாக ஒற்றுமையாக அமைதியாகத்தான் வழிபட்டுக்கொண்டு இருக்கின்றனர். தீபாவளிப் பண்டிகையை கோடான கோடி மக்கள் இறையுணர்வுடன் ஒரே மாதிரி கொண்டாடுகிறார்கள்.

இந்துக்களில் மாரியம்மனை கும்பிடுபவர் முருகனை அவமதிப்பதில்லை. பிள்ளையாரைக் கும்பிடுபவன் ஐயப்பனை வெறுப்பதில்லை. சிவன் பக்தனாயினும் திருப்பதிக்குப் போய் வழிபடாத இந்துக்கள் இருக்கமுடியாது. ஏன் இந்துக்கள் வேளாங்கன்னி மாதாவையும், நாகூர் தர்காவையும் கூட ஒரே கடவுளின் தோற்றமாகவே பார்க்கின்றனர். பல நூறு கடவுளர்களை வழிபடுபவராயினும் இந்துக்களுக்கு எல்லாம் கடவுளே! அதாவது அடிப்படையில்
ஏகத்துவம்!

ஆக ஒரே மதம் ஒரே தேவன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாட்டையே பிரிவினையால் அழிக்கும் பிற மதத்தவரை விட பல நூறு கடவுளரைக் கொண்டாலும் ஒரே கலாச்சாரம் ஒன்றான வாழ்க்கை என்று அமைதியாக வாழும் இந்துக்களின் வாழ்க்கை போற்றத்தக்கதே!

மொத்தத்தில் எந்த மதத்தில் ஜாதிகளிருந்தாலும் எல்லாவருக்கும் ஒரே பாடல்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்"
- மகாகவி பாரதியார்

Dr.Anburaj said...

ஜாகீர் நாயக் ஆபத்தானவர்
"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்

"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "

கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார்.

"முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"

இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது

"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"

இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.

--
இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.

அவரது முதல் பதிலை எடுத்துக்கொள்வோம்.

2+2 = 4 என்பது கணித அறிவுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதமே 2+2 = 4 போன்ற உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்து மதம் அப்படி அல்ல. இந்து மதத்தில் 1+1 = 2 என்றும் இருக்கும். 1+1 = 10 என்றும் இருக்கும். ஏனெனில், இந்துமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை.

1 + 1 = 2 எப்போதுமே உண்மை அல்ல. ஒரு மேகமும் இன்னொரு மேகமும் இணைந்தால் அது 2 மேகங்கள் அல்ல. ஒரு மேகம் தான். நாம் எந்த கணிதம் போடுகிறோம் என்பதை பொறுத்து விடையும் மாறும். Fuzzy logic என்ற கணிதத்தில் இன்னும் வினோதங்கள் எல்லாம் இருக்கின்றன.

1+1 = 2 என்பது தசம (எண் 10 ஐ அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் ஒரு விடை. 1+ 1 = 10 என்பது இரும (பைனரி என்னும் 2 எண்ணை அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் விடை. இரண்டுமே சரியான விடைகள்தான். 1+1 = 2 என்று தான் கூற வேண்டும். 1+1 = 10 என்று சொன்னால் தலையை சீவிவிடுவேன். அப்படிப்பட்ட கணிதத்தை கண்டுபிடிக்கவோ, சொல்லிக்கொடுக்கவோ கூடாது என்று சொல்ல முடியுமா?

1+1 = 10 என்று சொல்லும் பைனரி கணிதத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் இப்படி கம்ப்யூட்டரிலேயே எழுதிக்கொண்டிருக்க முடியாது. நாம் நிதர்சனமாக இப்படி கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருப்பதற்கு பைனரி கணித வளர்ச்சி தானே அடிப்படை?

இவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், கடவுளை பற்றி நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் உள்ளதுதான் சரியான கடவுளைப் பற்றிய விளக்கம். கடவுளை சுருக்கி அந்த புத்தகத்துக்குள் வைத்து கட்டிவிட்டேன். கடவுளைப் பற்றி வேறொருவர் இனி சிந்திக்கவோ, அல்லது கடவுளின் மற்றைய பரிமாணங்களை பற்றி பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது போல இருக்கிறது.

சாதாரண கணிதத்துக்கே இத்தனை பரிமாணங்கள் இருக்குமென்றால், வரையறைக்குள் சிக்காத இறைக்கு எத்தனை பரிணாமங்கள் இருக்கும்?

......... பக்கம் -2

Dr.Anburaj said...

அதனால்தான், குருக்களை பார்த்து இந்துமதம் அஞ்சுவதில்லை. இதனால்தான் பல மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது. புதிய ரிஷிகளையும், குருக்களையும் வரவேற்கிறது. ஒரு சில குருக்கள் தவறாக போதிக்கலாம். அவர்கள் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஒரு சில குருக்கள் ஆன்மீகத்தை மேலே கொண்டு செல்கிறார்கள். அவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். பிரேமானந்தாவும் இங்கு தோன்றலாம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் இங்கு தோன்றலாம். பிரேமானந்தாக்கள் இங்கே உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திகளும், மாதா அமிர்தானந்தமயிகளும் உலகத்துக்கே ஆன்மீக குருக்களாக உயருவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியோ மாதா அமிர்தானந்தமயியோ மனிதனின் ஆன்மீகப்பயணத்தின் முடிவல்ல. மனிதனின் ஆன்மீகப்பயணம் முடிவற்றது. மனிதனை தொடர்ந்து பரிணமிக்க வைக்கக்கூடியது. ரச்னை ஜாகிர் நாயக்கிடம் இருக்கிறது. ஏதோ இஸ்லாமை பரப்புவதாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியருக்கே உலை வைக்கிறார். இஸ்லாமியர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றாக ஒரு சமூகத்தில் வாழ்வதையே கெடுக்கிறார்.

சாதாரண இந்துக்களை அவர் தூண்டி விடுகிறார். இந்துமதத்தினை பற்றி முழுமையான அறிவற்ற பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். பல இந்துக்கள் சாதாரணமாக கோவிலுக்கு போவது, தங்கள் சமூகத்து பழக்க வழக்கங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வது தவிற வேறு அறியாதவர்கள். இவர்கள் இந்துத் தத்துவங்களை கரைத்துக்குடித்த போதகர்கள் அல்ல. அவர்களை ஜாகிர் நாயக் வெறியேற்றுகிறார். "நீ இந்துமதம்தான் உண்மை என்று நினைத்தால் இஸ்லாமை பரப்ப அனுமதிக்காதே" என்று உசுப்பேற்றுகிறார். "நீ என்னை அனுமதிப்பதற்கு காரணம், உன் மதம் சரி என்று நீ நினைக்காததால்தான்" என்று இந்துவை அசிங்கப்படுத்துகிறார்.

இவ்வாறு இவர் இப்படி பேசுவதைக் கேட்டால், "இந்துக்கள் தங்கள் மதம் உண்மை என்று நினைத்தால், முஸ்லீம்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். ஆமாம் அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். இனி முஸ்லீம்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்று சாதாரண இந்துக்கள் கூறமாட்டார்களா?

என்னுடைய மதம் நல்ல போதனைகளை வழங்குகிறது என்று சொல்வது எல்லோரும் செய்யக்கூடியது. என்னுடைய மதம்தான் உண்மையானது மற்றவர்களது மதம் எல்லாம் பொய்யானது என்று இந்த நவீன காலத்தில் ஒருவர் பேசுவது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், வருந்தத்தக்கது.

இப்படி ஒருவர் பேசினால், நிச்சயம் உங்களது மதம் பொய் என் மதம்தான் உண்மை என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதனைத்தான் இவர் தூண்டுகிறார்.

நான் என்னவேண்டுமானாலும் இந்துமதத்தை திட்டுவேன், அது பொய்யான மதம் என்று சொல்லுவேன், ஆனால் யாரும் இஸ்லாமை ஒன்றும் சொல்லக்கூடாது என்று அவர் நினைப்பாரேயானால், அவருக்காக பரிதாபப்படத்தான் முடியும். இவர் இந்துமதத்தை பொய்யானது, இஸ்லாம் மட்டுமே உண்மையானது என்று கூறினால், நிச்சயம் இந்துக்களில் சிலர் எழுந்து, இஸ்லாம்தான் பொய்யான மதம், இந்துமதம்தான் உண்மையானது என்று சொல்லத்தான் செய்வார்கள். அப்படி சில இந்துக்கள் சொல்லும்போது, இந்து மத தத்துவங்களை அறிந்த பல இந்துக்கள் அவ்வாறு சில இந்துக்கள் சொல்வதை தவறானது என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது எந்த காலத்திலும் ஜாகிர் நாயக் கூறியதை சரியாக்கி விடாது.

அப்படிப்பட்ட இந்துக்களை திட்டுவதை விட்டுவிட்டு, ஜாகிர் நாயக் போன்று தூண்டிவிடும் பேச்சு பேசும் நபர்களை கண்டிக்க அனைவரும் முன்வர வேண்டும். முக்கியமாக இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்க வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு இப்படிப்பட்ட உளறுவாயர்கள் ஆபத்தானவர்கள். இப்படிப்பட்ட கிறுக்கர்களை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்.

Dr.Anburaj said...

நாத்திகன் என்ற வரைதளம் வாகாபிகளைிடம் கேட்கும கேள்வி -நான் கேட்டதுதான்
மனிதாபிமானிக்கு கேள்விகள்.

1. ஆத்திகர் அனைவரும் சுவனம் போவாரா?

2. குரானில் பல் இடங்களில் வசை பாடப்பட்டு கரித்து கொட்டபடும் [அரபி சொல்] காஃபிர் என்பதன் பொருள் நாத்திகரா?

3.இஸ்லாமின் எந்தப் பிரிவு சரியானது? சரியான பிரிவு அல்லாதவர்கள் ஆத்திகரா,காஃபிரா,நாத்திகரா?

இலங்கையில் நடக்கும் மாநாடு இதற்கு தீர்வு சொல்லுமா ?

Dr.Anburaj said...


இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி
உலக நாகரீகம் எப்போதும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் பாரம்பரிய சொத்தாக இருந்ததில்லை. . ஒன்பதாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பாக்தாத் போன்ற நாகரீகமடைந்த இன்னொரு நகரத்தை காண முடியாது. உலகிலேயே மருத்துவ துறையில் அபார வளர்ச்சியடைந்த பாக்தாத்தில், மயக்கமருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணர்கள் இருந்தனர். நகர மத்தியில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான மருத்துவமனை அனைவருக்கும் இலவச வைத்திய சேவையை வழங்கியது.

அன்றைய உலகில், பாக்தாத் மட்டுமே வங்கி அமைப்பை கொண்டிருந்தது. பாக்தாத் வங்கியின் கிளை ஒன்று சீனாவிலும் திறக்கப்பட்டிருந்தது. இதை தவிர, நகரம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்கள், குடி நீர் விநியோகம், தபால் சேவை என்பன சிறப்பாக செயற்பட்டன. பாக்தாத்தின் வடக்கே உள்ள "ஹார்ன்" எனுமிடத்தில் ஒரு நவீன விஞ்ஞான பீடத்தைக் கொண்ட பல்கலைக்கழகம் இருந்தது.

Albatinius என்ற விஞ்ஞானி பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை கணக்கிட்டிருந்தார். Jabir bin Hayyan என்ற இன்னொரு விஞ்ஞானி, அணுவைப் பிளந்து மாபெரும் சக்தியை உருவாக்கலாம் என கண்டுபிடித்திருந்தார். "அந்த சக்தியின் மூலம் பாக்தாத் நகரை அழிக்கலாம்," என்று அவர் எழுதி வைத்துள்ளார். அனேகமாக, அணுகுண்டை கண்டுபிடித்த முதலாவது விஞ்ஞானி அவராகத் தான் இருப்பார்.
(இந்த தகவல்கள் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். அவர்கள் The House of Wisdom என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.)

இத்தனை சிறப்பு மிக்க பாக்தாத் நாகரீகம் அழிந்து போன காரணம் என்ன? மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், இராணுவ ஆதிக்கம் செலுத்தினர். அந்தப் பிராந்தியம் முழுவதும், அதாவது இன்றைய ஈரான் முதல் துருக்கி வரை அவர்களின் ஆட்சி தான்.

. ஒரு காலத்தில் சக்கரவர்த்தியின் மெய்ப்பாதுகாவல் படையினராக இருந்த மம்மலுக் துருக்கியர்களின் கட்டுப்பாட்டில் பாக்தாத் இருந்தது. இவர்களைப் பற்றி சுவையான கதை ஒன்றுண்டு. மம்மலுக் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆனால் துருக்கி மன்னர்களின் குடும்பங்களுக்குள் பதவிச் சண்டை காரணமாக வாரிசுகள் கொல்லப்படுவது வழமை. அதனால் மம்மலுக் அடிமைகள் இளம் பிள்ளைகளை பாதுகாப்பார்கள். சில நேரம் அந்தப் பிள்ளைக்கு அரசுரிமை கிடைக்கும் போது, வளர்ப்பு தந்தை கையில் அதிகாரம் போய்ச் சேரும்.


(கிரேக்க) கிறிஸ்தவ தலைநகரில் இருந்து சிறிது தூரத்திலேயே இருந்த நிசெயா என்ற நாடு, இஸ்லாமிய துருக்கி சுல்த்தான் கிளிஜ் அர்ஸ்லான் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். கிரேக்க சக்கரவர்த்தி அலேக்சியுஸ், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களை காரணமாக காட்டியே நிசெயாவுக்கு உரிமை கோரிக் கொண்டிருந்தார்.

எதிரும் புதிருமான கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருவரும், வெளியே பகைவர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் உள்ளுக்குள், அவர்களுக்கிடையில் சிறந்த ராஜதந்திர உறவு நிலவியது. நிசெயாவை முற்றுகையிட்ட, ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படைகளுக்கு, அந்தப் பிராந்தியத்தின் அரசியல் நிலவரம் தெரிந்திருக்க நியாயமில்லை. எதிர்பாராத விதமாக, முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட இஸ்லாமிய சுல்தானை காப்பாற்றுவதற்கு, கிறிஸ்தவ சக்கரவர்த்தி முன்வந்தார். கிளிஜ் அர்ஸ்லான் குடும்பத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். நிசெயா ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

சிலுவைப் படையினரிடம் இருந்து மயிரிழையில் தப்பிய கிளிஜ் அர்ஸ்லான், துருக்கியின் மையப்பகுதியில் பிற துருக்கி எமிர்களின் படைகளை துணைக்கு சேர்த்துக் கொண்டார். இருப்பினும் யுத்தத்தில் சிலுவைப்படைகளை வெல்ல முடியவில்லை. தூரத்தில் கிளம்பிய புழுதிப் படலத்தை வைத்தே, மேலதிக சிலுவைப் படைகள் வருவதை தெரிந்து கொண்ட துருக்கிப் படைகள் பின்வாங்கி விட்டன. முதன் முதலாக துருக்கி மண்ணில் காலடி எடுத்து வைத்த சிலுவைப் படைகள் ஒழுக்கமான இராணுவமாக இருக்கவில்லை. தற்போது போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் வந்திருந்தார்கள். அத்தோடு மதவெறியும் அவர்களை இயக்கியது. "இது ஆண்டவன் கட்டளை" என்ற கோஷத்துடன் கிறிஸ்தவர்கள் போரிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்று முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு தரப்புமே,

கடவுளின் பெயரால் ஒருவரை மற்றவர் கொன்றார்கள்.C.Sugumar said...

ஒரு சாது ஹிந்துவுக்கு இந்த உலகமே கடன்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.
சமய நல்லிணக்கம் - சுவாமி விவேகானந்தர்

ஒரு சாதாரண ஹிந்துவின் வாழ்க்கை முறையானது இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும் எல்லா வகையான உயிரினங்களுடனும் மற்றும் அனைத்து வாழ்க்கை முறைகளோடும் சிக்கல் இல்லாத (Non-conflict) உறவுமுறை கொண்டதாகும். இதற்குத் தான் உலகம் கடன்பட்டுள்ளது என்கிறார் சுவாமி.

அவர் தனது சிகாகோ சொற்பொழிவில், “எந்த மதத்தையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு ‘எல்லா மதங்களும் உண்மை’ என்றும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கர்ஜிக்கிறார்.

இது தான் சுவாமிஜியின் சமய நல்லிணக்கத்திற்கான அடிப்படை அணுகுமுறையாகும். இத்தகைய உயர்ந்த எண்ணம் சுவாமிஜிக்கு ஏற்பட்டது எப்படி? பழத்தின் மூலமாகத் தான் மரத்தின் பெருமை தெரியும் என்பது உண்மை என்றால், சுவாமிஜி மூலமாகவே இந்த தேசத்தின் பாரம்பரியப் பெருமையை உலகம் உணர்ந்தது என்பதும் உண்மையே.

.
‘வழி’ வகுத்ததா?

லட்சக் கணக்கான பறவைகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வானத்தில் பறக்கின்றன; கோடிக் கணக்கான மீன்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கடலில் நீந்துகின்றன; ஆனால் இவையெல்லாம் எப்படி வானிலும் நீரிலும் ஒரு ‘வழி’யை உருவாக்கவில்லையோ அதைப்போல, ஆயிரக் கணக்கான ஞானிகளும் ரிஷிகளும் கூட இந்து மதத்திற்கு இதுதான் ‘வழி’ என்று தீர்மானம் செய்யவில்லை.

எனவே தான் சுவாமிஜி கீழ்க்கண்ட சுலோகத்தையும் சிகாகோவில் சொல்கிறார்:

“பல்வேறு ஆறுகள் பல்வேறு இடங்களில் தோன்றினாலும், முடிவில் அவை ஒரே கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல பலவிதமான மனப்பான்மை கொண்டவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நேரானவையாகவும் குறுகலானவையாகவும் தோற்றம் அளித்தாலும், இறைவா! முடிவில் அவை உன்னிடமே அழைத்துச் செல்கின்றன”.

(சிவமஹின ஸ்தோத்திரம்-7)

ரிக்வேதத்தில் ரீங்காரமிடும் அற்புத வாசகம் இதோ...

ஏகம்ஸத் விப்ரா பஹுதா வதந்தி

(உண்மை ஒன்றே; ஞானிகள் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்)
.
விதி விதித்தது:

“எல்லாச் சமயங்களும் எல்லாவிதமான வாழ்க்கை முறையும் உலக வாழ்வில் உவந்தது தான் என்ற உண்மையை உணரவும் அதை உலகோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்துக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார் சுவாமிஜி.

எனவே தான் இந்துமதம் பற்றி என்சைக்ளோபீடியாவின் (15-ம் பதிப்பு) விளக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:

“எல்லா வழிபாட்டு முறைகளையும் இந்துமதம் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றிலும் உள்ள இறை வெளிப்பாட்டையும் உணர்வதே இந்து மதமாகும். கடவுள் உண்டா, இல்லையா? கடவுள் ஒன்று- பலவா? என்பது கூட இந்து மதத்தின் மையக்கருத்தாக இல்லை. அமைப்பில்லாத, ஆதி அந்தம் இல்லாத, நிறுவனரும் நிர்வகிப்பவரும் இல்லாத ஒரு ஏற்பாடே இந்துமதம்”.

C.Sugumar said...

சமய நல்லிணக்கம் -2
அனுபவமே; அடையாளமல்ல (Experience; not Identity):

இத்தகைய கோட்பாடுகளின்படி பரிணாம வளர்ச்சி பெற்ற கருத்துக்கள் என்பதால் தான் இந்து மதம் எப்போதுமே ஓர் அனுபவமாகவே இருந்து வந்துள்ளது. அதை ஓர் அடையாளமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

அதனால் தான் இந்த நாட்டின் சாதாரண மனிதன் கூட,

“ஹரியும் சிவனும் ஒண்ணு - இதை
அறியாதவன் வாயில் மண்ணு” என்று நினைக்கிறான்.

“மூர்த்தி பேதம் பாவம்” என்ற ஆதிசங்கரரின் கருத்தும் சாதாரண மனிதனின் கருத்தும் ஒன்றாகவே இருப்பதை உணரலாம்.
.
எதிர்ப்பல்ல; ஏற்றுக்கொள்ளல் (Not oppose; but accept):

எந்தவொரு மத நம்பிக்கையையும் இந்த நாட்டின் பாரம்பரியம் எதிர்த்ததாக வரலாறு இல்லை. ஒரு மதம் இன்னொரு மதத்தை மறுதலிக்கும் என்பதே இந்த நாட்டிற்கு அந்நியமான கருத்தாகும். பஞ்சாபை ஆண்ட ரஞ்சித்சிங் ஒரு முஸ்லிம் ஞானியிடம் கூறுகிறான்:

“கடவுள் ஏன் என்னுடைய ஒரு கண்ணிலிருந்து ஒளியை எடுத்துக் கொண்டான் தெரியுமா? எல்லா மதங்களையும் நான் ஒரே கண்ணால் பார்க்க வேண்டும் என்பதால் தான்.”

என்ன ஒரு ஆழமான பார்வை? சமய நல்லிணக்கம் என்பது ஞானிகளின் வழிமட்டுமல்ல, மன்னர்களின் மகாத்மியமும் ஆகும்.

.
சகிப்பதல்ல; மதிப்பது (Not Toleration ; but respects):

மற்றைய நம்பிக்கை முறைகளை ஏதோ இந்துமதம் அனுமதித்துச் சகித்தது என்பதல்ல சரித்திரம். எல்லா நம்பிக்கைகளையும் ஆதரித்து மதித்தது என்பது தான் உண்மை.

தஞ்சமடைந்த இஸ்ரேல் மக்களை மனதார ஏற்றுக்கொண்டாவர்கள் நாங்கள் என்றும், ஜொராஷ்டிரியர்களுக்கு அடைக்கலம் அளித்து இன்றும் பாதுகாத்து வருகிற ஒரு மதத்தைச் சார்ந்தவன் நான் என்றும் சுவாமி பெருமைப்படுகிறார்.

புவியோர் விரட்டிடப் புகலிடம் தேடி
தவித்தவர் வந்தது பாரதம் நாடி
சேய் போல கலங்கினர் பாய்மரத்தோடு
போய் வரவேற்றாள் தாய் மனத்தோடு.
ஆஹா ஆஹா, அன்னை அவள்தான்
ஆறுதல் தந்திடும் சங்கரி உமை தான்.

-என்று ஒரு புதுக்கவிஞன் இதைப் பதிவு செய்திருக்கிறான்.
.
கணிதச் சமமல்ல; புனிதச் சமம் (Not arithmetical equality):

ரோஜாவும் மல்லிகையும் சமம் இல்லை. அவற்றின் நிறம், மணம், பயன்பாடு ஆகியவை முற்றிலும் வேறுபடுபவையாகும். எனவே அவை ‘தனித்தன்மை’ கொண்டவை தானே தவிர, ‘சமத்தன்மை’ என்று கூறிவிட முடியாதவை தான்.

ஆகவே தான் பாரம்பரிய பாரத ஞானம் எல்லா மதங்களும் சம அளவில் உண்மையானவை என்று கூறுகிறது. எல்லாமே சம அளவில் புனிதத்தன்மை கொண்டவை என்றும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே சமய நல்லிணக்கத்தில் கணிதச் சமன்பாட்டுக்கு இடமில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
.
கொண்டாட்டமே ; திண்டாட்டமில்லை (Celebrating the diversity):

சமூக வாழ்விலும் சமய வாழ்விலும் உள்ள வேற்றுமைகளை நமது பாரம்பரியம் கொண்டாடும் அதே வேளையில் மற்ற நாகரிகங்கள் அத்தகைய வேற்றுமைகளைக் கையாள்வதில் திண்டாடுகிறது (Celebrating the diversity).

இதைத் தான் தாயுமானவர் பாடுகிறார்:

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,
விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டு அல்லால்
மாறுபடும் கருத்து இல்லை; முடிவுஇல் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா!

இந்தியாவில் ஒற்றுமை தான் (Unity) முக்கியம்; ஒரே மாதிரி (Uniformity) இருப்பதல்ல.
.

C.Sugumar said...

3
இது ஒன்றே அல்ல; இதுவும் தான் (Not only; but also):

இறைவனை உணர்வதில் முடிந்த முடிவு என்று ஏதுமில்லை. “இது ஒன்றே” என்ற மனோபாவமும் நம்பிக்கையும் மத அடிப்படைவாதத்தை வளர்க்கும். “இதுவும் தான்” இறைவனை அடையும் வழி என்ற நம்பிக்கையே சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் உபாயமாகும்.

வள்ளலார் பாடுகிறார்:

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே!

- திருவருட்பா 3-ம் திருமுறை

இதையும் மீறி மதங்களுக்குள் என்னுடையது மட்டும் ‘நன்று’ மற்ற மதங்கள் ‘தீது’ என்று உரைப்பவர்களை திருமூலரின் வரிகளில் பார்ப்போம். அவர்களை குன்றைப் பார்த்து குரைக்கும் நாய்களாக வருணிக்கிறார்:

ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!

- திருமந்திரம்
.
உலக மதமல்ல; மதங்களின் உலகம் (Not World Religion but world of religions):

உலகம் முழுவதும் வெல்ல நினைத்த மதங்களால் உலக அமைதி பலியானது. வேற்றுமைகளே இல்லாத பன்மியத்தை பறிகொடுத்த ஒரு உலக மதம் (World Religion) உருவாக முடியாது. வரலாறு சொல்லும் பாடமும் அது தான்.

ஆனால் பல்வேறு சமயங்கள், புதுப்புது வழிபாட்டு முறைகள், அனுபவ அடிப்படையிலான ஆன்மிகம், வேற்றுமையும் பன்மையும் பரிணாமம் பெற்ற மதங்களின் உலகமாக (World of Religion) இவ்வையகம் வாழ முடியும் என்பதே நமது நம்பிக்கை.
.
சத்தியம் சாத்தியமே:

* 'சமயங்கள் இறைவனை அடையும் பாதையின் குறியீடுகள் மட்டுமே' (Pointers of the Truth) என்கிறார் மகாத்மா காந்தி.

* 'ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ ?' (திருவாசகம்) என்கிறார் மாணிக்கவாசகர்.

* இத்தகைய கருத்தோட்டங்களால் கனிந்து நிற்கும் ஒரே நாடு பாரதம் மாத்திரமே; மக்களைச் சமரசப்படுத்த முற்படின் மதங்களுக்குள்ளும் சமரசம் அவசியமே. அது விவேகானந்தரின் வழியில் தான் அமைய முடியும்.

* இன்று உலகில் உள்ள எல்லா மதங்களும் இந்தியாவில் வாழ்கின்றன; அவை தங்களின் எண்ணிக்கை பலத்தால் வாழவில்லை. பெரும்பாலான இந்து சமுதாயத்தின் பரந்த மனப்பான்மை என்ற எண்ணத்தின் பலத்தில் வாழ்கின்றன. இத்தகைய சத்தியத்தைச் சாத்தியமாக்கியது இந்த பாரம்பரியம் மட்டுமே என்பதில் சுவாமிஜிக்கு மட்டுமல்ல, நமக்கும் பெருமை தான்.
கட்டுரையாளர் அறிமுகம்:
பேராசிரியர் ஸ்ரீ இரா. ஸ்ரீனிவாசன், மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்; காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் புலத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறார். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளராகவும் செயல்படுகிறா

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad