அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, June 17, 2014

அளுத்கம, பேருவளை நகர்களின் வியாபார ஸ்தலங்களுக்கு புத்தன் சரணை.......

அளுத்கம முஸ்லிம் நகரின் மீது மேற்கொள்ளப் பட்ட மனித குற்றங்களுக்கு காரணமான ஞானசார தேரரின் நச்சு உரையின் முக்கிய கட்டங்களில் சிலதை தமிழ் மொழிப் படுத்தித் தருகிறோம்.


“..........ஆட்டம் போட முயல வேண்டாம்.

அப்படி ஆட்டம் போட்டால் எங்களது இரண்டாவது நடவடிக்கையாக பேருவளை, அளுத்கம ஆகிய இடங்களில் இருக்கும் வியாபார வர்த்தக நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு நமது பாதுகாப்பு (?) துணை நிற்கும்.

(அப்பாவி மக்கள் உற்சாகத்துடன் கரகோஷம் செய்கிறார்கள்)

ஆதலினால் இப்பொழுது எங்களுக்கு எங்களது தேவைகளை திட்டமிட்ட ரீதியில் செய்து முடிக்க வேண்டிய தருணம் கனிந்து விட்டது.

சில்லறைக் காசுகளை இலாபமாக கருதாதீர்கள். எங்களது சுய இருப்பை கருத்தில் கொள்ளுங்கள். எங்களது தன்னிருப்பைக் கருத்திற்கொண்டு கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணையுங்கள். இந்தக் கட்சி பேதங்களில் நாம் பிளவுண்டு இருக்கும் காலம் தோறும் இங்கு வாழும் சிறுபான்மையினர் தமது தன்னிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள்.

புத்தியுள்ள எந்தத் தலைவனாவது இலங்கை பௌத்த திரு நாட்டின் நீதி அமைச்சுப் பதவியை ஒரு முஸ்லிம் அமைச்சரின் பொறுப்பில் ஒப்படைப்பானா என்று கேட்கிறேன்?

ஆகையினால், மஹிந்த ஐயாவுக்கு மூளை இல்லையென்று  என்னுடைய தாயின் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

இங்கு குழுமியிருக்கும் பௌத்த பிட்சுகளுக்கு செலுத்தும் கௌரவமாக இன்றிலிருந்து திட்டமிட்ட ரீதியில் உங்களது செய்கையினால் ஏனைய சக்திகளுக்கு ஒரு பாடம் புகட்டுங்கள்.இதன் பின்னர் நீங்கள் ஏதாவது இலட்சினையை அல்லது குறியீட்டைக் கண்டால் அவற்றை நிலத்தில் தூக்கி அடித்து உங்களது எதிர்ப்பை செயலில் காட்டுங்கள்.

(கூடியிருந்த கூட்டம் இதனைக் கேட்டதும் இரத்தம் கொதித்து சூடாகி சலசலப்பாக மாறி நிற்கிறது.)

இதனை உடனடியாக செய்வீர்களா? இல்லையா?

(தேரர் இப்படி கேட்டதும்....”........ ஆம்...செய்வோம் ஆம்...செய்வோம்...... ஆம்...செய்வோம்...” என்று கூடியிருந்த கூட்டம் வெறித்தனமாக கூச்சல் போடத் துவங்குகிறது.)

ஹலால் என்ற இலட்சினையின் பின்னால் முஸ்லிம்களின் அடிப்படைவாத ஆக்கிரமிப்பு இருக்கிறது. அந்தப் பயங்கரத்தை இலண்டன் இப்பொழுது புரிந்துக் கொண்டு ஹலாலுக்கு எதிரான செயற்பாடுகளை செய்யத் துவங்கி விட்டார்கள்.

ஆனால், ஆண்மை தொலைத்த நமது தலைவர்களின் பெண்மையின் காரணமாக அவர்கள் அவர்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் சாதித்துக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களுக்கென்று காதி நீதிமன்றம் இருக்கிறது. அவர்களுக்கென்று ஹலால் உணவு வகைகள் இருக்கின்றன.

ஹலால் உணவை நமக்கு புகட்ட முயலவேண்டாம்......”இவ்வாறு அந்த நச்சு உரை தொடர்ந்து அதா மக்களின் உள்ளங்களில் விதைக்கப் பட்டது.

ஆக்ரோஷமான இந்த உரையைக் கேட்டதன் பின்னர் அந்த மக்கள் செய்த செயல்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.  1 comment:

Richard Molder said...

அல்லாவின் உதவி, அல்லாவின் பாதுகாப்பு என்று முஸ்லிம்க காலம் காலமாக சொல்கிறார்களே? அதற்கு என்ன நடந்தது?

அல்லாவை கடவுளாக நம்பி, காலம் காலமாக வழிபட்டு, அதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் முஸ்லிம்களாக அல்லாவின் மீது நம்பிக்கை வைத்து வாழும் முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்கள், வீடுகள், கடைகளை தன்னால் காப்பாற்ற முடியாமல் போய் விட்ட இயலாமைக்கு பொறுப்பு ஏற்று, அல்லா தனது கடவுள் பதவியை ராஜினாமா செய்வாரா?

தனது சொந்த முச்லிம்களியே காப்பாற்ற முடியாத அல்லா, எப்படி உண்மையான கடவுளாக இருக்க முடியும்?

அளுத்கமை முஸ்லிம்களையே காப்பாற்ற முடியாத அல்லா, பாலாரும், தேனாறும் ஓடும் சுவர்க்கத்தை தருவார் என்றால் நம்ப முடியுமா? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்று சொன்னால் நம்ப முடுயுமா?

என் கேள்விகள் நீள்கின்றன, பதில்களைத்தான் காணவே முடிவதில்லை.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad