அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, February 1, 2012

அஹ்லுல்பைத் அபிமானிகளின் ஆய்வுக்கு ஒரு பதிவு....?சில தினங்களுக்கு முன்னர் கடுமையாக மழை பொழியும் நாள் ஒன்றில் என்னுடைய பெரிய தந்தை ஒருவரை வைத்தியசாலையில் சந்தித்தேன்.

வைத்திய சாலையில் சிகிச்சைக்காக நிறுத்தியிருந்த என்னுடைய சிறிய தந்தையை என்னைப் போலவே அவரும் நலம் விசாரிக்க வந்திருந்தார்.

என்னுடைய பெரிய தந்தை கொஞ்சம் வித்தியாசமானவர்.

வித்தியாசமான கருத்துக்களை சொல்பவர்.

அதனாலோ என்னவோ சில உலமாக்களுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது.

அந்த சில உலமாக்களின் அல் குர்ஆன் உச்சரிப்புக்களில் உள்ள குறைகளை எனது பெரிய தந்தை சட்டென்று அடையாளம் சொல்லுவார்.

பெரிய தந்தையின் அல் குர் ஆன் ஓதலில் அழகான இராகம் இருக்கும்.

வாயை அசைத்து அசைத்து தொண்டையினாலும்,  உதட்டின் ஓரத்தினாலும்,  நடு நாவினாலும் இராகம் இசைத்து , இசைத்து அவர் ஓதும் அழகே அலாதியானது.

அஹ்ளுல்பைத்களைப் பற்றிய எனது தேடலுக்கு காரணமான சிலரில் எனது பெரிய தந்தையும் ஒருவர்.

அவர் அவ்லியாக்களில் அதிக நேசம் கொண்டவர்.

எங்காவது  ஓரிடத்தில் யாராவது அவ்லியாவின் அடக்கஸ்த்தளம் இருப்பதை அறிந்துக் கொண்டால் இவர் நிச்சயம் அந்த இடத்தை தரிசிப்பார். 

அதே நேரம் அவ்லியாக்களிடம்  உதவி நாடி அவர்களிடம் பிரார்த்திக்கும்  செய்கைக்கு கடும் விரோதமானவர்.

அத்தகைய செயல்பாடுகளை இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க்கான     செய்கை என்று பெரிய தந்தை சொல்லுவார்.

அதனால், அவ்லியாக்களில் நேசம் கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதில் ஒரு தவறும் இல்லை என்று வாதிடும் ஹுப்புல் அவ்லியா உலமாக்களுக்கும் அவரைப் பிடிக்காது.

ஆச்சரியமாக தவ்ஹீத் ஜமாத்தினர் சொல்லும் அதேவிதமான ஏகத்துவ  கருத்துக்களை கொஞ்சமும் வித்தியாசப் படாமல் எனது பெரிய தந்தையும் சொல்லுவார்.

அதனால் அவர் தவ்ஹீத் ஜமாத்தினரின் ஆதரவாளரா என்றால்...ஊஹும் .....அதுதான் இல்லை.

தவ்ஹீத் ஜமாத்தினர் அஹ்ளுல்பைத்களுக்கு உரிய கௌரவத்தைக் கொடுப்பது இல்லை என்ற கருத்தில் எனது பெரிய தந்தை இருந்ததால் அவர் தவ்ஹீத் ஜமாத்துக்கும் எதிரானவர்.

அதே போல தப்லீக் ஜமாத்தினரின் மறுமையை மட்டும் கருத்தில் கொண்டு இம்மையை அலட்சியப் படுத்தும் ஆன்மீகத்துக்கும் இவர் எதிரானவர்.

அவரிடம் ஒரு நாள் நான் கேட்டேன்."பெரியப்பா........நீங்கள் யார்?""விளங்கவில்லை..." இது பெரியப்பா.

"இல்லை.."நான் கேட்டேன்" நீங்கள் தவ்ஹீத் ஜமாத்தா அல்லது ஹுப்புல் அவ்லியாவா அல்லது தப்லீக் ஜமாத்தா?"

"இவர்களில் யாருமே இல்லை" என்று சிரித்தார்.

நான் விடவில்லை. "அப்படி என்றால் நீங்கள் ஷியாவா   அல்லது சுன்னியா?"

அவர் திருப்பிக் கேட்டார்."நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷியாவா சுன்னியா?"

நான் வாயடைத்துப் போனேன்.

என்னுடைய குடும்பத்தில் உள்ள உறவினர்களில் எனது மனத்தில் பெரிய தந்தைக்கு அலாதி இடம் உள்ளது.

எனக்கு மட்டுமல்ல, என்போன்ற அனைவரின் மனத்திலும் அவருக்கு அலாதி இடம் உள்ளது.

ஏனெனில், எங்களது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்  ஏதோ ஒரு விதத்தில் அவர் உதவியிருக்கிறார்.

அதனால் நாம் அனைவரும் அதன் காரணமாக அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

அன்று வைத்தியசாலையில் பெரிய தந்தையைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

சிறிய தந்தையைப் பார்க்க வைத்தியசாலைக்கு எல்லோரும் வந்திருந்தாலும், அனைவரும் பெரிய தந்தையுடன் கதைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் பெரிய தந்தையுடன் தனிமையில் கதைக்கும் வாய்ப்பு கிட்டியது.

குசலம் விசாரித்ததன் பின்னர் பெரிய தந்தை என்னிடம் "நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்கள் அன்னை கதீஜா (அலை) அவர்களை திருமணம் புரியும் பொழுது அன்னையாரின் வயது என்ன?" என்று கேட்டார்.

"நாற்பது வயது." என்றேன்.

"அன்னை கதீஜா (அலை) அவ்வளவு   வயது வரை  திருமணம் புரியாமலா இருந்தார்?" இது எனது பெரிய தந்தை.

"இல்லை..." நான் சொன்னேன் "அன்னை கதீஜா (அலை) அவர்கள் இரண்டு முறை திருமணம் செய்து விதவையானவர்." 

"அப்படியா....?" என்ற பெரிய தந்தை மௌனமானார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் கேட்டார்"நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா (அலை) அவர்களுக்கும் எத்தனை குழந்தைகள்?"

நான் பெருமிதத்துடன் "ஆறு.." என்றேன்.

"அவர்களின் பெயர்கள் என்ன?" இது பெரிய தந்தை.

"உம்மு குல்தூம் , ருக்கையா, ஸைனப்,அப்துல்லா, காசிம், பாத்திமா"

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

'மிகவும் சாதாரணமான , சிறிய பிள்ளைக்கு தெரிந்த விடயம் கூட எனது பெரிய தந்தைக்கு தெரியாதா?'

நான் பெரிய தந்தையிடம் கேட்டேன்..."ஏன் இப்படி கேட்கிறீர்கள்...உங்களுக்கு இது சம்பந்தமாக ஒன்றுமே தெரியாதா?"

"இல்லை..." பெரிய தந்தை சொன்னார்.."எனக்கு தெரிந்த விடயத்தை சொன்னால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.அதனை சொல்வோமா  ...வேண்டாமா என்றுதான் யோசிக்கிறேன்..?என்றார்.

எனக்கு அவர் சொல்லப் போகும் செய்தியைக் கேட்பதற்கு ஆர்வம் பீரிட்டு  கிளம்பியது.

அவர் அறிந்த விடயங்களை சொல்லுமாறு வற்புறுத்தத் தொடங்கினேன்.

அவர் சொல்லத் தொடங்கினார்.

"நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைத் திருமணம் புரியும் பொழுது அன்னை கதீஜா (அலை)அவர்களின் வயது இருபத்தியாறு அல்லது இருபத்தி ஏழு"

நான் ஆச்சரியமானேன்.

"நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களை அன்னை கதீஜா (அலை) திருமணம் புரியும் பொழுது கன்னியாகவே இருந்திருக்கிறார்."

பெரிய தந்தையின் பேச்சைக் கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது.

"உம்மு குல்தூம், ருக்கையா, ஸைனப் ஆகியதோர் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா (அலை) அவர்களுக்கும் கிடைத்த குழந்தைகள் இல்லை..."

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

உங்களுக்கு.......?


5 comments:

Dr.Anburaj said...

The " Gayathri Manthiram " is similar to One god philosophy of Islam. Hindustan Muslims may chant Gayathri manthiram.Iinvie your comments

அஹ்லுல்பைத் said...

அன்புள்ள இணைய நண்பர் டாக்டர் அன்புராஜின் பின்னூட்டத்திற்கு நன்றி.

அஹ்ளுல்பைத்களின் நல்ல பெயருக்கு களங்கம் கற்பித்து விட்டு சென்ற.......கற்பித்துக் கொண்டிருக்கிற இஸ்லாத்தின் எதிரிகளை இலக்கிட்ட எமது பயணத்தில் எந்த மதம் நல்ல மதம், எந்த தத்துவவியல் நல்லவியல், எந்த நாடு நல்ல நாடு என்ற ஆய்வுகளுக்கு நேரமில்லை என்பதை தயை கூர்ந்து கருத்திட் கொள்ளவும்.

இஸ்லாத்தில் தான் விரும்பியதை தெரிவு செய்து அதன்படி நடப்பதற்கு மனிதனுக்கு பூரண தெரிவு சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது.

நாம் அறிந்த நிஜம் அப்படி இருக்கையில் இந்திய முஸ்லிம்கள் காயத்ரி மந்திரங்களை ஓதுவதில் அல்லது பாடுவதில் எமக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.

ஏனெனில் அவர்களது தெரிவு சுதந்திரத்தில் தலையிடும் உரிமை நமக்கு இல்லை என்பதை நாம் அறிவோம்.

எங்களின் கருத்துடன் உடன்படுவீர்கள் என்று நம்புகிறோம்.

வணக்கம்.

Dr.Anburaj said...

Thank you for your reply. spirituality is the foundation on which the superstructure of human civilization is standing on.I have athism and cultural degration.Thozhugai is the greatest gift of Islam to the world. I was taken aback on seeing a Muslim with a scar-like structure on his fore head caused by prolonged kissing of ground in Tholugai.I in my imagination touched his feet in reverence.I do not know How are you going to liberate Islam from Munna,Kumus,Karimath- customs of Arab tribal customs.Islam must be liberated from Arab History. I do not like One man be it Indian or anyone, behaving like a Arabian after his conversion to Islam.In this present situation a Muslim who is bold enough to chant Kayathri Manthiram will be outcasted as Shirk.Anything Indian is shirk. My interest in Islam began when I read in a Muslim Magazine that " Muslim women should not apply pottu/Thilagam on their forehead because Muslims should not follow the customs of Kaffirs.The word kffir aroused my interest and I began reading Islam and Arab History.I now realised Kaffir is a highly derogatory word and it is a great insult to call Hindus as Kaffirs.Hinduism in its pure philosophy-enshrined in the message of Swami vivekanada respect all religion as Good.It is better you allot some pages to teach Muslims the goodness of other religions.Sri RK Math,Chennai has published a Book about Jesus.That is the best example.

Dr.Anburaj said...

Indian History for the past 800 years full of wars. Teaching of culture and religion was monopolised.Hence the bulk of its population do not get proper religious training. Hindus like Muslims should be trained to offer Jepam/ .worship god sitting in "Padmasanam ".Sri Adisankara of Kerala integrated thousands of religious sects that had existed in his time into nearly one/six.After him no work worthwhile was done enmass. So Bulk of the Hindu population is left without religious ,cultural training.The present sorry plight of India could be attributed to that also.

Dr.Anburaj said...

Who are Khaffirs ? Are Hindus/Christians Khaffirs ? Is muslim community without Khaffirs?
How to distinguish Good from evil ?

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad