அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, December 23, 2012

அவிசுவாசிகளுக்கான COCA COLA வின் செய்தி.....................................




நேற்றிரவு நமது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அவரது பருவ வயது மகள் அஹ்ளுல்பைத்களுடன் நெருக்கமான பற்று கொண்டவர்.

என்னைக் கண்டதும் அவர் "அங்கிள்.......இவ்வருட கோகா கோலா கிரிஸ்ட்மஸ் விளம்பரத்தைக் கவனித்தீர்களா?" என்றுக் கேட்டார்.

நான் ஒரு நிமிடம் யோசித்து அந்த விளம்பரத்தை நினைவுக்கு கொண்டுவர முயன்றேன்.

நினைவுக்கு வந்தது.

அதில் புதிதான வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

"ஆம்....பார்த்தேன்...." என்றேன்.

"அதில் இருக்கும் செய்திகளைக் கவனித்தீர்களா?" என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார்.

"இல்லை.......அதில் என்ன செய்தி இருக்கிறது?" இது நான்.



"வாருங்கள்.....காட்டுகிறேன்" என்று சொன்னவர் வீட்டு ஹாலில் இருந்த கணணியை உயிர்த்து இணைய தொடர்பை உயிர்ப்பித்தார்.

நான் உயிர்த்திருந்த கணணியைக் கவனித்தேன்.

அதில் சிவப்பு நிற உடையில் வெள்ளைத் தாடியுடன் கிறிஸ்மஸ் தாத்தா ஆடியாடி வந்தார்.

விளம்பரம் மெலிதான இசையுடன் ஒளிர்ந்தது.

ஒரு கட்டத்தில் நகர்ந்த விளம்பர காட்சியை இடை நிறுத்திய நண்பரின் மகள்"இதனைக் கவனியுங்கள்......" என்றார்.

நின்றிருந்த காட்சியைக் கவனித்தேன்.

கிறிஸ்த்மஸ் தாத்தா கோகா கோலா லாரியில் ஒரு விளம்பரத்தை ஒட்டிக்கொண்டிருந்தார்.

அதில் "For those who don't believe.." என்று இருந்தது.

நண்பரின் மகள் அந்த விளம்பரத்தை மீன்டும் ஓட விட்டார்.

மீன்டும் ஓரிடத்தில் நிறுத்தினார்.

"அங்கிள் .....இங்கே கவனியுங்கள்........கம்பியூட்டர்களை இயக்கி அதன் துணைக்  கொண்டு தனது காரியங்களை செய்யும் ஒருவர் இருக்கின்ற அலுவலகம்" என்றார்.

"இதில் என்ன செய்தி இருக்கிறது?" இது நான்.

"இன்று அனைத்துக் காரியங்களையும் இணையத்தைக் கொண்டு நிர்வாகிக்க முடியும்." என்ற அவர் தொடர்ந்தார் "இதில் நான் இணைய இயக்கத்தில் சிறைப் பட்டுப் போயிருக்கும் மனிதர்களை........அவர்களை நிர்வாகிக்கும் நிவாகிகளைக் காண்கிறேன்....அதில் அமர்ந்திருக்கும் நபர் அமெரிக்க அதிபர் போலத் தெரிகிறார்" என்றார்.

அதன் பின்னர் இணையத்தை மீன்டும் ஓட விட்டார்.

சட்டென்று இன்னொரு கட்டத்தில் நிறுத்தினார்.

"அங்கிள்......இங்கே பாருங்கள்......தனியாக நின்றுக் கொண்டு கிறிஸ்மஸ் தாத்தாவைக் கவனிக்கும் இந்த நபரும்  சரியாக அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமாவைப் போலத் தெரிகிறார்."

உண்மை!

அதில் தெரிந்த நிழல் உரு அமெரிக்க அதிபரின் பின் புறம் போலத் தெரிந்தது.

அவர் மீண்டும் இணையத்தை விடுவித்தார்.

சிறிது நேரத்தில் மீன்டும் நிறுத்தினார்.

"அங்கிள்......இந்த செய்தியைக் கவனியுங்கள்.......கோகா கோலாவை திருப்பிக் கவனித்தால் அது "லா முஹம்மத்.......லா மக்கா என்று தெரியும்......அதன் அர்த்தம் முஹம்மது இல்லை.....மக்கா இல்லை என்று வரும்.இங்கே இறுதியில் முஹம்மது இல்லாமல்  ......மக்கா இல்லாமல் மகிழ்ச்சி ஆரம்பமாகிறது என்ற செய்தி சொல்லப் படுகிறது" என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அங்கிள்......இந்த போத்தலலின் அடிப்பாகத்தைக் கவனியுங்கள்.......நம்ரூதின்..பிற அவனிய சக்திகளின் பிரமிட் அடையாளம் தெரிகிறது.இதில் இருந்து இது ப்ரீ மேசனின் தகிடு தத்தம் என்று விளங்குகிறதல்லவா?" என்று என்னிடம் வினவினார்.

நிஜத்தில் அந்த விளம்பரம் சொல்லும் செய்தி என்னதென்று எனக்குப் புரியவில்லை.

ஆனால்,அந்த மகளின் பார்வையில் பொதிந்த அர்த்தங்களுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை என்று மட்டும் புரிந்தது.


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad