அஹ்லுல்பைத் Headline Animator

Friday, April 29, 2011

தலையுதிர் காலம் .......................?


  தலையுதிர் காலம் .......................?

  இஸ்லாமிய வரலாற்றில் சத்தியத்திற்கும்      அசத்தியத்துக்குமான போர், சிப்பீன் என்கிற பெயரில்  வெடித்த கதை நாம் அறிவோம்.

ஆனால், அதனுடன் துயர்ந்த எதிரிகளின் தலைகளைக் கொய்யும் கலாச்சாரம் பற்றிய செய்திகள் எமக்கு புதிது.

ஏனெனில், உத்தம சஹாபாக்களின் நல்ல பெயரில், இத்தகைய கொடூரங்களை செய்த அநீதமான சஹாபாக்கள் மறைந்துக் கொண்டதன் விளைவாக , இந்த செய்திகள் திட்டமிடப் பட்ட முறையில் எமக்கு மறைக்கப் பட்டன. 

அக்காலை, சஹாபாக்களில் முக்கியமான பெருந்தகைகளில் அநேகர், இரண்டு தலைமையில் இரண்டு துருவங்களாக பிளவுபட்டு பிரிந்து நின்றார்கள்.

அப்பிரிவில் இஸ்லாத்தின் எழுச்சியை மட்டும் கருத்தில் கொண்ட கூட்டமும் இருந்தது.

அதே போல, சிலர் தமது தனிப் பட்ட சுய இலாபங்களைக் கருத்தில் கொண்டும், சத்தியத்துக்கு துணை போகாமல் பிரிந்து முரண் பட்டு நின்றார்கள். 

ஒரு புறம் இமாம் அலி இருந்தார்.

அவரது ஆதரவாளர்கள் 'ஷியாவே  ' அலி என அழைக்கப் பட்டார்கள்.
மறு புறம் அமீர் முஆவியா இருந்தார்.

அவரது ஆதரவாளர்கள்  'ஷியாவே  ' முஆவியா என அழைக்கப் பட்டார்கள்.

'ஷியா' என்றாலே ஆதரவாளர்கள் என்று பொருள் படும்.


இவர்களில், அம்மார் பின் யாசர் சுமார் எண்பத்து மூன்று வயது முதியவர் இமாம் அலியுடைய பக்கத்தில் 'ஷியாவே' அலியாக இருந்தார்.


அம்மார் பின் யாசருடைய தாயார் சுமையா பின்த் கையத்.

தந்தை யாசிர் இப்னு அமீர்.

 புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைக்காக முதன் முதலாக அபூஜகளினால் கொடூரமான முறையில் சித்திர வதைக்கு ஆளாக்கப் பட்டு  உடம்பு இரு கூறாக கிழிக்கப் பட்டு இவர்கள் இருவரும் படு கொலை செய்யப் படுகிறார்கள்.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் இஸ்லாத்தினது முதலாவது ஷஹீதுகள் என்கிற உயரிய அந்தஸ்த்தைப் பெறுகிறார்கள்.

இம்முறை அம்மார் பின் யாசர்.

இவரும், உமைய்யாக்களின் தலைவர் முஆவியாவின் 'ஷியாவே' முஆவியாவின் படையினரினால் கொலை செய்யப் படுகிறார்.

அதன் பின்னர், அநியாயக்கார  அக்கூட்டத்தினர், அம்மார் பின் யாசருடைய தலையை துண்டிக்கின்றனர்.

இதன் காரணமாக , இஸ்லாமிய வரலாற்றில் முதலாவது துண்டிக்கப் பட்ட தலைக்கு சொந்தக்காரர் என்கிற பெருமை இவரைச் சேர்கிறது..

அதன் பின்னர், அவரது துண்டிக்கப் பட்ட தலை அந்த அநியாயக்காரக் கூட்டத்தினரால் ஊர்வலமாக ஊர்கோலம் கொண்டு செல்லப் படுகிறது.
(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத். ஹதீத் எண்கள்- 6538 , 6929                              
தாருல் மஆரிப் எகிப்து 1956
தபக்காத்து இப்னு சஆத் பாகம் மூன்று பக்கம் 253 )

வெட்டப் பட்ட தலையை சுமந்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்சிப் பொருளாக காண்பிப்பதில் இனிமை கண்ட அந்த அநியாயக்காரக் கூட்டத்தினர், அதன் பின்னர்,இவ்வாறு செய்வதை ஒரு கலாச்சாரமாகவே ஆக்கிக் கொண்டனர்.

அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப் படுவோரை இறந்த பின்பும் மன்னிப்பது இல்லை. அவரது உடலை சின்னாப் பின்னப் படுத்தாமல் விடுவது மில்லை என்கிற மிருகத்தனமான செயல் பாடுகள் அதன் பின்னர்தான் தொடர்ந்தன.

கொஞ்ச நாள்கள் செல்ல, அதே பாணியில்  துண்டிக்கப் பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்ட தலைக்கு சொந்தக்காரர்  அமர் பின் அல் ஹமிக் என்பவராகும். 

இவர் நபி (ஸல்) அவர்களின் சஹாபாக்களில் ஒருவர்.

ஹசரத் உதுமான் (ரலி) அவர்களின் மரணத்தில் இவருக்கும் தொடர்பு இருந்ததாக இவர் அமீர் முஆவியாவினால் சந்தேகிக்கப் பட்டார்.

இராக்கின் கவர்னராக முஆவியா ஸியாதை நியமித்த போது, அவர் இவரைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஸியாதின் படையினர் இவரைக் கைது செய்ய முடுக்கி விடப் பட்டனர்.

அப்படையினரின்  ஒரு குழுவினர் இவரைத் தேடித் பிடித்தனர்.

ஸியாதின் படையினரைக் கண்டவுடன் இவர்  ஓடி ஒரு குகையில் நுழைந்துக் கொண்டார்.

குகையில் இருந்த ஒரு பாம்பு இவரைத் தீண்டியது.

அதன் காரணமாக இவர் அந்தக் குகையிலேயே உயிரை விட்டார்.

இவரைத் துரத்தி வந்த ஸியாதின் படையினர் இறந்த உடலில் இருந்து இவரது தலையைத் துண்டித்து வேறாக எடுத்தனர். பின்னர், அதனை ஸியாத்திடம்  கொண்டு சென்றனர்.

ஸியாத் அந்தத் தலையை அமீர் முஆவியாவிடம் டமாஸ்கஸ்க்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அத்தலை ஊரெல்லாம் சுற்றிக் காண்பிக்கப் பட்டுவிட்டு, இறுதியில் அவரது மனைவியின் மடியில் வீசி எறியப் பட்டது.
(ஆதாரம்- தபகாத்து இப்னு சஆத் பாகம்; ஆறு -- பக்கம் ; 25  )     
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 48  )     
தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்; 8  பக்கம் ; 24  )     

எகிப்தில் இமாம் அலியுடைய  கவர்னராக முதலாம் கலீபா ஹசரத் அபூ பக்கருடைய மகனும், அன்னை ஆயிஷா (ரலி௦)அவர்களின் சகோதரருமான  முஹம்மத் பின் அபூபக்கர் இருந்தார்.

அமீர் முஆவியாவின் படையினர் அமர் இப்னு ஆஸ் தலைமையில் எகிப்தை வெற்றிக் கொண்டது.

ஷியாவே அலி, முஹம்மத் பின் அபூபக்கர் ஷியவே முஆவியாவான அந்த அநியாயக் காரக் கூட்டத்தினரால் கைது செய்யப் பட்டார்.

அதன் பின்னர் அவர்களால் கொலை செய்யப் பட்டார்.

பின்னர் அவருடைய உடல் ஒரு செத்த கழுதையின் தோலில் சுற்றி எரிக்கப் பட்டது.
(ஆதாரம்- அல் இஸ்திஆப் பாகம்; 1 -- பக்கம் ; 235  )     
அத தபரீ பாகம்; 4  பக்கம் ; 79  )     
இப்னு அசீர் பாகம்; 3  பக்கம் ; 180  )     
இப்னு கல்தூண்  தக்மிலா பாகம்; 2   பக்கம்;  182 )   


இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் தலையும் இதைப் போலவே  கர்பலா கொலைக் களத்தில் துண்டிக்கப் பட்டு கர்பலாவில் இருந்து கூபாவிட்கும், கூபாவில் இருந்து டமாஸ்கஸ்குமாக நகரங்கள்  சுற்றி உலா வரப்பட்டது.

அவருடைய இறந்த உடல் மீது குதிரைகள் ஓட்டப் பட்டு அந்த உண்டல் சின்னா பின்னாமாக சிதைக்கப் பட்டது.
(ஆதாரம்-    
அத் தபரீ பாகம்; 4  பக்கம் ; 349 , 350 , 356)     
இப்னு அசீர் பாகம்; 3  பக்கம் ; 296 , 298 )     
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 189 , 192 )  

உமைய்யாக்களின் ஒரு ஆதரவாளரின் பெயர் நூமான் பின் பஷீர் (ரலி).

இவரும் முக்கியமான சஹாபாக்களில் ஒருவர்.

இமாம் ஹுசைனின் கர்பலா படு கொலை சம்பவத்தின் பின்னர் இவர் தனது தவறான போக்கை உணர்ந்து அஹ்லுல் பைத்களின் ஆதரவாளராக மாறினார்.

மர்வானுடைய காலத்தில், இவர் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் துணை நின்றார்.

உமையாக்களுக்கும் , அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் இவர் கொலை செய்யப் பட்டார்.

அவரது தலையும் கொடூரமாக துண்டிக்கப் பட்டது.

அதன் பின்னர் அந்தத் தலை அவரது மனைவியின் மடியில் தூக்கி எறியப்பட்டது.
(ஆதாரம்- தபகாத்து இப்னு சஆத் பாகம்; ஆறு -- பக்கம் ; 53  )     
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 245  )    

கொலை செய்யப் பட்டதன் பின்னர் தலை துண்டிக்கப் பட்டு எகிப்து, கூபா ஆகிய நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு திரியப் பட்ட இன்னுமொரு தலைக்கு சொந்தக்காரர் ஹசரத் முஸாப்  பின் ஸுபைர் (ரலி) ஆகும்.

நகரங்கள் தோறும் சுற்றிவரப் பட்ட அவரது தலை இறுதியாக  டமஸ்கஸ் நகரில் பொதுவிடத்தில் தொங்க விடப்பட்டது.அதன் பின்னர் அந்தத் தலை மீண்டும் சிரியா நாட்டின் நகரங்களில் சுற்றிவர ஏற்பாடு செய்யப் பட்டது.

உமைய்யா ஆட்சியாளர்களின் அநாகரிகமான இத்தகைய செய்கையை அமீர் முஆவியாவின் மகன் யசீதின் மளார் ஆதிக்கா கடுமையாக ஆட்சேபித்தார்."இதுவரை நீங்கள் செய்ததே உங்கள் மனத்துக்கு திருப்தி அளிக்க வில்லையா? இன்னும் அதை ஏன் கண்காட்சிப் பொருளாக ஆக்குகிறீர்கள்?"

அவரின் கடுமையான  எதிர்ப்பின் காரணமாக  அவர்களின் திட்டம் கைவிடப் பட்டது.

அதன் பின்னர், அந்தத் தலை கீழே இறக்கப் பட்டு, குளிப்பாட்டப் பட்டு நல் அடக்கம் செய்யப் பட்டது.
(ஆதாரம்-இப்னு அசீர் பாகம்; 4  பக்கம் ; 14  )   
இப்னு கல்தூண்  பாகம்; 3   பக்கம்;  35 )   

 ஷியாவே முஆவியாவின் அநியாயக்காரக் கூட்டத்தினரால், ஹசரத் அப்துல்லா பின் ஸுபைர் (ரலி) அவர்களின் தோழர்கள் அப்துல்லாஹ் பின் சப்வான், உமாரா பின் ஹஷம் ஆகியவர்களுடன் இதனை விடவும் கொடூரமாக நடந்துக் கொள்ளப் பட்டது.

அவர்களுடைய தலைகள் துண்டிக்கப் பட்டு மக்காவில் இருந்து மதீனாவுக்கும்,  மதீனாவில் இருந்து டமஸ்கஸ் கொண்டு செல்லப் பட்டன.

அந்தத் தலைகள் போகின்ற வழிகள்  தோறும் முக்கியமான நகரங்களில் , அந் நகரங்களின் முக்கிய இடங்களில் காட்சிப் பொருளாக மக்கள் பார்வைக்கு தொங்க விடப் பட்டன.

அவர்களின் முண்டமான உடல்களோ மக்காவில் அழுகிப் போய் துர் நாற்றம் எடுக்கும் வரைக்கும் தூக்கு மேடையிலேயே தொங்கிக் கொண்டு இருந்தன.
ஆதாரம்- அல் இஸ்திஆப் பாகம்; 1 -- பக்கம் ;  353 , 354  )  
அத தபரீ பாகம்; 5  பக்கம் ; 33 , 34  )     
இப்னு கல்தூண்  பாகம்; 3   பக்கம்;  39182 )
அல் பிதாயா பாகம்; 8  பக்கம் ; 332 )  

இறந்து போன உடல்களுடன் இவ்வாறு நடந்துக் கொண்டவர்களின் தராதரம் எவ்வளவு கேவலமானது எனபது இப்பொழுது புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.

சஹாபாக்களில் கடைக் கோடியில் இருக்கின்ற இவர்களும், உன்னதமான இஸ்லாத்தை நிலை நாட்டுவதற்கு தமது உடல், பொருள் ,ஆவிகளை துச்சமாக மதித்து செயல் பட்ட உத்தம சஹாபாக்களும் எக்காரணம் கொண்டும் ஒரே தராதரத்தில் இருக்கப் போவது இல்லை.

உயரிய உத்தம சஹாபாக்களை விடவும் அஹ்லுல் பைத்தினரின் தராதரம் உயர்வானது.

ஏனெனில், அஹ்லுல் பைத்களின் மீது சலவாத் சொல்லி தொழப் படாத தொழுகை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை.

யதார்த்தம் இப்படி இருக்க, இன்று நம்மில் சில உலமாக்கள் தமது அறியாமையின் காரணமாக இந்த அநியாயக் காரக் கூட்டத்தினரையும் அஹ்ளுல்பைத்களையும் ஒரே தரத்துக்கு கொண்டுவருவதட்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர்.

ஷியாவே முஆவியாவான இந்த அநியாயக்காரக் கூட்டத்தினரும்,  அஹ்லுல் பைத்களின் இமாம்களும் எவ்வகையான ஒப்பீட்டிலும் ஒரே தராதரத்துக்கு கொண்டு வர முடியாது என்பதை  நாம் முன் வைத்த இந்த தகவுகளில் இருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.

இந்த உண்மைகள் எமது உலமாக்களுக்கு திட்டமிட்ட  முறையில் மறைக்கப் பட்டன.

அதன் காரணமாக அவர்கள் சஹாபாக்கள் அனைவரும் ஒரே தராதரத்தில்  உள்ளவர்கள் என்று நம்பவைக்கப் பட்டு ஏமாற்றப் பட்டு இருக்கிறார்கள்.

இன்று , இந்த தவறான நம்பிக்கைகள் உரு மாறி மெல்ல திரிபு பட்டு புது வடிவம் எடுத்துள்ளது.

அந்த வகையில், அப்பாவிகளான அந்த உலமாக்களை சிலர் தமது பிரச்சார உத்திகளுக்கு பலிக் கடாக்களாக உபயோகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமக்கு எதிராக நடை பெறுகின்ற இந்த துரோகத்தை சரியாக அறியாத அந்த உலமாக்கள் , அஹ்லுல் பைத்களும், அனைத்து சஹாபாக்களும் ஒரே  தராதரத்தில் உள்ளவர்கள் என்று எங்களிடையே பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர்.

இது, அவர்கள் தம்மை அறியாமல் செய்கின்ற ஒரு தப்பு.

அத்தகைய உலமாக்களின் உயரிய ஆய்வுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

2 comments:

Dr.Anburaj said...

Araba needs the pious message of Gautama Buddha,Jesus ,Ramayanaam and above all Sri Ramakrishna and Swami Vivekananda.Let Indian Muslims dissociate themselves from Arab History.

அஹ்லுல்பைத் said...

எங்களது இணைய நண்பர் டாக்டர் அன்புராஜின் பின்னூட்டத்திற்கு நன்றி.

எங்களது கருத்தின்படி அல்லது நம்பிக்கையின் படி இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இமாமின் பிரதிநிதிகளின் வழிக்காட்டலில் அவரின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் உள்ள மக்களை உருவாக்குவதில் அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது முழு உலகத்துக்கும் தேவை இமாம் மஹ்தி (அலை) -உங்களது பாஷையில் சொன்னால் கல்கி அவதாரம்- அவர்களின் தலைமை என்பதில் நாம் உறுதியுடன் இருக்கிறோம்.

உமையாக்களின் தலைமைத்துவத்தில் நியாயம் காணும் எங்களது முஸ்லிம்களுக்கு இந்த விடயம் புரியாது.

உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம்.

நன்றியுடன் வணக்கம்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad