அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, February 9, 2012

இலங்கையில் இருக்கும் அஹ்ளுல்பைத்களின் நிஜமான எதிரிகள்............???தொடரும் நாடகங்களின் வெற்றிகரமான இயக்குநர்களை இனம் காண்போம்!


ஆசுரா, தாசுரா, அராபியீன், கதீர், சஹ்பான் மாத பிறை பதின் மூன்று அல்லது     பதின் நான்கு - மிட் சஹ்பான், சஹாரா டே, ஹஜ் செமினார், இமாம் கொமைனியின் கொண்டாட்டங்கள், குத்ஸ் தினம் ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் இலங்கையின் பாமர முஸ்லிமுக்கு புதிதானவை.

ஆனால், இந்த தினங்களின் அனைத்து நினைவு தினங்களும் இலங்கையின் அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களுக்கு நன்கு பரிச்சயமானது.

இந்த தினங்களை இலங்கையில் இருக்கும் ஈரானிய கலாசாரப் பிரிவு பல இலட்சங்களை செலவு செய்து  நினைவு மறக்காமல் கொண்டாடுவது விசேஷம்.

அதற்கான அனைத்து செலவுகளையும் ஈரானின் இஸ்லாமிய குடியரசு பொறுப்பேற்கும். 

ஆதலினால், அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த தினங்களில் ஈரானின் கலாசாரப் பிரிவில் ஒன்று கூடுவார்கள்.

அங்கே நடை பெறுகின்ற சிறப்புப் பேச்சுக்களில் பங்கேற்பார்கள்.

அஹ்ளுல்பைத்களின் முக்கியத்துவத்தை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்ப்பது என்று வாதிடுவார்கள்.

எதுவித சங்கோஜமும் இல்லாமல் அந்த வைபவங்களில் பரிமாறப் படும் உணவு வகைகளை சுவைப்பார்கள்.ஏனெனில், அந்த செலவினங்களுக்கு அஹ்ளுல்பைத்களின் கொள்கையில் இருக்கின்ற ஒரு நாடு பொறுப்பாக இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்.

இந்த நிலையில் இவ்வருட நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜனன விழா இலங்கையில் இருக்கின்ற அஹ்லுல் பைத் ஆதரவாளர்களினால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டது.

இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களில் வஹ்ஹாபிகளைத் தவிர ஏனையவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜனன விழாவை தங்களின் சக்திக்கு ஏற்ப கொண்டாடத் தொடங்கினார்கள்.

அஹ்ளுல்பைதகளின் ஆதரவாளர்கள் ஈரான் கலாசார நிலையம் ஏற்பாடு செய்யும் மீலாத் விழாவை எதிர் பார்த்து எதுவும் செய்யாமல் "ங்கே" என்று காத்திருந்தார்கள்.

நாள்கள் ஓடின.


சட்டு புட்டென்று மீலாத் தினமும் வந்தது.

தடா புடலாக, விடு முறை தினமாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் கவியரங்கமாக, ஊடகவியலாளர் நிசார்தீனின் விவரண சித்திரமாக மீலாத் தினமும் கழிந்தது.

அஹ்ளுல்பைதகளின் மீது அளவில்லாத அன்பு கொண்டுள்ளோம் என்று சொல்லுகின்ற ஒரு தேசத்தின் அன்பின் அளவை அளவிடும் தினத்தில் அந்த தேசத்தின் இலங்கை கலாசார நிலையத்தின் அமைதியான போக்கு இலங்கையின் அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்களை ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது.

அவர்கள் தம்மை சுதாகரித்துக் கொள்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துப் போனது.

மீலாத் தினத்தில் ஈரான் கலாசாரப் பிரிவில் மௌலூது ஓதி அந்த நாளை ஒற்றுமையின் நாள் என்று சத்தமில்லாமல் பிரகடனப் படுத்தினார்களாம்.

ஆசுரா, தாசுரா, அராபியீன், கதீர், சஹ்பான் மாத பிறை பதின் மூன்று அல்லது     பதின் நான்கு - மிட் சஹ்பான், சஹாரா டே, ஹஜ் செமினார், இமாம் கொமைனியின் கொண்டாட்டங்கள், குத்ஸ் தினம் என்று இலங்கை முஸ்லிம்களுக்கு கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத தினங்களை துணிவுடன் பிரமாண்டமாக நடாத்தி இலங்கை முஸ்லிம்களிடையே சின்ன சின்ன சல சலப்புகளை ஏற்படுத்தும் ஈரானின் கலாசார நிலையம் இலங்கையின் ஒட்டு மொத்த மக்களும் நன்றியுடன் நினைவு கூறும் மீலாத் நினைவு தினத்தை மட்டும் இரகசியமாக செய்ததன் மர்மம் என்ன என்று புரியவில்லை.

நாம் கெஸ் சேரை தொலை பேசியில் தொடர்பு கொண்டோம். 

விடயத்தை சொன்னவுடன் மறு முனையில் சத்தமாக சிரித்தார்.

"இலங்கையில் இருக்கின்ற ஈரான் கலாசார நிலையத்தில் கும் நகரில் ஓதிவிட்டு வந்து வேலை செய்கிற ஹசரத்மார்களின் தகிடு தத்தம்தான் இது" என்றார்.

"புரியவில்லை..?" என்றோம்

"இலங்கையில் இருக்கின்ற சூபி உலமாக்களில் அநேகமானவர்கள் தங்களது அன்றாட ஜீவன உபாயத்துக்கு கத்தம்...பாத்திஹா...மௌலிது என்றுதான் தங்கி இருக்கிறார்கள்." என்ற கெஸ் சேர் தொடர்ந்து "அந்த உலமாக்களிடம் மௌலூது ஓத வாருங்கள் என்றால் அவர்கள் எதுவித மறுப்பும் இல்லாமல் யார் அழைத்தாலும் வருவார்கள்.நம்முடைய கும் நகர உலமாக்கள் ஈரானின் அதிகாரிகளுக்கு தங்களது திறமையை காட்டுவதற்காக இவ்வாறான பச்சோந்தி உலமாக்களை அழைத்து அந்த உலமாக்களிடம் தாங்கள்தான் ஈரான் ஜனாதிபதியின் விசேட தூதுவர்கள் போல பாசாங்கு செய்தும்   ...ஈரான் அதிகாரிகளிடம் இந்த பச்சோந்தி உலமாக்கள்தான் இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதி நிதிகள் என்றும் சொல்லி நாடகமாடுவார்கள்" என்றார்.

"அப்படியா..?" என்றோம்.

"அது மட்டுமல்ல..." என்ற கௌஸ் சேர் தொடர்ந்து "ஈரான் கலாசார பிரிவில் தகுதி இல்லாதவர்களிடம் இந்த அஹ்ளுல்பைத்களின் வேலைத்திட்டம் கையளிக்கப் பட்டிருக்கிறது . முதலில் இலங்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாத இலங்கை கும் நகர லெப்பைமார்களின் கையில் இருந்து ஈரான் கலாசார பிரிவு விடுதலை பெற வேண்டும்.அதன் பின்னர்தான் உருப்படியான வேலைத் திட்டம் ஏதாவது நடை பெரும்" என்றார்.

கெஸ் சேர் சொல்வது சரியா?

சில வேலை சரியாக இருக்கலாம்.

இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் , இலங்கை ஜமாத்தே இஸ்லாமியினால், ஜாமியா   நளீமியாவினால் ஒரு போதும் பகிரங்கமாக அஹ்ளுல்பைத்களைப் பற்றி உரையாட முடியாது.

ஏனெனில் இந்த அமைப்புகளின் போசகர்கள் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் அஹ்லுல் பைத்களின் எதிரிகளாக இருக்கிறார்கள்.

இந்த அமைப்புகளில் யாராவது அஹ்ளுல்பைத்களுக்கு ஆதரவாக பேசினால் அவர்களது தொழில் பறி போய் அவர்களது குடும்பம் நடுத் தெருவில் நிற்கும்  அபாயம் அங்கே வேலை செய்பவர்களில் தொக்கி நிற்கிறது. 

ஆனால்,  ஈரான் கலாசாரப் பிரிவில் இருக்கின்ற உலமாக்களுக்கு அல்லது கும் நகரில் இருந்து ஓதிவிட்டு வந்திருக்கிற உலமாக்களுக்கு அவ்வாறான அபாயம் எதுவும் இல்லை.

ஏனெனில், அவர்களுக்கு கும் நகரில் ஓதிய காரணத்துக்காக மாதா மாதம் ஈரான் அரசிடம் இருந்து சம்பளம் வழங்கப் படுகிறது.

அதனால் அவர்களினால் அஹ்ளுல்பைத்களைப் பற்றி எதுவித தயக்கமும் இன்றி எல்லா இடத்திலும் பகிரங்கமாக உரையாற்ற முடியும்.

இலங்கை ஒரு பௌத்த நாடு.

இங்கே மத சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் அனைவருக்கும் சரி சமனாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த நாட்டில் பகிரங்கமாக அஹ்ளுல்பைத்களைப் பற்றி பேச முடியும்.

ஆனால்,  எங்களது கும் நகர உலமாக்கள் அப்படி செய்வது இல்லை.


இலங்கையில் அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்களுக்கு எதுவித பாதுகாப்பும் இல்லை என்று அவர்கள் போலியாக தாங்கள் அறியாத தங்களது அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான செய்கைகளுக்கு நொண்டி சாட்டு சொல்லி தங்களையும் ஏமாற்றி ஈரான் அதிகாரிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பாரசீக மொழி அவர்களுக்கு தெரிந்த காரணத்தினால் ஈரானின் அஹ்ளுல்பைத்களின் அரச அதிகாரிகளுக்கும் இலங்கையின் இஸ்லாமிய பொது மகனுக்கும் இடையே உறுதியான தடுப்பு சுவராக அந்த உலமாக்கள் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் முகமூடி கிழிந்து போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்கள் இனியாவது புரிந்துக் கொள்ளட்டும்.

4 comments:

Dr.Anburaj said...

available in www.alisina
This hadith is that it reveals yet another sexual scandal of the prophet.

One-day Muhammad goes to the house of his wife, Hafsa daughter of Omar and finds her maid Mariyah attractive. He decides to get rid of Hafsa so he can be alone with Mariyah. He lies to her saying her father Omar has called for her. When Hafsa leaves, Muhammad takes Mariyah to bed and has intercourse with her. Resisting for Mariyah would have been unthinkable. She was a slave girl away from her family and Muhammad was the law in that town. So technically, Muhammad raped Mariyah.

Meanwhile, Hafsa who had found out that her father had not send for her and was not expecting her returns home sooner than expected and to her chagrin finds her illustrious husband in bed with her maid.

She becomes hysterical and forgetting the station of the prophet she shouts and causes a scandal. The prophet pleads with her to calm down and promises not to sleep with Mariyah again. He begs her also not to divulge this secret to anyone else.

However, Hafsa who was unable to control herself relays everything to her friend Aisha and the two teens confabulate with their other co-wives and cause the “Mercy of Allah of Earth” much anguish. The “Mercy of Allah” decides to punish all his wives and declares that he is not going to sleep with any one of them for one month. This is second level of punishment recommended in the Quran. The first level is admonishing them and the third level is corporal punishment. Q. 4: 34.

When a man decides to punish a wife with sexual deprivation he can satisfy himself with his other wives. But Muhammad’s anger had made him make the oath not to sleep with any of them for one month. That of course would have been too much hardship for the beloved messenger of God (peace be upon his immaculate soul). Do God in his mercy came to the aid of his prophet and revealed the Surah Tahrim (Banning). In this Surah Allah rebukes his prophet for being so harsh to himself and for depriving himself from what he really likes, which has been made “lawful” for him, in order to please his wives.

1. O Prophet! Why do you ban (for yourself) that which Allâh has made lawful to you, seeking to please your wives? And Allâh is Oft-Forgiving, Most Merciful.
2. Allâh has already ordained for you (O men), the dissolution of your oaths. And Allâh is your Maula (Lord, or Master, or Protector, etc.) and He is the All-Knower, the All-Wise.
3. And (remember) when the Prophet (SAW) disclosed a matter in confidence to one of his wives (Hafsah), so when she told it (to another i.e. ‘Aishah), and Allâh made it known to him, he informed part thereof and left a part. Then when he told her (Hafsah) thereof, she said: “Who told you this?” He said: “The All-Knower, the All-Aware (Allâh) has told me”.

Jaffna Muslim Base said...

Did u notice Naleemiyya Building?(Dajjal's)one single EYE.it is looks like Illuminati Building.

Dr.Anburaj said...

It is strange no reader has commented anything about this incident/about my letter in general.
Hinduism urges all human being to realise God within himself-that is real religion.Jesus had that.so he said " I and my father in heaven are one ". In Hinduism thousands of seers/rishis etc.
has had this realisation.Hence hinduism has nothing that make it a imperialistic religion.
But islam/(Christian church) is a aggressive/Arab imperialitic movement.That is why One Jamat declare Jihad against not only other religionsBut also against Islamic branches.Every sect dreams to rule the world.So Pre Mohammed blooshed was carried on by Mohammed and it is being carried on by Muslims without any interwal. You also justify Shia terrorist group operating in Middle east.

Dr.Anburaj said...

I would like to get e-mail letters/articles from
English web-if such a web exists,Please suscribe me.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad