அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, March 12, 2011

அமீர் முஆவியாவின் வழிகேடு ; நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு





முஆவியாவின் திரு உருவம் பொறிக்கப் பட்ட 'பனூ உமையாக்'களின் நாணயம்.

இக்ரிமா  கூறியதாவது ;

இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் "நீங்கள் இருவரும் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியை செவி மடுத்து வாருங்கள்" எனக் கூறினார்கள்.

நாங்கள் சென்றோம்.

அபூ ஸயீத் (ரலி) தனது தோட்டத்தை சரி செய்துக் கொண்டு இருந்தாரகள்.

அவர் எங்களைக் கண்டதும், தனது மேலாடையை போர்த்திக் கொண்டு எங்களுக்குக் கூறலானார்கள்.

பள்ளி வாசல் கட்டப் பட்ட செய்தியைக் கூறும்போது "நாங்கள் ஒவ்வொரு செங்கலாக சுமப்பவர்களாக இருந்தோம்.அம்மார் (ரலி) இரண்டிரண்டு சென்கட்களாக சுமக்கலானார்கள்.

அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்த மண்ணை தட்டி விட்டு " பாவம் அம்மார்.! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும். இவர் அவர்களை சுவர்க்கத்திட்கு அழைப்பார். அவர்களோ  இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு அம்மார் (ரலி) "அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறினார்கள். என அபூ ஸயீத் (ரலி) குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்- புகாரி ; முதலாம் பாகம் 447  வது ஹதீத்.)        

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னால், பிளவு பட்டு பிரிந்து போன கூட்டத்தார்களில், நரகத்துக்கு அழைக்கும் வழி தவறிய கூட்டத்தாரைப் பற்றியும் அதே சமயம், சுவனத்துக்கு அழைத்து சுவனம் செல்லும் நேர் வழி நிற்கும் கூட்டத்தாரைப் பற்றியும் பிரித்து அறிந்து கொள்ள அம்மார் (ரலி) அவர்களின் கொலை ஒரு சாட்சியாக உலகம் அழியும் வரை இருக்கப் போகிறது.



இது நபி (ஸல்) அவர்களின் தீர்க்க தரிசன முன்னறிவிப்புக்கு அப்பழுக்கு இல்லாத ஆதாரம்.

அமீருல் மூமினீன் ஹசரத் அலி அவர்களுக்கும் சிரியா மாகாண கவர்னர் முஆவியாவிட்கும் இடையில் நடந்த சிப்பீன் 'கலகத்தின்' போது மூமின்கள்    அமீருல் மூமினீன் ஹசரத் அலியுடனும் , இஸ்லாமிய தலைமைத்துவத்துடன் மோதிய கலகக் காரர்கள் சிரியாவின் கவர்னர் முஆவியாவுடனும் இரு வேறுபட்டு இருந்தனர் என்று வரலாறு எமக்கு சொல்கிறது.


பனூ உமையாக்களின் தயவில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர்களின் தகிடு தனத்தால், மிகவும் அற்பமான இந்த உள் நாட்டு கலகம் பாரிய போராக பின்னாளில் அவர்களது வரலாற்று நூல்களில் உருவகிக்கப் பட்டது.

இந்த சிப்பீன் 'கலகத்'தில் சிரியாவின் கவர்னர் முஆவியாவின் கலகக் காரக் கூட்டம் அம்மார் (ரலி) அவர்களை படு கொலை செய்கிறார்கள்.

இந்தக் கலகக் காரக் கூட்டத்தை தான் நபி (ஸல்) அவர்கள் "மக்களை நரகத்திற்கு அழைக்கும் அக்கிரமக் காரக் கூட்டம்" என்று முன்னறிவித்தார்கள்.

எங்களது 'அஹ்லே சுன்னா வல் ஜமாஅத்' முஸ்லிம்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்த இரண்டு கூட்டத்தார்களில் ஒரு பிரிவினரில் இன்றும் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்று கவர்னர் முஆவியாவின் செய்கைகளுக்கு இன்னமும் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு , 'அஹ்லே சுன்னா வல் ஜமாத்தில்' மறைந்து  இருந்து,      முஆவியாவை மனதார பின்பற்றிக் கொண்டு 'மக்களை நரகத்துக்கு அழைக்கும் அக்கிரமக் காரக் கூட்டம்'

அடுத்தது , நபி (ஸல்) அவர்கள் எமக்கு தெளிவாக அறிமுகப் படுத்தி தந்து விட்டுப் போன நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரான அஹ்லுல் பைத்களையும் ,முஸ்லிம் சமூகத்தினது  ஏகோபித்த தலைவர் அமீருல் மூமினீன் ஹசரத் அலி (ரலி ) அவர்களையும் அவர்களை ஏற்றுக் கொண்ட சகாபாக்களையும் பின் பற்றும் 'அஹ்லே சுன்னா வல் ஜமாத்தினரான' 'மக்களை சுவனத்துக்கு அழைக்கும்' நேர் வழி பெற்ற கூட்டம்.

சின்னதொரு பரீட்சை!

இதில் நீங்கள் எந்த கூட்டத்தினர்?

அல் குரான் ஆயத்களுடன் அதனை கொஞ்சம் பரீட்சித்து பார்ப்போம்.

ஈமான் இல்லாமல் சத்தியத்தை நிராகரிக்கும் கூட்டத்தினரையும் ,  அல்லாஹ்வால் நெஞ்சில் ஈமான் பதிக்கப் பட்ட கூட்டத்தாரையும் பற்றி அல் குரான் இப்படி பிரித்து அறிவிக்கிறது.

"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் , அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காண மாட்டீர்.அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும்  சரியே;(ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில் ,(அல்லாஹ்) ஈமானை எழுதி (பதித்து) விட்டான்................"

உங்களது நெஞ்சை தொட்டு பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களினதும் அஹ்லுல் பைத்களினதும் பகைவர்கள் உங்களது நேசத்துக்கு உரியவர்களாக இருக்கிறார்களா?

இன்னும் கொஞ்சம் இலகுவாக சொல்வது  என்றால் , இந்த கருத்துக்களை வாசித்தவுடன் உங்களுக்கு முஆவியாவையும் , அவர் சார்ந்த பனூ உமயாக்களையும் பாது காக்க வேண்டும் என்று நெஞ்சு துடிக்கிறதா?

கவனம்!

நீங்கள் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்த 'நரகத்துக்கு அழைக்கும் அக்கிரமக்காரக் கூட்டத்தில்' இருக்கிறீர்கள்.

அப்படி இல்லை!

உங்களுக்கு முஆவியாவுடனும் நபி (ஸல்) அவர்களின் எதிரிகளுடனும்   கோபம் வருகிறதா?

அல்ஹம்து லில்லாஹ்.

அல்லாஹ்வுக்கு நன்றியும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர்கள் மீதும் சலவாத்தும் சொல்லுங்கள்.

உங்களது உள்ளத்தில் அல்லாஹ் ஈமானைப் பதித்து விட்டான்.

அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்.


"நிச்சயமாக , பயபக்தியுடையோருக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய ) சுவனச் சோலைகள் உண்டு."

"நாம் முஸ்லிம்களை , (பாவம்) செய்யும் குற்றவாளிகளைப் போல ஆக்குவோமா?"

"(சத்தியத்தை நிராகரிப்போரே!) உங்களுக்கு என்ன நேர்ந்தது?(இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?") 

(அல் குரான் 68  :   34 வடு ஆயத் முதல் 36  வடு ஆயத்வரை)



No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad