அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, April 20, 2011

அமீர் முஆவியா செய்தது சரி.......யசீதின் தலைமைத்துவ நியமனம் நியாயமானது.... அஹ்லுல் பைத் தளத்துக்கு அமீர் முஆவியாவுடன் ஏன் இவ்வளவு கோபம்....???????


அமீர் முஆவியா செய்தது சரி.......யசீதின் தலைமைத்துவ  நியமனம் நியாயமானது.... அஹ்லுல் பைத் தளத்துக்கு அமீர் முஆவியாவுடன் ஏன் இவ்வளவு கோபம்....???????

எமது  குடும்ப நண்பர் மௌலவி ஜிப்ரி காலையில் எம்மைக் கண்டவுடன் சிரிப்புடன் எம்மிடம் கேட்ட கேள்விகள் இவை.

இவைகள் ஒரு மௌலவியின் கேள்விகள் என்பதால் நாம் கட்டாயம் சரியான விடை காண வேண்டிய வினாக்களாக இவை மாறின.


"அமீர் முஆவியாவின் செய்கையை எப்படி சரி காண்கிறீர்கள்?"

"இந்த விடயத்தைப் பற்றி எங்களது மதரசாக்களில் எங்களுக்கு தெளிவாக சொல்லித் தந்து இருக்கிறார்கள்" மௌலவி ஜிப்ரி தொடர்ந்தார். "அப்போதைய நிலைமையில் முஆவியா (ரலி) அவர்கள் தமக்குப் பின்னர் ஒரு தலைவரை நியமிக்காமல் போயிருந்தால் முஸ்லிம் உம்மத்தில் பெரிய பிரச்சினைகள் தோன்றி இருக்கும்"

"என்ன பிரச்சினைகள்?" நாம் மௌலவியிடம் கேட்டோம்.

"யசீதை முஸ்லிம் உம்மாவின் தலைவராக நியமிக்காமல் போயிருந்தால் தலைவர் இல்லாத முஸ்லிம்களிடையே மிகப் பெரும் உள் நாட்டுப் போர் தோன்றி இருக்கும்.ரோமானிய கைசர்கள் முஸ்லிம் நாட்டின் மீது படை எடுத்து வந்திருப்பார்கள்.இஸ்லாமிய ஆட்சி அடியோடு அழிந்து போயிருக்கும்."
என்று கூறிய ஜிப்ரி மௌலவி தொடர்ந்தார்."ஆகையினால், பிற்காலத்தில் ஏற்பட்ட தீய விளைவுகளைவிட நான் நேரத்தோட சொன்ன விளைவுகள் அபாயகரமானவை.எனவே இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது யசீத் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப் பட்டதால் நிகழ்ந்த தீய விளைவுகள் சாதாரணமானவையே என எமக்கு சொல்லித் தந்துள்ளார்கள்"

இஸ்லாமிய கல்வி கற்கும் மாணவர்களை சுயமாக ஆய்வுகள் செய்வதை தடுக்கின்ற , மதரசாக்களில் கற்றுக் கொடுக்கப் படுகின்ற இத்தகைய நியாயப் படுத்தல்கள் யசீதின் நியமனத்தை விட மிகப் பயங்கரமானவை.                             

மௌலவி ஜிப்ரி எம்மிடம் இப்படிக் கேட்டது நல்லது தான்.

இதே மாதிரியான சுய  நியாயப் படுத்தல்களில் திருப்தி காணும் அனைவர் மனத்திலும் இந்த விடை ஒளிந்து இருக்கும்.

அவர்களிடம் கேட்கும் கேள்வியை நாம் மௌலவி ஜிப்ரியிடம் கேட்டோம்.

"தமக்குப் பின்னால் முஸ்லிம் உம்மாவின் நலனில் நிஜமாகவே அமீர் முஆவியா அக்கறைக் கொண்டிருந்தால் இந்த உன்னதமான யோசனையை செயல் படுத்துவதற்காக அப்போதிருந்த மூத்த சஹாபாக்களையும், சான்றோர்களையும், பெரும் பெரும் தாபியீன்களையும் ஒன்று திரட்டி அவர்களை ஓரிடத்தில் குழுமச்செய்த்து அவருக்குப் பிறகு ஆட்சியில் அமர்த்த தகுதியான ஒருவரை அவர்களுக்கு தெரிவு செய்து தருமாரி கூறி ,அவரை நான் என்னுடைய வாழ்  நாளிலேயே எனக்குப் பின்னால் இந்த முஸ்லிம் உம்மாவின் தலைவராக நியமனம் செய்கிறேன் என்றல்லவா அவர் செய்திருக்க வேண்டும்?"  

மௌலவி ஜிப்ரி சிந்திக்கத் தொடங்கினார்.

 "அவர் இப்படி செய்திருந்தாலும் உள் நாட்டு குழப்பம் தோன்றியிருக்கும், ரோமானிய கைசர்கள் படையெடுத்து இருப்பார்கள், இஸ்லாமிய அரசு வீழ்ந்து இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்ற நாம் தொடர்ந்து "அப்படி அமீர் முஆவியாவை செய்ய விடாமல் தடுத்தது எது?" என்று கேட்டோம்.

மௌலவி ஜிப்ரி மெளனமாக ஆழ்ந்த சிதனையில் இருந்தார்.

"பனு உமைய்யாக்களின் நச்சு அரசியல்தான் அவரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து அவரது மகனை பலவந்தமாக பதவியில் அமரச்செய்தது"

"உண்மைதான்" என்று சொன்ன மௌலவி ஜிப்ரி "அமெரிக்காவின் இப்போதைய சி.ஐ.ஏயை விட உமையாக்கள் அபாயமானவர்கள் போல தெரிகிறதே?" என்றார்.

"இவை யாவும் அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான அரசியல் காய் நகர்த்தல்கள்" என்ற நாம் தொடர்ந்தோம் "கர்பலா படு கொலை தளத்தில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவரினதும்  படு கொலையுடன் தான் 'பதர்' யுத்தத்துக்கான பனு உமைய்யாக்களின் பழிவாங்கல் முடிவடைந்தது"என்றோம் 

எங்களுடைய உரையாடலைக் கவனித்து கேட்டுக் கொண்டு முற்றத்தை பெருக்கிக் கொண்டு எங்களது மாமி சொன்னார்"பார்க்கப் போன இஸ்ராயில்காரன் நல்லம் போல"

உண்மைதான்.

பனு உமைய்யாக்களின் நச்சு அரசியலின் கொடூரத்தை விஞ்சக் கூடிய ஒரு அரசியல் மறுமை நாள் வரை உலகில் தோற்றம் பெறப் போவது இல்லை.

உமையாக்களுக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 


1 comment:

Hafis said...

நபி (ஸல்) அவர்களுக்குப் பின், இமாம் அலீ (அலை) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தியிருந்தால், இஸ்லாம் இன்று உலகம் முழுவதையும் ஆளும் உண்மையான நல்லறமிக்க வல்லரசாக மிளிர்ந்து கொண்டிருக்கும். எனவே, இன்று இஸ்லாமிய உலகில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளினதும் ஆணி வேராக அபூபக்கரும் உமருமே எனது கருத்தில் தெரிகின்றனர். இவர்கள் துவக்கி வைத்த வழிகேட்டையும் அராஜகங்களையும் உறுதியுடன் பாதுகாத்துச் சென்றவரே இந்த முஆவியா.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad