அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, February 5, 2012

இஸ்லாமிய வரலாற்றை வேரறுத்த உமையாக்கள்..........?




நாம் எதிர்பார்த்த மாதிரியே நண்பர்களின்  தொடர் தொலைபேசி அழைப்புகள். 

பெரிய தந்தை சொல்வதில் பொதிந்திருக்கும் நிஜங்கள் யாவை?

ஒரு நண்பர் டாக்டர் அன்புராஜின் பதிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்.

காரணம் கேட்டோம்.

டாக்டர்  அன்புராஜ் என்பவர் அஹ்லுல்பைத் தளத்தின் போக்கை திசை திருப்ப இந்துப் பெயரில் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஒரு அனாமேதயப் பேர்வழி என்றும் அவரது பின்னூட்டங்கள் அனைத்தும் அந்தந்தப் பதிவுகளுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் ஒலிப்பதாகவும் கூறி அவற்றுக்கு அவமே நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.(இத்தகைய குற்றச்சாட்டுக்கு நியாயமான பதிலை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் டாக்டர் அன்புராஜ் இருக்கிறார் என்பதை அன்புராஜ் அன்புடன் புரிந்துக் கொள்வார் என்று நம்புகிறோம்.)

இனி,

எனது பெரிய தந்தை அன்னை கதீஜா (அலை) அவர்களைப் பற்றி சொன்ன செய்திகள் எனக்குப் புதிதாக இருந்தன.

அத்தகைய செய்திகளுக்கு ஏதாவது ஆதாரம் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டேன்.



"இருந்த கொஞ்ச  நஞ்ச ஆதாரங்களையும் தான் அழித்து இல்லாமல் செய்து விட்டார்களே..?'என்று வருத்தத்துடன் சொன்னார்.

"புரிய வில்லை " என்றேன்.

"எமக்கு கிடைத்திருக்கும் இஸ்லாமிய வரலாற்று சம்பவ துணுக்குகள் அனைத்தும் உண்மையும், இட்டுக் கட்டப் பட்ட தொகுப்புகளின் பொய்யும் இரண்டறக் கலந்த கலவைகள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.வாழையடி வாழையாக வரும் நாடோடிக் கதைகள் போல இந்தப் பொய்மைகளின் தொகுப்புகளும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.இதன் காரணமாக நிஜமான சம்பவங்களில் அநேகமானவை மறந்தும் மறைந்தும் போய்விட்டன."


நான் "உண்மைதான்." என்றேன்.

"உங்களுக்கு இன்னுமொரு விசயம் தெரியுமா" என்ற பெரிய தந்தை தொடர்ந்தார்."மிகவும் இரகசியமாக திட்டமிட்டு செயற்படுத்தப் பட்ட இந்த சதிகளின் சூத்திரதாரிகளாக   ஐவேளை தொழுகையை தலைமை தாங்கி நடாத்தும் பள்ளி வாசல் உலமாக்களும் , ஜும்மாஹ் குத்பாவை மிகவும் வசீகரமாக வழங்கும் உலமாக்களும், பாடசாலை ஆசிரியர்களும், சர்வகலாசாலை பேராசிரியர்களும், முஸ்லிம் அரசின் நீதிமன்றத்தின் நீதியரசர்களும், முஸ்லிம் மன்னர்களும், ,முஸ்லிம் அரச அதிகாரிகளும், ,முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும்,    கலீபாக்களும், முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் தனி நபர்களுமாக இருக்கிறார்கள்."என்றார்.

நான் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

"இவர்களின் பிரமாண்டமான அணித் திரள்களுடன் கவனிக்கும் பொழுது உண்மைகளை உண்மையாக சொல்ல நினைக்கும்வரலாற்று ஆசிரியர்களின் நிலை பரிதாபமானது.அதே போல மிகவும் அபாயமானது. தான் அறிந்த உண்மையை சொன்ன அடுத்த கணம் அந்த வரலாற்று ஆசிரியரின் குழந்தைகளுக்கு தகப்பன் இல்லாமல் போகலாம்.அல்லது அவரது மனைவி விதவையாகலாம், அல்லது அவர் தாறுமாறாக தாக்கப் படலாம்.அல்லது அவரது சொத்துக்கள் சுவீகரிக்கப் படலாம்."

மிகவும் ஆதங்கத்துடன் பெரிய தந்தை தொடர்ந்தார்.

"இந்த யதார்த்தத்தின் அக்கினிப் பரீட்சையில் செய்வதறியாத அந்த வரலாற்று ஆசிரியர் உண்மைகளை விழுங்கிக் கொண்டு போலிகளை எழுத வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறார்."

நான் மெளனமாக இருந்தேன்.

"இந்த யதார்த்தங்களின் வீரியங்களை புரிந்துக் கொண்ட சில வரலாற்று ஆசிரியர்கள் இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் அல்லது இவர்கள் இருவருமல்லாமல் இராமனுடன் கூட வந்த அனுமார் ஆண்டாலும் நமக்கென்ன? நமக்கு நாலுபணம் வந்தால் போதும் என்ற ரீதியில் நான் ஏற்கனவே சொன்ன கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்துக் கொள்கிறார்கள்." என்று சொல்லி வேதனையுடன் சிரித்தார்.

எனக்கு மௌலான சிப்ளி நூமானி எழுதிய சீரத்துன் நபி நினைவுக்கு வந்தது.

அதில் அவர் இப்படி எழுதி இருந்தார்.

"அமீர் முஆவியாவும், அவரைத் தொடர்ந்து உமையாக்களும் பாலில் இருந்து தயிர் கடைவதைப் போல ஹதீஸ் தொழிற்சாலைகளை     நிறுவினார்கள்.அந்த ஹதீஸ் தொழிற்சாலைகளில் புணையப்படும் ஹதீஸ்களை அரசிடம் மாணியம் பெரும் வரலாற்று ஆசிரியர்களிடம் ஒப்புவிக்கப் பட்டு அவைகள் மக்கள் மயப் படுத்தப் பட்டன.

இந்தவகையில் இட்டுக் கட்டப் பட்ட இத்தகைய பொய்கள் அவர்களது வரலாற்று நூல்களில் இடம் பெற்றன.அவைகளை அவர்களை அடுத்த தலைமுறையினர் மிகவும் கவனமாக காவி சென்று அவர்கள் தலைமுறையில் எட்டி வைத்துவிட இப்படியாக காவி வரப்பட்ட இந்தப் பொய்கள் உண்மை   உருப் பெறலாயின.


இதன் காரணமாகத்தான் சுமார் தொண்ணூறு வருடங்கள் நபி குடும்பத்தினர்களான இமாம் அலி அவர்களும் அவர்களது குடும்பத்தினரும், பனு ஹாசிம்களும் பள்ளி வாசலில் , குத்பா பிரசங்க மேடைகளில் பகிரங்கமாக தூற்றப் பட்டனர்.

இவ்வாறு தூற்றும் செய்கை இந்தியாவில் சிந்த் மாநிலம் வரையும், ஐரோப்பாவில் ஸ்பைன் வரையும் வியாபித்திருந்த உலகாயுத இஸ்லாமிய உலகில் மிகக் கவனமாக பேணி தொடரப் பட்டன.


இக்கால கட்டத்தில் பிறந்த குழந்தைகளின் காதுகளில் நபி குடும்பத்தினரை அவமதித்து தூற்றும் அவதூறுகள் கேட்கத் துவங்கின.அவர்கள் அந்தக் கதைகளைக் கேட்டவாறே வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள்.அந்தப் பெரியவர்கள் இந்தக் கதைகளை உண்மையென   நம்பினார்கள். கடைசிவரை அவர்களது தவறான நம்பிக்கைகளை உணரமுடியாமல் இறந்தும் போனார்கள்.

எட்வர்ட் கிப்பன் என்ற வரலாற்று ஆசிரியர் தனது "ரோம சாம்ராஜ்யத்தின் அழிவும் வீழ்ச்சியும் " என்ற வரலாற்று நூலில் நபி குடும்பத்தினரான பனு ஹாசிம்களின் தோல்வியையும் பனு உமையாக்களின் வெற்றியையும் இப்படி விவரிக்கிறார்.

"நபி முஹம்மது அவர்களது குடும்பத்தினர் வசம் இருக்கவேண்டிய   இஸ்லாமிய தலைமைத்துவத்தை இறுதிவரை இஸ்லாத்தின் பரம எதிரிகளாக இருந்து மக்கா வெற்றியில் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இஸ்லாத்தில் இணைந்த குறைஷி சிலை வணங்கிகள் அநியாயமாக பறித்து எடுத்து அந்த சிலை வணங்கிகள் முஸ்லிம்களின் தலைவர்களாகவும் இஸ்லாமிய அரசியல் தலைவர்களாகவும் மாறினார்கள்"


ரொபர்ட் பைனி என்கிற இன்னுமொரு வரலாற்று ஆசிரியர் தனது "புனித வாள்" என்கிற வரலாற்று நூலில் இந்த ஆட்சி மாற்றத்தை இப்படி விவரிக்கிறார்.

".........ஒரு உண்மை யாதெனில் இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை ஸ்தாபித்த முஹம்மது அவர்களது வாழ்ந்துக் கொண்டிருந்த வழிமுறைகளை எதுவித ஈவு இரக்கமும் இன்றி படு கொலை செய்து வந்துக் கொண்டிருந்த அநியாயத்தை நாம் மீண்டும் மீண்டும் வரலாறுகளில் காண்கிறோம்..."(பக்கம்:                                                  84  : 85  )  

'..........சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக அபூ சுபியானின் வழித் தோன்றல்களும், தம்மை அப்பாஸுடைய வழித் தோன்றகள் என்று சொல்லிக் கொண்டிருந்த இன்னொரு குழுவினரும் முஹம்மது அவர்களது குடும்பத்தவர்களுடன் தொடர் யுத்தம் பிரகடனப் படுத்தி அதனை செய்தும் வந்து இருக்கின்றனர்."(பக்கம்:193  

".....................இஸ்லாமிய வரலாறு தோறும் ஒரு விநோதமான விதி முறை அதன் ஸ்தாபகர் முஹம்மது அவர்களது வழித் தோன்றல்களுடன் தொடர்ந்துக் கைகொள்ளப்பட்டு வந்துள்ளது.  உலகத்தின் ஒரு பெரும்பகுதி மிகவும் ஆவலுடன் ஏற்றுக் கொண்ட ஒரு நபியின் வாழ்ந்துக் கொண்டிருந்த வழித் தோன்றல்களுடன் அந்த நபியின் ஆதரவாளர்களான இஸ்லாமியர்கள் கடும் பகையுடன் அவர்களை இஸ்லாத்தின் எதிரிகளாக கணித்து எதிர்த்து வந்த அதிசயம் இஸ்லாமிய சரித்திரத்தில் மாத்திரமே உள்ளது..."(பக்கம்:306 )

வரலாறு என்பது வெற்றியடைந்த அணியினரது பிரச்சார செய்தி என்ற கூற்று சத்தியமானதுதான்.

இஸ்லாமிய ஆட்சி மாற்றத்தின் பெரு வெற்றியாளர்களாக முதலாவது முதல் மூன்று கலீபாக்களும் இரண்டாவதாக உமையாக்களும் அவர்களைத் தொடர்ந்து அப்பாசியாக்களும் இருக்கிறார்கள்.

உமையாக்களினதும், அப்பாசிய ஆட்சியாளர்களினதும் ஒருமித்த எதிரிகளாக நபி சல்லலாஹு   அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களும்   அவர்களது அஹ்லுல் பைத்களும் இருந்திருக்கிறார்கள்.


ஆட்சியும் அதிகாரமும் நபி சல்லலாஹு   அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களது குடும்பத்தின் எதிரிகள் வசம் இருந்தக் காரணத்தால் அவர்கள்   தாம்விரும்பியவாறு இஸ்லாமிய வரலாற்றை தமக்கு சாதகமான முறையில் எழுதிக் கொண்டார்கள்.

இதனால், கலீபாக்களினதும் உமையாக்களினதும் அபாசியர்களினதும் எண்ணங்களின் வெளிப்பாடாகவே இஸ்லாமிய சரித்திரம் எழுதப் படத் துவங்கியது.


அந்த மூன்றுக்  கூட்டத்தினரும் தமக்கு எது சரி என்று படுகிறதோ அதனையே இஸ்லாமிய வரலாறாக எமக்குத் தந்து விட்டுப் போனார்கள்.


இதனால், அதிகமான இஸ்லாமிய வரலாற்று நூல்கள் அந்தந்தக் கால இஸ்லாமிய ஆட்சியாளர்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டு அவர்களின் செய்கைகளில் நமக்கு நியாயம் கற்பித்தன.


இஸ்லாமிய பேரறிஞர் சிப்ளி நூமானி எழுதியதும்,  இஸ்லாமியர் அல்லாத வரலாற்று ஆசிரியர்கள் எழுதியவையும் எனது பெரிய தந்தை சொல்லுவதும் முரண்படாமல் இருப்பதைக்கண்டு நான் ஆச்சரியப் பட்டேன்.

எனினும், அவரது வாதத்துக்கான ஆதாரம் எனக்கு அவசியமாகப் பட்டது.

நான் அவற்றைத் தேடத் துவங்கினேன்.

4 comments:

Dr.Anburaj said...

Dr.A.Anburaj is real.What evidance shall you want you to prove my identity .A muslims would not ask about you to disprove alisina. I am a Hindu Hindu to the core.You are afraid of my questions and trying on a pretext to elude me. If you are sure, You may unscribe

அஹ்லுல்பைத் said...

இணைய நண்பர் டாக்டர் அன்புராஜின் வருகைக்கும், பதில் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Dr.Anburaj said...

Swami vivekananda's Chicago speech is available in wwwnewageislam. all muslims without any exception are trying to keep muslims deeply buried in Arab History i identitying themselves with Arabians.Please teach muslims history of India, Ramayananm,Mahabharatam, Thirumanthiram and thoughts of Swami Vivekanada.Let them breathe new breeze.I never advocate religous conversion of any kind.Islamic scholars never allow muslims to study about other religions part.Hinduism.

Dr.Anburaj said...

Arab imperialism is in the guise of Islam- has been doing tremendous damage to humanity. You also trailing the same path.Unless Islam is dissociated from Arabian History/imitating Arabians- the disease would never cure.Abhubith/Shia/sunni/sufi/Ahamathiya all are doing the same.All are eager to Arabiyanise the world in the name of Islam. Mohammed is out of date.That is why all countries which are having Mohammed as roll model are in unrest.blood shed is going on in all countries whose official religion is Arabian religion/Islam.Koran is incapable of integrating Arab countries into One Political entity.How can you repose your confidence on Islam/Mohammed/Koran to bring social harmony and peace in the world by integrating the world based on Islam?.Mohamedan had waged 46 war with neighbouring tribes/communities just for his recognition as prophet of Allah.Why he ordered killing of Asma the poetess ? War for political war never stopped .Her child wife Aysha was responsible for another war -Battle of camel.
So the bloodshed is going on without any stop.
Congratulations to Moahmmed,wwe must thank him for his conribution to bring down the population on our planet.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad