அஹ்லுல்பைத் Headline Animator

Monday, March 12, 2012

ஆன்மீகக் குருடர்கள்




தன் புலன் சொல்லும் அறிவினால் அளவிட முடியாத விடயங்களுக்கு மனிதன் எப்பொழுதும் எதிரியாகவே இருப்பான் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.

தேர்த் திரு விழா ஒன்றிற்கு தனது இளம் மகனை ஒரு தந்தை அழைத்து சென்றார்.

தூரத்தில் தேர் வருவது தெரிந்தது.

நெருக்கியடித்த கூட்டத்தில் தந்தையும் மகனும் திக்கு முக்காடினார்கள்.

உடனே தந்தை தனது மகனை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு தேர் வரும் திசையை நோக்கி முன்னேறத் தொடங்கினார்.

கொஞ்ச நேரத்தில் மகன் "சாமி தெரியுது........சாமி தெரியுது.." என்று பரவசத்துடன் கூச்சலிடத் தொடங்கினான்.

தந்தை அண்ணாந்துப் பார்த்தார்.


ஒன்றும் தெரியவில்லை.

முன்னால் பார்த்தார்.

ஜனங்களின் தலைகள் தெரிந்தன.

கோபம் கொண்ட தந்தை சாமியைக் கண்ட மகனிடம் சொன்னார்..."சும்மா உளறாதே  ....அங்கே சாமியும் இல்லை...யாரும் இல்லை."

மகன் ஆச்சரியத்துடன் மீண்டும் சொன்னான்."சாமி எனக்கு தெரிகிறது......சாமி எனக்கு தெரிகிறது"

தந்தை தன் மகனை தனது தோளில் தூக்கி உயரத்தில் வைத்த காரணத்தால்தான் அவரது மகனுக்கு தேரில் அசைந்தாடி வரும் சாமியைக்  காணும் பாக்கியம் கிடைத்தது.

ஆனால், அவனது நிலையை உணரும் அறிவு அந்த தந்தைக்கு இல்லை.

'எனக்கு இல்லாத அறிவு என் மகனுக்கா?', என்று தன் நிலையை தன்னை விடவும் உயரத்தில் இருக்கும் மகனுடன் ஒப்பு நோக்கி தவறான முடிவுக்கு அந்த தந்தை வருகிறார்.

அதனால் அவர் தான் காணாத சாமியை தன் மகனும் காணவில்லை என்று முடிவு செய்கிறார்.

அது மட்டுமன்றி அவரது ஆளுமையைப் பயன்படுத்தி அவர் தப்பாக கருதுகின்ற விடயத்தில் சரி காண மற்றவர்களையும் நிர்ப்பந்திக்கிறார்.

சாமியைக் கண்ட மகனைப் போலவும்......மகனை மறுக்கும் தந்தை போலவும் தான் நம்மில் அநேகர் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் தன்னிலை வைத்து மற்றவர்களின் நிலையும் அது போலவேஎன்று முடிவு செய்து விடுகின்றனர்.

பாவம் அலிஷீனா!

அவரது மூலம் நெருப்பு.

ஆகவே அவர் நெருப்புக்கு சொந்தக்காரர்.

நெருப்பின் சொந்தக்காரர்களுக்கு ஒளியின் மகத்துவம் புரிவது இல்லை.

தொட்டியில் நிறைத்து வைக்கப் பட்டிருக்கும் தண்ணீரை வீசும் காற்று உறிஞ்சி அதனை வற்ற வைத்து விடுகிறது.

ஏனெனில் தண்ணீரும் பஞ்ச பூதங்களில் ஒன்றாகையால் அது காற்றுடன்  கலந்து  காணாமல்  போகிறது.

 தண்ணீரைக் காற்று நாம் அறியாவண்ணம் சிறுக சிறுக வெளியேற்றி தன் மூலஸ்தானத்தில் இணைத்துக் கொள்கிறது.

இவ்வாறுதான் நமது சுவாசம் நமது உயிரை சிறுகச் சிறுக இம்மை என்ற சிறைக் கூடத்தில் இருந்துக் களவாடிக் கொள்கிறது.

இறுதியில் உடம்பு மண்ணுக்கு செல்ல ஆன்மா தனது மூலஸ்தானத்தில் இரண்டறக் கலந்து விடுகின்றது.

சிலர் உம்மு ஹாவியா என்ற நெருப்பிலும், மற்றும் சிலர் இறைவனை அறிந்து அவன் திருவடியிலும் சங்கமமாகி விடுகிறார்கள்.

அத்தகைய சங்கமங்களின் இரகசியங்களை இறைவனே அறிந்தவன்.

பாவம் அலிஷீனாவும் அவரது சிஷ்யர்களும்.

அல்  குர்ஆனில்   இல்லாத   விடயங்களை அவர்கள் அல் குர் ஆனில் இருப்பதாக விபரிக்கிறார்கள்.

அதன் மூலம் ஹாவியா என்ற நரகத்தின் உரிமையாளர்களாக மாறுகிறார்கள். 

அவர்கள் கிண்டலடிக்கும் ஹுருல்ஈன்கள் பற்றிய விடயமும் அவர்களை  நரகத்தின் பால்  கொண்டு செல்லுவதற்கு துணை நிற்கிறது.

அல் குர் ஆனில் பல இடங்களில் மறுமையில் மனிதனுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும் சுவனத்தின் சுகங்கள் பற்றியும் நரகத்தின் அவலங்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப் பட்டிருப்பது உண்மையே.

மறுமை வாழ்க்கையின் நித்தியத் தன்மையை விபரிக்கின்ற வேத நூல் என்ற வகையில் அது அவசியமும் கூட.

அல் குர்ஆனில் சுவனத்தில் சுகமாக இருக்கும் மக்களைப் பற்றி குறிப்பிடும் ஓரிரு இடங்களில் சுவன தேவதைகளைப் பற்றிக் குறிப்பிட்டு இருப்பதும் உண்மை.

சுவனத்து தேவதைகளை அல்லது சுவனத்து ஆரனங்குகளை ஹுர்ல் ஈன்கள் என்று அல் குர் ஆன் வர்ணிக்கிறது.

அதனைத்   தவிர வேறு எந்த வர்ணனைகளும் அல் குர் ஆனில் இல்லை.

இல்லவே இல்லை.

அதே போல இந்த உலகத்தில் சில மனித மனங்களில் வாழ்க்கையின் இறுதி இலக்காக இருக்கின்ற சுக போக வாழ்க்கையின் இறுதி நிலையை விடவும் மேலான நிலையில் இருக்கின்ற வாழ்க்கை வசதிகள் அங்கே இருப்பதாக குறிப்பிடப் பட்டும் இருக்கின்றன.

ஆனால், அல் குர் ஆனில் எந்த இடத்திலும் சுவனத்து ஆண்களுக்கு எழுபத்து இரண்டு ஹுருல் ஈன்களை வழங்குவதாகவோ அல்லது அந்த பெண்களுடன் சுகம் அனுபவிப்பதற்காக நூறு ஆண்களின் சக்தியை ஒரு ஆண் மகனுக்கு வழங்குவதாகவோ குறிப்பிடவில்லை என்பதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இவ்வாறான் கதைகள் எல்லாம் மனித மனங்களின் யூகித்த அபத்தங்களாகும்.

அல் குர் ஆணின் வசனங்களுக்கு ஒவ்வாத இந்தக் கதைகளின் நாயகர்கள் யாராக இருந்தாலும் ஆட்சேபனை இல்லை.

அல் குர்ஆனில் இல்லாத விடயங்களை இருப்பது போல அவர்கள் சொல்வதால் அவர்களை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் மக்கள் வழிக் கெட்டுப் போய்விடுகிறார்கள்.

உலகத்தில் இருக்கும் அனைத்து இன்பங்களும் துன்பங்களும் சொற்ப காலத்துக்கே சொந்தமாக இருக்கின்றன.

இவற்றில் எதுவுமே நிலையானது அல்ல.

ஆதலினால் இவை யாவும் சிற்றின்பமே.

பேரின்பத்தை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

பெண்ணின்பத்தை சிற்றின்பம் என்றே எல்லா அறிஞர்களும் சொல்கிறார்கள்.

சுவனத்து ஹுருல் ஈன்களைப் பற்றிய அவசியம் இல்லாத ஆய்வில் தம்மைக் குழப்பிக் கொண்ட மக்கள் நபிகளாரின் பெயரை உபயோகித்து இஸ்லாத்தின் எதிரிகள் சொன்ன கதைகளை நம்பிக் கொண்டு தடம் பிறழ்ந்து போய் விட்டார்கள்.

எல்லா மார்க்கத்திலும் இறைவனின் பெயரால் அல்லது அவனது தூதரின் பெயரால் அல்லது அவனது வானவர்களின் பெயரால் அசிங்கமான கதைகள் இறைவனுக்கு எதிராகவே புனையப் பட்டிருப்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான செய்கைகளை மனித உருவில்  இருக்கும் உள்ளம்  செத்துப்  போன சாத்தானிய மனிதர்களே செய்திருக்கிறார்கள்.

மனித நேயத்துக்கு அல்லது மனித சமூக ஒழுக்க விழுமியங்களுக்கு சவாலாக மக்கள் மயப் படுத்தப் பட்டிருக்கும் அனைத்துக் கதைகளும் ஒதுக்கி புறந்   தள்ளப் படவேண்டும் என்று நாம் பரிந்துரை செய்கிறோம்.

அது எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் சரியே.

தனது மனோ இச்சைகளை அடக்கி, இறைவனை அறியும் ஆவலில் மிகவும் ஒழுக்கமாக வாழ்கின்ற ஒருவனுக்கு வழங்கப் படுகின்ற சுதந்திரத்தில் ஒழுக்கக் கேடுகளுக்கு கிஞ்சித்தும் இடம் இல்லை என்பதை நாம் அறிவோம்.

அத்தகைய ஒழுக்க சீலன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

அவனுக்கு சொந்தம் இல்லாத எதுவும் அவனை கவரப் போவதில்லை.

நண்பர் அன்புராஜ் அன்னியப் பெண்ணை ஏறெடுத்துப் பார்க்காத இராமனின் ஒழுக்கத்தைப் பற்றி தனது பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

இராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்பதை அவர் புரிந்துக் கொள்ளவில்லை.


இராமாயணம் என்ற கதைக்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவுமே இல்லை.

வலு விழந்த அவ்வாறான ஒரு கதையின் மிகவும் துரதிர்ஷ்ட வசமாக மனைவியைப் பிரிந்து தனது சந்தேகத்தில் அவளை முழுவதுமாக இழந்து போன ஒரு நாயகனை தன் பக்க நியாயத்துக்கு சான்றாக அவர் எடுத்திருக்கிறார்.

அவரது துணிச்சலுக்கு ஒரு சபாஷ்.

அந்தக் கதையின் பிரகாரம், அறுபதாயிரம் பெண்களை மணந்து பெண்ணின்பத்தில் திளைத்து இருந்த தனது தந்தையின் ஒழுக்கம் கெட்ட செயலை ஏக பத்தினி விரதன் இராமன் இறுதிவரை கண்டிக்கவில்லையே.

தனது மௌனத்தின் மூலம் தந்தையின் அத்தகைய ஒழுக்கம் கெட்ட செயலை இராமன் அனுமத்திதார் என்று யாராவது அனுமானித்தால் அது சரியா?அல்லது அப்படி அனுமானிப்பதுதான் சரியா?

இராமன் கதையின் கற்பனையில் ஒரு புறத்தில் நாம் தந்தையின் சொல்லை மீறாத ஒரு மகனையும் சகோதரன் மேல் பாசம் கொண்ட ஒரு சகோதரனையும் தான் காண்கிறோம்.

அறுபதினாயிரம் மனைவியரைக் கொண்டிருந்த தசரதன் நெஞ்சில் சந்தேகம் எழ வில்லை என்று அந்தக் கதை சொல்கிறது.

அறுபதினாயிரம் மனைவியரா  .....? நம்ப முடிய வில்லையே என்று நாம் குதர்க்கம் செய்யவில்லை.

ஒருத்திக்கு ஒருநாள் என்று ஒதுக்கினாலும் தசரதனுக்கு சுமார் நூற்றி அறுபத்து நான்கு வருடங்கள் ஒரு சுற்றுக்கு தேவை என்று நாம் கணக்குப் பார்க்கவும் இல்லை.

கற்பனைக் கதையில் என்ன யதார்த்தம் இருக்கப் போகிறது? 

அந்தக் கற்பனைக் கதையின் இன்னொரு புறம்ஒரு கணவன் தனது மனைவியைப் பற்றி அல்லது மனைவியரைப் பற்றி எத்தகைய மன நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணத்தை சொல்லும் சாட்சியாக அறுபதாயிரம் மனைவியரைக்  கொண்டிருந்த தசரதனின் கதையை நாம் காண்கிறோம்.

நிம்மதியான வாழ்வுக்கு அத்தகைய நம்பிக்கை ,அந்த ஒழுக்கம்தான் அவசியம் என்றும் உணர்கிறோம்.

ஒரு மனைவியை காதலித்த இராமன் நெஞ்சில் சீதையின் கற்பு சம்பந்தமாக எழுந்த சந்தேகம் சீதையையே காவு கொண்ட கதையில் இல்லறத்தில் இணைந்திருக்கும் கணவன் மனைவியின் இடையே எழுகின்ற சந்தேகத்தின் பயங்கரத்தின் விளக்கம் தெரிவதாக நாம் கருதுகிறோம்.

தன் மனைவியை   சந்தேகிக்கும் தரம் கெட்ட குணம் கொண்ட இராமன் நமது கண்களுக்கு தெரியவில்லை.

எங்களுக்கு அந்த இராமனின் குணத்தைப் பற்றி கவலையும் இல்லை.

தன் கற்பில் சந்தேகம் கொண்ட கணவனின் சந்தேகம் தீர சீதை தீக் குளித்ததாக அந்தக் கற்பனைக் கதை நகர்கிறது.

அதில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய பணிவான பெண்ணின் குணத்தை சீதை நமக்கு சொல்லித் தருவதாக கருதுகிறோம்.

கற்பனைக் கதையின் படி சீதை பூமித் தாயின் மகள் அல்லவா?

இரண்டாம் முறை தீக்குளித்த சீதையின் கதையில் சந்தேகம் கொண்ட கணவனை விட்டும் விலகி தாய் வீடு செல்வதே மேல் என்று அபலைப் பெண்களுக்கு சொல்லும் அறிவுரைத் தெரிகிறது.

அந்தக் கற்பனைக் கதையின் அழகில் சீதை பூமியினுள்ளே அல்லவா தஞ்சம் புகுந்தாள்.

அபலை சீதை சந்தேகப் புருஷன் இராமனை விட்டும் தனது தாயாரான பூமித் தேவியினுள் -தாயாருடன் சங்கமமாகிய அழகை அந்தக் கதையில் நாம் காண்கிறோம்.

கதையில் நமக்கு தெரிந்த அறிவுரைகளுடன் நாம் நமது ஆய்வை நிறுத்திக் கொள்கிறோம்.

நாம் சொன்ன பார்வைகள் நமக்கு சொந்தமானது.

அவைகளை விட்டும் கொஞ்சம் அபத்தமாக யாராவது சிந்தித்தால் நாமோ அல்லது இராமாயனமோ அதற்கு பலி அல்ல.

நமது உள்ளங்களுக்கும் அதில் உதிக்கும் எண்ணங்களுக்கும் அந்த எண்ணங்களின் வழி பிறந்த செயல்களுக்கும் அந்த செயல்களின் விளைவுகளுக்கும் சாட்சாத் நாம் தான் சொந்தக்காரர்கள்.

ஒரு எண்ணத்தை எண்ணும்  முன் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற நபி மொழி சொல்லும் எச்சரிக்கையில் வேண்டி நிற்கும் செயல் விளைவுகளின் நிஜமான பொருள் வடிவம் என்னதென்று இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். 

இராமன் கதையிலேயே சொல்லப் படுகின்ற இன்னுமொரு அபத்தமான கற்பனைக் கதைதான் இந்திர லோகத்தின் அதிபதி இந்திரனின் கதை.

இந்திரனின் லீலைகளுக்கு அளவில்லை.

அதே போல இந்திரனின் மனைவியருக்கும்   வரையறை இல்லை.

இந்திர லோகத்தின் தேவதைகளில் திருப்தி காணாத இந்திரன் கௌதவ   முனிவரின் மனைவி   அகலிகையின் மேல் மோகம் கொண்டு செய்ததாக   சொல்லப் படும் கதைகள் சொல்லும் செயல்கள் கற்பனைகள் என்றாலும் அருவருப்பானவை.


இறுதியில் இந்திரனும் அகலிகையும் தாம் செய்த தவறுக்கு கௌதவ முனிவரின் சாபத்துக்கு ஆளாகி இந்திரனின் உடம்பில் கண்கள் நிறைந்த கதையும், கணவரின் சாபத்தின் காரணமாக சிலையாகிப் போன அகலிகை இராமன் காலடி பட்டு சாப விமோசனம் பெற்ற கதைகளெல்லாம் வெறும் உல்டா கற்பனைக் கதைகளாகத்தான்  நமக்குத் தெரிகிறது.

அத்தகைய அசிங்கமான கதைகளை கற்பனைக் கதைகள் என்று நம்பும் உள்ளங்களில் இந்து மதத்தின் கண்ணியம் காக்கப் படும் செயல் விளைவுகள் பரிணமிக்கின்றன.

அதே போல இத்தகைய கதைகளில் தவறு காணாமல் இவற்றை தெய்வ செயல்களாக எண்ணும் எண்ணங்களில் இத்தகையதவறுகளில் தவறைக் காணாது நடை முறை வாழ்விலும் இவ்வாறான தவறுகளுக்கு அனுமதி வழங்கி அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறைந்து விடுகிறது.

இவ்வாறான உள்ளங்களில் செல்வாக்கு செலுத்தும் சமர்த்தான சாமியார்கள் மதத்தின் பெயராலேயே, தெய்வத்தின் பெயராலேயே இவ்வாறான ஒழுக்கம் கெட்ட செயல்களை செய்துக் கொண்டிருப்பதை நாம் அன்றாடம் பார்த்தும் கேட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இல்லை...இல்லை... இந்தக் கதைகள் எல்லாம்  சத்தியமானவை.அவற்றை நாம் விசுவாசிப்போம்.அவற்றில் நாம் புனிதத்தை காண்கிறோம் என்று யாராகிலும் நம்மிடம் சொன்னால் நாம் அதனைப்  பற்றி ஆட்சேபிக்க மாட்டோம்.

ஏனெனில் அது அவர்களின் தெரிவு சுதந்திரம்.

மனித மனத்தின் தெரிவு சுதந்திரத்துக்கு இஸ்லாத்தில் பூரண அனுமதி  இருக்கிறது.

அதனை ஆட்சேபிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

மனித கரங்களினால் புனையப் பட்ட தம்முடைய வேத நூல்களைப் போல அல் குர் ஆணும் இருக்கிறது என்று சிலர் தப்பாக கருதிக் கொண்டார்கள்.

அவர்களின் அத்தகைய எண்ணங்களின் விளைவுகளினால் இறை வேதம் அல் குர் ஆனிலும் இல்லாத குறைகளைத் தேடி குறை காண தொடங்கி விட்டார்கள்.

அவ்வாறு நினைத்தவர்கள் அல் குர் ஆனும் இதே போன்று அபத்தமான கதைகளால் நிரம்பி இருக்கிறது என்று நம்பத் தொடங்கினார்கள்.

அலிஸீனாவும் அவரை தமது வேத ஆசான்களாகக் கருதும் மக்களும் அவர்களின் தவறான எண்ணங்களின் காரணமாக அதே நிலையில் இருக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் போலும்.

அவர்களின் அத்தகைய தவறான நினைப்புகளுக்கு ஆதாரமாக அல் குர் ஆணுக்கு முரண் படும் அனைத்து ஹதீஸ்களும் இருப்பது எங்களது தூரதிர்ஷ்டமாகும்.

சுவன வாழ்க்கையை விடவும் அந்தஸ்த்தில் சிறிதே குறைவான மிகவும் நிறைவான வாழ்க்கை வசதிகளை இம்மையில் இறைவனை நிராகரிக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு   அல்லாஹ் விரும்பும் விடயமும் அல் குர் ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆச்சரியமான இன்னுமொரு உண்மையாகும்.

அலி ஸீனா போன்றோர் இதனை அறியாமல் இருப்பது ஆச்சரியமாகும்.

இல்லை ...அவர்களுக்குத்  தெரியும். 

வேண்டுமென்றே அவர்களது உள்ளம் சொல்லும் நிஜங்களை மறுக்கிறார்கள்.

(இது எப்படி சாத்தியம் என்று இன்னொரு பதிவில் விபரிக்கிறோம்.)

இவ்வாறான இறை நிராகரிப்பாளர்களின் துரதிஷ்ட நிலையைப்  பற்றி அல் குர் ஆன் சொல்லும் அழகைக் கவனியுங்கள்.

"(நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு ) மனிதர்கள் (இறைவனை நிராகரிக்கும் )ஒரே சமுதாயமாக ஆகி விடுவார்கள் எனபது இல்லாவிட்டால் ,அவர்களின் வீடுகளுக்குரிய முகடுகளையும், அவற்றுக்கு அவர்கள் ஏறிச்செல்லும் படிகளையும், நாம் வெள்ளியினால் ஆகியிருப்போம்."

"அவர்களின் வீடுகளுக்குரிய வாயில்களையும், அவர்கள் சாய்ந்துக் கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்)"

"தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்) இவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி    வேறில்லை; மேலும், மறுமையின் நித்திய வாழ்வு உம் இறைவனிடம் அவனை விசுவாசிப்பவர்களுக்குத்தான்"
(அல் குர்ஆன் 43 : 35 ) 

மனித மனம் பலவீனமானது.

அந்த பலவீனத்தின் காரணமாக அற்ப உலக இன்பங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர்கள் அப்பாவித் தனமாக இம்மையை விரும்பி அந்த விருப்பில் மறைந்திருக்கும் மறுமை இழப்பின் அபாயத்தில் இருந்து அவர்களைக் காப்பதற்காகவே அல்லாஹ் அந்த அருளை இம்மையில் அவனை நிராகரிக்கும் மக்களுக்கு வழங்கவில்லை.

இந்த செயலின் மூலம் அல்லாஹ் அவனை நேசிக்கும் பலவீனமான விசுவாசியைக் காப்பாற்றுகிறான்.

மூர்க்கமான, பிடிவாதமான இறை நிராகரிப்பாளர்கள்...?

பாவம்  அவர்கள்.

அவர்களுக்கு அற்பமான இம்மையிலும் ஒன்றும் இல்லை.

நித்தியமான மறுமையிலும் ஒன்றும் இல்லை.

அவ்வளவுதான்.

12 comments:

Dr.Anburaj said...

Very Good. I AM NOT A ATHEIST . I AM A BELIEVER.YOU have taken for granted that all non-muslims are atheists. Thank you.I have bought a copy of Koran-tamil.Let me go through it.You should remember one thing.In Hinduism no single book/man hold supreme.Like science Hinduism offeres immense freedom for innovation.Puranam is being pushed back slowly and process of desiltation of Hinduism is on.You need not quote items which we are pushing to oblivion.We know more stories like that. God in infinite.So a Book which explains God must have limitless pages.Hinduism is not confined with Ramayanam.
I thank you for saying alisina is totally wrong.
In my tamil koran in page No.111 It is clearly stated, that You have nothing to hide with your wife and slave girls.So Koran permits unlimited number of concubines/injustice to women .Arab conquest of India was a cruelest military expedition it which women suffered geatly. Arabs always cruel to Non-arab/Non-muslim women. I think It is due to this Koranic verse. Let me know your answer.I request you to delete all my letters -that contains alisina articles at once.

அஹ்லுல்பைத் said...

நன்றி......நன்றி.....இணைய நண்பர் டாக்டர் அன்புராஜின் பின்னூட்டத்திற்கு நன்றி!!!.

அலிசீனா குர் ஆனுக்கு எதிராக பொய் சொல்கிறார் என்ற எங்களது கூற்றை நம்பி பெரு மனத்துடன் அதனை ஏற்று இறைவனைப் பற்றிய உண்மைகளை அறிய வேண்டும் என்ற பேராவலில் உடனடியாக அல் குர் ஆனை விலை கொடுத்து வாங்கிய உங்களது செய்கை எம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

மரணத்தின் பின்னால் உள்ள நித்திய வாழ்வின் பெரு வெற்றிக்கு உங்களது இந்த வெறித்தனமான பேராவல் ஒன்றே ஆதாரமாக இருக்கப் போதுமாகும்.-இன்ஷா அல்லாஹ்.

உங்களது மறுமை வெற்றிக்கு நாம் எங்கள்......இல்லை..இல்லை....நம்மிருவரின் ஒரே இறைவனிடம் உள்ளம் உருகி இரு கரம் ஏந்துகிறோம்.

இறைவனது பேரருளை வேண்டி நிற்கும் மக்களுக்கு இறைவன் பற்றிய பேருண்மைகளை அவன் உங்கள் மூலமாக வெளிக் கொணரவும் பிராத்திக்கிறோம்.

வாழ்த்துக்கள்.

Dr.Anburaj said...

Thank you very much.Ramayanam is an ancient document.In the hands of poets it has been blown and Interpolated to a great extent.In spite of that it has been a great source of inspiration for the people of India.So it is not an anti-god document.You are very rude on that score.Your comments may be edited. Alisina raises multitude of accusations against Mohammed.If there is no mud under the water, even if you agitate greatly, the water would always be clear. He is also a Muslim of Iran. You have refused one point - 72 horis women 100 fold sex power.other questions awaits for your reply.In the Koran Thabharak Joosvin -Al ma aridj Part 29 Chapter.70 - verse 30- clearly states that Wife as well slave girls are not forbidden for sex.Koran clearly permits sex with slave girls.Concubinity is the greatest insult to womenhood. It is a great shock to me that a God made Book advocates cohabitation and crulty and undignified treatment to womenhood.Alisina is proved in one point.Mohammed in tune with the above verse had Maria and other Kumus girls as concubines.It is usual with Muslims, if anything indecent is quoted, they would simply put aside that the source of the Hadis is unreliable.His marriage with sofia,zinab, and Aisha is ..... ? Aisha is 9 years old when he consummated marriage.U tube is full of explanations for that. All confirms that.Arab culture alone approved by God ? I hope to find answers to all questions that are raised in my letters in the course of time. But Why should you Quote from Hinduism which you do not believe and in your opinion anti God and Prophet ?

Dr.Anburaj said...

I was travelling in a bus,I chanced to overhear the conversation of two muslims of Kayalpatnam.One person belongs to a party of Bridegroom who has decided to divorce his wife and the another is his confidance.In the meeting of senior members of the couple, the sister of bride was furious against divorce and asked the bridegroom to follow "Ekapathiniviratham" otherwise she would kill him. The other senior members argued that in Islam " Ekapathiniviratham " is not available.
I am very happy Ramayanam, in spite of many criticism, is well seated in the mind of Muslim women.That is the success.SriRam never thought about other women/he had no kumus women/concubines/he had never had sex with war captives/He is as chast as Sita.

Dr.Anburaj said...

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள்.

Dr.Anburaj said...

1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?- what a shocking Precedence. Is it true ? source: www.isakoran

Dr.Anburaj said...

the prophet of Allah.

Bukhari 2.018.153 Says that “The sun eclipsed in the life-time of Allah’s Apostle on the day when (his son) Ibrahim died. So the people said that the sun had eclipsed because of the death of Ibrahim. Allah’s Apostle said, “The sun and the moon do not eclipse because of the death or life (i.e. birth) of some-one. When you see the eclipse pray and invoke Allah.”

Bukhari 2.018.154 adds,

when the sun eclipsed he [Muhammad] led the people in prayer,… by then the sun (eclipse) had cleared. He delivered the Khutba (sermon) and after praising and glorifying Allah he said, “The sun and the moon are two signs against the signs of Allah; they do not eclipse on the death or life of anyone. So when you see the eclipse, remember Allah and say Takbir, pray and give Sadaqa.” The Prophet then said, “O followers of Muhammad! By Allah! There is none who has more ghaira (self-respect – honor) than Allah as He has forbidden that His slaves, male or female commit adultery (illegal sexual intercourse). O followers of Muhammad! By Allah! If you knew that which I know you would laugh little and weep much.

Ghaira is the very thing for which Muslims commit honor killing. If you look at a Muslim’s wife or daughter, his ghaira (roughly translated as honor) is injured. If he does not react, it shows that he has little ghaira. The greater is his ghaira the more violent will be his reaction.

The discussion about adultery at this occasion is quite revealing. Why would Muhammad talk about adultery, of all things, in the unreal of his son? It’s not that hard to imagine that he was thinking about it and perhaps knew Ibrahim was not his son. In this sermon Muhammad talks about Allah having a lot of ghaira and then speaks of prohibition of adultery. He concludes by saying he knows of very sad things that others don’t know. Well, it took 1400 years, but I think we have finally discovered those “sad things.”

Another point to bear in mind is that despite the fact the Mariyah was the only women who bore Muhammad a child, he did not marry her. Why would not he marry the mother of his only son?

Bukhari 2.018.161 in another version of this hadith says. “Narrated ‘Abdullah bin Abbas:

“The Prophet then said, “The sun and the moon are two of the signs of Allah. They eclipse neither because of the death of somebody nor because of his life (i.e. birth). So when you see them, remember Allah.” The people say, “O Allah’s Apostle! We saw you taking something from your place and then we saw you retreating.” The Prophet replied, “I saw Paradise and stretched my hands towards a bunch (of its fruits) and had I taken it, you would have eaten from it as long as the world remains. I also saw the Hell-fire and I had never seen such a horrible sight. I saw that most of the inhabitants were women.” The people asked, “O Allah’s Apostle! Why is it so?” The Prophet replied, “Because of their ungratefulness.” It was asked whether they are ungrateful to Allah. The Prophet said, ”They are ungrateful to their companions of life (husbands) and ungrateful to good deeds. If you are benevolent to one of them throughout the life and if she sees anything (undesirable) in you, she will say, ‘I have never had any good from you.’ “

In the funeral of his only son Muhammad does not speak about him. The man who thought it is unfair to say God has only daughters when men can boast with having sons, has lost his only son, but on the day of his death he chooses to speak about adultery and the punishment awaiting women who are ungrateful to their husband. That is quite revealing.

Dr.Anburaj said...

Yes it is true that some rulers did not follow the Quran and conquered many lands for their personal gains. It doesn’t mean that Islam teaches us to do so.

They did it because they followed the Quran and the examples of Muhammad. You have not read the history of Muhammad. I have. So please before trying to tell me what Islam is and is not read the Sira, the Tabari, the Tabaqat and read the damn Quran.

Sina I live in a secular country- India, we live in harmony with many cultures.

You live in harmony because you are in minority and Hindus are tolerant people. Show me a Muslim majority country where non-Muslims live in peace and harmony? In your neighboring Pakistan Christian and Hindu girls are systematically kidnapped, raped and forced to marry their rapist and forced to convert to Islam and when their parents find them the police will defend the rapist and warn the poor parents not to contact their daughters because the girls are now “Muslim” and their kafir parents have no right over them anymore. This is disgusting and instead of you doing anything about that and denounce it, you write to me saying I promote hate.

Stop this game of playing innocent. Arab Muslims raided our countries, raped our ancestors and murdered our forefathers and you defend their evil religion. Where is your shame? Where is your honor? Have you lost everything?

Muslims won through terror and deception. That is going to end. Truth is out and good people are leaving Islam. Make your mind. Are you a good human? Then leave this damn religion of crime and join us. If not you are evil and the world should know it. Good people leave this faith of hate as soon as they learn the truth.

Already our Hindu brothers are suspicious about us due to several terrorist elements promoted by our traditional rival Pakistan to destroy our peace. These people are mad. What has it to do with religion? Pakistan is not able to control their own people and they are attacking us with terrorism for their politics.

It has everything to do with religion. Read the Sira and you will see that what Pakistanis are doing is because of Islam. That Zakir Naik is not a Pakistani and he is supporting terrorism and says every Muslim should be a terrorist. Where do you think he gets that idea? He gets it from Islam!

Dr.Anburaj said...

முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.

மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

Dr.Anburaj said...

இஸ்லாமிய ஆண்கள் செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வது சட்டமாக்கவேண்டும் என்று குவைத் நாட்டின் சல்வா அல் முடைரி (Salwa al Mutairi) என்ற முன்னால் அரசியல் தலைவி அறிக்கை விடுத்துள்ளார். சரி இந்த கால கட்டத்தில் இப்படி செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே யார் முன்னுக்கு வருவார்கள்? என்று கேள்வி கேட்டால், இதற்கும் இந்த சகோதரியிடம் பதில் உண்டு. அதாவது இஸ்லாமியரல்லாத நாடுகளின் மீது நடக்கும் போரில் கைது செய்யப்படும் பெண்களை இப்படி "செக்ஸ் அடிமைகளாக" விற்கலாம், அவர்களை வாங்கி குவைத் நாட்டின் ஆண்கள், தங்கள் வேட்கையை தீர்த்துக்கொள்ளலாம், இதனால், அவர்கள் (குவைத் ஆண்கள்) தாங்கள் விபச்சாரத்தில் விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இப்படி செய்வதினால், இன்னொரு நன்மையும் உண்டாம், அதாவது "போர் நடந்து முடிந்த பிறகு, அந்த இஸ்லாமியரல்லாத நாட்டில் வாழும் பெண்கள் தங்களுக்கு உணவு கிடைக்காமல் வறுமையில் தவிப்பார்கள், எனவே, இவர்களை இங்கு கொண்டு வந்து விற்றுவிட்டால், இவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடும் கிடைக்கும், அதே நேரத்தில் குவைத் ஆண்களின் மனதும் நிறம்பும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், செசன்யா போரில் பிடிபட்ட அனேக ரஷ்ஷிய பெண்கள் இருப்பார்கள், இவர்களை இப்படி விற்காலம் என்று இந்த சகோதரி கருத்து தெரிவித்துள்ளார்கள்.

என்னே அருமையான சகோதரி!

வறுமையில் வாடும் பெண்களின் வயிறு பசியை போக்க நல்லதொரு திட்டம்!

மேலும் தாம் மக்காவிற்குச் சென்று இருந்த போது, ஒரு இஸ்லாமிய அறிஞரிடம் இதைப் பற்றி கேட்டபோது, இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்திருப்பது தவறானது அல்ல என்று கூறினாராம், இது ஹராம் இல்லை என்று கூறினார்களாம். மற்றும் குவைத்திலும் அனேக இஸ்லாமிய அறிஞர்களை கேட்டபோதும், இது ஹராம் இல்லை என்று சொன்னார்களாம்.

ஒரு சௌதி அறிஞர் கூறும் போது, ஒரு இஸ்லாமிய நாடு, இஸ்லாமியரல்லாத நாட்டின் மீது படையெடுத்து ஜெயித்தால், அந்த நாட்டில் கிடைக்கும் இஸ்லாமியரல்லாத பெண்கள் தான் இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம் என்றாராம்.

இந்த சகோதரின் கூற்றுப்படி, "இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்து இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயமல்ல, இது இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட ஒன்றல்ல".

இதனை மேலும் விளக்க, ஒரு எடுத்துக்காட்டையும் இந்த அருமை அன்னை சொல்லியுள்ளார்கள், அதாவது 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாருன் அல் ரஷீத் (Haroun al-Rashid) என்ற இஸ்லாம்ய அரசர் 2000 வைப்பாட்டிகளை (செக்ஸ் அடிமைகளை) வைத்திருந்தாராம். ஆகையால், இது தவறல்ல.
கடைசியாக, இந்த சகோதரின் அறிவுரை என்னவென்றால், எப்படி வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்களோ அதுபோல, பல அலுவலகங்களை திறந்து, இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளை விற்கும் வியாபாரம் கூட செய்ய நாடு முன் வரவேண்டும் என்பதாகும்.

இந்த தலைவியின் இந்த அறிக்கைகள், அனேகரை துக்கப்படுத்தியுள்ளது. ஆனால், இவர் மீது குறை கூற நமக்கு வாய்ப்பு இல்லை, ஏனென்றால், இஸ்லாம் எதனை அங்கீகரித்துள்ளதோ அதனைத் தான் இவர்களும் கூறியுள்ளார்கள். பணம் படைத்த ஆண்கள், தங்கள் காமவேட்கையை தீர்ப்பதற்காக இப்படி செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதே! திருமணத்திற்கு வெளியே இப்படி போரில் பிடிபட்ட பெண்களை வைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, அதனைத் தான் இவர்களைப்போல இருப்பவர்கள் கருத்து கூறுகிறார்கள்.

Dr.Anburaj said...

இந்த சகோதரியிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள்:

ஆண்களும், ம(மா)னக்கட்டுப்பாடும்

ஆண்கள் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், அவர்கள் இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களை செய்யவேண்டியதில்லையே!
ஆண்கள் விபச்சாரம் செய்யாமல் இருக்க இந்த ஏற்பாடு சரியானது என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படி அடிமைகளிடம் உடலுறவு கொள்வதும் கூட "ஒரு விபச்சாரமில்லையா?"
ஆண்களில் சிலருக்கு காமவேட்கை அதிகம் என்பதால், அவர்களுக்கு இப்படிப்பட்ட சட்டப்பூர்வமான விபச்சாரத்தை செய்ய அனுமதி கொடுப்பதை விட, அவர்களுக்கு அறிவுரை கூறி, கட்டுப்பாட்டுடன் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கலாமே!
ஆண்களின் காமவேட்கையை பூர்த்தி செய்வதற்கு செக்ஸ் அடிமைகளை பயன்படுத்தலாம் என்று ஒரு தீர்வை கொடுக்கும் நீங்கள், அந்த குடும்பத்தில் இருக்கும் அந்த ஆணின் மனைவியின் நிலை என்ன என்று எண்ணிப்பார்த்தீர்களா?
ஒரு பெண் எதை வேண்டுமானலும் பகிர்ந்துக்கொள்வாள், ஆனால், தன் கணவனை பகிர்ந்து கொள்ளமாட்டாள், அப்படி பிடிவாதமாக அந்த ஆண் திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது என்பது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்காதா?
சமுதாயத்தை மதித்து, தன் குடும்பத்தை மதித்து, தன் ஆசைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு ஆண், இப்படி சட்டப்படி விபச்சாரம் செய்ய அனுமதி கொடுப்பதைக் கண்டால், இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த தன் நடத்தையை கெடுத்துக்கொண்டு, இப்படி செக்ஸ் அடிமைகளை விலைக்கு வாங்கி தன் நல்ல நிலையை விட்டு இறங்கிவிடுவானே, இது தவறு இல்லையா?
இஸ்லாமிய ஆண்களின் நிலைக்கே வருகிறேன், ஒரு முஸ்லிம் நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் சொல்லும் போது, உங்கள் முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகளும் போதவில்லையா? நான்கு பேர் இருந்தும் அவர்களின் காமம் தணியவில்லையா?
இஸ்லாமியரல்லாத ஆண்களை எடுத்துக்கொண்டால், ஒரு பேச்சுக்காகவாவது சொல்லாம்(பேச்சுக்காக மட்டுமே), அதாவது ஒரு மனைவியோடு வாழ்கிறான், ஆசைகள் அவனுக்கு அதிகம், அதனால் இந்த ஏற்பாடு என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, ஆனால், ஏற்கனவே 4 மனைவிகளை உடைய முஸ்லிமுக்கு இன்னும் தன் ஆசை தீரவில்லையானால், அதனை என்னவென்றுச் சொல்வது? வாழ்க்கையே காமம் தானா? வேறு வேலையே முஸ்லிமுக்கு இருப்பதில்லையா? ஒரு சதவிகிதம் கூட 'மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம்' போன்றவைகள் பற்றி பேசுவது/சிந்திப்பது இல்லையா?
அன்பான சகோதரியே, பணம் படைத்தவன் தன் காமவேட்கையை தீர்த்துக்கொள்ள வழியைச் சொன்னீர்கள், ஆனால், ஏழை முஸ்லிம் என்ன செய்யவான்? அவனுக்கு இருக்கும் அதிகமான காமத்திற்கு வழி என்ன? எப்போதாவது அவன் விபச்சாரம் செய்ய அனுமதி உண்டா? அல்லது ஏழைகள் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் கூறப்போகிறீர்களா? பணக்காரனுக்கு ஒரு நியாயம் ஏழைக்கு ஒரு நியாயமா? செல்வந்தனோ ஏழையோ இருவரும் மனிதர்கள் தானே.. இருவருக்கும் ஆசைகள் (மிதமிஞ்சிய ஆசைகள்) இருக்குமல்லவா?
ஒருவேளை எங்கள் ஆண்களுக்கு (முஸ்லிம் ஆண்களுக்கு) அதிகமாக ஆசை உள்ளது என்று முஸ்லிம் பெண்கள் நினைப்பீர்களானால், முதலாவது அவர்கள் அதிகமாக பெண்கள் விஷயங்கள் பற்றி பேசுவதை, வெள்ளிக் கிழமைகளில் இஸ்லாமிய சொர்க்கம் பற்றிய பயான்களை (சொற்பொழிவுகளை) கேட்பதை நிறுத்தச் சொல்லுங்கள், அப்போது தானாக அடங்கும் ஆசை. மதரஸாக்களில், மசூதிகளில் பேசுப்படும் விவரங்களை கொஞ்சம் காது கொடுத்து கேட்பீர்களானால், எங்கே பிரச்சனை என்பது உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ற வள்ளுவரின் வாக்கை படித்த அனுபவம் நமக்கு உண்டா?

Dr.Anburaj said...

காபிர்களின் 21ம் நூற்றாண்டை முஸ்லிம்களின் 7ம் நூற்றாண்டாக்காதீர்கள்?

செசன்யா நாட்டில் ரஷிய பெண் போர் கைதிகள் இருப்பார்கள், அவர்களை விற்கலாம் அல்லவா? என்று அறிவுரை கூறும் நீங்கள்… உங்கள் நாட்டில் ஒரு இஸ்லாமியரல்லாத நாடு போர் தொடுத்து, உங்களை போர் கைதியா ஆக்கினால், நீங்கள் வேறு நாட்டில் ஒரு செக்ஸ் அடிமையாக விற்கப்பட்டால், உங்கள் நிலை எப்படி இருக்கும்?
உங்கள் எஜமானின் வீட்டில், அவனது செக்ஸ் ஆசைகளை மட்டும் தீர்க்கும் ஒரு இயந்திரமாக இருக்க நீங்கள் விரும்புவீர்களா?
சாப்பாடு இல்லாமல் மரிக்கும் பெண்களுக்கு இது நன்மை செய்வதாக அமையும் என்றுச் சொல்லும் நீங்கள், உங்களுக்கு இதே நிலை வருமானால் 'உயிர் வாழ்வதற்காக உணவு கொடுக்கிறார்கள்', இதனால், இந்த வேலைக்கு நான் தயார் என்று சொல்லமுடியுமா?
போர் மூண்டதால் உணவு கிடைக்காமல் ஒரு நாடு தள்ளாடும் போது, அம்மக்களுக்கு உண்வு, உடை இருப்பிட வசதிகளை செய்ய உங்கள் நாட்டின் செல்வத்தில் ஒரு பாகத்தை அனுப்பி அவர்கள் மானத்தை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, எங்கள் ஆண்களுக்கு ஆசை அதிகம், ஆகையால், உணவு இல்லாதவர்களை எங்கள் ஆண்களின் காம பசிக்கு இறையாக்கிக்கொள்கிறோம் என்றுச் சொல்வது நியாயமாக தெரிகின்றதா?
இறைவன் நமக்கு செல்வத்தை அதிகமாக கொடுக்கும் போது, அதை பயன்படுத்தி மற்ற மக்களின் பசியை போக்கவேண்டுமே ஒழிய அவர்களின் மானத்திற்கு விலை பேசக்கூடாது.
ஒரு இஸ்லாமிய நாடு (ஈராக்) இன்னொரு இஸ்லாமிய நாட்டை (குவைத்) பிடித்த போது, வேறு ஒரு இஸ்லாமிரல்லாத நாடு (அமெரிக்கா) உங்களுக்கு ஆதரவாக நின்று உங்களை விடுதலையாக்கியதே. இதையெல்லாம் மறந்துவிட்டு, இன்று இஸ்லாமியரல்லாதவனின் மனைவியை, மகளை, தாயை உங்கள் ஆண்களின் பசிக்கு அழைக்கிறீர்கள்? இது உங்களுக்கு நியாயமாக உள்ளதா?



நாட்டுவாசியை காட்டுவாசி ஆக்காதீர்கள், பிளீஸ்!

அரசர்கள் ஆட்சி செய்த கடந்த காலத்தில், அனேக தீய செயல்கள் நடந்துள்ளன. மண்ணுக்கும், பெண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்பட்ட போர் புரிந்தாரக்ள். கேட்பார் யாருமில்லை என்ற நிலையில் அரசர்கள் தங்கள் விருப்பப்படி செய்து வந்தார்கள்.
இன்று அப்படி இல்லை, சுனாமி வந்து மக்களை துன்பப்படுத்தும் போது, அனேக நாடுகள் உதவி கரம் நீட்டுகின்றன, உணவும், உடைகளும் மருந்துகளும் கொடுத்து அனுப்புகின்றன. தன் குடும்பமே துன்பத்தை அனுபவிக்கிறது என்று கவலைக்கொண்டு உலக மக்கள் தாராளமாக பணத்தை, பொருளை கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உயர்த்த முயற்சி எடுக்கிறார்கள். நீங்கள் கருதுவது போல, உணவு இல்லாத மக்களின் நிலையை உங்கள் காமவேட்கையை தீர்க்க பயன்படுத்துவதில்லை.
அநியாயமாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்தால் பல நாடுகள் ஒன்று சேர்ந்து பிரச்சனையை நிவர்த்தி செய்ய முன்னுக்கு வருகின்றன. யாரோ எங்கேயோ இரண்டு நாடுகள் போர் புரிகின்றன, நமக்கு என்ன வந்தது? என்ற தோரணையில் அல்லாமல், பெரும்பான்மையான நாடுகள் பிரச்சனைகளை தீர்க்க முன்வருகின்றன.
தற்காலத்தில் ஒவ்வொரு நாடும் தன் சுய இராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்வது, வீணாக மற்ற நாடுகள் மீது போர் தொடுத்து, வென்று, அந்நாட்டவரின் சொத்துக்களை அபகரிப்பதற்கும், கைதிகளாக மக்களை கொண்டுவந்து அடிமைகளாக விற்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக, தன் நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால், சரியான பதிலடி கொடுத்து, தன் நாட்டு மக்களின் நலனை காப்பதற்காக ஆகும்.


எனவே, உலக சரித்திரத்தில் நடந்துமுடிந்துவிட்ட அனேக கோரமான போர்கள், சண்டைகள், மரணங்கள், கற்பழிப்புக்கள், அடிமை வியாபாரம் போன்றவைகளை மறுபடியும் தலை தூக்காத படிக்கு நாம் பார்த்துக்கொள்ளவேண்டுமே ஒழிய மறுபடியும் மனிதனை காட்டுவாசியாக்கும் முயற்சி சரியானது அல்ல.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad