அஹ்லுல்பைத் Headline Animator

Friday, June 17, 2011

நபி (ஸல்) அவர்கள் இனங்காட்டிய "இரண்டு தலை வாசல்கள்" .....ஒன்று 'ஞானத்தின்' வாசல்! மற்றயது 'குழப்பத்தின்' வாசல்.!!

நபி (ஸல்) அவர்கள் இனங்காட்டிய "இரண்டு தலை வாசல்கள்"

ஒன்று   அல்லாஹ்வை அறிந்துக் கொள்ள உதவும் 'ஞானத்தின்' வாசல்!

மற்றயது மனிதனை வழிக் கேட்டில் கொண்டு செல்லும் 'குழப்பத்தின்' வாசல்.!!

".......... வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை;ஆனால், இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணிய முடையோராவார்;எனவே, வீடுகளுக்குள் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை , அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்"
(அல் குரான்: 02 : 189 )


இறைவனை அறிந்துக் கொள்கின்ற ஞானத்தைப் பெற்றுக்கொள்ளும் வழி முறைப் பற்றிய அல் குரானின் அற்புதமான திரு வசனம் இது.

அல் குரானில் பல இடங்களில் "வீடு" பற்றிய அல்லாஹ்வின் குறிப்பு காணப் படுகிறது.

"அவர்கள், "அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப் படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும் ,அவனுடைய பரகத்தும் இவ் வீட்டில் உள்ள உங்கள் மீது உண்டாவதாக!நிச்சயமாக அவன் புகழ் உடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்." என்று பதில் அளித்தார்கள்.
(அல் குரான்: 11 : 73 ) 

வானவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட ,மேற்குறிப்பிட்ட அல் குரான் ஆயத்தில் குறிப்பிடப்பட்ட  இந்த வீடு நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வீடாகும்.

நபிமார்கள் அனைவரும்  நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியில் தோற்றம் பெற்றவர்கள் என்பதில் எதுவித கருத்து முரண் பாடும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியில் தோற்றம் பெற்ற இறுதி தூதராவார்.


"...........நபியின் வீட்டையுடையவர்களே!உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்"
(அல் குரான்: 33 : 33 )

அல் குரான் குறிப்பிடும் இன்னொரு வீடு இதுவாகும்.

 இது நபி (ஸல்) அவர்களது வீட்டாரைப் பற்றிய அல் குரானின் திரு வசனம்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தில் நபிமார்கள் தோற்றம் பெற்றார்கள்.

அந்த நபி மார்களை யூதர்கள் கொலை செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்களது  குடும்பத்தில் 'இமாம்கள்' தோற்றம் பெற்றார்கள்.

துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் என்கிற பெயரில் ஒளிந்திருந்த நயவஞ்சகர்கள் அந்த இமாம்களைக் கொலை செய்தார்கள்.

இது நபிமார்களினதும், இமாம்களினதும் கசப்பான வரலாற்று நிஜங்களாகும்.

அல் குரான் குறிப்பிட்ட இந்த இரண்டு வீட்டாரும் அல்லாஹ்வை மனித சமூகத்துக்கு இனம் காட்ட அல்லாஹ்வினால் தேர்ந்து எடுக்கப் பட்ட குடும்பங்களாகும்.


நாம் முன் நோக்கித் தொழும் கஹ்பதுல்லாஹ்வைக் கவனித்தீர்களா?



அது அல்லாஹ்வின் வீடு.

அந்த வீட்டை சுற்றித்தான் எங்களது அனைத்து வணக்க வழிபாடுகளும் நடை பெறுகின்றன.

அந்த வீட்டுக்கும் ஒரே ஒரு வாசல்.

அஹ்லுல் பைத்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் குடும்பமும் ஒன்றுதான்.

எங்களது வணக்க வழிபாடுகள் கஹ்பதுல்லாஹ்வை முன்னோக்கி நடை பெறுவதைப் போலவே, எங்களது வாழ்வியலின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் அஹ்ளுல்பைத்களின் வழிக்காட்டல் பிரகாரம் ,அவர்களை முன்னோக்கிய நிலையில் நடை பெற வேண்டி இருக்கிறது.

அந்த வாழ்வியல் சட்டங்களைப் பற்றி சரியாக அறிந்துக்  கொள்ள வேண்டும் என்றால் இமாம்கள் என்ற ஒரே ஒரு வாசல் வழியாகத்தான் அந்த அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்தக் குடும்பத்தின் மகான்மியத்தை அறிந்துக் கொண்டதன் காரணமாகத்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூட, நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர் நபிகள் (ஸல்) அவர்களின் குடும்பத்தினருடன் தன்னையும் தனது குடும்பத்தினரையும் நினைவு படுத்த வேண்டும் என்று ஆசைப் பட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு அவருக்கு கண்ணியம் கொடுத்தான்.


அதன் காரணமாகத்தான் , ஐவேளைத்  தொழுகையில் நாம் நபி இப்ராஹீம் (அலை) அவர்களை தவறாமல் நினைவு படுத்துகிறோம்.

ஆனாலும், அஹ்லுல் பைத்களான நபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களது அந்தஸ்த்துடன் நபி இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தினரான நபிமார்கள் சரி நிகராக கருதப் படுகிறார்களா என்றால் ஆச்சரியமாக அதுதான் இல்லை.

அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?



எங்களது தொழுகையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மீதும் அவர்களது குடும்பத்தவர்கள் மீதும் சலவாத் சொல்வது 'ஸுன்னத்தான' கடமையாக இருக்கிறது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தவர்கள் மீதும் சலவாத் சொல்லாமல் விட்டாலும் ஒரு பிரச்சினையும் இல்லை.

முறையாக அந்தத் தொழுகை நிறைவேற்றப் பட்டு இருப்பின் ,அந்தத் தொழுகை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப் படும் நிலையில் இருக்கிறது.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர்களான  அவர்களது அஹ்ளுல்பைத்கள் மீதும் சலவாத் சொல்லப் படாது போனால் அந்தத் தொழுகை அல்லாஹ்வினால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.

எவ்வளவு பேணுதலாக அந்தத் தொழுகை தொழப் பட்டிருந்தாலும் சரிதான்.

இரண்டு குடும்பத்தினரினதும் அந்தஸ்த்தின் வித்தியாசம் விளங்குகிறதல்லவா?


அதே போன்று , அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்களது குடும்பத்தவர்களான அஹ்ளுல்பைத்களின் மீதும் சலவாத் சொல்லி ஆரம்பிக்கப் பட்டு கேட்கப் படுகின்ற பிரார்த்தனை முடிவுறும் பொழுது, அதே முறையில் சலவாத் சொல்லி அல்லாஹ்வைப் புகழ்ந்து முடிக்கப் படாத நிலையில் அந்தப் பிரார்த்தனையும் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை.

அல்லாஹ் அஹ்ளுல்பைத்களுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் புரிகின்றதா?

அஹ்ளுல்பைத்களுக்கு மாத்திரம் அதென்ன இவ்வளவு முக்கியத்துவம்?

நபிமார்கள் மனித சமூகத்துக்கு அனுப்பப் படாத யுக முடிவு நெருங்கிய காலத்தில், அல்லாஹ்வை சரியான முறையில் மனிதனுக்கு அறிந்துக் கொள்ள அஹ்ளுல்பைத்களான இமாம்கள் துணை நிற்கிறார்கள்.

எவ்வளவு மகத்துவமான பொறுப்பு.

மனிதனது அறிவினால் மனிதனுக்கு அல்லாஹ்வை அறிந்துக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வை அறிந்துக் கொள்ள ஞானம் தேவை.

ஆகவே,  மனித சமூகத்துக்கு இறை ஞானத்தைப் பற்றிய அறிவை சொல்லிக் கொடுப்பதற்கு நபிமார்களும், ரசூல் மார்களும், இறுதியாக இமாம்களும்  அல்லாஹ்வினால் தேர்ந்து எடுக்கப் பட்டு இந்த உலகுக்கு அனுப்பப் பட்டார்கள்.

".......... வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை;ஆனால், இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணிய முடையோராவார்;எனவே, வீடுகளுக்குள் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை , அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்"
(அல் குரான்: 02 : 189 )

அல் குரானில் குறிப்பிடப்பட்ட நபிமார்களினதும், இமாம்களினதும்  வீடுகளுக்குள் வரும் ஒழுக்கத்தை அல்லது முறையை மக்களுக்கு விளக்குகின்ற புனித திரு வசனம் இது.

இந்த புனித அல் குரான் வசனம் சொல்லும் கருத்து முக்கியமானது.

எங்களது காலத்தில், எம்மைப் படைத்த இறைவனைப் பற்றிய ஞானத்தை கற்றுக் கொள்ள விரும்பும் ஒருவர் , அந்த ஞானத்தை சொல்லித் தருகின்ற நபிமார்களையும், ரசூல்மார்களையும் சரியாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் இமாம்களின் மூலமாகத்தான் அல்லது இமாம்கள் என்கிற ஞான வாசல்கள் மூலமாகத்தான் அந்த இரகசியங்களை அறிய முடியுமே தவிர வேறு குறுக்கு வழிகளில் அந்த அறிவைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று இந்த அல் குரான் வசனம் தெளிவு படுத்துகிறது.

அஹ்ளுல்பைத்களின் இமாம்களைப் புறக்கணித்த நிலையில் எம்மால் அல்லாஹ்வை அறிந்துக் கொள்ள முடியாது.

இன்று நாம், எங்களுடைய இமாம்கள் யார் என்று அறியாமல் குழம்பிப் போய் உள்ளோம்.

ஒரு புறம், மத்ஹபுகளின் இமாம்கள்தான் அவர்கள் என்று எண்ணி தடம் பிறழ்ந்து நிற்கிறோம்.

அதேசமயம்,  மத்ஹபுகளின் இமாம்களின் ஞான ஆசிரியரும், மத்ஹபுகளின் தோற்றத்துக்கு மூல காரணமாக இருந்தவரும், முதலாவது மத்ஹபான ஜாக்பரி மத்ஹபின் தோற்றுவிப்பாளருமான இமாம் ஜஹ்பர் சாதிக் (அலை) அவர்களை முற்றிலும் நிராகரித்து அருக்கு எதிராக போர்க் கோடி தூக்கி இருக்கிறோம்.

என்றாலும், அவரது சிஷ்யர்களை எங்களது இமாம்களாக ஏற்றுக் கொள்ள  நிர்ப்பந்திக்கப் பட்டு இருக்கிறோம்.

மறு புறம், இன்றைய நவீன அறிஞர்களை எங்களது இமாம்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கட்டுப் பட்டு நடந்து எம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.

அவர்களோ, உண்மையைத் தெரிந்தும், தமது பட்டம் பதவிக்காக அவற்றை மறைத்து நடக்கிறார்கள்.


கிராமங்களில் பள்ளி வாசல் பேஷ் இமாம்கள் எங்களது பாமர பெற்றோருக்கு இமாம்களாக இருந்து மார்க்கத்தை கேளிக்கைப் பொருளாக மாற்றி இருப்பது நீங்கள் அறியாதது அல்ல.

மொத்தத்தில் , அல்லாஹ்வினால் அல் குரானில் பரிசுத்தவான்கள் என்று நன்மாராயம் கூறப்பட்ட இமாம்கள் யார் என்பதில் நாம் குழம்பிப் போய் உள்ளோம்.

இனி அத்தகைய குழப்பங்களுக்கு அவசியம் இல்லை.

அந்த இமாம்கள் வெகு தூரத்துக்கு எம்மை விட்டு விட்டு ஓடிவிட வில்லை.

அவர்கள் வேறு யாரும் இல்லை.


அவர்கள், - நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களில் அதாவது அஹ்லுல் பைத்களில்  தோற்றம் பெற்ற பன்னிரண்டு இமாம்களாக, அல் குரானுக்கு சரியான விளக்கமாக இருந்துக் கொண்டு  இருக்கிறார்கள்.

ஆகவே, நாம் அல்லாஹ்வைப் பற்றிய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளும் அறிவை எங்களது காலத்தின் இமாம் , இமாம் மஹ்தி (அலை) அவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 

இன்ஷா அல்லாஹ்- இறுதி இமாம் - இமாம் மஹ்தி (அலை) அவர்களில் இருந்து தொடங்குகின்ற அந்த ஞானப் பயணம் முதலாவது இமாம் அலி (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களில்  போய் முடிவடையும்.

"நான் ஞானத்தின் பட்டினம் என்றால் அதன் நுழை வாயல் இமாம் அலியாக இருக்கிறார்." என்கிற நபி மொழி எங்களது இந்தக் கூற்றுக்கு வலுவான ஆதாரமாக இருக்கிறது.

அல்லாஹ்வை அறிந்துக் கொள்ளும் ஞானத்தின் பட்டினமான நபி (ஸல்) அவர்களை அறிந்துக் கொள்ள அதன் நுழை வாயில் இமாம் அலியைக் கடந்துதான் தான் நாம் செல்ல வேண்டி இருக்கிறது.

இது நாம் ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டிய சத்தியமாகும்.

இம்முறையில்,  அஹ்லுல்பைத் இமாம்களின் துணையுடன் எம்மால் நபி (ஸல்) அவர்களை அறிந்துக் கொள்ள முடியும்.


நபி (ஸல்) அவர்களை அறிந்துக்  கொண்டவன் அல்லாஹ்வை அறிந்துக் கொள்வான்.

அல்லாஹ்வை அறிந்துக் கொள்ளும் அறிவில்தான் எங்களது இம்மை மறுமையின் வெற்றி  தங்கி இருக்கிறது.

இனி,  நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட குழப்பத்தின் வாசல் எது என்று நாம் ஆராய்ந்தால் அதிர்ச்சியான பல உண்மைகள் எம்மை திடுக்கிட வைக்கின்றன.

அவற்றை அறிந்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள்.

குழப்பங்களின் தலை வாசலைப் பற்றி சரியாக அறிந்துக் கொள்ள விரும்பும் எங்களது நண்பர்கள் தயவு செய்து எமது இந்தப் பதிவில் உள்ள "குழப்பங்களின் தலைவாசல் உமர்" என்கிற பதிவைப் பார்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.


மீண்டும் தயவாய் ஒரு வேண்டுகோள் 
குழப்பங்களின் கதவைப் பற்றிய எங்களது பதிவை பார்க்காமல் இணையத்தை மட்டும் மூடி விடாதீர்கள்.  
நன்றி!

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad