அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, March 9, 2011

"அந்தப் பாமரனை நாம் கேள்விக்கு உட்படுத்துகின்றோம்"


எனது நெருங்கிய நண்பர்'இம்ராஸ்' வீதியில் என்னைக் கண்டவுடன்
 'பொரிந்து' தள்ளத்   தொடங்கி விட்டார்.

"என்னப்பா! நீங்கள் ஜாமியாஹ் நளீமிய்யாஹ் பேராசிரியர்களை தாக்கி
எழுதியது 
போதாது என்று '......................................."
என்றும்,அவர்களுக்கு "........................................"
இருக்கிறது என்றும் எழுதி இருக்கிறீர்கள்?"

அதற்கு நான் " நாம் அப்படி சொல்லவில்லை. அந்த அறிஞர்களின் நிலை அறிந்த 
ஒரு பாமரன் அப்படித்தான் சொல்வான் என்றுதான் எழுதினோம்" என்றேன்.
   
"அதெப்படி நீங்கள் அப்படி சொல்வீர்கள்?....." என்ற அவர் "அவர்களில் யாராவது  நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்று சொன்னார்களா?" என்று கேட்டார்.

"உஸ்தாத் பளீல் சொன்னார்" என்றோம்.


"டாக்டர் சுக்ரி?"

பி.எம்.ஐ.சி.எச்சில் நடந்த ஒரு கருத்து அரங்கில் வைத்து
 அபூதாலிப் நாயகத்தை நரகத்துக்கு அனுப்புவதற்கு 'சுன்னத் வல் ஜமாஅத்'பெயரை உபயோகிக்க அனுமதித்து, அந்தப் பெரியவரை ரிஸ்வி முப்தியுடன் சேர்ந்து நரகத்துக்கு அனுப்பிய பெருமை
அவருக்கு உண்டு" 

"உஸ்தாத் மன்சூர்?"

"அவர்தான் இன்டர்நெட்டில் அஹ்ளுல்பைத்களுக்கு எதிராக இந்த நிமிடமும்  'உளறிக்' கொண்டு இருக்கிறாரே!"

"அகார் சேர்?"

"இல்லை .அவர் சொல்லவில்லை"

"அப்படி என்றால் ஏன் அவரையும் சேர்த்து நீங்கள் சொல்கிறீர்கள்?"

"ஆப்கான் ஜிகாதில் அகார் சேரின் பங்களிப்பை பற்றி நாம் பேசினால் அவரது கூட்டத்தாரின் வண்டவாளங்கள் வெளியே வரும்." என்று சொன்ன நாம் "உண்மைகளை அறிந்த அவர் , இவர்களை தடுக்கவில்லையே? அதுதான் அவரது தவறு" என்றோம்.

"என்னால் உங்களது வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் சின்னதொரு ஹதீதை போட்டுவிட்டு அவர்களை தாறு மாறாக பேசுகிறீர்கள்" என்றார்.

அந்தப் பாமரர்களின் கருத்துக்களை நாம் பதிவிளிட்டு   எங்களது அறிஞர் பெருமக்களை வம்புக்கு இழுத்தாவது உண்மைகளை வெளியே கொண்டு வர  வேண்டும் என்பதுதான் எங்களது நிஜமான நப்பாசை.

ஆனால், அவர்களோ "கிணற்றில் விழுந்த கல்லாக" மிக உறுதியாக எது வித சலனமும் இல்லாமல்   மௌனித்து இருக்கிறார்கள்.

நிஜத்தில் அந்த அறிஞர்களின் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் சம்பந்தமான தவறான கருத்துக்களை பற்றி நாம் சொன்ன போது அவர்களின் நிலை அறிந்த மூன்று சாமானியர்கள் எங்களிடம் சொன்ன சொற்கள் தான் அவை.

நண்பர் இம்ராசின் கோபம் நியாயமானது தான்.

ஏனெனில், அவரால் அவர் தனது நெஞ்சில் பெரு மதிப்பு வைத்து இருக்கும் தலைவர்களைப் பற்றி சாமானியர்கள் இப்படி சொன்னதும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால்,நடை முறை  யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே?

ஏனெனில், சாமானிய மக்கள் நபிகளாரை தெரிந்து கொண்ட அளவுக்கு இந்த உஸ்தாத்மார்களைப் பற்றி தெரிந்து வைத்து இருக்கவில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை.

அதனால் அவர்களால் அவர்கள் மதித்த ஒரு தலைவரைப் பற்றி இழுக்காகப் பேசிய  இந்த தலைவர்களின் செயல் பாடுகளில் நியாயத்தை காண முடியவில்லை.

அவர்கள் பக்கம் அது நியாயம் தான்.

அதேபோல , நண்பர் இம்ராஸ் சொல்லுவதும் சரி.

ஏனெனில், இந்த நிகழ் கால தலைவர்களை அவர் மதிக்கிறார்.

இந்த தலைவர்கள் எடுத்த தவறான தீர்மானங்களால் அவர் பாதிப்பு அடையும் வரை இந்த தலைவர்களில் அவர் குறை காண மாட்டார்.

என்றாவது ஒருநாள் நண்பர் இம்ராசின் மனத்தில் கொளுவேற்றியிருக்கும் இந்த தலைவர்களின் முகமூடி கிழியப்  போகிறது.

அன்றைய தினம் இம்ராஸ் இவர்களை அந்த சாமானியர்களை விடவும் தாறு மாறாக கிழிப்பது என்னவோ உண்மை.


'கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக' எங்களது நல்ல நண்பரே இப்படி பொரிந்து தள்ளியபோது ,அவரது அந்த செய்கை எங்களை அந்த சாமானியர்கள் சொன்ன சொற்களை மீண்டும் ஒருமுறை "மீள் பார்வை" செய்யத் தூண்டியது.

           அமீர் முஆவியாவின் உருவம் பதிக்கபப்ட்ட , உமய்யா நாணயக் குற்றி  

*  நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் சிதைந்து போன இஸ்லாமிய தலைமைத்துவத்தை சரியாக இனம் கண்டிருந்தால் - இந்த அறிஞர்கள் நண்பர் இம்ராஸ் சொல்லுவது போல் அறிஞர்கள்தான்.


அந்த தப்புகளை இனம் கண்டும் காணாதது போல இருந்தால் - நாம் அந்த பாமரகளுடன் துணை நிற்கிறோம்.

                                  அப்பாசியாக்களின் அறிவியல் அரங்கொன்று 

*   உமையாக்கள் காலத்திலும், அப்பாசியாக்களின் காலத்திலும் நடந்த அக்கிரமங்களையும், இஸ்லாத்துக்கு அவர்கள் செய்த கொடுமைகளையும் எங்கள் அறிஞர்கள் இனம் கண்டிருந்தால்- நண்பர் இம்ராஸ் சொல்லுவது சரி.

அந்த அக்கிரமங்களை இனம் கண்டும் காணாதது போல இருந்தது போதாது என்று அதற்கு துணை போனால் - அந்த பாமரர்கள் சொல்லுவது சரி.

*  நபி (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களையும், அஹ்லுல் பைத்களையும் எது வித ஈவு இரக்கமின்றி கர்பலாகொலை களத்தில் படு கொலை செய்த செய்கைகளின் இரகசியங்களை அறிந்து கொண்டால் இவர்கள் இம்ராஸ் சொல்லுவது போல நல்ல அறிஞர்கள்.

ஆனால்,யசீதின் செய்கையை இவர்கள் நியாயப் படுத்தினால் , நாம் ஹசன் ஹாஜி சொன்ன  கூற்றுடன் உடன் படுகின்றோம்.

*  உமய்யாக்களின் இறுதிப் பிரிவிலும், அப்பாசியாக்களின் ஆரம்பப் பிரிவிலும் மத்ஹபுகளின் தோற்றத்துக்கு காரணமாயிருந்த காரணிகளை சரியாக அறிதிருந்தால் நண்பர் இம்ராஸ் சொல்லுவது சரி.

அவற்றை அறிந்தும் அறியாததைப் போல பவனை செய்தால் நண்பர் ஹசன் ஹாஜி சொல்லுவது சரி.
                            புத்தளம் அகதி முகாம் ஒன்றில் அள்ளப்படும் முஸ்லிம்கள் 


*  இலங்கையில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்கி அந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் வழி வகை அறியாது, வேறு வழியின்றி அவற்றுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நண்பர் இம்ராஸ் எமக்கு இந்த உலமா தலைவர்கள் தீர்த்து வைத்த ஒரு பிரச்சினையையும், அதனை இவர்கள் தீர்த்து வைத்த முறையையும் தெளிவு படுத்துங்கள்.நாம் இவர்களை எங்களது அறிஞர்களாக ஏற்றுக் கொள்கிறோம்.

*  எமது இந்த அறிஞர்கள் நாளை உலகை ஆளப் போகும் இஸ்லாத்தைப் பற்றி விலாவாரியாக விவரிக்கிறார்கள்.

மிக நன்று.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்காலத்தில் எந்த வழியில் இந்த நாட்டில் தங்களது இருப்பை பாதுகாத்து, ஆளுமை மிக்க சமூகமாக இந்த நாட்டில் செல்வாக்குடன் வாழ முடியும் என்பதற்கு எத்தகைய செயல் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறோம்.

ஆப்கானிஸ்தான் மக்கள் போதைப் பொருள் 'பப்பி'  வளர்க்கிறார்கள் என்று ஒரு பரவலான குற்றச்சாட்டு அந்த மக்களுக்கு இருக்கிறது.

சோவியத் யூனியனை இல்லாது ஒழிக்கும் பனிப் போரில் அந்த நாடு அநியாயமாக பலிக்கடாவானது.

ஆப்கானிஸ்தானின் அப்பாவி விவசாயி ஒருவர் அறுவடை செய்யும் காட்சி 

பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் நிறைந்த அந்த பூமிஉள்நாட்டுப் போரினால் துவம்சமானது.

நகரங்களில் பிரச்சினை வெடிக்க , அந்த நாட்டு மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.

மரங்கள் இல்லை.தண்ணீர் இல்லை.குடும்பத்துக்கு எப்படி உணவளிப்பது?

இயற்கையாகவே தன்மானம் நிறைந்த அந்த மக்கள் பிச்சை எடுக்க விரும்பவில்லை.

அப்படி என்றால் என்னதான் செய்வது?

'பப்பி'

செத்துப் போன அந்த மண்ணில் 'பப்பி' உயிர் பிழைத்து அந்த மக்களையும் உயிர் பிழைக்க வைத்தது.

அந்த மக்களை இப்படியான அவல நிலைக்கு ஆளாக்கியது யார்?

இஸ்லாமிய உணர்வு நிறைந்திருந்த அந்த மக்களை இயக்கங்களாக பிரித்து அழிந்து போக விட்டதில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கும் அமெரிக்க  சி. ஐ. ஏக்கும் நூறு சத விகித பங்குண்டு.
ஆப்கானிஸ்தான் அப்பாவி அகதிகள் பாகிஸ்தான் பெஷாவர் அகதி முகாமில் 


பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் பிரதான ஏஜண்டாக பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி இருந்தது.

உலகம் முழுவதில் இருந்தும் ஆப்கான் ஜிகாதுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்வதில் ஜமாஅதே இஸ்லாமி மும்முரமாக ஈடு பட்டது.

இலங்கையில் ஜமாஅதே இஸ்லாமி தலைவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இஸ்லாமிய பேரரசுக்கான ஒரு யுத்தமாக - ஜிகாதாக எமக்கு அந்த அநியாயத்தை நியாயப் படுத்திக் காட்டினார்கள்.

அல்லாஹ்வுக்காக வேண்டி அல்லாஹ்வின் பெயரால் எங்களது இளமை காலத்தை சி.ஐ.ஏவிட்கு அடகு வைத்த பெருமை எங்களது இந்த தலைவர்களுக்கே சாரும்.

சரி.

அதே ஆப்கானிஸ்தானை  இன்று அமெரிக்க அநியாயமாக ஆக்கிரமித்து இருக்கிறது.

இந்த தலைவர்கள் அன்று சொன்ன அதே ஜிகாத் இன்றும் அங்கே நடந்துக் கொண்டு இருக்கிறது.

இவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத் பிரகடனம் செய்கிறார்களா? அல்லது செய்திருக்கிறார்களா??

அல்லது, முன்னர்  போலவே ஆப்கானிஸ்தான் ஜிகாதின் முக்கியத்துவத்தைப் பற்றி எங்காவது பேசுகிறார்களா?

அல்லது சி.ஐ.ஏவின் நுணுக்கத்தைப் புரிந்து கொண்டார்களா?

அல்லது, தான் செய்கின்ற தவறையாவது  உணர்கின்றார்களா?

ஊஹும் . இல்லை.

தவறை உணர்ந்து திருந்தினார்களா என்றால் அதுவும் இல்லை. இதுவும் இல்லை.கடைசியில் எதுவுமே இல்லை..

மீண்டும் , மீண்டும் அதே தவறை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களின் பிடியில் இருந்து எங்களது இளைஞர் சமுதாயத்தை எப்படித்தான் காப்பாற்றுவது?

இந்த அறிஞர்களிடம் மிக சாதாரணமான ஒரு கேள்வி?

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களை நரகத்துக்கு அனுப்புகின்ற செய்திகளை  சொல்லுவதில் இவர்கள் வேண்டி நிற்கும் சமூக சீர்திருத்தம் தான் என்ன?

இந்த தலைவர்கள் சி.ஐ.ஏற்கு வேலைசெய்தால் என்ன? அல்லது யு.எஸ்.எய்டுககு வேலை செய்தால்தான் எமக்கு என்ன?
    யு.எஸ் . எய்டின் கவர்ச்சிகரமான 'டாலர்' உதவிப்  பொறியின் மாதிரி  

எம்மை பொறுத்தவரை அது ஒரு பிரச்சினையே இல்லை.

எமக்கு இருப்பது எல்லாம் ஒரே ஒரு கவனம்தான்.

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்களுக்கு எதிராக ஒரு மூச்சு கூட இவர்கள் விடக் கூடாது.

3 comments:

rahmath imraz said...

Later I'll see this problem...

rahmath imraz said...

karuthukkalai aayvukka vidungal arragagamaaga thinikka mutpadaathirgal aayvugalin pinnaniyil unmaygal polanpadum

அஹ்லுல்பைத் said...

நண்பர் இம்ராசின் கருத்துக்களுக்கு நன்றி.

நாம் அராஜகமான முறையில் எந்தக் கருத்துக்களையும் யார் மீதும் திணிக்க முயலவில்லை என்பதை எங்கள் பதிவுகளில் இருந்து உங்களால் இலகுவாக புரிந்துக் கொள்ள முடியும்.

அராஜகம் என்பதின் சரியான அர்த்தம் -அநீதமாகும்.

அநீதமாக கருத்துக்களை திணிப்பவர்கள், நாம் தலைவர்களாக நம்பி ஏமாந்து போன 'உஸ்தாது'மார்கள்தாம்.

நாங்கள் அநீதமான முறையில் எதுவும் சொல்லவில்லை.

அஹ்லுல் பைத்களுக்கு எதிராக மிக அநீதமான முறையில் களம் இறங்கி இருக்கும் அஹ்லுல் பைத்களின் எதிரிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அல்லாஹ்வினதும், அவனது ரசூல் (ஸல்) அவர்களினதும் திருப் பொருத்தம் தான் எங்களது இறுதி இலக்கு.

மரணத்தின் பின்னாலான மறுமை வாழ்வின் வெற்றிக்கு அது ஒன்று தான் இறுதியான வழி.

"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காணமாட்டீர்.அவர்கள் தங்கள் பெற்றோர்களாயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தவர்களாயினும் சரியே;..............................."
( அல் குரான் 58 : 22 )

அஹ்ளுல்பைத்களின் எதிரிகளிடம் நேசம் கொள்வது அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பாத சமூகத்தவர்களின் குண இயல்பு என்பது அல் குரானின் இந்த வசனத்தில் இருந்து உங்களுக்கு விளங்கி இருக்கும்.

படிக்காத அந்த பாமர மக்கள் இந்த உஸ்தாது மார்களை விட ஈமானில் சிறந்தவர்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது அல்லவா?

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad