அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, December 29, 2012

இலங்கை முஸ்லிம்களின் தன்னிருப்புக்கு அச்சுறுத்தலாக முஸ்லிம் தலைமை தீர்மானித்த தீர்மானங்கள்..........
இந்த இணைப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் பிரிவினருக்கு ........ஹலால் அனுமதிக்கு எதிராக தமது அமைப்பு செயல் படுவதற்கான காரணத்தை சொல்லும் பௌத்த பிக்கு............இதனை பார்த்து விட்டு நமது பதிவைப் பாருங்கள்...........நாம் சொல்லும் விடயம் என்னதென்று புரிந்துப் போகும்.

ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழ்  அங்கீகாரப் பகுதியினரின் செயல் விளைவுகள்   சொல்லும் முன்னறிவிப்பு அபாயகரமானது.

எப்படி என்கிறீர்களா?

முதலில் இந்தக் கதையைக் கவனியுங்கள்.

நகரத்துப்  பணக்காரன் ஒருவன் கிராமத்தில் தனது நண்பனைக் காண வந்தான்.

கிராமத்தில், அவனது நண்பனுடன் ஒரு ஆடு மூன்று கால்களுடன் தத்தி....தத்தி வந்துக் கொண்டிருந்தது.

நண்பன் டி .வி. ப்ரிட்ஜ்,கம்பியூட்டர்  எதுவுமின்றி ஒரு பரப்பு நிலத்தில் சில தென்னைகளுடன் திருப்தி கொண்டிருந்தான்.

இவை எதுவும் நகரத்தானைக் கவரவில்லை.

அவனை சங்கடப் படுத்தியது கிராமத்தானுடன் இருந்த காலிழந்த ஆடு."இது என்ன?" அவன் ஆட்டைப் பார்த்தபடி கிராமத்தானிடம் கேட்டான்.

"ஓ ...இதுவா?...இந்த ஆடு பேசும்." என்ற கிராமத்தான் தொடர்ந்து "சென்ற வாரம் எனது பேசும் ஆட்டுக்கு கிராமத்திலேயே தலை சிறந்த ஆடு என்ற சான்றிதழும் கிடைத்தது.அது மட்டுமல்ல.......சென்ற வருடம் எனது ஆடு ஓடுகின்ற புகையிரதத்தை நிறுத்தி பெரும் விபத்தொன்றையே தவிர்த்தது.அதனால் சென்ற வருடத்தின் நாயகன் விருதும் அதற்குத்தான் கிடைத்தது."

"எல்லாம் சரி......." கிராமத்தானிடம் நகரத்தான் கேட்டான்."உனது ஆட்டின் காலுக்கு என்னவாயிற்று....ஆடு ஏன் நொண்டுகிறது?"

"ஓ ...அதுவா..." என்ற கிராமத்தான் சாதாரணமாக சொன்னான்  "ஆட்டை ஒரே நேரத்தில் முழுதாக என்னால் சாப்பிட முடியாதல்லவா.....அதனால் நான் அந்த ஆட்டின் பின்னங் கால்களில் ஒன்றை வெட்டி சூப் வைத்தேன்."

நகைச்சுவை போலத் தெரியும் இந்தக் கதை சொல்லும் கதை என்ன?

'எக்சிஸ்டென்ஷி யலிச'த்துக்கு விளக்கம் சொல்ல சொல்லப் படுகின்ற இக் கதைகுரிய விளக்கத்தை  கொஞ்சம் விளக்க முயல்கிறேன்.

இதோ இந் நிமிடம் இதனை வாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் உயிருள்ள ஒரு பிறவி.

உங்களைப் பலவாறு வகைப் பிரிக்கலாம்.

குடும்பத்தில் நீங்கள் ஒரு வகை......மகன்,சகோதரன்,கணவன்,தகப்பன்.......என்று ஏதோ ஒரு வகை.

நீங்கள் வகிக்கும் தொழிலின் பிரகாரம் இன்னொரு வகைப் படுத்தல்.......நிறுவனத் தலைவர்,சிரேஷ்ட முகாமையாளர்,மேலாளர்,இலிகிதர்,அலுவலக உதவியாளர்,பொறியியலாளர்,வைத்தியர்,சட்டத்தரணி.............இப்படி ஏதோ ஒரு வகையில் நீங்கள் வகைப் படுத்தப் பட்டிருப்பீர்கள்.

சமூகத்தில் பிறிதொருவகை......இயக்க உறுப்பினர்  ...தொண்டர் அல்லது அங்கத்தவர்,ஒரு அமைப்பின் தலைவர் என்று அது நீழும்.

இப்படி பாகுபடுகின்ற உங்களைப் பற்றிய சாரம்தான் நிஜத்தில் நீங்கள்.

எந்த வகையில் உங்களை யார் அழைத்தாலும் நீங்கள் நீங்கள்தான்.

பாகுபடுத்தி அழைக்கப் படுகின்ற உங்களுடைய இருத்தல் அதாவது,நீங்கள் உயிருடன் இருப்பது,உயிர் வாழ்வது  இந்த சாரங்களை விட முக்கியமானது.

உங்களை.....உங்களது இருப்பை உறுதி செய்வது எது?

'என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை......அதனால் என் செயல்களுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது' என்ற மன நிலையில் நீங்கள் செய்யும் செய்கைகளின் செயல் விளைவுகள்  உங்களை.....உங்களது குடும்பத்தைப் பாதிக்கும்.

எப்படி?

அந்த செயல் விளைவு உங்களது இருப்பை உறுதி செய்கின்ற அல்லது உங்களது இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற ஒரு விளைவை உருவாக்கி விடும்.

அதேபோன்று,ஒரு சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற தலைவர் அல்லது ஒரு சமூகத்தை வழி நடாத்துகின்ற ஒரு அமைப்பு செய்யும் செயல்களின் செயல் விளைவுகள் அந்த சமூகத்தின் விமோசனத்துக்கு அல்லது அழிவுக்கு களம் அமைத்துவிடும்.

நாம் சொன்ன கதையில் அசாதாரணமான ஆட்டை விட அந்த கிராமத்தானின் உயிர் வாழ்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் கதை சொல்லும் கருத்துடன் இலங்கையில் இன்றைய முஸ்லிம்களின் கள  நிலவரத்தைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இலங்கை ஜம்மியத்துல் உலமா என்கின்ற அமைப்பு இலங்கையில் இருக்கின்ற இஸ்லாமிய அறிஞர்களின் நலனுக்காக உருவாக்கப் பட்டதொரு அமைப்பு.

ஆனால், அந்த அமைப்பு அந்த அமைப்புக்கேத் தெரியாமல் முஸ்லிம்களின் சமூக நலனுக்கு குரல் கொடுக்கின்ற அமைப்பாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

யாரும் அதனை ஆட்சேபிக்கவில்லை.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களின் நலன் காக்கும் பொது வேலைத் திட்டத்தில் பண முதலீடுகளை ஊக்குவிக்கின்ற ஷரியா வங்கி முறை அதிகாரத்தையும், உணவு உற்பத்தி பரிசோதனை செய்து ஹலால் சான்றிதழ் அதிகார அமைப்பையும் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு நிறுத்தியது.

இந்த இரண்டு அதிகார மையங்களும் ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை அவனது இம்மை மறுமை வெற்றிக்கு முக்கியமானது.

ஆகவே,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அதனை தனது அதிகாரத்தில் வைத்திருப்பதை யாராலும் ஆட்சேபிக்க முடியாது.

எனினும் மெலிதான ஒரு நெருடல்......

ஒருவர் உண்ணும் உணவில் ஹராம் கலந்துள்ளதா? அல்லது அது ஹலாலானதா? என்ற சான்றிதழை எந்த அளவுகோலைக் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அளவிடுகிறது என்ற விடயம் பெரும் கருத்துச் சிதைவுகளை இலங்கை முஸ்லிம் புத்திஜீவிகளிடையே விதைத்தது.

ஒரு பெரிய நிறுவனம் ஹராமான முறையில் தேடிய பணத்தைக் கொண்டு ஹலாலான உணவுகளை உற்பத்தி செய்தால் அது ஹலாலா அல்லது ஹராமா? என்று ஒரு பாமரன் பாமரத்தனமாக ஒரு கேள்வி கேட்டால் அதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பட்டதாரி ஹலால் நிபுணர்களால் ஒரு போதும் திருப்திகரமான பதிலை பதிலாக சொல்ல முடியாது.

அதே போல, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கும் ஷரியா வங்கிக்கும், ஏனைய ஹராமான வங்கிக்கும் இடையில் எந்த வகையான இஸ்லாமிய வேறுபாடு இருக்கிறது என்று இன்னுமொரு பாமரன் அப்பாவித்தனமாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு மிகவும் பிரபலமான இஸ்லாமிய அறிஞர் ஒருவர் "இஸ்லாமிய ஷரியா வங்கி முறையில் நீங்கள் இலாபம் கிடைத்தால் அதில் இலாப பங்கு கிடைக்கும் என்றும் அந்த முதலீடு நட்டமடைந்தால் அதில் எவ்வகையான பங்கும் கிடைக்காது என்றும் நிய்யத்து வைத்து வைப்பீடு செய்வதால் அது ஹலாலாகும்"  என்று கூறினார். அவர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த உலமா சபையின் தலைவர் என்பதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

விடை கிடைத்த பாமர முஸ்லிம் குழம்பிப் போனார்.

நாம் உண்ணும் உணவின் உணவுத் தயாரிப்பாளர்கள் சம்பந்தமாகவும், நமது முதலீட்டுக்கு உகந்த வங்கி எது என்றுத் தீர்மானம் செய்யும் உரிமையிலும் ACJU எவ்வகையில் தகுதி பெறுகிறது என்று யாருக்குமே புரியவில்லை.

நமக்குஹலாலான  நிறுவனம் எது ஹராமான நிறுவனம்  எது என்று காட்டித் தந்து  நமது அறிவை சூனியமாக்காது ஹலால் ஹராம் பற்றிய அறிவைக்  கற்றுத் தருவதிலே ஹலாலான, ஹராமான  நிறுவனங்களைப் பற்றிய அறிவை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்தானே என்று யாராவது அப்பாவித்தனமாக கேட்டால் அதற்கான ஏற்பாடுகளோ,வேலைத் திட்டங்களோ ACJU வசம் இல்லை என்ற உண்மை தெரிய வரும்.

சந்தேகமென்றால் ACJU விடம்  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

இஸ்லாமிய புத்திஜீவிகள் இவற்றை சட்டை செய்யவில்லை.

ஆனால்,ACJU நெறிப் படுத்திக் கொண்டிருந்த ஷரியா வங்கி முதலீட்டு  அமைப்புக்களின் செயல் விளைவுகளினால் சாதாரண முஸ்லிம் பொது மக்கள் ஷரியா பண முதலீடு என்ற பெயரில் சூறையாடப் பட்டார்கள்.

பொது மக்கள் ஏழைகளாக இருந்தக் காரணத்தினால் அவர்களால் ACJU விற்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை.

அந்த முஸ்லிம் மக்களின் முதலீட்டு இழப்பினால் ACJU விற்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

இனி,ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வருடாந்தம் குறிப்பிட்டதொரு தொகையை ACJU வியாபார நிறுவன அமைப்புக்களிடம் அறவிட்டு வந்தார்கள்.

இந்த செய்கையின் காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள்.அவர்களது வியாபாரம் மந்தமானது.

முஸ்லிம் பொது மக்கள் ஹராமான உணவுகள் என்று ஒதுக்கி தவிர்ந்து வந்த உணவு வகைகளுக்கும் நிறுவனங்களுக்கும் ACJU ஹலால் சான்றிதழ் வழங்க நாளடைவில் அந்த உணவு வகைகளும் நிறுவனங்களும் முஸ்லிம் மக்களின் ஏற்புக்கு ஏற்றதாக மாறி கொழுத்தன.

முஸ்லிம் மக்களின் உளவியல் மாற்றத்தை தமக்கு ஏற்றாற்போல அந்த நிறுவனங்கள் மாற்றிக் கொண்டதை உணர்ந்த அடுத்த கணம் அந் நிறுவனங்கள் ஹலால் சான்றிதழைப் ACJU விடம் புதுப்பித்துப் பெற்றுக்கொள்ள விரும்ப வில்லை.

அவர்களின் அந்தத் தீர்மானத்தினால் ACJU விற்கு ஹலால் சான்றிதழால்  ஹலாலாக கிடைக்கும் வருமானம் ஹராமாகி தடைப் பட்டுப் போனது.

கோபம் கொண்ட ACJU வினர் கொஞ்சம் குழம்பிப் போனார்கள்.

உடனே அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக ACJU முஸ்லிம்களிடையே ஹராமான பிரச்சாரங்களை  பிரச்சாரம் செய்யத் துவங்கினார்கள்.

வந்ததே வினை.

பணம் படைத்த அந் நிறுவனங்களின் சுய இருப்புக்கு ACJU அச்சுறுத்தலாக மாறி நின்றதால் அவர்கள் ACJU விற்கு எதிராக மிடுக்குடன் களம் இறங்கி இருக்கிறார்கள்.

அந் நிறுவனங்களுக்கு எதிராக ACJU முன்னெடுத்த விவேகம் தொலைத்த இரகசிய பிரச்சாரங்களை விடவும் நுணுக்கமாகவும்,புத்தி சாதுர்யமாகவும் அவர்கள் தங்களது எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

ஒரு பாமர பௌத்தன் நம்மிடம் இப்படிக் கேட்டான் "முஸ்லிம்களான நீங்கள் உண்ணும் உணவு ஹலாலா ஹராமா என்று முடிவு செய்ய நாம் ஏன் உங்கள் அறிஞர்களுக்குப் பணம் தர வேண்டும்.......முஸ்லிம்களின் நலனில் உங்களது மார்க்க அறிஞர்கள் உண்மையில் அக்கறைக் கொண்டிருந்தால் நம்மிடம் பணம் பெற்றுக் கொள்ளாமலேயே அவர்களுக்கு ஹலால் சான்றிதழை நிபந்தனைகளுடன் நமக்குத் தர முடியும்தானே?"

நமது நண்பர் நண்பர் ஒருவர் அவரிடம் ACJUவினர் ஹலால் சான்றிதழுக்கு ஆதரவாக முன் வைக்கும் ஒரு கருத்தினை அந்த பௌத்தரின்  முன் வைத்தார். "நாம் உண்ணும் உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப் படுகின்றதா இல்லையா என்பதை அவர்கள் பரீட்சிக்கிறார்கள் "

"சுகாதார விற்பன்னர்களின் வேலையையா உங்களது மார்க்க அறிஞர்கள் செய்கிறார்கள்...?" என்ற அந்த பௌத்த சகோதரர் கொஞ்சம் சூடாகவே "நாயின் வேலையை கழுதை செய்ததால் வந்த வினை தெரியும்தானே ............எதற்கு தோல் தேங்காய்?" என்று கேட்டார்.

நமது நண்பர் மௌனித்துப் போனார்.

நிச்சயமாக நமது ACJU ஹலால் பட்டதாரி நிபுணர்களிடமும் இதற்கு பதில் இருக்கப் போவதில்லை.


ACJU வின் ஹலால் சான்றிதழுக்கு எதிரான இலங்கைப் பௌத்தர்களின்  போக்கு இப்பொழுது மெது மெதுவாக முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக திரும்பியிருக்கிறது."ஹலால் உணவை உண்ணாதீர்கள்........முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள்......80% சதவீதமான நம்மை 8%சத வீதமான முஸ்லிம்களா ஆட்டுவிப்பது......" என்ற தொணிப் பொருளில் அவர்களது பிரச்சாரம் சூடேறி நிற்கிறது.நாளை அது சாதாரண முஸ்லிம் குடி மகன் மீதும் திரும்புவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது.


நாளடைவில் இத்தகைய மாற்றங்கள் இலங்கையில் இஸ்லாமியர்களின் தன்னிருப்புக்கு அச்சுறுத்தலாக மாறி நிற்கும் நிலையைத் தோற்றுவிக்கும் என்கின்ற உண்மையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புரிந்து அதற்கு ஏற்ப தன் நகர்வை மாற்றிக் கொள்ளும் என்று நம்புகிறோம்.

நாம் சொன்ன கதை A C J U வினருடன் எப்படி ஒத்துப் போகிறதென்று நீங்கள் விழி உயர்த்துவது நமக்கு விளங்குகிறது.

பேசுகின்ற,பாடுகின்ற ஆட்டை விடவும் கிராமத்தானுக்கு அவனது உயிர் வாழ்தல் என்ற இருப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அதே போன்று பணம் பெற்றுக் கொண்டு ஹலால் ஹராமை இனம் காட்டும் A C J U தன் போக்கை மாற்றிக் கொண்டு பணம் என்ற ஆட்டை இழக்க முன்வந்து பணம் பெற்றுக் கொள்ளாமல் ஹலால் சான்றிதழை வழங்கும் நிறுவனம் என்ற நம்பிக்கையை பௌத்தர்களிடம்,மாற்று மதத்தவர்களிடம் பெற்றுக் கொண்டு தமதிருப்பை தக்க வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

A C J U இத்தகைய இழப்புக்கு தன்னைத் தயார் செய்து தனது தவறைத் திருத்திக் கொள்ள மறுக்கும் சந்தர்ப்பத்தில் நமக்கு ஹலாலையும்,ஹராத்தையும் பிரித்தறியும் அறிவைச் சொல்லித் தராத A C J U என்ற பிரபலமான ஆட்டை இழந்தாவது நாம் முஸ்லிம்கள் என்ற நமதிருப்பையும் , நமது உயிர் வாழ்தலையும்  உறுதி செய்து நமதிருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயல வேண்டும்.

பிரச்சினைக்கான தீர்வு மிக இலகுவானது.

பேரிழப்புகளுக்கு முன்னர் சிறிய இழப்புகளை ஏற்றுக் கொள்வோம்.

நாம் இப்பொழுது இலக்கத் துணிகின்ற இழப்புகள் நாளைய நமது சமூகத்தின் தன்னிருப்புக்கு உறுதியான அடித்தளம் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான்.!3 comments:

Safeer Hafis said...

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பயன்படுத்தி பெரும் வருமானம் ஈட்டி வருகின்றது என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே எம்மத்தியில் இருந்து வருகின்றது. முஸ்லிம்களின் ஒரே எதிரியான இஸ்ரேலின் தயாரிப்புகளுக்கே ஹலால் சான்றிதழ் வழங்கியதிலிருந்து இவர்களது பணமோகமும் சமூக, சமயப் பற்றற்ற தன்மையும் தெளிவாகி விட்டன. பணத்தை வசூலிப்பதொன்றே இவர்களது குறிக்கோள் என்பதை, அண்மையில் இவர்கள் வெளியிட்ட சில முட்டாள்தனமான துண்டுப்பிரசுரங்கள் காட்டிக் கொடுத்து விட்டன. உலமா சபையில் உயர் பதவியிலுள்ளோரின் சொகுசு வாழ்க்கைக்கும் இத்தகைய வருமானங்கள் பிரயோகிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. பிக்குகள் தொடங்கியுள்ள தற்போதைய பிரச்சினை, உலமா சபையின் செயல்களுக்கு கடிவாளமிடும் நல்ல தருணம் என்றே நான் நம்புகின்றேன்.

Dr.Anburaj said...

முஸ்லிம்களின் ஒரே எதிரியான இஸ்ரேலின் தயாரிப்புகளுக்கே ஹலால் சான்றிதழ் வழங்கியதிலிருந்து .... what a foolish statement. Jews community has produced men and women of most exalted characters. why muslims should harbour bitter hatred against Jews.This is satanic. Everybody must remember " Allah is the creator of Jews.Mr.Safeer Hafis should realise this.

Safeer Hafis said...

அன்புராஜ்!
யூதர்களை மட்டுமன்றி உலகிலுள்ள அனைவரையும், அனைத்தையும் இறைவன்தான் படைத்தான். அவன் படைத்தவற்றில் நல்லவையுமுண்டு தீயமைவுமுண்டு. இறைவன் படைத்தான் என்பதற்காக கொலைகாரனை, கொள்ளைக்காரனை, நம்பிக்கை துரோகியையெல்லாம் நாம் அரவணைத்துக் கொண்டிருக்க முடியாது.

முஸ்லிம்களின் ஒரே எதிரி இஸ்ரேல் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை. உலகில் இடம்பெறுகின்ற முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து விதமான கொடுமைகளிலும் வன்முறைகளிலும் கொஞ்சமாகவோ கூடுதலாகவோ யூதர்களுக்கு குறிப்பாக சியோனிஸ்டுகளுக்கு பங்கு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் இந்தக் கயவர்களையும் இறைவன்தான் படைத்தான். அதற்காக அவர்கள் எம்மை அழிக்க அழிக்க நாம் அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்க முடியுமா?

மிக அப்பாவித்தனமான பின்னூட்டத்தைப் பதிவு செய்துள்ள உங்கள் முட்டாள்தனத்தை எண்ணி நான் உண்மையாகவே கவலைப்படுகிறேன்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad