அஹ்லுல்பைத் Headline Animator

Monday, February 27, 2012

ஆற்றாமையுடன் ஒரு பணிவான வேண்டுகோள்...!!!!! உதவுவீர்களா...??????


முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஏதோ ஒரு பெயரில் ஆக்கிரமித்து கபளீகரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படையினர்.

அமெரிக்க தலைமைத்துவ நேட்டோ படையினரின் அக்கிரமங்கள் எம்மை அணுகாத காரணத்தினால் அந்த ஆக்கிரமிப்பின் வலிகளை நாம் உணரவில்லை.இப்பொழுது உலக முஸ்லிம்களின் மத நம்பிக்கையை அகௌரப்படுத்தி அவர்கள் மதிக்கும் அல் குர்ஆனை தீயிட்டு கொளுத்தி தங்களது வெறுப்பை வெளிக் காட்டியிருக்கிறார்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் நேட்டோ படையினர்.


இந்த வேதனையான   செய்கை இம்மாதம் இருபதாம் திகதி தென் கிழக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் பிரதேசத்தில் இருக்கும் சரிகார் நகரத்தில் அமைந்திருக்கும் விமானப் படைத் தளத்தில் அமெரிக்கப் படையினரால் செய்யப் பட்டது.


நேட்டோ படையினரின் இந்த செய்கை அவர்கள் உலக முஸ்லிம்களின் உள்ளத்துடன் விளையாடுகின்ற ஒரு வகையான மனோவியல் யுத்தம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் ஈமானின் வலிமையை, அவர்களின் ஒற்றுமையின் வீரியத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காக இந்த செய்கையை அவர்கள் செய்திருக்கக் கூடும்.

எங்கள் எதிரிகளின் இத்தகைய செய்கைகளுக்கு நாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து எங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி எங்களது மத நம்பிக்கையின் உறுதியை அவர்கள் புரியும் படி செய்ய வேண்டும்.


இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது அனைத்து வலிமைகளையும் பயன் படுத்தி இலங்கை முஸ்லிம்களை ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைத்து இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பை நெறிப் படுத்த வேண்டும் என்று விணயமாக கேட்டுக் கொள்கிறோம்.

வானொலியில் ஒலிபரப்பப் படுகின்ற வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கத்தையும் நாடளாவிய ஜும்மாஹ் பிரசங்கங்களையும் முறையாக நெறிப் படுத்தி இலக்கிட்டால் குறிப்பிடப் பட்ட ஒரு வெள்ளிக் கிழமையை தெரிவு செய்து அகில இலங்கை ரீதியில் எங்களின் எதிர்ப்பை வெளிக் காட்ட முடியும் என்று எண்ணுகிறோம்.


ஜம்மியத்துல் உலமா குறிப்பிடும் அதே தினத்தில் நாடளாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம் வர்த்தகர்களும் கடையடைப்பு செய்வதன் மூலம் இலங்கை வர்த்தக சமூகத்தினருக்கும் புனித அல் குர் ஆன் எரிக்கப் பட்ட செய்கைக்கு விரோதமாக தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளிக் காட்ட முடியும்.

நிச்சயமாக எங்கள் வர்த்தக முஸ்லிம்கள் இந்த செய்கைக்கு உடன்படுவார்கள்.

இலங்கை ஜமாத்தே இஸ்லாமிக்கும் , இலங்கை த்வஹீத் ஜமாத்துக்கும், இலங்கை சலபி கௌன்சிலுக்கும் தங்கள் அமைப்பில் இருக்கும் மாணவர்களை நெறிப் படுத்தி குறிப்பிடப் பட்ட ஒரு தினத்தில் தங்களது அமைப்பின் அங்கத்தவர்களை ,அவர்களது மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களது எதிர்ப்பை வெளிக்காட்ட முடியும்.

வியாழன் இரவுகளில் ஜும்மாஹ் ராத்திரிக்கு கூடியிருக்கும் அனைத்து மர்கஸ்களிலும் ஓரிரவு   பயான்களை நெறிப் படுத்துவதன் மூலம் நமது தப்லீக் சகோதரர்களை ஒன்றிணைத்து இந்த நேட்டோ படையினரின் அராஜக செயலைக் கண்டித்து எங்களது எதிர்ப்பை வெளிக் காட்ட முடியும் என்பதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

எங்களது முஸ்லிம் அமைச்சர்கள் பாராளு மன்றத்தில் இந்த விடயத்தி பேசுவதன் மூலம் இலங்கை பாராளு மன்றத்திலும் எங்களின் எதிர்ப்பு செய்தியைப் பதிவு செய்ய முடியும்.

எங்களின் வலிமை மிக்க ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் ஆளுமைக்கு ஏற்ப இந்த செய்திகளை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் மக்கள் மன்றத்தில் நமது எதிர்ப்பின் வீரியத்தை வெளிக் கொணர முடியும் என்று எண்ணுகிறோம்.

இலங்கையில் இருக்கும் ஈரான் கலாசாரப் பிரிவில் இருக்கும் உலமாக்களுக்கு ஈரான் தூதுவராலயத்தை சிறந்த முறையில் உபயோகித்து இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை உலகளாவிய மக்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒன்றிணைந்து இராஜ தந்திர ரீதியில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முகாமைத்துவப் படுத்துவதற்கு முடியும் என்று நம்புகிறோம்.

எல்லாம் சரி.

இனி, பூனைக்கு மணி கட்டுவது யார்?????

2 comments:

Jaffna Muslim Base said...

மிக நல்ல கருத்து. மிக நல்ல ஆலோசனை. மிக நல்ல முன்வைப்புக்கள். இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் இதை அவசியம் கவனத்தில் எடுத்தல் வேண்டும்

நாம் நினைத்தோம் “அஹ்லுல் பைத்” வெறுமனே 1400 வருடங்களிற்கு பிந்தியதை தோண்டியெடுக்கும் தளமென்று. இப்போது தான் புரிகிறது அது 2100 பற்றியும் பேசக்கூடியதென்று.

இன்னொரு உண்மையையும் நாம் கண்டு கொண்டோம். அது “1400 இற்கும் 2012 இற்கும் இடையில் உள்ள தொடர்பை. உமையா அரசியலை.உமையா சமூகவியலை. உமையா குடும்பவியலை. உமையா தனிமனிதவியலை”.

இந்த உமையாயிஸம் தகர்க்கப்படும் போது தான் உலக முஸ்லிம் உம்மாவிற்கு விடிவு என்பதை நீங்கள் சொல்வதும் எமக்கு புரிகிறது.

அஹ்லுல்பைத் said...

எங்கள் வேண்டுகோளில் சரி கண்ட Jafna Muslim Base அமைப்புக்கு நன்றி.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad