அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, January 25, 2012

பாவம் டீச்சர்....?


நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றிய சிறப்புப் பேச்சொன்றுக்கு பாடசாலை கனிஷ்டப் பிரிவில் கல்வி கற்கும் நமது நண்பர் ஒருவரின் மகன் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.

நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி பேச்சொன்றை எழுதித் தருமாறு அவர் நமது நண்பரை கேட்டிருக்கிறார்.

நமது நண்பர் அவரது மகனிடம் அவருக்கு சுயமாகவே நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும் விடயங்களை எழுதிக் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறார்.

அந்தச் சிறுவரும் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி அவர் அறிந்த விடயங்களை   அவருக்கு தெரிந்த விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.

அவ்வாறு கொண்டு வந்த பேச்சை சின்ன சின்ன திருத்தங்களை செய்து அந்த பேச்சையே செப்பனிடுவதன் மூலம் சிறுவருக்கு அந்தப் பேச்சை மனனம் செய்யும் சிரமம் இருக்காது எனபது நண்பரின் கணிப்பு.

அதன்படி நமது நண்பரும் சிறுவர் கொண்டு வந்த பேச்சை திருத்திக் கொடுத்திருக்கிறார்.

சிறுவர் அவரது உரையினை தயாரிக்கும் பொழுது நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்றும் தாயாரின் பெயர் ஆமினா என்றும் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.

தவறு இல்லையே?


நமது நண்பர் அந்த உரையை செப்பனிடும் பொழுது அப்துல்லாஹ் அலைஹிஸ்ஸலாம் என்றும் ஆமினா அலைஹா ஸலாம் என்றும் திருத்தியிருக்கிறார்.

இதிலும் எதுவித தவறும் இல்லையே?

சிறுவரும் அதனை அப்படியே மணனம் செய்திருக்கிறார்.

ஒத்திகையின் பொழுது நமது சிறுவரின் உரையைக் கேட்ட ஆசிரியை அந்த உரையை மெச்சியிருக்கிறார்.

அதன் பின்னர் நமது சிறுவரை அருகே அழைத்த அந்த ஆசிரியை "நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தாயார் ஆமினாவும் தகப்பனார் அப்துல்லாஹ்வும் நபிமார்கள் இல்லை. அதனால், அவர்களின் பெயர் கூறப் படும் பொழுது அலைஹிஸ்ஸலாம் என்றோ அல்லது அலைஹா ஸலாம் என்றோ கூறக் கூடாது" என்று அறிவுறுத்தி திருத்தியிருக்கிறார்.

நமது சிருவருக்கோ குழப்பம்.


'எனது ஹீரோவான தந்தை சொல்லித் தந்தது சரியா...அல்லது எழுத்தறிவித்த அருமை ஆசிரியை சொல்வது சரியா...?'

இரவில் தந்தையிடம் இது பற்றி விளக்கம் கேட்டிருக்கிறார்.

நமது நண்பர் தனது மகனின் குழப்ப நிலைக் கண்டு அதிரவில்லை.

"ஆதம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் என்ன?" நண்பர் தனது மகனிடம் கேட்டார்.

"அன்னை ஹவ்வா (அலை)" மகன் பதிலுறுத்தார்.

"இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் என்ன?" இது நண்பர்.

"அன்னை ஸாரா (அலை)" நண்பரின் மகனின் பதில்.

"இஸ்மாயில் (அலை) அவர்களின் தாயாரின் பெயர் என்ன?" இது நண்பர்.

"அன்னை ஹாஜரா  (அலை)" இது மகன்.

"ஈஸா (அலை) அவர்களின் தாயாரின் பெயர் என்ன?"

"அன்னை மரியம் (அலை)"

"இவர்களில் யாருமே நபிமார்கள் இல்லையே......" என்ற நண்பர் தொடர்ந்து  "அப்படியிருக்க நீங்கள் அவர்களின் பெயர் கூறும் பொழுது எதற்காக அலைஹிஸ்ஸலாம் என்று கூறினீர்கள்?" என்று தனது சிறு மகனிடம் கேட்டார்.

நமது சிறுவர் சிந்திக்கத் தொடங்கினார்.


'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை .........எவ்வளவு உண்மை.....தந்தை சொன்னது சரி.......'

நண்பர் மௌனித்துப் போன தனது மகனிடம் கேட்டார்."என்ன யோசிக்கிறீங்கள்....?


"இல்லை..." மகன் சொன்னார் "நாளை நான் இதனை எனது டீச்சரிடம் கேட்கப் போகிறேன்...பார்ப்போம் அவர் என்ன சொல்கிறார் என்று." 

நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் பெற்றோருக்கு சரியான கௌரவம் கொடுக்கத் தவறும் எங்களது அறிஞர்களிடம் நீங்களும் இப்படிக் கேட்டுப் பாருங்களேன்! 

3 comments:

Hafis said...

அந்தத் தந்தைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். எவ்வளவு அற்புதமான கற்பிப்பும் முன்வைப்பும் அவரது!

Muhammad Ali said...

Salaam Alaikum, Maasha Allah very nice answer. We will try to use this in our circle.

அஹ்லுல்பைத் said...

நண்பர் ஹாபிசுக்கும் நண்பர் முஹம்மது அலிக்கும் எமது நன்றிகள்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad