அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, March 31, 2013

முஸ்லிம்களின் இந்த நிலைக்கு மாற்று-சமுதாயத்தினர்தான் காரணமா ?
படிகள்.........படிப்பினைகள்.............


ஆக்கம்: டாக்டர் அன்புராஜ்
முஸ்லிம்களின் இந்த நிலைக்கு மாற்று-சமுதாயத்தினர்தான் காரணமா ?
இல்லை.


 மற்ற சமுதாயத்தினருடன் ஒப்பிடும்போது, முஸ்லீம்களிடம் தங்களது முன்னேற்றத்தினைப் பாதிக்கும் கூறுகள் அவர்களது வாழ்க்கைமுறைகளில் தென்படுகிறது. 

தமிழகத்தினைப் பொருத்தவரை, நான் கீழ்காணும் கூறுகளை அடையாளம் காணுகிறேன்.

குடும்பத்தலைவன் மட்டும் வெளிநாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டி தாய்நாட்டில் வாழும் தனது குடும்பத்திற்கு அனுப்புவதால் பல சிக்கல்கள் இருக்கின்றன.

முதலில், சுயமாக ஒரு சிறுவியாபாரத்தினையோ அல்லது தொழிலையோ தான் குடும்பத்துடன் வாழும் ஊர்களில் துவக்காமல் வெளிநாடுகளில் வேலையாளாகப் பணியாற்றுவதால், அவர்கள் தனது பூர்வீக நாட்டில், சமுதாயத்திலிருந்து காணாமல் போய்விடுகிறார்கள். இதனால் மாற்று மத/சமுதாய மக்களிடையே கலந்து வாழும் வாய்ப்புகள் அற்று, அவர்கள் நம்மை விநோதமாகப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது அவர்களிடம் நம்மை அநியாயமாக ஒதுக்க எண்ணங்களைத் தூண்டுகிறது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை நாம் ஒருவிதமான "புதியவர்கள்" (strangers). நம்மைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்கள் அவர்களது மனதிலிருந்து அகலாமல் அப்படியே இருக்கக் காரணமாகின்றோம்.


அடுத்து, குடும்பத்தலைவனின் பார்வையில் இல்லாத குடும்பங்களில், குழந்தைகளின் வாழ்வு சின்னாபின்னமாகிறது. அவர்களை மேற்பார்வை செய்ய வழியில்லை. அவர்கள் கெட்ட நட்புகளைப் பெறுகிறார்கள். குழந்தைகளுக்கு மத்தியில் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தும் சொற்கள் அதிகமாக இருப்பது இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் சில கிராமப் புறங்களில் சிறு வீதத்தினர் பாலியல் சீரழிவும் அடைகிறார்கள். அவர்களிடையே ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடுகள் கூட தென்படுகின்றன. இவைகள் கீழக்கரை முஸ்லீம்களிடம் அதிக வீதத்தில் இருப்பதினை கிரெஸென்ட் பள்ளி, புதுக்கல்லூரி போன்ற இஸ்லாமிய கல்வி நிலையங்களில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை கவனிக்கும்போது அறியலாம். இதனை ஒரு காரணமாக நான் ஏன் கூறுகின்றேன் என்றால், அது அவர்களது முன்னேற்றத்திற்கான கேடு என்பதில் ஐயமில்லை. அவர்களது கவனம் திரும்புகிறது. இந்த கெட்டப்பழக்கங்கள் மற்ற சமுதாய மக்களிடம் குறைவு. உதாரணத்திற்கு பிராமணச் சிறுவர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பதினைக் காணலாம். இது தமிழக முஸ்லீம்களிடம் இருக்கிற இந்த வெளிநாட்டில்-வேலை-செய்யும் வாழ்க்கை முறையே ஆகும். அதாவது குடும்பத்தைப் பிரிந்து வாழும் குடும்பத்தலைவனால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

அடுத்தப் பிரச்சனை, நமது குடும்பங்களில் காணப்படும் அதிகப்படையான விழாக்கள்/விசேஷங்கள். இச்சமயங்களில், சிறுவர்களின் கல்வி பாதிப்படைகிறது. சிறுவர்களின் தாய்மார்கள், நமது சமுதாயத்தினைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அந்த விழாக்களில் பங்கேற்கச் செய்கின்றனர். இதனால் அவர்களது கவனம் திரும்புகிறது. பிறகு தனது தந்தையைப் பின்பற்றி வெளிநாடுகளுக்கு வேலை செய்ய குடும்பத்தினைப் பிரிந்து செல்கின்றனர். மேலும் இத்தகைய விழாக்களின் போது சமைக்கப்படும் பாத்திரங்களில் ஈயம் பூசப்பட்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுகளில் உலோகவிஷத்தன்மை அதிகமாகி அவர்களது மூளை வளர்ச்சியும்/பகுப்பாய்வுத் திறனும்(analytical skill) பாதிக்கப்படுகிறது.

இது போன்ற நமது கலாச்சாரம்/வாழ்வியல் சார்ந்த கூறுகள் கலையப்படவேண்டும் அல்லது சீர்திருத்தம் பெறவேண்டும். மற்ற சமுதாயத்தினரோடு கலந்து பழக வேண்டும். குழந்தைகளை அருகில் இருந்து கவனித்து வளர்க்கவேண்டும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு செய்தால் நம் சமுதாயத்தில் மனிதவளம் மேம்படும். மக்கள் வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு நாம் விநோதகர்களாக இருக்கமாட்டோம். மேலும் நாம் நம் கடமையை ஆற்றிய திருப்தியுடன் இன்பமான இல்லற அமைய வாய்ப்புள்ளது.

அடுத்து, ததஜ/தமுமுக போன்ற கும்பல்களை ஒதுக்கிவிட்டு, பள்ளிக்கூடங்களை, கல்லூரிகளை ஏற்படுத்தவேண்டும். தொழில் பயிலும் கல்விக் கூடங்களையும் ஏற்படுத்தவேண்டும். செல்வங்களை ததஜவினருக்கு அனுப்பினால் அவர்கள் யாரோ ஒருவருக்கு ஒரு நெருப்பு-அயன்பாக்ஸ் போன்றவற்றை பரிசலித்துப் புகைப்படமெடுத்து தங்கள் இணையதளத்தில் விளம்பரம் தேடிக்கொள்வார்கள் (கவனிக்க: ஒருவருக்கு உதவி அளித்து, உதவி பெற்றவரது மானத்தினை மூலதனமாகப் பயன்படுத்துவது எந்த அளவிற்கு மானக்கேடான செயல்); அரசியல் நகர்வு நோக்குடன் மாநாடுகளை நடத்துவார்கள்; மக்கள் ஒரு நோக்குக்காக அளித்தப் பணத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவார்கள்.
Posted by மு மாலிக் 

14 comments:

Kalmunai Khaleel Rahman said...

ஒருவருக்கு உதவி அளித்து, உதவி பெற்றவரது மானத்தினை மூலதனமாகப் பயன்படுத்துவது எந்த அளவிற்கு மானக்கேடான செயல்
இன்று நடப்பது இதுதான்.
உண்மை. உங்கள் கருத்துக்கள் சமுதாயம் பற்றி சிந்திப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுமா?


Dr.Anburaj said...

நன்றி. பெண்கள் கல்வி பின்தங்கியதும் ஒரு பெரிய காரணம் ஆகும். சமயக்கல்வியின் செல்வாக்கு காரணமாக அறிவியல் கல்வியை முஸ்லீம் சமுகம் புறக்கணித்துள்ளது. எது எப்படியிருப்பீனும் முற்றிலும் முஸ்லீம்கள் உள்ள ஒரு நாட்டில் கழிவறை துடைப்பவனும் கல்உடைப்பவனும் முஸ்லீமாகத்தான் இருப்பான். அது உலகத்தின் பெர்து நியதி. நம்மில் மனித வளம் பெருக வழி என்ற என்று பார்த்து வாழும் சமூகம் காலத்தை வென்று நிற்கும்.
பகவத்கீதை என்பது இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு ஆன்மீக தத்துவ நூல்.கால ஒட்டத்தில் அதில் கருத்துப்பிழை கண்டுப்பிடிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் அதன் மதிப்பில்குறைவு ஏற்படாது.இந்திய கலாச்சாரத்திற்கு இந்து ஆன்மீகத்திற்கு இழிவு ஏதும் அதால் வராது. வருவதாக நினைப்பவன் மடையன். நாம் குறைந்த வெளிச்சத்திலிருந்து பேரொளிக்கு பயணம் செய்து கொண்டிருக்கின்றோம்.பொன்னால் செய்ய கலம் உடைந்தாலும் பொன்னாகும்.என்னாகும் மண்ணால் செய்த கலம்-பானை . புதிய கீதையை உருவாக்க வேண்டியது அக்கால மக்களின் கடமை. அதுபோல் குரானும் அரேபிய நாகரீகம் மற்றம் கலாச்சார சிந்தனைகள் போன்றவற்றிற்கு ஒரு அடையாளமே. அதுவே நிரந்தரம் அல்ல.பதிய வேதம் தோன்றலாம். தோன்ற வேண்டும். பழையன கழிதலும்புதியன சேர்தலும் குற்றம் அல்ல. வாழும் வகைதான். குரான் தெய்வீகமானது என்ற கருத்து அரேபிய முஸலீம்களின் சமுக வாழ்வில் தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது.ஆன்மீகம் என்பது அரேபியன் போல் வாழ்வது என்ற பயங்கரமான மூடநம்பிக்கையினால் உலகில் நடந்த கொலைகள் ஏராளம் ஏராளம். இக்கருத்திலிருந்து விடுவித்துக் கொள்வது அனைவருக்கம் நல்லது. பணத்தை விடு அதிகாரத்தைவிட, மனித நேயமே ஆன்மீகம். அதுவே இறை வழிபாடு. இறைவன் அரேபியனும் அல்ல.இறைவனுக்கு எந்த மதமும் இல்லை. நாகூர் அனிபா பாடியபாடல் உம்மதமா என்மதமா ஆண்டவன் என்ன மதம். நல்லவங்க எந்தமதம் ஆண்டவன் அந்த மதம்.

Dr.Anburaj said...

திருக்குறள் இன்பம்
பேராண்மை என்ற சொல் திருக்குறளில் மூன்று இடங்களில் வருகிறது. முதலாவதாக, அறத்துப்பால் இல்லற இயலில் பிறனில் விழையாமை என்னும் 15 ஆம் அதிகாரத்தில் 148 வது திருக்குறளில் வருகிறது.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ? ஆன்ற வொழுக்கு.

பழங்காலத்தில் நாட்டை அரசர்கள் ஆட்சி செய்து வந்த சமயங்களில் அரசர்கள், தளபதிகள், படையிலுள்ள வீரர்கள் போர் மூளும் போது எதிரிகளை வெல்வதற்குத் தேவைப்படும் பலத்தை 'ஆண்மை' என்பார்கள். ஆனால் இயற்கையிலேயே ஆண்கள் பலதாரங்களை திருமணம் செய்து கொள்ளும் இயல்பினர். அப்படிப்பட்டவர்களும் அடுத்தவர் மனைவியைப் பார்ப்பது, விரும்புவதும், துய்க்க நினைப்பதுவும் ஆண்மையாகக் கொள்ளத் தக்கதன்று. அத்தகைய 'காம உணர்வாகிய உட்பகையை மனதிலிருந்து அகற்றி நல்ல நெறியில் வாழ்கின்ற சால்புடையவர்கள்' அறநெறியும், ஒழுக்கமும் நிறைந்த பேராண்மை படைத்தவர்களாக சமுதாயத்தில் கருதப்படுவார்கள்.

இரண்டாவதாக, பேராண்மை என்ற சொல் பொருட்பால் அங்கவியல், படைச் செருக்கு என்னும் 78 ஆவது அதிகாரத்தில் 773 வது திருக்குறளில் வருகிறது.

பேராண்மை என்ப தறுகண்;ஒன் றுற்றக்கால்,
ஊராண்மை மற்றுதன் எஃகு.

பகைவரைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்று, நியாயத்தை நிலை நிறுத்த போராடும் ஒருவரின் 'வீரத்தை' பேராண்மை என்பர். அத்தகைய வீரம் பொருந்திய ஒருவர், தன் பகைவர்க்கு அவர்தம் புகழுக்கும், வீரத்திற்கும் ஒரு தாழ்வு வரும்பொழுது அதைச் சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பைத் தந்து உதவுவது பெருமையும், புகழும் தரும். உதாரணத்திற்கு, இலங்கேஸ்வரன் இராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன். ராமனுடன் போரிட்டுத் தன் தானை முழுதும் இராவணன் இழந்து தனிமையாக்கப்பட்ட போது, ராமன் அவனை நோக்கி, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டது ராமனின் பேராண்மைக்கு எடுத்துக் காட்டாகும்.

மூன்றாவதாக, பேராண்மை என்ற சொல் பொருட்பால், ஒழிபு இயல், மானம் என்னும் 97 ஆவது அதிகாரத்தில் 962 வது திருக்குறளில் வருகிறது.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

புகழுடன் தன் குடும்ப மானத்தையும் நிலை குலையாமல் காப்பாற்றும் 'திண்மையான உள்ளம்' உடையவரே பேராண்மை உள்ளவராகக் கருதப் படுவார். அப்படிப் பட்டவர் தனக்கு எவ்வளவுதான் புகழ் கிடைக்கும் என்றாலும், தன் பிறப்புக்கும், சந்ததிக்கும் களங்கம் ஏற்படுத்தக் கூடிய தீய செயல்களை செய்ய மாட்டார் என்றும் திருவள்ளுவர் மானம் என்னும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

Dr.Anburaj said...

பங்களாதேஷில் இந்துவாக இருந்துவிட்டால், கொடுமைக்கு அளவே இல்லை.

இந்த 13 வயதுப்பெண்ணை கடத்திச் சென்று தொடர்ந்து பல நாட்கள் கற்பழித்து துரத்திவிட்டுள்ளனர் முஸ்லீம்கள்.

இந்த முஸ்லீம்கள் மீது எந்த விசாரணையும் இல்லை.

இந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

நல்லா இருங்கடே.

Beauty a curse in Bangladesh
By William Gomes
Published October 24, 2009
Email Spread the word.

Mili Rani Malakar, a 13-year-old Hindu girl was abducted and gang raped by local Muslims at Sylhet on May 1, 2008; later on, with a battered body and shattered mind, out of fear and extreme shame, the poor girl committed suicide.In the photo Mili with her parents. (William Gomes ) Some people might say that beauty becomes a curse for a woman who is raped. But I disagree with the idea that the woman's physical beauty is a curse, because it is not beauty that causes sexual violence; the main cause is the beast inside of man. Not all of the women or girls who get raped exhibit extreme physical beauty.

Why does the rapist not rape the mother, sister or daughter in their home who may be more beautiful than the woman or girl they rape? The question is what prevents them from raping their mother, sisters or daughter. If it is religious norms, then somehow the same religious norms fail to stop them from raping someone else. Otherwise, the news just never makes it out.
Bangladesh has a vast population practicing and following Islam in their lives. Islam initially controls their way of life. In Islam, the Prophet Mohammed left an example by having sexual relations with different women, from Aisha, the six- or seven-year-old daughter of Abu Bakr, to elderly women, as well as by having thirteen wives or concubines.
எழில் என்ற வலைதளம்

Dr.Anburaj said...

உணவு உண்ணும் முறை: உணவு உண்பது ஒரு கலை. அது ஒரு தவம்.
உணவு அறுசுவை உணவாய் இருக்கட்டும்.
அறுசுவையையும் திகட்டும்படி சாப்பிடு.
முதலில் இனிப்பு அதன் பின்னர் மற்ற சுவைகளை சுவைக்கும்படி சாப்பிடு.
நாக்கில் சுவைத்து ரசித்து கூழ்மமாக்கி சாப்பிடு. நாக்கில் உணவின் சுவை மறைந்த பின்னர் சாப்பாட்டுக் கூழ்மத்தினை வயிற்றிற்கு அனுப்பு.
உணவினை உமிழ்நீர் கலந்து சுவைத்து சாப்பிடு. உதடு பிரிந்தால் உமிழ்நீர் கலக்காது. உதடுகள் பிரிக்காமல் உணவினை உமிழ்நீருடன் அரைத்து கூழ்மமாக்கிச் சாப்பிடு.
சாப்பிடும்பொழுது கவனம் வேறெங்கும் சிதறவேண்டாம். உணவினில் கவனம் எளிதில் செரிக்க உதவும். உமிழ்நீர் சுரக்கும்பொழுது சற்றேறக்குறைய 500 வகையான சுரப்பிகள் சுரக்கின்றன. உணவு உண்பதனில் கவனம் சிதறும்பொழுது உமிழ்நீர் சுரப்பதில்லை.
டெக்னிக்: உதடுகளை மூடி கண்களை மூடிக்கொண்டு மெல்லும்பொழ்து உணவின் மீது முழு கவனம் கிடைக்கும். இது ஒரு தியானம்.
உணவினை உமிழ்நீருடன் கலந்து பற்களால் கூழ்மம் ஆக்கவும்
சாப்பிடும் முன்பாக அரைமணிநேரம் நீர் அருந்தாதே. சாப்பிட்டபின்னர் அரை மணிநேரம் நீர் அருந்தாதே. சாப்பிடும்பொழுதும் நீர் அருந்தாதே. தவிர்க்க இயலா காரணங்களினால் நீர் அருந்த நேரிட்டால் அது நாக்கினையும் தொண்டையையும் நனைப்பதாக மட்டும் இருக்கட்டும்.

தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே.
புத்தகம் படிக்காதே.
எவருடனும் உரையாடாதே.
கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து.
அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே !
முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு.
குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே. உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே.
இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு.
பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு
ஏப்பம் வரும்வரை திகட்டும்வரை உணவருந்து. ஏப்பம் வந்தபின் உணவருந்துவதை நிறுத்திவிடு. (ஏப்பம் – இரைப்பையில் வேலை முடிந்து உணவு சிறுகுடலுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கான உடலின் சமிக்ஞை. உணவருந்தும்பொழுது ஏப்பம் வந்தால் நீங்கள் சரியான முறையில் உணவருந்தியதாய் பொருள்.)


.

Dr.Anburaj said...

நியாயதீர்ப்பு நாள் உண்டா ?
கப்ர் அல்லது அடக்கஸ்தலத்தின் வாழ்க்கை
கப்ருடைய வாழ்கை

‘உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது ழுழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒலியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.

அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்நற் பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதளவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்றுமுதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.
முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அபபொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

கப்ரு ஒரு நபித்தோழரைக் கூட நெருக்கியது

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். நபித் தோழர்களில் நபியவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் ஸக்ராத்துடைய நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.
......... 2

Dr.Anburaj said...

ஸஃது (ரலி) அவர்கள் அகழ்யுத்தத்தின் போது கடுமையாகக் காயமுற்று நோயுற்றிருந்தார்கள். அவருடைய வீடு சற்று தூரத்திலிருந்ததால் அடிக்கடி அவரை நோய் விசாரிக்கச் செல்ல நபி அவர்களுக்கு சிரமமாயிருந்தது அடிக்கடி சென்று அவரைப் பார்ப்பதற்காக, அவருக்கென்று மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் வீடொன்று அமைத்துக் கொடுக்குமாறு நபியவர்கள் தமது தோழர்களைப் பணித்தார்கள். அவ்விதம் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னால் நபியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்து வந்தார்கள். ஒரு நாள் இரவு நடு நிசியில் ஜிப்ராயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களைக் கவலையடையச் செய்யக் கூடியதாக ஒருவர் மரணித்து விட்டார். அதனையிட்டு அல்லாஹ்வுடைய அர்ஷ்க்கூட நடுங்குகிறது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஸஃது (ரலி) அவர்களிடம் சென்று பார்த்த போது அவர் இறந்திருக்கக் கண்டார்கள்.

மறுநாள் அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு, கப்ரினுள் வைக்கப்படுவதைப் பார்த்து கொண்டிருந்த நபியவர்கள் திடீரென ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றார்கள். நபித்தோழர்களும் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். சற்று நேத்தில் ‘அல்லாஹுஅக்பர்’ என்று நபியவர்கள் கூறினார்கள். நபித் தோழர்களும் அவ்விதமே கூறினார்கள். இவ்விருவார்தைகளாலும் ஆச்சிரியமடைந்த நபித் தோழர்கள் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும் ‘யாரஸுலுல்லாஹ்’ வழக்கத்துக்கு மாறாக இன்று கவலையுடன் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும், மீண்டும் சந்தோஷத்துடன் ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறினீர்கள் இதன் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.

அப்பொழது நபிவர்கள் ‘ஸஃது (ரலி) கப்ரினுள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கப்ரு அவரை நெருக்குவதைக் கண்ணுற்றேன். அப்பொழுது கவலையுடன் ஸுப்ஹானல்லாஹ் என்றேன். அதனைத் தொடர்ந்து கப்ரு அவரை நெருங்குவதை விட்டு அவருக்க இடம் கொடுத்தது. அப்பொழுது அல்லாஹுஅக்பர்’ என்றேன் என்று கூறிவிட்டு ஒவ்வொரு கப்ரும் ஒவ்வொரு மனிதனையும் நெருக்காமல் விட்டு விடாது அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியுமென்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார் என்று கூறினார்கள். (அஹமது, நஸயீ: ஜாபிர் (ரலி)

Dr.Anburaj said...

நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறமுடியும் என்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமத்: ஆயிஷா (ரலி)

நபியவர்களுடைய கனவில் தோன்றிய கோரக் காட்சிகள்

‘கடந்த இரவு கனவில் என்னிடம் இருவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நானும் நடந்தேன். அவ்வழியில் ஒருவன் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் ஒருவன் பெரிய கல்லொன்றை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தான். அவன் அதனைப் படுத்துக் கொண்டிருந்தவனின் தலையில் போட்டான். அதனால் அவனுடைய தலை தகர்ந்து தூள்தூளானது. அந்த கல் உருண்டு கொண்டு போகவே அதனைத் தொடர்ந்து அம்மனிதன் சென்று அதைத்தூக்கி கொண்டு, தான் நின்ற இடத்துக்கே வந்து சேர்ந்தான். அப்போது சிதைதிருந்த தலை மீண்டும் பழைய நிலைக்கு வந்து நன்றாக இருந்தது. மீண்டும் மீண்டும் அவ்விதமே அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது’ இதனைக் கண்ணுற்ற நான் என்னச் அழைத்துச் சென்றவர்களிடம் ‘ஸுப்ஹானல்லாஹ்!’ இவர்கள் யார்? என்ற ஆச்சர்யத்துடன் கேட்டேன் அவர்கள் என்னை நோக்கி நடந்து வருமாறு கூறினார்கள்.

நான் அவர்களுடன் நடந்தேன். அப்பொழுது மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கருகில் சென்றோம். அவனுக்கருகில் முன் பக்கம் வளைந்த கம்பியைப் போட்டுப் பிடரி வரை கிழித்தார். பின்மூக்குத் துவாரத்தில் கம்பியைப் போட்டுப் பிடரிவரைகிழித்தார். பின்னர் ஒரு கண்ணில் அதனைப் போட்டுப் பிடரிவரை கிழித்தார். அதனைத் தொடர்ந்து அவனுடைய முகத்தின் மறுபக்கத்தையும் அவ்வாறே கிழித்தார். இப்பக்கத்தைக் கிழித்து முடிய அப்பக்கம் மீண்டும் பழையபடி நல்லநிலையை அடைந்திருந்தது இவ்விதமே தொடர்ந்து அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் ‘ஸுப்ஹானல்லாஹ்’ இவர்கள் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து நடக்குமாறு எனக்குக் கூறினார். நாங்கள் நடந்தோம்.

Dr.Anburaj said...

அப்பொழுது அடுப்பு போன்ற ஓரிடத்துக்குச் சென்றோம். அதன் தோற்றம் (கிணறு போன்று) ஆழமான ஒரு பொந்தாக இருந்தது. அதன் மேற்பாகம் நெருக்கமானதாகவும் கீழ்பாகம் அகண்டதாகவும் இருந்தது. அதனுள்ளிருந்து பயங்கர சத்தம் வெளியாகிக் கொண்டிருந்துது. அதனுள்ளளே எட்டிப்பார்தோம். ஆடையெதுமின்றி ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அதனுள்ளிருந்து நெருப்பு சுவாலை விட்டு எரியும் போது, உள்ளிருப்பவர்கள் (நீரில் மிதப்பது போன்று) மிதந்து வருகின்றனர். அந்தப் பொந்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடியளவு மேல் மட்டத்துக்கு வருகின்ற போது நெருப்பு அணைந்து, மீண்டும் அடித்தளத்துக்கே சென்று விடுகின்றனர்.

இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது, அதனைக் கண்ணுற்றதும் அவர்கள் யார்? என்று கேட்டேன். அப்பொழுதும் அவர்கள் என்னை நடக்குமாறு கூறினார்கள்.

பின்னர் இரத்த நிறமான நதியொன்றுக்கருகில் சென்றோம். அந்த நதியில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். மற்றொருவர் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய காலுக்கருகில் கற்கள் நிறைந்திருந்தன. நீந்திக் கொண்டிருந்தவன் கரைவந்து சேருகின்ற போது நின்று கொண்டிருந்தவர். ஒரு கல்லை அவனுடைய வாயினுள் போட்டுவிடுகிறார். அவன் கல்லை விழுங்கிக்கொண்டு மீண்டும் நீந்திச் செல்கிறான். மீண்டும் கரைக்கு வருகிறான். இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது.

நான் கண்ட காட்சிகளுக்கு, என்னுடன் வந்த இருவரிடமும் இறுதியில் விளக்கம் கேட்டபோது ஒன்றின்பின் ஒன்றாக விளக்கமளித்தார்கள்.

கல்லினால் தலை தகர்க்கப்பட்டவன். அல்குர்ஆனைப் படித்தான். ஆனால் அதன்படி அவனது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. பர்ளான தொழுகையைத் தொழாமல் உறங்கிவிட்டான்.

வலமும் இடமுமாக முகம் கிழிக்கப்பட்டவன் காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றால் (தனது வயிற்றுப் பிழைப்புக்காக) பொய் சொல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

பொந்தினுள் கண்ட நிர்வாணிகளான ஆண்களும், பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இரத்த நிறமான நதியொன்றில் நீந்திக் கொண்டு கற்களை விழுங்கிக் கொண்டிருந்தவன் வட்டி உண்டவன்.

நபி (ஸல்) அவர்கள் தமது கனவை மேற்கண்டவாறு சொன்னார்கள். பர்ஸகுடைய உலகில் நடைபெறும் இவ்வாறான வேதனைகள் மறுமை நாள் வரை நடைபெறும் என்றும் கூறினார்கள். (புகாரி: ஸமுரா இப்னு ஜீன்துப் (ரலி))

கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

Dr.Anburaj said...

கப்ருடைய வேதனையின் போது பாவிகளுக்குக் காலையும், மாலையும் நரகம் காட்டப்படும் என்பதை பிர்அவ்னுடைய கூட்டத்தை ஆதாரமாக் காட்டி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

பிர்அவ்னுடைய ஜனங்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுவார்கள். மறுமை நாளிலோ ‘பிர்அவ்னுடைய ஜனங்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்)’ (40: 45-46)

சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று கூறினார்கள். (புகாரி: அய்யூப் (ரலி)

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு ‘அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!’ என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நபியவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள்.

‘அதன் பின்னர் நபியவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ருடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமலிருக்க நான் கண்டதில்லை’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: ஆயிஷா (ரலி))

பாதுகாப்பு கப்ர் வேதனை

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நான்கு வகையான சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடமலிருந்ததில்லை அதில் முதலாவதாக கப்ருடைய வேதனையிலிருந்தே பாதுகாவல் தேடினார்கள். அந்த துஆ பின்வருமாறு.

‘அல்லாஹ்வே! கப்ருடைய வேதனை, நரக வேதனை வாழ்கையில் மரணத்தின் போதும் ஏற்படக்கூடிய சோதனை, தஜ்ஜாலுடைய வருகையால் ஏற்படக்கூடிய சோதைனை ஆகியவற்றிலிருந்து’ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (புகாரி: அபூஹுரைரா (ரலி)

Dr.Anburaj said...

கப்ர்

கப்ரு என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதலாவது இடமாகும். அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறுவானென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் இலகுவாகிவிடும். அதிலிருந்து அவன் மீட்சிபெறவில்லையென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் அவனுக்குக் கடினமாகி விடும். என்றும் கப்ருடைய காட்சிகளை விடமிகமிக மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் கண்டதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் என்றார்கள். (திர்மிதி, இப்னுமாஜா: உத்மான் (ரலி)

‘எவன் தன்னைத் தானே கேள்வி கேட்டு (விசாரனை செய்து) கொண்டு மரணத்துக்குப் பின்னாலுள்ள தனது வாழ்வுக்காக இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்கிறானோ, அவனே புத்திசாலியாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா : ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)

இந்த நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு உமர் (ரலி)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘நீங்கள் (கப்ரிலும் மறுமையிலும்) விசாரணை செய்பப்படுவதற்கு முன்னால் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். ஒரு பொழுது விசாரனைக்காக நீங்கள் நிறுத்தப் படுவதற்கு முன்னால் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அவன் இம்மையிலும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறானோ, அவனுக்கே மறுமை விசாரனை இலகுவாக அமையும்’ (திர்மிதி: உமர் (ரலி)

எனது குறிப்பு வாழ்க்கைக்கல்வி என்ற வரைதளதில் உள்ள மேற்படி கட்டுரை.நம்பமுடியாத பல விசயங்களைக் கொண்டுள்ளது.செத்த பிணம் எதையும் அறியாது. அது சில நாட்களில் மக்கி நாறி அழிந்து விடும்.
எறிப்பது புதைப்பது என்பது கலாச்சாரம் என்பதுதான்சரி. அல்லாவின் கட்டளை என்று எதும்யில்லை.

Dr.Anburaj said...

இஸ்லாத்தில் படுபயங்கரமான கட்டுக்தைகள் உள்ளதே ? இம்மைக்கும் மறுமைக்கும் இடைபட்ட பர்ஸக் வாழ்வு

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கேனும் மரணம் வந்து விட்டாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) என் இறைவனே! என்னை (உலகுக்கு)த் திருப்பி அனுப்பி விடு. நான் விட்டு வந்து அ(ந்த உலகத்)தில் (இனிமேல்) நற்காரியங்களையே செய்து கொண்டிருப்பேன் என்று கூறுவான். (எனினும் அது நடக்கக் கூடிய காரியம்.) அன்று (இத்தகைய சந்தர்ப்பத்தில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (அன்றி வேறில்லை) அவர்களுக்கு முன் அதில் (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் ஒரு பர்ஸக் உண்டு. (23:99,100)

ஒரு அடியான் கப்ரினுள் வைக்கப்பட்ட பின் அவனுடைய தோழர்கள் திரும்பி வருகின்ற போது அவர்களுடைய பாதணிகளின் சப்தத்தைக் கூட அவன் செவியுறுவான். அப்போது அவனிடம் இரண்ட மலக்குகள் வந்து (பல கேள்விகள் கேட்பார்கள். அதன் தொடரில் நபி (ஸல்) அவர்களைக் குறித்து) இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்? என்று கேட்பார்கள். ஒரு மூமினைப் பொறுத்த வரையில் அக்கேள்விக்கு ‘அவர் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள். என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறுவான். அப்பொழுது அவனை நோக்கி ‘நரகில் உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப்பார் அவ்விடத்துக்குப் பகரமாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படுகிறது’ என்று கூறப்படும். அப்பொழுது (சுவர்க்கம், நரகம் ஆகிய) அவ்விரண்டையும் அவன் காண்பான்.

முனாபிக், காபிர் இருவரையும் நோக்கி (நபி (ஸல்) அவர்களைக் குறித்து இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய் என் கேட்கப்படும். ‘அவரைப் பற்றி மக்கள் ஏதேதோ சொல்லுவதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் (அது என்னவென்று இப்பொழுது) எனக்குத் தெரியாது, நான் அது பற்றி அறியவுமில்லை’ என்று கூறுவான்.

அப்பொழுது அவன் இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவான். ஒவ்வொரு அடியின் போதும் அவன் எழுப்புகின்ற ஓசையை மனிதனையும், ஜின்களையும் தவிர (பூமியிலுள்ள) எல்லா உயிரினனங்களும், செவிமடுக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி)
Posted by MEERAN MYDEEN at 2:53 AM

Dr.Anburaj said...

அன்புள்ள ஐயா வணக்கம்.இது போன்ற கட்டுக்தை களை
தாங்கள் நம்புகின்றீர்களா ? இவைகள் உண்மையான தகவல்கள்தானா ? அங்கிகரிக்கப்பட்ட நூல்களில் உள்ளவைகளா ? முனாபிக், காபிர் இருவரையும் நோக்கி (நபி (ஸல்) அவர்களைக் குறித்து இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய் என் கேட்கப்படும். ‘அவரைப் பற்றி மக்கள் ஏதேதோ சொல்லுவதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் (அது என்னவென்று இப்பொழுது) எனக்குத் தெரியாது, நான் அது பற்றி அறியவுமில்லை’ என்று கூறுவான்.

அப்பொழுது அவன் இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவான்.முகம்மதுவை அறியாத அனைவரும் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள் என்ற தகவல் கொடூரமானதாக காட்டுமிராண்டித்தனமாக எனக்கு தோன்றுகிறது. பிறமத்தவர்களுக்கு எற்பட்ட பல கொடுமைகளுக்கு இதுபோன்ற வசனங்களும் ஒரு காரணம்.
முகம்மதுவை அறியாத அனைவருக்கும் நரகம் என்றால் முகம்மதுவிற்கு முன்னர் வாழ்ந்து மரித்துப்போனவர்கள் அனைவருக்கும் மற்றும் இன்றளவும் ஆப்பிரிக்கைவிலும் அந்தமான் தீவுகளிலும் பிற பகுதியி்ல் வாழும் மக்கள் அனைவருக்கும் நரகம் என்பது படிப்பதற்கே வடிகட்டிய பொய்எனத் தெரியவில்லையா ?
இப் பைத்தியக்காரத்தனங்களை நீங்கள் கட்டிக்கொண்டு என் அழ வேண்டும் ? அழவில்லையெனில் நீங்கள் காபீராகிவிடுவீர்களோ? எனக்கு 72 பெண்கள் வேண்டாம்.எனவே சொர்க்கம் வேண்டாம். நரகம் யில்லை.எனக்கு கபர் வேதனையும்யில்லை. நரக வேதனையும் இல்லை. அனைத்துமே பையித்தியக்காரத்தனமான கட்டக்கதை. மனநோயாளிகளின் உளறல்.

Dr.Anburaj said...

இதுவரை யாரும் இக்கருத்தை மறுத்து கடிதம் எழுதவில்லையே ஏன் ? இசசுலாமியர்கள் இக்கருத்துக்களை ஏற்கவில்லையோ !

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad