அஹ்லுல்பைத் Headline Animator

Friday, March 11, 2011

"அராஜகமான முறையில் மக்கள் மத்தியில் கருத்துக்களை திணிப்பவர்கள் யார்?"

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஸ் ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் கொள்ளுப்பிட்டி ஜும்மாஹ்   மஸ்ஜிதில் செய்த ஒரு ஜும்மாஹ் பிரசங்கம் 'இலங்கை வானொலியில்' நேரலையாக அஞ்சல் செய்யப் பட்டது.

அதில் அவர் ஹசரத் அபூதாலிப் நாயகம் அவர்களை நரகவாதி என்றும், நரகத்தில் அவருக்கு மிகவும் குறைவான தண்டனை வழங்கப் படும் என்றும் தீர்ப்பு சொன்னார்.

அவரது இந்த பிரசங்கத்தை சுமார் ஐந்து   இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில், அதிகமானவர்கள் பெண்கள்.

ஒரு தவறான மிகவும் பிழையான கருத்தை பிரமாண்டமான மக்கள் மத்தியில்  இப்படி  திணித்தது அராஜகமான செய்கை இல்லையா?

உடனே நாம் அபூதாலிப் நாயகம் சம்பந்தமாக எங்கள் பக்கத்து நியாயங்களை சொல்லி , அபூதாலிப் நாயகத்தின் இஸ்லாத்தையும் விளக்கி, அஸ் ஷெய்க் ரிஸ்வி முப்திக்கும், வானொலி கட்டுப் பாட்டாளருக்கும் ஒரு மறுப்புக் கடிதம் அனுப்பினோம்.

கடிதம் குப்பைத் தொட்டியில்  வீசி எறியப்பட்டது.

விளைவு?


'அபூதாலிப் நரகவாதியா?" என்கிற எங்களது புத்தகம் உருவானது.


இலங்கையில் சுமார் அறுநூறுக்கும் அதிகமான உலமாக்களுக்கு அந்தப் புத்தகங்கள்  அவர்களது ஆய்வுக்காக இதுவரை பகிரப்பட்டுள்ளன. 

என்றாலும், அந்தப் பெரியவரை நரகத்துக்கு நுழைவுச் சீட்டு கொடுத்து அனுப்பும் கைங்கரியம் மட்டும் இன்னும் குறையவில்லை.

(ஒரு கொசுறு செய்தி- எங்களது உலமா தலைவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்பும் நுழைவுச் சீட்டை கொடுப்பதன் மூலம், தங்களுக்கு அமெரிக்காவினுள் நுழைவதற்கான நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளார்களாம்.)

பலே! பலே!! தலைவர்களே?!

பாவம் இலங்கை முஸ்லிம் சமூகம்.!



இப்பொழுது சொல்லுங்கள் - அராஜகமான முறையில் கருத்துக்களை திணிப்பவர்கள் யார்?

சென்ற மாதம் வெளிகமையில் ஒரு திரு விழா.

கலீலன் மௌலானாவின் வீட்டில் நடந்த அந்த வைபவம் வருடா வருடம் நடக்கின்ற ஒன்று.

நபி (ஸல்) அவர்களின் ஜனன விழா என்று அதற்கு ஒரு பெயர்.

தளபதி , ஜனரஞ்சக பேச்சாளர், நெருப்பு கக்கி, கக்கினால் நெருப்பு,சொல் சிலம்பம்,  சிலம்பத்தில் சொல் என்றெல்லாம் புனைப் பெயர்கள்   வைத்துக் கொண்ட இந்தியாவின் 
பிரபலமான பல உலமாக்கள் அந்த விழாவில் கலந்துக் கொண்டார்கள்.  ,

அவர்களின் பிரசங்கங்களும் வானொலியில் நேரலையில் அஞ்சல் செய்யப் பட்டன.

அந்த கூட்டத்திலும் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் பாதுகாப்புக்கு சுமார் நாற்பத்து இரண்டு வருடங்கள் தமது வாழ் நாள்களை தியாகம் செய்த பெரியவர் அபூ தாலிப் நாயகத்தை நரகத்துக்கு அனுப்பினார்.

பின்னர், நபி (ஸல்) அவர்களின் ஜனன விழா விசேட  புரியாணியுடன்   பகல் உணவை ஒரு பிடி பிடித்தார்.


நாம் அவரைப் பிடிப்பதற்காக அவரது பிரசங்கத்தின் ஒலிப்பதிவு   நாடாவை சம்பந்தப் பட்டவர்களிடம் கேட்டோம்.

எமகாத சூரர்கள்.

ஒலிப்பதிவு நாடாவை தர முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

அவர்களின் அந்தப் பிரசங்கத்தை கேட்ட அப்பாவி பொது மக்களின் நிலை என்ன?

இப்பொழுது சொல்லுங்கள் -அராஜகமாக செய்திகளை திணிப்பவர்கள் யார்?

நேற்று முன்தினம் மார்ச் ஒன்பதாம் திகதி இரண்டாயிரத்து பதின் ஒன்றாம் வருடம் காலையில் ஒரு முஸ்லிம் நிகழ்ச்சி.

நேரலையில் ஒலிபரப்பப்பட்ட அந்த முஸ்லிம் நிகழ்ச்சியை சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். 

அதிலும் அஹ்லுல் பைத்களுக்கு எதிரான கோஷங்கள்.

இந்த தவறான செய்திகளை உள்வாங்கிய நேயர்களில் எத்தனை பேர் 'அஹ்லுல் பைத் ' தளத்துக்கு வருகிறார்கள்?

தவறான பிரச்சாரங்களால் வழி கெடுக்கப் பட்ட இலட்சக் கணக்கான நேயர்களில் எத்தனை பேர்களிடம் எங்களது நியாயத்தை எடுத்து சொல்ல முடியும் என்று கேட்கிறோம்.

அராஜகமான முறையில் கருத்துக்களை அப்பாவி பொது மக்கள் மத்தியில் திணிப்பவர்கள் யார்?

எங்களது கருத்துக்களை பொது மக்களின் ஆய்வுக்கு விட்டு விடுமாறு சகோதரர் இம்ராஸ் கேட்டுக் கொண்டார்.

அவர்களுக்கு இருக்கின்ற வேலைப் பளுவுக்கு மத்தியில்  ஆய்வு செய்ய எங்கே நேரம் இருக்கிறது?

பொது மக்கள் ஆய்வு செய்யத் துவங்கி விட்டால் இந்த தலைவர்களின் முக மூடி கிழிந்து போகும்.

அப்பாவி பொது மக்களுக்கு நேரமில்லாத காரணத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுதான் எங்களது உலமா தலைவர்கள் இந்த அளவு அட்டகாசமாக  ஆட்டம் போடுகிறார்கள்.

சகோதரர் இம்ராஸ் அவர்களே!
நீங்கள் இலங்கையில், கொழும்பில் இருக்கின்ற பல சமூக சேவை அமைப்புகளின் உறுப்பினர்.

எங்களது உலமா தலைவர்களில் நிறைய பேர்களிடம் உங்கள் பெயர் சொல்லப் பட்டால் உங்களை தனிப் பட்ட முறையில் அவர்களுக்கு தெரியும்  அளவுக்கு நீங்கள் பிரபலம்.

உங்களை விட்டும் அவர்களால் தப்பி ஓட முடியாது.

அப்பாவி பொதுமக்கள் சார்பாக ஏன் உங்களால் இந்த கருத்துக் களத்தில் நடு நிலை வகிக்க முடியாது?

இந்தத் தலைவர்களின் கருத்துக்களால் சிறை பட்டிருக்கும் நாளைய நமது சிறுவர்களுக்காகவாவது நீங்கள் இந்தப் பணியில்  ஈடுபட வேண்டும் என்று
விரும்புகிறோம்.


அல்லது, நீங்களும் எங்களது உஸ்தாத் மார்களைப் போல 'மயான' அமைதி கொண்டு மறைந்து விடுவீர்களோ நாம் அறியோம்.

உங்களால் முடிந்தால் நேற்று முன்தினம் பிரபல இயக்கம் ஒன்றின் அனுசரணையில் அஞ்சல் செய்யப் பட்ட 'அஹ்ளுல்பைத்கள்' சம்பந்தமான ஒலிப்பதிவு நாடாவை எமக்கு பெற்றுத் தாருங்கள்.

அவைகளை ஆவணமாக பதிவு செய்துவிட்டு அவைகளுக்கான பதில்களை 'அஹ்லுல் பைத்' தளத்தில் பதிவிடுகிறோம்.

பொது மக்களை நாம் எங்களது பிரச்சினையின் நடுவர்களாக நியமிப்போம்.

அஹ்லுல் பைத்களுக்கு எதிரான இந்த உலமாக்களின் கருத்துக்களை இன்ஷா அல்லாஹ் அல் குரான் அல் ஹதீத் ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டு காட்டுகின்றோம்.

அவர்கள் எங்கள் தரப்பு வாதத்துக்கு சரியான பதில்களை உறுதியான அல் குரான் அல் ஹதீத் ஆதாரங்களுடன் எமக்கு தரவேண்டும்.

அல் குரானுக்கும், அதனது போதனைகளுக்கும் முரண் படுகின்ற ஹதீத்களை அவர்கள் தரப்பு வாதமாகவோ அல்லது எங்களது தரப்பு வாதமாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

எங்களது பதில்களில்  உள்ள தவறுகளை அஹ்லுல் பைத்களின் எதிர் மறை கருத்து கொண்ட அறிஞர்களிடம் பெற்றுத் தாருங்கள்.

அதே போல எங்களது கேள்விகளுக்கும் அவர்களிடம் இருந்து சரியான பதில்களை அல் குரான் அல் ஹதீத் ஆதாரங்களுடன் பெற்றுத் தாருங்கள்.

அவர்களின் கருத்துக் களையும், எங்களது கருத்துக் களையும் ஆவணப் படுத்தி பதிவிளிடுவோம்.

நடுவர்களான பொது மக்கள் எங்கள் இருவரினதும் கருத்துக்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரட்டும்.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad