அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, March 14, 2013

BBS முன்னெடுக்கவுள்ள 'நிகாப்' அல்லது 'புர்கா' பிரச்சினைக்கு அஹ்லுல்பைத் தளம் முன் வைக்கும் தீர்வு............

BBS முன்னெடுக்கவுள்ள 'நிகாப்' அல்லது 'புர்கா'  பிரச்சினைக்கு அஹ்லுல்பைத் தளம் முன் வைக்கும் தீர்வு............


நகைப்புடன் முடிவு காணும் தீர்வுகள் வெறுப்புடன் எதிர்நோக்கப் படுவதில் இருக்கும் இலாபம் என்ன?

ஆதங்கமாக நாம் பதிவேற்றுகின்ற பதிவுகளைப் பார்த்து நமக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நகைச்சுவைத் துணுக்குகளைப் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர் அன்புராஜ் விரும்பும் பதிவாக இது இருக்கும் என்று நம்புகிறோம்.


14 comments:

Dr.Anburaj said...

படித்தேன்.பார்த்தேன்.ரசித்தேன்.களித்தேன்.நன்றி உடையில் கண்ணியம் ஆண் பெண் என்ற பேதம் இன்றி அனைவருக்கும் தேவை என்பதை நானும் கடைபிடித்து வருகின்றேன். மற்றவர்களுக்கும் சொல்லுவதுண்டு. ஆனாலும் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை முஸ்லீம் பெண்கள் பின்பற்றுவதை அவர்களின் சொந்தவிசயமாக வே முடிவு செய்கின்றேன். அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என் நினைத்தால் .... பின்பற்றட்டும். அழகான தோற்றம் கொண்ட பெண்களால் பிறர் மனதில் பாலியல் ஆசைதான் தூண்டப்படும் என்ற கருத்து தவறானது.அனைவரும் அக்கா தங்கையோடு பிறந்தவர்கள்தாம்.ஒருதாயிடம் பிறந்து பால்குடித்து வளர்ந்தவர்கள்தாம். எனது வாழிவில் ” பிரம்மச்சரியம் ” என்ற விரதத்தை 14 வயதில் ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் நூல்களை எனக்கு க்ற்றுத் தந்த ஆசிரியரின் ஆலோ சனை பேரில் ஏற்றுக் கொண்டு வாழந்து எனது வாலிப பருவத்தை கற்பு நெறி தவறாது வாழ்ந்தேன். எந்த அழகியப் பெண்ணையும் ஒருமுறைக்கு மேல் திரும்ப பார்த்தது யில்லை.பெண்களை கூர்ந்து நோக்கியது கிடையாது. மனதை அலைய விடாது புத்தங்கள் படிப்பது,அதுகுறித்து சிந்திப்பது என மனதிற்கு மனித வளத்தை ப் பெருக்கும் வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.அதுபோக ” ஓம் நமசிவாய ” என்ற ஐந்தெழுத்து மந்திரம் மனதில் நிறைந்திருக்க வேண்டும்.எனது கற்பு ஒழுக்கத்தைக் காக்க ஆசிரியர் சொன்ன ஆலோசனை இவ்வளவுதான். கடைபிடித்து வாழ்ந்து வருகின்றேன். ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ” தனது தாய்,தமக்கையார்கள், அண்ணிமார்கள்,தனது மனைவி என்று தனது உறவில்உள்ள அனைத்து பெண்களும் கற்பு நெறியில் தவறாதவர்கள் என்று நம்பும் ஒரு இளைஞன் தானும் கற்பு நெறி தவறாது வாழ முடியும் என்று நினைத்தால் பிரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும். பிரம்மச்சரிய ஒழுக்கம் கைவிடப்பட்டதனால் இந்தியா சமூக ஒற்றுமையை இழந்து ,வீழ்ந்து போனது என்று எனது உரை பிரம்மச்சரிய ஒழுக்கத்தை ஆண்கள் பேண வேண்டிய அவசியம் குறித்ததாக அமைந்தது. முஸ்லீம் சமூகத்தில் ஒழுக்கசீலர்களுக்கு பஞசம்யில்லை. பிரம்மசசரியம் தவறாத இளைஞர்கள் பலபேரை நான் அறிவேன்.

Dr.Anburaj said...

சுவாமிஜிவிவேகானந்தர்வாழ்வில் நடந்தவை …..
ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும்.

இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால்

தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.

Dr.Anburaj said...

இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்)

எனதுகுறிப்பு முகம்மது அவர்கள் தனது மனைவியர்களுக்கு துறவறம் வழங்கிவிட்டார்கள்.எனவேதான் குரான் தொகுப்பு போன்ற பெருங்காரியங்களில் ஆயிசா போன்றவர்கள் ஈடுபட்டார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

Dr.Anburaj said...

மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!
–சுவாமி விவேகானந்தா …

Dr.Anburaj said...

"எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ
தலை நிமிர்ந்தப்பட்டிருக்கிறதோ
எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ
எங்க உலகம் குறுகிய சுவர்களைக் கொண்டு துண்டாடப்படவில்லையோ
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ
எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்கிறதோ
எங்கே பகுத்தறிவு எனும்
வெள்ளோடை செத்த
பழக்கங்களெனும் பாலைக்கு
வழிதவறவில்லையோ
எங்கே மனம் உம்மால் என்றும்
பரந்துபடும் எண்ணங்களுக்கும்
ஆக்கத்திற்கும் அழைத்துச்
செல்லப்படுகிறதோ...
அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா என் நாட்டை எழச் செய்"

இப்படிச் சென்னவர் ரவீந்திரநாத் தாகூர். .
பெண்களின் மீது விவேகானந்தருக்கு இருந்த பாசத்திற்கு ஒரு சம்பவம்…
பேலூர் மடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. மடத்திற்கு அருகில் வசித்த விலைமாதர்கள் கலந்துகொள்ள வந்தனர். ஆனால் மடத்தினர் அனுமதிக்க வில்லை. அதைக் கண்ட விவேகானந்தர் தலையிட்டு, எந்தப் பெண்ணும் எனக்குத் தாய் தான். விலைமாதர் என்பதால் அனுமதி மறுப்பை ஏற்க மாட்டேன்’என்று கூறி அவர்களை அனுமதித்தார்.
மூதாட்டியின் மீது பாசம்- ஒரு சம்பவம்…
சென்னை வந்த விவேகானந்தருக்கு ரயில் நிலையத்தில் ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தூரத்திலிருந்து ஒரு வயதான பாட்டி சுவாமிகளைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு இருந்தார். இதைக் கவனித்த விவேகானந்தர் அம்மூதாட்டியை அருகில் அழைத்தார். மூதாட்டியும், விவேகானந்தரைப் பார்த்து, ‘திருஞானசம்பந்தர் மாதிரி இருக்கியே’ என கைகளைப் பற்றிக்கொண்டார்.
அமெரிக்கத் தாய்- ஒரு சம்பவம்…
அமெரிக்காவில் விவேகானந்தரின் வசீகரத் தோற்றம், மின்னெலெனத் தெறிக்கும் பேச்சு- இவற்றால் ஈர்க்கப்பட்ட பெண், இவர் மூலமாக ஒரு குழந்தை வேண்டுமென்றாள்.
அதற்கு உடனடியாக விவேகானந்தர், ”இவ்வளவு அழகான தாயைப் பெற இந்த மகன் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்? என்னை உன் குழந்தையாக ஏற்றுக்கொள்” என்றார்.

Dr.Anburaj said...

அககுலியபத் ஒரு பலசுவை வலைதளமாக தொண்டாற்ற வேண்டும் என விரும்புகிறேன். தவறில்லை.சதா மன உழச்சல் தரும் விசயங்களுக்கிடையே மனஆறுதல் வேண்டும். மேலும் பிற மதங்கள் குறித்து முஸ்லீம்கள் மத்தியில் மிக தரக்குறைவான கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன. அதை நீக்க சில பதிவுகளை செய்து வருகின்றேன். அது போன்ற எந்த தகவலையும் பிற முஸ்லீம்தளங்கள் ஒருபோதும் வெளியிட மாட்டார்கள். தாங்கள் மிகவும் மாறுபட்ட அற்புத மனிதராக எனக்கு தோன்றுகின்றீர்கள். இஸ்லாமிக உலகில் தாங்கள் ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருமீலாது விழாவிற்கு முஸ்லீம் நண்பர் என்னை அழைத்தார். மேற்படி விழாவில் 5 முஸ்லீம்கள் ஒரு இந்து ஆகியோர் இஸ்லாம் பற்று 6 தலைப்புகளில் உரையாற்ற முன்வந்துள்ளனர் என்பதைத் தெரிவித்தார். நான் உடனே ” இஸ்லாமை சிறப்பித்து பேசுவதைக் கேட்க முஸ்லீம்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு இந்துவுக்கு என்ன கிடைக்கும் ? எனக்கு 15 நிமிட நேரம் ஒதுக்கித்தாருங்கள். இந்து மதம் மதிக்கப்பட்டால்தான் எனக்கு மகிழ்ச்சி. முஸ்லீம்கள் மத்தியில் இந்துமதம் குறித்து சில தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றேன். அன்றுபோனவர் ஆண்டுகள் 9 கடந்து விட்டது. இன்னும் எனது வீட்டிற்கு வரவேயில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. சந்தையில் என்னை சந்தித்த மனைவி மகளுக்கு திருமணம் ஒழுங்காகியுள்ளது என்று சுருக்கமாக தகவலை தொிவி்த்தார். ஆனால் அழைப்பிதழ் வரவேயில்லை.

Dr.Anburaj said...

இந்தப் பக்கம்தான் இக்கவிதைக்கு பொருத்தமான இடம்.

மறைப்பதில் அல்ல,

இயன்றவரை திறப்பதில்தான் சுதந்திரம்
என்பதாகத் திணிக்கப்படுகிறோம்!

ஆடை அணிவதில் அல்ல! ,
இயன்றவரை களைவதே நாகரிகம் என
உலராச் சலவை செய்யப்படுகிறது
நம் மூளைகள்!

குடும்பமா?
தேவையில்லை!
கட்டுக்குள் சிக்காமல்
சுதந்திரமாக சுற்றித்திரி!
எங்கும் எவரோடும் உறவு கொள்ள
உரிமையுண்டு உனக்கு
என உயர்த்திப் பிடிக்கிறார்கள்
உரிமைக் குரலென!

முன் பின் பழகாமல், திருமணமா?
கட்டுப்பெட்டித்தனம் அது!
எல்லாவற்றையும் பழகி,
கலந்து, இழந்தபின் தேர்ந்தெடு!
அதுதான் டேட்டிங் என்ற
மந்திரச்சொல் என்பதாய்
ஏற்றப்படுகிறது நம் மனங்கள் கழுவில்!

காதலின்றிக் கல்லூரிவாயில்
நுழைதலும், வெளி வருதலும்
கலாச்சார இழுக்காம்!
நாகரிகம் முன்னேற்றம் அல்லவாம்!
சினிமாக்கள் பிதற்றும்
மற்றுமொரு மாயவலை இது!

பொது வெளியில் உடை களைதல்
முன்னேற்றமல்ல!

தொலைத்து தொலைத்து விளையாட
கற்பு ஒன்றும் காற்றுக் குமிழி அல்ல!

மேலை நாடுகள்
படும் பாடுகள் நாமறிவோம்!
குடும்ப உறவுகள் இன்றி
வாழ்தலில் பலனேது?

இளமையைத் தொலைத்து,
முதுமையில் வருந்தும் நிலை
நமக்கும் வேண்டாம்.

நாம் போகப் பொருளல்ல!
காட்சிப் பொருளல்ல!
கடைச்சரக்கல்ல!
விற்பனைப் பண்டமல்ல!
என்பதை மனதில் கொண்டால்,
கழியும் ஒவ்வொரு நாளும்
பெண்கள் தினமே!
சத்தியமார்க்கம் என்ற வலைதளத்திலிருந்து நன்றியுடன்.

Dr.Anburaj said...

அழகிய, கம்பிரமான ஒரு ஆண்மகனைக் கண்டால் பெண்களுக்கும் ...... ஆசை வராதா ? வரக்கூடுமே!
ஆப்கானிஸ்தான் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரையை வலைதளத்திலிருந்து நீக்கிவிட்டது ஏன்?
இக்கட்டுரையை தவறு என அது நிருபிக்கும் என்ற பயமா ? அழகிய பெண்களின் கணவனைக் கொன்று பெண்களைக் கைப்பற்றும் பண்பாடு மிக்க நாட்டில் பெண்களை முழுவதும் மூடி வைத்தார்கள் என் நீங்கள் சொந்த அனுபவ பாடமாக கட்டுரை வரைந்தீர்கள். ஆனால் தாங்களே முகத்தையும் மறைக்கும் உடை பண்பாடு வேண்டும் என்கின்றீர்கள். முகம்மது அவர்கள் தனது இரண்டு மனைவியரோடு இருந்த வேளையில் ஒரு குருடர் முகம்மது அவர்களை பார்க்க வந்தார். மனைவியர் இருவரையும் உள்ளேபோக்ச் சொன்னார் ஐயா. வந்திருப்பவர் குருடர்தானே நாங்கள் இங்கேயே இருக்கக் கூடாதா? எனக் கேட்ட மனைவியருக்கு முகம்மதுவின் பதில் ” உங்களுக்கு கண் இருக்கின்றதே! எனபதுவாம். உண்மையா ? முகம் மறைய உடை அணிவது மேல்தட்டு மக்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஒரு பெண் மருத்துவர் ஆசிரியர் நர்ஸ் போன்றோர் தாங்கள் விரும்புவதுபோல் உடை அணிய முடியுமா?
அரசு பணிகளில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆனால் நியமனத்திற்க தகுதியான முஸ்லீம் பெண்கள் கிடைப்பார்களா ?சேலை அல்லது சுடிதார் தடிமனாக துணியினால் ஆனது -கண்ணாடிபோல் இல்லாதது- தளர்வான -உடலை இறுகப்பிடிக்காத நிலையில் - அதிக பட்சம் மூடுவதாக இருந்தால் போதும் - அதுவே நல்ல உடை.சிறை காக்கும் எவன் செய்யும் ஆண்கள்- பெண்கள் நிறை காப்பதே கற்பு

Dr.Anburaj said...

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?

இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும். இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புகிறான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்கிறான்.

இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்து விடுகிறார்கள்.

அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 14 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.
அன்புடன் இஸ்லாம் என்ற வலைதளத்திலிருந்து

Dr.Anburaj said...

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்? -பக்கம்-2
பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

நிச்சயமாக இஸ்லாம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. நல்ல ஒழுக்கத்தையும் கட்டுப்பாடையுமே அது வலியுறுத்துகிறது.

சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். அப்படியானால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.

படிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.

பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.

அவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போதெ‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

Dr.Anburaj said...

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?-பக்கம்-3

இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போதெ‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

முஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.

பெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.

முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது.

பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.

ஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.

முஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.

வேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.

படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.

மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளில் பெண் கல்வியின் அவசியத்தைத் தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.

இன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் மிக உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.

Dr.Anburaj said...

கதிஜா -மகம்மது திருமணம் நடந்த விதம் -உண்மையா
(அரபு பெண்கள் காதலில் வல்லவர்கள் )
நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும் உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்று ஃபாத்திமா (ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள் (பாகம்-1) என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவி S.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரி என்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா அவர்களது உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்) மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்) இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி, “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து வைத்தீர்களே தெரியவில்லையா?” என்றார்.

“நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். மெக்காவிலேயே சிறந்த ஆண்கள் இருக்கையில், வேறொருவருக்கு மணம் முடித்து வைக்க என்னால் முடியாது. என் அருமை மகளை முஹம்மதுவைப் போன்ற ஊர்சுற்றி, வெறும் பயலுக்கு எப்படி மணம் செய்து வைத்திருக்க முடியும்?” என்றார்.

முஹம்மதின் பெரிய தகப்பன்மார்கள் கோபமடைந்து, இந்த உறவை ஏற்படுத்தியதே உங்கள் மகள் கதீஜாதான் என்றனர். கதீஜாவின் தந்தை வாளை உறுவினார். இருதரப்பும் சண்டைக்குத் தயாரானார்கள் . நிலைமை வீபரீதமாவதை உணர்ந்த கதீஜா நடந்தவைகளைக் கூறி தன்னுடைய திட்டத்தை ஒப்புக் கொண்டவுடன், அவரது தப்பனாரால் எதுவும் பேச முடியாமல் போனது. பின், இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின. (Persian Tabari, Volume-3, Page 832)

இவர்களின் திருமணம் கிபி 595 ல் நிகழ்ந்தது. கதீஜா அம்மையாரின் பெரும் செல்வமும் முஹம்மது நபியின் நிர்வாகத்தின் கீழ்வந்தது. கதீஜா அம்மையாரின் வயது ஏறக்குறைய நபி (ஸல்) அவர்களின் தாய்க்கு சமமான வயது. இவர்களுக்கு காசிம், தைய்யிப், தாஹிர் என்ற ஆண் குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்மு குல்தும் மற்றும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தைகளும் இருந்தனர், ஆண் மக்கள் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.
நன்றி நல்லூர் முழக்கம்

Dr.Anburaj said...

உண்மையா ?????
இன்று இஸ்லாமிய பெண்கள் திரைக்குப் பின்னால் வாழ்வதற்கும் “பர்தா” என்ற திரைகளுடன் நடமாடுவதற்கும் உமர் பின் கத்தாப்பின் நச்சரிப்பு மட்டுமே காரணம்.அப்படி வற்புறுத்தியவரின் ஒழுக்கத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Ibn Sa’d, volume 2, Page 438

Narrated Umar. From “A slave girl passed by me who attracted me, and I cohabited with her while I was fasting”.

(உமர் பின் கத்தாப் கூறுகிறார்: என்னைக் கடந்து சென்ற அடிமைப் பெண்களில் ஒருத்தி (அழகால்) என்னை ஈர்த்ததாள் நான் நோன்பு வைத்திருந்த பொழுதும், அவளுடன் கலவியில் ஈடுபட்டேன்.)

நோன்பு வைத்திருக்கும் வேளையில் அழகான பெண்ணைக் கண்டிருக்கிறார். உடனே அவளைத் தனது இச்சைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். அந்த அடிமைப்பெண் உமர் பின் கத்தாப்பின் மனைவி என்றோ, பிற்காலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் எந்த குறிப்புகளும் இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அழகானவளைப் பார்த்தேன் வேலையை முடித்தேன்.

நோன்பின் கதி? அதோ கதி…!

முஹம்மது நபியின் காலத்திலும், அவருக்கு பிறகும் பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கருப்பின அடிமைகளை விற்கும், விற்பனைச் சந்தை கிபி 1960 வரையிலும் மக்காவில் இருந்துள்ளது. ஆனால் அரேபிய தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதே போல அமெரிக்காவிற்கும் ஆப்ரிக்க கருப்பின அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு பல்கிப் பெருகி ஒரு பெரும் சமுதாயமாகி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆங்கிலேயர்களால் அடிமைகளாக இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட நைஜிரியா, தான்ஸானியாவைச் சேர்ந்த ஆப்ரிக்க பழங்குடி கருப்பின மக்கள் மக்கள் குஜராத் மாநிலத்தில் வசிப்பதை இன்றும் காணலாம்.

. அரேபிய தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

அடிமைப் பெண்களை, தங்களது பாலியல் தேவைகளுக்காக உபயோகப்படுத்திக் கொண்ட மிருகங்கள், ஆண் அடிமைகளின் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடு, மாடுகளுக்கு இன்றும் கிராமப்பகுதிகளில் “காயடிப்பதைப்” போன்று ஆண் அடிமைகளின் விதைகளை அடித்து மலடுகளாக ஆக்கிவிட்டனர். இப்பொழுது உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழலாம். இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகளாக எஜமானர்களின் காலடியிலேயே ஏன் வீழ்ந்து கிடக்க வேண்டும்? வாழ விரும்பினால் எங்காவது ஓடிப்போக வேண்டியதுதானே?

முஸ்லீம் ஹதீஸ் எண்: 101, அத்தியாயம்: 1, பாடம்: 1.31 அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

“தன் எஜமானர்களிடமிருந்து ஓடிப்போகிற அடிமை, அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச்) செவியுற்றிருக்கிறேன்.

Dr.Anburaj said...

பக்கம் -2
முஸ்லீம் ஹதீஸ் எண்: 102, அத்தியாயம்: 1, பாடம்: 1.31, அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

“(தன் எஜமானிடமிருந்து) ஓடிப் போன அடிமைக்கான (இறைவனின்) அடைக்கலம் நீங்கிவிடுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

சிந்தித்துப்பாருங்கள், அடிமை ஒடிப்போவதற்கும் இறைமறுப்பிற்கும் என்ன தொடர்பு?

புஹாரி ஹதீஸ்: 2534

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.

சகமனிதனை கால்நடைகளைப் போல கருதுவது என்ன நியாயம்? முஹம்மது நபி, அடிமை முறை ஒழிப்பிற்காக பாடுபட்ட உத்தமர் என்று இஸ்லாமிய அறிஞர் மேடைகளில் வாய் கிழிய பேசுவார்கள். அதன் லட்சணம் இதுதான். .
உண்மையா ????????

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad