அஹ்லுல்பைத் Headline Animator

Monday, January 2, 2012

அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் பிரதானமான நம்பிக்கைகள்........????


அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் பிரதானமான நம்பிக்கைகள்........????

1.ஏகத்துவம்

அல்லாஹ்ஒருவன்அவன் தனித்தவன்எவ்வித தேவையுமற்றவன்
அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தவனும் அவனே. அவைகளை பரிபாலிப்பவனும் அவனே. வணக்கவழிவாடுபிரார்த்தனைஅழைத்தல் மற்றும் 
கேட்டல் ஆகிய அனைத்திற்கும் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரமே. 
அவனையன்றி பிறரிடம் துஆ கேட்பதும்பிரார்த்திப்பதும் அதேபோன்று 
அவர்களை தனது தேவைகளை நிறைவேற்றும் தனியாற்றல் 
கொண்டவர்களாக கருதுவதும் ஷிர்க் எனும் மன்னிக்கப்படமுடியாத 
பெரும்பாவமாகும்.
2.நீதி
இவ்வுலகம் நீதியாலேயே அமைக்கப்பட்டுள்ளது. இறைவனின் 
செயற்கள் அனைத்தும் நீதியானவையே. அவன் எவருக்கும் 
நீதிக்குப்புறம்பாக அநீதியை நாடுவதில்லை. எனவே நன்மைதீமை 
இவ்விரண்டையும் மனிதனே தெரிவுசெய்கிறான்.
إنّ اللهَ لا يَظْلِمُ مِثْقالَ ذَرّةٍ
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவுங்கூட அநியாயம் 
செய்யமாட்டான்.
(4:40)
إنّ اللهَ لا يَظْلِمُ النّاسَ شَيْئاًوَلَـكِنَّ النَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் 
செய்வதில்லை. எனினும் மனிதர்கள்தான் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொள்கின்றனர் (10:44)

3.நபித்துவம்
அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் கண்ணோட்டத்தில்
இறைவனே மனிதனைப் படைத்தான். மனிதன் இறைவனது 
கட்டளைப் பிரகாரம் வழிநடாத்தப்பட நபிமார்களையும்
ரஸுல்மார்களையும் 
அனுப்பினான்.

இவர்களில் முதலானவர் ஹஸரத் ஆதம் (அலை) அவர்களும்,
இறுதியானவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் ஆவார்கள்.

முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்குப்பின் எந்த நபியும்வஹியும் 
வரப் போவதில்லை. அவர்கள் வழங்கிய இஸ்லாம் மார்க்கம் 
மட்டுமே இறுதி மார்க்கமாகும்.  நபிமார்கள் அனைவரும் 
இறைதீனை முழுமையாகப் பின்பற்றிமனிதர்களுக்கு 
முன்மாதிரியாகத் திகழ்ந்துஅந்த மார்க்கத்தை மக்களுக்கு 
எற்றிவைக்கவே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். 
இதனால் அவர்கள் யாவரும் மஃஸும் (தவறிழைக்காதவர்) 
களாகவே இருப்பர். நபியானவர் பாவம் செய்யக்கூடியவராக அல்லது தவறிழைப்பவராக இருப்பின்அவரின் மீதுகொண்ட நம்பிக்கையின்மையால் 
அவரின் அழைப்பை (தஃவாவை) மனித சமூகம் ஏற்கமாட்டாது. இதனால் 
நபி என்பவர் ஒருபோதும் பாவமோதவறோ செய்யமாட்டார் 
என்பதே அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் நம்பிக்கையாகும். 
நபிமார்கள் மற்றும் ரஸுல்மார்கள் தொடரில் இறுதியாக 
வந்துதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைத்து 
இறைத்தூதர்களிலும் மேலான சிறப்புகளைப் பெற்றவர்கள். 
இப்புனித நபியைஅல்லாஹு தஆலா நபித்துவத்தை 
அருளுவதற்கு முன்பிருந்தே பிழைகள்தவறுகள் போன்ற 
சிறியபெரிய பாவங்கள் அனைத்திலுமிருந்து பாதுகாத்தான். 
மனித வர்க்கத்தின் நித்திய சட்டநூலாகஅருள்மிகு அல்குர்ஆனை 
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான். இத்தகு
மகத்துவமிக்க நபியவர்கள் தமது தூதுப்பணியை திறம்படச் செய்து 
முடித்தார்கள். அல்லாஹ்வின் அமானிதமான இஸ்லாம் எனும் 
தூதை தூய்மையான வடிவில் பரிபூரணமாக மனிதர்களிடம் 
ஒப்படைத்தார்கள். இதில் அவர்கள் எவ்வித சுயநலனைக் 
கொண்டிருக்கவுமில்லைஎக்குறையையும் 
விட்டுவைக்கவுமில்லை. தமது சகல உலக 
இன்பங்களையும் இஸ்லாத்தின் வெற்றிக்காகவே தியாகம் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வரலாற்றுச் சரித்திரத்தையும்அவர்களது 
சிறப்புகளையும் பற்றி அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் 
அறிஞர்;கள் ஆயிரக் கணக்கான நூல்களை எழுதியுள்ளனர். 
அவைகளுக்குச் சான்றாக பின்வரும்  நூற்களைக்  குறிப்பிடலாம்.
•              கிதாபுல் இர்ஷாத்-செய்க் முபீத்;
•              இஃலாமுல் வரா ஃபீஅஃலாமில் ஹுதா- தபர்ஸீ
•              தாயிரத்துல் மஆரிஃப்
•              பிஹாருல் அன்வார்- மஜ்லிஸி
•              மவ்ஸுஅதுர் ரஸுலில் முஸ்தபா(ஸல்)-செய்யித் முஹ்ஸின் காதமி

4.இமாமத் (இஸ்லாமியத் தலைமைத்துவம்)
நபி (ஸல்) அவர்களின் 23 வருடகால அயராத உழைப்பின் 
பயனாக  இஸ்லாமிய சாம்ராஜ்யம் கட்டியெழுப்பப்பட்டு 
இறையாட்சி இப்புவியில் வியாபிக்கலானது. இறைத்தூதர் 
(ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித்தூதர்அவர்கள் போதித்த 
மார்க்கம் இறுதிமார்க்கம் எனும் வகையில் அவர்கள் நாங்கு 
பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாகக் காணப்பட்டு
அந்நிலையிலேயே வபாத்தானார்கள். அவைகளாவன:
1.புதிதாகத் தோற்றம் பெற்ற  இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை 
அச்சுறுத்திக் கொண்டிருந்த ரோம் பாரசீகப் பேரரசுகள்முஸ்லிம் 
சமூகத்தினுள் ஊடுருவிய முனாஃபிகீன்கள் மற்றும் யூதகிறிஸ்தவ 
சதிகாரர்களின் சதிகளிலிருந்து அதனை பாதுகாத்தல்.
2.புனித அல்குர்ஆனை காலத்தேவைக்கேற்ப மனிதசமுதாயத்திற்கு 
வியாக்கியானம் செய்தல்.
3.இறுதிநாள்வரை சகலவித திரிபுகளிலுமிருந்;துஇஸ்லாத்தின் 
தூய்மையைப் பேணிக்காத்தல்.
4.எதிர்காலத்தில் இஸ்லாம் சந்திக்கின்ற சவால்களை எதிர் 
கொள்ளல் மற்றும் அது சம்பந்தமாக  எழுகின்ற ஐயங்களுக்குப் 
பதிலளித்தல்.
நபியவர்கள் உயிருடன் இருந்த வேளை இவ்வெற்றிடங்களுக்கு 
எவரும் தேவைப்படவில்லை. அவர்களே அப்பொறுப்புகளை 
செய்துவந்தார்கள். 

ஆனால் அவர்களின் வபாத்திற்குப்பின் குறித்த பொறுப்புகளைச் 
செய்ய நபியவர்களால் எவரும் பொறுப்பாக்கப்பட்டனராஅல்லது 
நபியவர்கள் இப்பொறுப்புகளுக்கு எவரையும் நியமிக்காமல் தன் 
சமூகத்தை விட்டுச் சென்றார்களாஎனும் வினா எழுகிறபோது,
இவ்வெற்றிடத்திற்கு எவரையும் நியமிக்காமலேயே நபியவர்கள்
 வபாத்தானார்கள் என முஸ்லிம்களில் சுன்னத் வால் ஜமாத்தினர் 
கூறுகின்றனர்.

மாறாக நபியவர்கள் இல்லாத காலப்பகுதியில் நபியவர்களின் 
இவ்வெற்றிடத்தை நிரப்பி அவர்கள் கொண்டுவந்த அல்குர்ஆனை
அவர்களின் விளக்கப்படியே வியாக்கியானம் செய்துமார்க்கத்தை 
அவர்கள் போதித்தபடியே எவ்வித கூட்டல் குறைத்தலின்றி 
எதிர்கால சமுதாயத்திற்கு கியாமத் நாள் வரைக்கும் போதிக்க
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மூலம் அஹ்லுல்பைத்தினர்
பணிக்கப்பட்டனர்.

இதனை பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
சைதிப்னு அர்கம் கூறுகிறார்:
ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிற்கும்மதீனாவிற்கும் இடையிலுள்ள'கதீர்கும்'; எனும் நீரூற்றடியில் நின்று  
குத்பா பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார்கள். அதில் 
அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து, (மக்களுக்கு) உபதேசம் 
புரிந்த அவர்கள் 'மனிதர்களே...! நிச்சயமாக நான் ஒரு 
மனிதனாவேன். எனது இறைவனின் தூதர்(மலகுல் மௌத்) 
என்னிடம் வந்து நான் அவரின் அழைப்பிற்கு பதிலளிக்கும் நேரம் 
நெருங்கி விட்டது. நான் உங்களுக்கு பெறுமதிமிக்க இரு விடயங்களை விட்டுச்செல்கின்றேன். அதில் முதலாவது ஒளியும்
நேர்வழியுமிக்க இறைவனின் வேதமாகும். இறைவனின் 
அவ்வேதத்தை பின்பற்றி நடங்கள். இன்னும் அதை 
பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். -அல்லாஹ்வின் வேதத்தை 
வலியுறுத்திக் கூறிய நபியவர்கள் - (இரண்டாவது) எனது 
அஹ்லுல்பைத்தினராவர். எனது அஹ்லுல்பைத்தினர் 
விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை 
ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல்பைத்தினர் 
விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை 
ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல்பைத்தினர் விடயத்தில் 
நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன்.
என மூன்றுமுறை கூறினார்கள்.
       ( ஸஹீஹ் முஸ்லிம் 7: 122)
பிரிதொரு இடத்தில் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்;கள்:
நான் உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு விடயங்களை 
விட்டுச்செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் இறுக்கமாகப்
 பற்றிப்பிடித்துக் கொண்டால் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள். 
அது அல்லாஹ்வுடைய வேதமும்எனது குடும்பத்தினராகிய 
அஹ்லுல்பைத்துமாகும். 
இவ்விரண்டும் ஹவ்ழ் (எனும் சுவனத்தின் நீர்த்தடாகத்தில் நீர் அருந்த) 
என்னிடம் வரும்வரை ஒன்றையொன்று பிரியமாட்டா.
(திர்மிதி 2:307ளூ தாரமீ 2:432ளூ
முஸ்னத் அஹமத் 3:14,17,26,59; ஹாகிம் 3:109)
அஹ்லுல்பைத்தினர் இமாமத் எனும் இப்பாரிய 
பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டோர் என்பதை குறித்த ஹதீதுகள் 
வலியுறுத்துகின்றன என்பது அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் 
நம்பிக்கையாகும்.
நபியவர்களின் வபாத்திற்கு முன்னரோபின்னரோ
 இறைக்கோட்பாட்டைப் பின்பற்றி நடந்த சமூகம்  
இத்தகைய தலைமைத்துவமின்றி தவிக்காது என்பது 
குர்ஆனினதும்,ஹதீதினதும்  கூற்றாகும். இறைவன் 
தனது அருள் மறையில் கூறுகிறான்:
يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُوْلَـئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلاَ يُظْلَمُونَ فَتِيلا
(நபியே) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய 
தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக 
அந்நாளில்) 
எவருடைய (செயற்குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில்
கொடுக்கப் படுகிறதோ அவர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்)
 படிப்பார்கள். இன்னும் அவர்கள் அணுவளவும் அநீதிக்குள்ளாக
 மாட்டார்கள். (17:71)
மேலும் குர்ஆன் கூறுகையில்,
وَيَقُولُ الَّذِينَ كَفَرُواْ لَوْلآ أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ إِنَّمَا أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ
இன்னும் இந்நிராகரிப்போர், (நபியே உம்மைப்பற்றி) 
அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) 
அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமாஎன்று கூறுகிறார்கள். நீர் அச்சமூட்டி 
எச்சரிப்பவரே ஆவீர். மேலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு 
நேர்வழிகாட்டியுண்டு. (13:07)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்அருளினார்கள்:
من مات ولم یعرف امام زمانه مات میتة جاهلیة
எவர் தனது காலத்திற்குரிய இமாமை (வழிகாட்டியை) அறியாமல் மரணிக்கிறாரோ,அவர் ஜாஹிலிய்யா காலத்தில் மரணித்தவராவார்.
          (முஸ்னத் அஹமத்)
இதனடிப்படையில் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 
காலத்திற்கும் ஒவ்வொரு இமாமை தமது உம்மத்தின் 
தலைவராகவும்தமது பிரதிநிதியாகவும் நியமித்தார்கள். 
இஸ்லாமிய சமயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை 
வழிநடாத்த,நபியவர்களின் மூலம் அஹ்லுல் பைத்தைச் 
சேர்ந்த 12 இமாம்கள் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டனர். 
இவர்கள் அனைவரும் ஒருவரின்பின் ஒருவராகஒவ்வொரு 
காலத்தினதும் சமூகத்தின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று 
அவர்களை வழிநடாத்துவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) 
அவர்களின் சுன்னாவை எவ்வித கூட்டல் குறைத்தலின்றி மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
இதனை நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு  கூறினார்கள்:
لايزال الاسلام عزيزأ الي اثني عشر خليفة کلهم من قريش
பன்னிரண்டு கலீபாக்கள் (தோன்றிஅவர்கள்) உள்ளவரை 
இஸ்லாம் பலமாகவே இருக்கும். அவர்கள் அனைவரும் 
குறைஷி வம்சத்தைச் சேர்ந்தோர்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் இமாரா)
ஜாபிருப்னு சமுரா அறிவிக்கிறார்: நபிகள் நாயகம் (ஸல்) 
அவர்கள் கூறநான் செவியுற்றேன். அவர்கள் கூறினார்கள்.'
 பன்னிரண்டு கலீபாக்கள் (தோன்றிஅவர்கள்) உள்ளவரை இஸ்லாம் 
பலம் பெற்றிருக்கும்' - பின்னர் நபியவர்கள் கூறிய ஒரு வார்த்தை 
எனக்குக் கேட்கவில்லை. அதனை என் தந்தையிடம் வினவ 
அதற்கவர், 'அனைவரும் குரைஷி வம்சத்தைச் சேர்ந்தோர்கள்என
 (நபியவர்கள் குறிப்பிட்டதாக) கூறினார்.

   (ஸஹீஹுல் புகாரிகிதாபுல் அஹ்காம்பாபுல் இஸ்திக்லாப்)
குறிப்பிடப்பட்ட திருமறை வசனங்களுக்கமைய 
ஒவ்வொருகாலத்திற்கும் ஒவ்வொரு இமாம்(வழிகாட்டி) 
இருப்பார் என்பதும்மேற்குறித்த நபிமொழிகளுக்கமைய 
12இமாம்கள் இஸ்லாமிய உம்மத்தை வழிநடாத்த நியமிக்கப்பட்டனர் 
என்பதும் தெளிவாகின்றது. 
 ஆகவே நபியவர்களது உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற்ற 
 இமாம்கள்அந்த இமாம்கள் மூலம் நிர்ணயிக்கப்படும் முஜ்தஹிது
(மார்க்க அறிஞர்)கள் முதலானோரையன்றி வேறு எவரும் மார்க்கத் 
தீர்ப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூற அனுமதிக்கப்பட மாட்டார். 
ஏனெனில் இஸ்லாமிய ஷரீஆவின் பொறுப்பாளர் நபிகள் 
நாயகம்(ஸல்) அவர்கள் மட்டுமேயாவார்கள். அவர்கள் போதித்ததைத் 
தவிர மார்க்கத்தில் கூட்டல் குறைத்தல் செய்யவதற்கு எவருக்கும்  அனுமதி கிடையாது. 

நபியவர்களால் நியமனம் பெற்ற இமாம்கள்நபியவர்கள் 
போதித்ததை உள்ளபடி மக்களுக்கு எடுத்துக்கூறும் பொறுப்பைச் 
சுமந்தவர்களாக இருக்கும் அதேவேளை நபியவர்களின்
 மார்க்கத்தை எவ்வித திரிபும்மாற்றமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவும் செயற்படுவார்கள்.
ஆறாவது இமாமானஇமாம் ஸாதிக் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
குர்ஆனுக்கும்சுன்னாவுக்கும் நேர்படுகின்ற எமது கருத்தைத் 
தவிரவேறெதனையும் எம்மிடமிருந்து நீங்கள் ஏற்றுக்கொள்ள 
வேண்டாம். அல்லது அதனை அத்தாட்சிப்படுத்தும் எமது முன்னைய 
கூற்றுக்களில் சான்று இருந்தாலுமே தவிர (ஏற்றுக்கொள்ள வேண்டாம்). 
எமது இரட்சகனின் சொல்லுக்கு மாற்றமாகவோஎமது நபி முஹம்மத்
 (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமாகவோ அமையும் எமது
 எந்த விடயத்தையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டாம். 
நிச்சயமாக நாங்கள் எதைச் சொல்வதாக இருந்தாலும் 
கன்னியமிக்க அல்லாஹ் கூறுகிறான்இறைத்தூதர் கூறுகிறார்கள் 
என்று (அவர்கள் கூறியவற்றையே நாம்) கூறுகிறோம்.   
(ரிஜாலுல் கஷ்ஷீ பக்:223 ஹதீஸ்:401)
மற்றொரு ஹதீதில் இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
'நிச்சயமாக நாம் இறைவனும்அனது தூதரும் கூறியவற்றையே 
சொல்லுகிறோம். எமது பேச்சுக்கள் ஒன்றோடொன்று முரண்படும் 
வகையில்அவரிவர் சொன்னதாக நாம் எதனையும் கூறவில்லை. 
நிச்சயமாக எமது புதிய கூற்றானதுஎமது பழைய கூற்றுடன் என்றும்
ஒத்ததாகவே இருக்கும். எமது முதற்கூற்றுஎமது இறுதியுரையின் உருப் பொருளாகவே இருக்கும். (இதனால்) இதற்கு மாற்றமாக 
எவர் (எம்மிடமிருந்து) எதைக்கூறினாலும் அதனை மறுத்து 
விடுங்கள்' (ரிஜாலுல் கஷ்ஷீ பக்:223 ஹதீஸ்:402)
மார்க்கத்தில் எழும் பிரச்சினைகளுக்கு குர்ஆன் கூறும் 
சரியான தீர்வு என்ன?அவைபற்றி நபிவர்களின் வழிமுறை 
என்ன சொல்கிறதுஎன்பதை ஒரு முஸ்லிம் தெளிவாக 
அறிந்துஇறைவனின் எதிர்பார்ப்புக்கமைய நடந்தொழுக 
விரும்பினால்,அவைகளை மேற்குறிப்பிட்ட இமாம்கள் 
ஊடாக மாத்திரமே அறிந்து செயற்படக் கடமைப்படுகிறார். 
அதாவது நபியவர்கள் இல்லாத காலத்தில் அவர்களின் மார்க்கத்தை 
மக்களுக்கு தெளிவு படுத்தஉத்தியோகபூர்வமாக நபியவர்களால்
 நிர்ணயிக்கப்பட்ட இமாம்களின் வழியினூடாக அன்றி
வேறொருவரிடத்திலோ நபிவழியைத் தேடமுனைந்தால்
அது மனிதனை சரியான பாதைக்கு இட்டுச் செல்லாது என்பது 
எமது அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் நம்பிக்கையாகும்.
சாதாரண மார்க்க அறிஞர்கள் குர்ஆன்ஹதீஸ் மற்றும் 
ஏனைய மூலாதாரங்களை வைத்து எடுக்கும் எந்தத் 
தீர்ப்புகளும்விளக்கங்களும்  நபியவர்களது சுன்னாவையும் 
குர்ஆனின் கருத்தாக்கத்தையும் முழுமையாகத் தழுவியன
 என்றஉத்தரவாதத்தைக் கொண்டதாக  அமையுமாஎன்பது
 ஐயத்திற்கிடமானதே. 

சமகால நிலையை அவதானிக்கும் போது ஒவ்வொரு 
பிரிவும் தாமே சத்தியத்தில் இருப்பதாகவும் நபியவர்களின் 
சுன்னாவைத் தாமே யதார்த்தமாகப் பின்பற்றுவதாகவும் கூறி
பிறர் அசத்தியத்திலும்வழிகேட்டிலும் இருப்பதாகக் கருதுகின்றனர். 

இங்கு நபியவர்களின் சுன்னாவை யதார்த்தத்தமாகப்
 பின்பற்றுவோர் யார்
என வினா எழுப்பப்படுகின்றபோது 
மார்க்கத்தின் ஆழ அகலத்தை முழுமையாகத் தெரியாதவர்
 எவரும் குர்ஆன்ஹதீதை சரியாகப் புரிந்துகொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. 

அத்துடன் நபிகளாரின் மார்க்கத்தை மக்களுக்கு 
எடுத்துக் கூற அவர்களால் நியமிக்கப்படாத முஃப்திகள,; 
உலமாக்கள் மற்றும் முஜ்தஹிதுகளின் மார்க்க 
விளக்கங்களையும்,தீர்ப்புகளையும் ஏற்றுப் பின்பற்றுவது 
மறுமையில் மனிதனை சுவனத்திற்கு கொண்டுசெல்லாது என்பதே உண்மை. 

ஏனெனில் இத்தகையோர்தவறிழைக்கக்கூடிய சாதாரண 
மனிதர்கள் என்ற காரணத்தினால் மார்க்க விடயங்களில் 
இவர்களது இஜ்திஹாத் முயற்சி ஆழங்குன்றிஇவர்களால் 
வெளியிடப்படும் ஃபத்வாக்கள்,விளக்கங்கள் முழுமையற்று 
விடலாம் அல்லது பிழைத்துவிடலாம். 

இன்று முஸ்லிம் சமூகத்தில் மார்க்க அறிஞர்களாக
நோக்கப்படுவோர்மார்க்கத்தைப்பற்றிய விரிவான பார்வையைக் 
கொண்டில்லாமலும்மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறைந்த 
அளவிலான ஹதீஸ்களை மாத்திரம் கண்டுகொண்டும் 
பத்வாக்களை வழங்குவதும்பின்னர் அதனை திருத்திக்கொண்டு 
மீளப்பெற்றுக் கொள்வதுமான துரதிஷ்ட நிலைகள் 
இவற்றுக்கான சான்;றுகளாகும். 

இதன்தொடரில்தமிழ் இஸ்லாமிய உலகில் அண்மைக்காலமாக 
அறிஞரெனப் பேசப்பட்டு வந்த தமிழ் நாட்டைச்சேர்ந்த  ஒருவர்
நெஞ்சில் தக்பீர் கட்டுதல்விரலசைத்தல்பெண்கள் சியாரத்திற்கு 
செல்லுதல்ஸகாத் கொடுத்தல் போன்ற அம்சங்களில் ஃபத்வாக்களை 
வழங்கி பின்னர் அவைகளில் மாற்றமிருப்பதாகக் கூறிஅவற்றை 
வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

அதே போல, சவூதி நாட்டின் இன்னுமொரு பிரபல 
இஸ்லாமிய மார்க்க அறிஞர் சவூதி நாட்டின் பெண்கள் 
தனது வாகன ஒட்டிக்கு தனது பாலைக் கொடுத்து அதன் 
மூலம் அந்த வாகன ஓட்டிகளை முஹர்ரமான முறையில் 
தன்னுடன் ஒன்றாக பயணிக்க கூடிய வகையில் ஷரியா அனுமதியைப் 
பெற்றுக் கொள்ள முடியும் என்று பத்வா வழங்கி அதே வேகத்தில் 
'வாங்கிக் கட்டி" கொண்ட கதையும, அவரது இஸ்லாமிய 
பத்வாவுக்கு எதிராகஅராபிய பெண்கள் பொங்கி
எழுந்த கதையும் பிரசித்தம்.

அராபிய பெண்களின் எழுச்சியைக் கண்டு மிரண்டுப் போன 
சவூதி இஸ்லாமிய அறிஞர்கள் தமது பத்வாவை 
உடனடியாக திருப்பி வாபஸ் வாங்கிய அதிசயமும் 
அண்மைக் கால இஸ்லாமிய உலகின் 
இஸ்லாமிய பத்வாக்களின் தரத்துக்கு ஒரு சான்றாக இருக்கிறது.  
குர்ஆன்ஹதீதைப் பற்றிய ஆழமான அறிவில்லாத ஒவ்வொரு 
முஸ்லிமும் தான் நினைத்தவாறு அவற்றை தனது கையிலெடுக்க 
முயற்சித்தல் அல்லது மார்க்;கத்தை விளங்கி மக்களுக்கு ஃபத்வா 
வழங்கும் தகுதியை நபியவர்களிடமிருந்து பெற்று,அவரது பிரதிநிதிகளாக 
நியமிக்கப்பட்ட இமாம்களின் அங்கீகாரத்தைப் பெறாத 
முஃப்திகளுக்குக் கட்டுப்படுதல் என்பன மனிதனை நபிகளாரின் 
சுன்னாவை விட்டும் வழிதவறச் செய்துவிடும் என்ற நிஜத்தையே
 திருப்பி எடுக்கப் படும் பத்வாக்கள் சொல்லும்  செய்தியாக இருக்கின்றன.

மேற்குறித்த பிழையான முறைகளில் நபிவழியைத் 
தேடமுனைதல்பிழையான அணுகுமுறை என்பதில் தெளிவுற்ற 
அஹ்லுல்பைத் ஆதரவாளர்கள் இதற்காகவே நபியவர்கள் தமக்குப் பின்தம்வழிமுறையை மக்களுக்குப் பிழையின்றி எடுத்துக்கூறவும்அவர்களை இஸ்லாமியப் பாதையில் சரியாக வழிநடாத்தவும் உத்தியோகபூர்வமான 
பன்னிரண்டு இமாம்களை நியமித்தார்கள் என்ற தத்துவத்தைப் 
புரிந்து அதன் படி நடக்கிறார்கள். 

அதேபோல் இந்த இமாம்கள் சமூகத்தை வழிநடாத்துவதற்குத் 
தேவையான அனைத்து அறிவுரைகளையும்உபதேசங்களையும் 
நபியவர்கள் இவர்களுக்கு வழங்கிவிட்டுத்தான் வபாத்தானார்கள் 
என்றும் நம்புகிறார்கள்.
 ஒருமனிதன் இன்னொரு மனிதனின் உடலில் தோற்றுவிக்கும் 
ஒரு சிறிய கீறலுக்கான அபராதம் என்னவென்ற மிகச் சிறிய 
விடயம் தொடக்கம் ஒரு சர்வதேச அரசை நிருவகிக்கும் வழிமுறை 
வரைக்குமான பல்வேறு விடயங்கள்எதிர்காலத்தில் உலக 
அறிவியல் வளர்ச்சியினால் இஸ்லாம் எதிர்நோக்கவிருக்கும் 
சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய 
விடயங்கள் முதலானவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது 
அஹ்லுல்பைத் இமாம்களுக்குப் போதித்தார்கள் என்பது 
அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் நம்பிக்கையாகும்.
 நபியவர்கள் தமது சமூகத்தின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு 
அஹ்லுல்பைத் இமாம்களில் முதலானவரான இமாம் அலி (அலை) 
அவர்களை அறிவுஆன்மீகம் மற்றும் ஆளுமை ரீதியாக நன்கு 
பயிற்றுவித்தார்கள். 

இதனால் இமாம் அலி (அலை) அவர்கள் அறிவிலும்
ஆளுமையிலும் நிகரற்றவராகத் திகழ்ந்தார்கள். அவர்களின் 
அறிவாற்றலைப் புலப்படுத்தக் கூடியதாக 'நஹ்ஜூல்பலாகா
எனும் அற்புதநூல் காணப்படுகிறது. இமாம் அலி(அலை) அவர்கள்
நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்றவைகளை தமக்குப்பின் 
இமாமாகத் திகழ்ந்த இமாம் ஹஸன் (அலை) அவர்களுக்கு 
கற்றுக் கொடுத்தார்கள். இமாம் ஹஸன்(அலை) அவர்கள் 
தமக்குப்பின் வந்த இமாமுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். 
இவ்வாறு ஒவ்வொரு இமாமும் தமக்குப்பின் தோன்றிய 
இமாமுக்கு அவைகளைக்கற்றுக் கொடுத்துவந்தார்கள்.
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப்பின் இஸ்லாமிய 
உம்மத்தை வழிநடாத்துவதற்கு தமது பிரதிநிதிகளாக பன்னிரண்டு 
இமாம்களைக் கருத்திற்கொண்டு அவர்களின் பெயர்களை தெளிவாக 
அறிவித்தார்கள். இவ்விடயத்தை பின்வரும் ஹதீஸ் தெளிவு 
படுத்துகின்றது.
நஃதல் எனும் பெயருடைய மனிதர்நபிகள் நாயகம் (ஸல்) 
அவர்களிடம் வந்து இறைவனின் ஏகத்துவம் பற்றியும்
நாயகத்தின் வபாஅத்திற்குப் பிறகு தோன்றவிருந்த பிரதிநிதிகள் 
பற்றியும் வினவினார். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள்
இறைவனின் ஏகத்துவத்தைப் பற்றி விளக்கிவிட்டுஇமாம்களின் 
பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாக பின்வருமாறு தெளிவாகக் 
கூறினார்கள்.
     اِنَّ وَصِيِّي عَلِىُّ بْنُ اَبِي طَالِبْ இ وَبَعْدَهُ سِبْطَايِي الْحَسَنُ وَالْحُسَيْنُ இ تَلَوْهُ تِسْعَةُ اَئِمَّةٍ مِنْ صُلْبِ الْحُسَيْنِ قَالَ نَعْثَلُ يَامُحَمَّدُ فَسَمِّهِمْ لِي قَالَ(ص) اِذَا مَضَي الْحُسَيْنُ فَابْنُهُ عَلِىٌّ فَاِذَا مَضَي عَلِىٌّ فَابْنُهُ مُحَمَّدٌ فَاِذَا مَضَي مُحَمَّدٌ فَابْنُهُ جَعْفَرُ فَاِذَا مَضَي جَعْفَرُ فَابْنُهُ مُوْسَي فَاِذَا مَضَي مُوْسَي فَابْنُهُ عَلِىٌّ فَاِذَا مَضَي عَلِىٌّ فَابْنُهُ مُحَمَّدٌ فَاِذَا مَضَي مُحَمَّدٌ فَابْنُهُ عَلِىٌّ فَاِذَا مَضَي عَلِىٌّ  فَابْنُهُ الْحَسَنُ فَاِذَا مَضَي الْحَسَنُ فَابْنُهُ الْحُجَّةُ مُحَمَّدٌ الْمَهْدِي فَهؤُلاَءِ اثْنَا عَشَرَ .
 'எனது பிரதிநிதி அலி இப்னு அபீதாலிப்அவருக்குப்பின் எனது 
பேரர்களான ஹஸன் ஹுஸைன் ஆகியோராவர். அதன் பின் 
ஹுஸைனின் வழித்தோன்றலிலிருந்து ஒன்பது இமாம்கள் 
தோன்றுவர்என நாயகம்(ஸல்) அவர்கள் கூறஅவர்களின் 
பெயர்களையும் குறிப்பிடுமாறு அம்மனிதர் வேண்டியதற்கு 
நபியவர்கள் ஹுஸைனின் காலம் முடிந்த பிறகு அவரது 
மகன் அலியும்(ஸஜ்ஜாத்)அலிக்குப்பின் அவரது மகன் 
முஹம்மதும்(பாக்கிர்) முஹம்மதிற்குப்பின் அவரது மகன் ஜஃபரும்(ஸாதிக);,ஜஃபருக்குப்பின் அவரது மகன் மூஸாவும்(காழிம்)
மூஸாவுக்குப் பிறகு அவரது மகன் அலியும்(ரிழா)அலிக்குப் பிறகு 
அவரது மகன் முஹம்மதும்(ஜவாத்)முஹம்மதுக்குப் பிறகு 
அவரது மகன் அலியும்(ஹாதீ)அலிக்குப் பிறகு 
அவரது மகன் ஹஸனும்(அஸ்கரீ)ஹஸனுக்குப் பிறகு 
அவரது மகன் முஹம்மத் மஹ்தியும் ஆவார்கள். இவர்களே 
அப்பன்னிரண்டு பேர் (இமாம்கள்) ஆவார்கள்என பதிலளித்தார்கள்.
      ( யனாஃபீஉல் மவத்தா-ஹனஃபீ கன்தூஸீபக்கம்-441)
ஆகவே நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை சரியாகப் பின்பற்ற முனைவோரெவரும்குர்ஆன்அஹ்லுல்பைத் ஆகிய 
இரண்டினூடாகவே செல்லல் வேண்டும் என்பது புலனாகிறது.

இமாம் மஹ்தி(அலை)
அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் கண்ணோட்டத்தில்இறைத்தூதர் 
(ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்குரிய தமது இறுதிப் பிரதிநிதியாக
இமாம் மஹ்தி (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்தன்மூலம் இவரே 
இறுதி இமாமும், 12வது இமாமுமாவார்;. இவர் பாத்திமா ஸஹ்றா 
(ஸலாமுல்லாஹி அலைஹா) அவர்களின் ஒன்பதாவது வழித்தோன்றலாகக் காணப்படுகிறார்.
'மஹ்தி எனது குடும்பத்தைச் சேர்ந்தவரும்இவர் பாத்திமாவின் சந்ததியில் உள்ளவருமாவார்'. என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
      ( அபூதாவூத் 4271)
 இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஹிஜ்ரி 255இல் பிறந்து
அல்லாஹ்வின் ஏற்பாட்டிற்கமைய மறைந்துஇதுவரை காலமாக 
உயிரோடு இருந்து வருகிறார். இவர்களின் தந்தை 11வது இமாம்
ஹஸன் அஸ்கரீ(அலை) அவர்களும்தாயார் நர்ஜிஸ் அவர்களும் 
ஆவார்கள். இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மறுமை நாள் நெருங்குகின்ற இறுதிக்காலப்பகுதியில் வெளிப்பட்டு அநீதியால் நிரம்பியிருக்கும் இவ்வுலகை நீதியாலும்நேர்மையாலும் நிரப்ப வருவார்கள்.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஸயீதுல் 
குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்:
'போரும்கொடுங்கோன்மையும் நிரம்பியிருக்கும் இப்பூமியில் அமைதியையும்,நீதியையும் நிலைநிறுத்துவார். அவர் ஏழு 
வருடங்கள் ஆட்சி புரிவார.;
            (அபூதாவூத் : 4272)
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுப்படிநாம் வாழுகின்ற 
சமகாலத்திற்குரிய இமாம்இமாம் மஹ்தி (அலை) அவர்கள்தான் 
எனினும்அவர்கள் தற்போது இறைவனின் ஏற்பாட்டிற்கமைய 
மறைந்து வாழ்வதால்  இம்மறைவுக் காலத்தில் அவர்களின்
 பொதுப் பிரதிநிதிகளாக'ஃபுகஹாஎனும் மார்க்கச் சட்டக்கலை 
வல்லுனர்கள்தான் சமூகத்தை 
வழிநடாத்துதல் வேண்டும். இதனை 'விலாயதுல்பகீஹ்' (ஃபகீஹின் ஆட்சி) 
எனக் குறிப்பிடப்படும். 

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மறைந்து வாழும் காலப்பகுதியில்
 மக்கள் தமது மார்க்க விடயங்களில் யாரை நாடுதல் வேண்டும் 
என வினவப்பட்ட போது இமாம் மஹ்தி(அலை) அவர்கள் 
இவ்வாறு குறிப்பிட்டார்கள்:
قال المهدی (ع) :
 وَ اَمَّا الحَوادِثُ الواقِعَةُ فَارجِعُوا فیها اِلی رُواةِ حَدیثِنا فَاِنَّهُم حُجَّتی عَلَیکُم وَ اَنَا حُجَّةُ اللهِ عَلَیهِم
  «البحار 53181» «الوسائل 18101»
 இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறினார்கள்: (நீங்கள்) 
எதிர்நோக்குகின்ற நிகழ்வுகளில் (எமது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள)
 எமது ஹதீதுகளை உங்களுக்கு எடுத்துக் கூறுவோரை அணுகுங்கள். 
நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு எமது அத்தாட்சியாக உள்ளனர். 
மேலும் நான்அவர்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியாக உள்ளேன்.
 (பிஹாருல் அன்வார் 53:181)
 இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மறைந்திருப்தற்கான 
காரணங்கள்பலவாக இருந்தபோதிலும் அவர்கள் பிறந்தகாலத்தில் 
அப்பாசியக் கொடுங்கோல் ஆட்சியாளர்கள்அவர்களைக் கொல்ல 
முயற்;சித்தமையும்இறைவனின் நாட்டமுமே இதற்கான முக்கிய
 காரணங்களாக உள்ளன.
இறுதிக் காலத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பிறந்து 
வருவதில்லை. மாறாக வெளிப்படுவார்கள் என்றே ஹதீதுகளில்
 வந்துள்ளதால் உரிய நேரத்தில் வெளிப்படுவதற்காக இறைவனால் 
தயார்படுத்தப்பட்ட நிலையில் இமாம் மஹ்தி(அலை) இருக்கிறார்கள்.
 இறைவனின் அனுமதி கிடைத்ததும் வெளிப்படுவார்கள் என்பது
 குறிப்பிடத்தக்கது.
 இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பிறந்து இற்றைக்கு
 1175 வருடங்களான போதிலும் அவர்கள் உயிருடன்
இப்பூமியில் வாழ்ந்து வருவதை சாத்தியமற்ற ஒன்றாகக் 
கருதமுடியாது. 
ஏனெனில்ஒரு மனிதனைப் பல்லாயிரம் வருடங்கள் 
உயிர் வாழவைத்தல் என்பது அல்லாஹ்வின் ஆற்றலுக்கு 
அப்பாற்பட்டதல்ல. 

அத்துடன் முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி நபி ஈஸா (அலை) 
அவர்களும்நபி ஹிழ்ர்(அலை) அவர்களும் இன்னும் ஜீவிக்கின்றனர். 

குர்ஆனின் கூற்றுக்கமைய நபி ஆதம் (அலை) அவர்கள் 
ஆயிரம் வருடங்களும்நபி நூஹ் (அலை) அவர்கள் 950 
வருடங்களும் உயிர் வாழ்ந்தனர்(29:14). 

அதேபோன்று விஞ்ஞான ஆய்வுகளின் படி (கடல்களில் 
வாழும் மீன்கள் உற்பட)பல படைப்பினங்கள் பல்லாயிரம் வருடங்கள் உயிர்வாழுகின்றன. எனவே இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் 
அவர்களின் வாழ்நாள் மிகநீண்டது என்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல.

(அல் குர் ஆனையும், அஹ்லுல் பைத்களையும் இஸ்லாத்தின் மூலாதாரமாகக் கொண்டால் நபிகளாரின் சுன்னாவை என்ன செய்வது? என்று எம்மிடம் கேள்வி 
கேட்ட சஹானாவுக்கு இந்தப் பதிவு பதிலாக இருக்கும் என்று நம்புகிறோம்.
http://ahlulbaith.blogspot.com/2011/05/blog-post_14.html#comment-form  -இங்கே சொடுக்குவதன்
 மூலம் சஹானாவின் பின்னூட்டத்துக்கு போகலாம்.) 

நன்றி: தன்னை இன்னார் என்று இனம் காட்ட விரும்பாத சகோதரர்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad