அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, March 10, 2013

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர்களின் தலைமைத்துவம் தொலைக்கும் செய்கைகள்................இலங்கை முஸ்லிம்கள் உணர மறுக்கும் உண்மைகள்!?



இஸ்லாமிய பிரசாகர்களினால் ஒரு பிரசித்தமான ஹதீஸ் முன்னுதாரணத்திற்காக அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.

நீங்களும் அந்த ஹதீஸை அறிந்திருப்பீர்கள்.

தனது மகனை நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களிடம் அழைத்து வந்த தாயொருவர் "யா ரசூலுல்லாஹ்.......எனது மகன் அதிகமாக அடிக்கடி இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.அவருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட வேண்டாம் என்று அறிவுரை சொல்லுங்கள்" என்று வேண்டி நின்றார்.



அந்தத் தாயாரின் வேண்டுகோளை செவியுற்ற நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்கள் அந்தத் தாயாரிடம் அவரது மகனை ஒரு வாரம் கழித்து தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார்கள்.

அறிவுரை நாடி வந்த தாயாருக்கு ஒன்றுமே புரியவில்லை.

என்றாலும்,அந்தத் தாயார் ஒரு வாரம் சென்றதன் பின்னர் தனது மகனை நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களிடம் மீண்டும் அழைத்து வந்தார்.

அப்பொழுது அந்த மகனை தன்னருகில் அழைத்த நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்கள் அவருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களின் செய்கை அந்தத் தாயாருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அவர் நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களிடம் "யா ரசூலுல்லாஹ்........உங்களுக்கு இந்த அறிவுரையை நான் எனது மகனை அழைத்து வந்த முதல் நாளே சொல்லியிருக்க முடியுமல்லவா?.........நீங்கள் ஒரு வாரம் கழித்து இதனை சொல்லியதன் மர்மம் என்னதென்று என்னால் அறிய முடியுமா?" என்று பணிவுடன் கேட்டு நின்றாள்.

அதனைக் கேட்ட நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்கள் முறுவலித்தார்கள்.

"அன்புத் தாயாரே..." என்று அந்தத் தாயாரை விளித்த நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்கள் தொடர்ந்து "நீங்கள் உங்களது மகனை அழைத்து வந்த சென்ற வாரம் வரை நானும் அதிகமான இனிப்பு சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.ஆதலினால்,நானே செய்கின்ற ஒரு செயலை செய்யக் கூடாதென்று இன்னொருவருக்கு உபதேசிக்கும்  தகுதியில் நான் இருக்கவில்லை.ஆகவே உங்களை ஒரு வாரம் கழித்து வருமாறு வேண்டினேன்.நீங்கள் என்னிடம் அறிவுரைக் கேட்டு வந்து சென்றதன் பின்னர் நான் அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டேன்.இப்பொழுது என்னால் உங்களது மகனுக்கு அறிவுரை சொல்லும் தகுதி இருக்கிறது.அதனால் அவருக்கு உபதேசித்தேன்" என்றார்கள்.

ஹதீஸ் வேண்டி நிற்கும் அறிவுரை சம்பந்தமான விளக்கம் என்னதென்று அஹ்லுல்பைத் தள வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.

நாம் யாருக்காவது ஏதாவது அறிவுரை சொல்ல விரும்பினால் நாம் செய்ய முன்வராத ஒரு செயலை அல்லது நாம் செய்யாத ஒன்றை பிறருக்கு ஏவுவது கூடாது என்ற உயர்வான படிப்பினையை அந்த சம்பவம் அறிவுறுத்தி நின்றது.

ஆனால்,இன்று நடப்பது என்ன?

இலங்கை முஸ்லிம்கள் மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் அந்த பயங்கரங்களை விட்டும் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஐங்காலத் தொழுகையின் பின்னால் 'குனூத்' துஆவை இறைஞ்சுமாறு ACJU இலங்கை முஸ்லிம்களிடம் வேண்டிக் கொண்ட விடயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இலங்கை ஜனாதிபதியவர்கள் இது சம்பந்தமாக அமைச்சரவையில் பேசும் அளவிற்கு இது பிரபல்யமான செய்கையாக மாறி நின்றது.

சென்ற முதலாம் திகதி ( மார்ச் 01- 2013) கொழும்பில் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்திருக்கும் சம்மாங் கோட்டுப் பள்ளி வாசலில் நடை பெற்ற ஜும்மாஹ் தொழுகை  ACJU தலைவர் அஸ் சேய்க் ரிஸ்வி முப்தி தலைமையில் நடந்தது.

அதில் ACJU தலைவர் ரிஸ்வி முப்தி இரண்டாவது குத்பாவில் தவறுதலாக அல்லது வேண்டுமென்றே  "இன்னல்லாஹு வமலாஇகது ......... என்று சொல்லப் படுகின்ற நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களின் மீது சலவாத் சொல்லுமாறு அல்லாஹ் மூமின்கள் மீது கட்டளையிடுகின்ற அல் குர் ஆன் ஆயத்தை ஓதவில்லை.

மத்ஹபுகளின் இமாம்கள் ஏகோபித்து ஏற்றிருக்கின்ற ஒரு விடயத்தை இரண்டாவது குத்பாவில் அலட்சியம் செய்த ACJU தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் அவரது இந்த அலட்சியமான செய்கையின் காரணமாக இஸ்லாமிய மத்கபுகளை ஏற்றுக் கொண்டிருக்கின்ற உலமாக்களின் தலைமைப் பொறுப்புக்கு தகுதி பெறுகின்ற தகுதியை இழந்து போகின்றார்.

அதன் பிறகு ஜும்மாஹ் தொழுகையின் பொழுது இரண்டாவது இரக்காத்தில் குனூத் ஓதவில்லை.

இலங்கையில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் தொழுகையில் குனூத் ஓதுமாறு கட்டளையிட்ட ACJU வினது தலைவரே அந்த செய்கையை செய்ய மறுக்கும் செய்கையின் காரணமாக முஸ்லிம்களை வழிநடாத்தும் தலைமைத்துவ தகுதிக்குத் தான் தகுதி இல்லை என்பதை பகிரங்கமாகக் காட்டிக் கொள்கிறார்.

அதுமட்டுமன்றி அவரது தலைமைத்துவத்தை ஏற்றிருக்கின்ற சில அப்பாவி உலமாக்களுக்கு தான் செய்யத் தயங்கும் அல்லது தான் செய்யாத ஒரு செய்கையை செய்யுமாறு கட்டளையிடுகின்ற ரிஸ்வி முப்தியும் ACJU வினது தலைமைப் பொறுப்புக்கு தகுதி இழந்துப் போகிறார்.

ACJU வின் தலைவர் செய்கின்ற தவறுகளை தவறென்று உணர மறுத்து அல்லது அவ்வாறான தவறுகளைத் தவறு என்று அறியும்  அறிவு தொலைத்து அவரது தவறை சுட்டிக்காட்டாது அவரது தவறான செய்கைகளுக்கு ஜால்ரா அடிக்கும் ACJU வினது அங்கத்துவ உலமாக்கள் இந்த அநீதமான செய்கையின் காரணமாக இலங்கை முஸ்லிம்களுக்கு வழிக்காட்டும் தகுதியை இழந்துப் போகின்ற நிலைமைக்கு   பரிதாபமாக ஆளாகி நிற்கிறார்கள்.

நாம் நமது நண்பர்கள் சிலருடன் ACJU வினது தலைவரின் இந்த தகுதியிழந்த செய்கை சம்பந்தமாக உரையாடும் பொழுது அவர் இன்னுமொரு உண்மையை நமது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

ACJU வின் உப தலைவர் மௌலவி அகார் முஹம்மத் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் ஜும்மாஹ் பிரசங்கம் முடித்தவுடன் தொழுகையை முன்னின்று நடாத்துவதினின்றும் தவிர்ந்துக் கொள்கிறாராம்.

ஆகவே,இன்னுமொரு மௌலவி அவருக்குப் பதிலாக தொழுகையை நடாத்தி குனூத்தையும் ஓதுகிறாராம்.

முஸ்லிம்களின் இம்மை மறுமை வெற்றிக்கு வழிக்காட்டக் கூடியத் தலைவர்களை தெரிவு செய்துக் கொள்ளும் தெரிவு சுதந்திரம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒப்படைக்கப் பட்டிருக்கிற அமானிதமாகும்

அந்த வகையில் தனக்கு வழிகாட்டக் கூடிய ஒரு முஜ்தஹிதை தெரிவு செய்யும் உரிமை ஒவ்வொரு முஸ்லிமினதும் பிரப்புரிமையாகும்.

நாம் நமதுக் குழந்தைகளை அவர்கள் சுயமாக ஒரு முஜ்தஹிதை தேர்வு செய்யும் அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் வழிக்காட்டி வளர்த்தெடுக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆனால்,இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களின் நிலைமையோ பரிதாபகரமானது.

ஒரு முஜ்தஹிதின் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ளக் கூடிய சூழல் இல்லாத நிலையிலேயே நாம் வளர்ந்திருக்கிறோம்.

அதன் காரணமாக ஒரு முஜ்தஹிதுக்கும்,சாதாரண உலமாவுக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டை எங்களால் உணர்ந்துக் கொள்ள முடியாதிருக்கிறது.

எங்களது அறியாமையை தெளிவு படுத்த முன்வராத ACJU அமைப்பினரின் செய்கையில் அவர்களது சுயநலம் பொதிந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவர்களாக தம்மை சொல்லிக் கொண்டிருக்கின்ற ACJU அமைப்பினர் அவர்களது அமைப்பின் யாப்புக்கு அமைவாக தெரிவு செய்திருக்கின்ற அவர்களின் தலைவர்களை எங்களுக்கு எங்களது முஜ்தஹிதுகளாக ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கிறார்கள்.

இது மிகத் தவறான செய்கையாகும்.

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவ தகுதிக்கு ACJU கிஞ்சித்தும் தகுதி இல்லை என்கின்ற விடயத்தை அவர்களது தலைவர் ரிஸ்வி முப்தியினது   சலவாத்து மறந்த குதுபாவும் ஓத விரும்பாத குனூத்தும் நிரூபித்துக் காட்டிவிட்டது.

குனூத் ஓதுவதை தவிர்ப்பதற்காக தொழுவிக்கும் தகுதியை விட்டுக் கொடுத்த உப தலைவரின் செய்கையின் மூலம் அவர் தனதிருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எதனையும் விட்டுக் கொடுக்கக் கூடியவர் என்ற உண்மையும் புரிந்து விடுகிறது.

எது எப்படிப் போனாலும் ஒரு விடயத்தில் யாரும் கருத்து வேறுபட முடியாது.

அரசாலும் அரசாங்கத்துக்கு அது அநீதமானதாக இருந்தாலும் இந்த அறிஞர்கள் முண்டியடித்து ஒத்தூதுவார்கள்.

ACJU வின் தலைவர்கள் ஜெனீவா சென்று சுவிஸ் சாக்லேட் சாப்பிட்டு செல்லாக்காசு அரசியல்வாதிகளாக மாறிநின்ற கதை பிரசித்தம்.

இம்முறை தேசிய தின நிகழ்வுகளில் முண்டியடித்துக் கொண்டு தேசியக் கொடியை பள்ளிவாசல்கள் தோறும் ஏற்றி அரசியல்வாதிகளின் காலில் விழுந்த செய்தி இன்னும் பிரசித்தம்.

திடீரென தோற்றம் பெற்ற BODU BALA SENA வினரது ஹலால் தரச்சான்றிதளுக்கு எதிரான கேள்விகளுக்கு பதில் தெரியாது ACJU அமைப்பினர் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையும் பிரசித்தம்.

இந்நிலையில் முஸ்லிம்களின் தலைமைத்துவ தகுதிக்கு தமது குழுவினர் கிஞ்சித்தும் தகுதி இல்லை என்ற விடயத்தை இப்படி பிரசித்தமாக வெளிப்படுத்திய துணிச்சலான செய்கைக்கு என்ன சொல்ல முடியும்?

"அறிவு கெட்ட முஸ்லிம்களே........நீங்கள் இன்னுமா தூக்கம்?.......ACJU வினரைப் புரிந்துக் கொள்ளும் அறிவு இல்லையா?"........என்று கேட்காமல் கேட்பது போல இல்லையா? 

அவர்களின் துணிச்சலான முரண்பட்ட அந்த செய்கைக்கு நமது வாழ்த்துக்கள்.

5 comments:

Dr.Anburaj said...

சிரிப்போம் வாருங்கள்
காளமேகப் புலவர் கும்பகோணத்தில் ஓர் அன்ன சத்திரத்திலே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் எதிரில் முன் குடுமிச் சோழியப் பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எதிரில் சாப்பிடும் அந்த சோழியப் பிராமணருக்கு சாப்பிடுவதில் வேகம் இருந்தது. அவர் குடுமி அவிழ்ந்து அன்னத்தில் விழுந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் சாப்பிடும் வேகத்தில் அந்தக் குடுமியை வேகமாகத் தள்ளினார்.

அந்தக் குடுமியில் ஒட்டியிருந்த அன்னம் காளமேகப் புலவரின் இலையில் வந்து விழுந்தது.

புலவருக்குக் கடும் கோபம். உடனே தொடங்கினார்.

“சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பெருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்”

இங்கு புலவர் பெற்றாளே என்று பாடவில்லை. ஏ குரங்கே, நாயே என்றால் “போட்டாளே” என்றுதான் பாட வேண்டும்.

இங்கு ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும்.

பன்றியும் விலங்கு, நாயும் விலங்கு, மாடும் விலங்கு. எல்லாம் விலங்குதான். பசு கன்று ஈன்றது என்கிறோம். ஆனால் நாய் குட்டி போட்டது என்கிறோம். ஏன்?

ஒன்றே ஒன்று போட்டால் ஈன்றது. ஐந்து ஆறு என்றால் போட்டால் அது குட்டி போட்டது.

ரயிலில் ஒரு பெண் ஒரு குழந்தை வைத்திருந்தால் உன் குழந்தையா? என்பார்கள். அதே சமயம் நான்கைந்து இருந்தால் குட்டிகளா என்று கேட்பார்கள்.

-வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூலிலிருந்து.
2.பெண்ணிற்குள் ஆண் அடக்கம்

பெண்களுக்கு உள்ளே ஆண்கள் அடக்கம் என்பது சில வார்த்தைகள் மூலம் புலப்படுகிறது.

Female என்பதில் male அடக்கம்
Lady என்பதில் lad அடக்கம்
Woman என்பதில் man அடக்கம்
She என்பதில் he அடக்கம்

ஸ்ரீ ரங்கத்து யானைக்கு நாமம்

ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா?

பிரிவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம். ஒரு மாதம் தென்கலை நாமம். உடனே ஸ்ரீ ரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போடுகிறார்கள். பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் கெட்டிமேளத்தோடு வந்து யானைக்குத் தென்கலை நாமம் போடுகிறார்கள்.

முடிவு என்னவாயிற்று தெரியுமா?

மூன்றே மாதங்களில் யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.

மறுநாள் பத்திரிகைச் செய்தி! ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று. அதற்கு அடுத்த நாள் அதே பத்திரிகைகளில் வேறு ஒரு புதிய செய்தி வருகிறது.

ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடிக்கவில்லை! அப்படி தவறுதலாகப் பிரசுரித்து விட்டோம். யானைக்கு மதம் பிடிக்காமல்தான் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியது.

3.இங்கு இருப்பு இல்லை

ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் “ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று எழுதி வைத்தார்.

அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று பதிலுக்கு எழுதிப் போட்டார்.

அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.

தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டது.

“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.

“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்” என்றாள்.

“அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.

கோழிக்கறியும் குதிரைக்கறியும்

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.

உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான்.

சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொன்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.

“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.

“சம அளவு சார்!” என்றான் சர்வர்.

“சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன்.

“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரைதான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.

Dr.Anburaj said...

விலை உயர்ந்த பொருள்

உலகின் மிகப்பெரிய தத்துவஞானி எனப் போற்றப்பட்ட ரஸ்ஸல் பெர்னாட் வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய்நாடு திரும்பினார். அங்கு விமான நிலைய அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர்.

“உங்களிடம் இருக்கக் கூடிய விலைமதிப்பேறிய பொருட்கள் என்ன? அதையெல்லாம் வெளியே எடுத்துக் காட்டி விடுங்கள்.” என்று கண்டிப்பான குரலில் கூறினர் விமான நிலைய அதிகாரிகள்.

ரஸ்ஸல் அமைதியாக, “என்னிடம் விலைஉயர்ந்த பொருள் ஒன்று மட்டும்தான் உள்ளது. அதை வெளியில் எடுக்கவோ, உங்களிடம் காட்டவோ முடியாது” என்றார்.

அதிகாரிகளுக்கு கோபம் வந்தது.

“நீங்கள் எடுத்துக் காண்பிக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்ய நேரிடும். அப்பொழுது மிகவும் வருத்தப்படுவீர்கள்” என்று எச்சரித்தனர்.

மறுபடியும் ரஸ்ஸல் அதே புன்னகையுடன், “என்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருள் என்னுடைய அறிவுதான். அதைத் தாங்கள் எப்படி பறிமுதல் செய்ய முடியும்?” என்று கேட்டார்.

அப்போது அங்கு வந்த சிலர், “இவர் நம்நாட்டு தத்துவஞானி ரஸ்ஸல் பெர்னாட்” என்றனர்.

உடனே விமான நிலைய அதிகாரிகள், “அய்யா, எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் போகலாம்” என்று அவரை வழியனுப்பி வைத்தனர்.
2.கருப்பாயி ஆன நீலாம்பிகை

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் நகைச்சுவை உணர்வு மிக்கவர். ஒருமுறை அவர் மறைமலை அடிகளார் வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருந்தார்.

மதிய உணவு இடைவேளை வந்தது.

மறைமலை அடிகளாரின் துணைவியார் நீலாம்பிகை உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கதிரேசன் செட்டியார், “கொஞ்சம் ரசம் போடும்மா!” என்றார்.

இதைக் கேட்ட நீலாம்பிகை, “ரசம் வடமொழிச் சொல்லாயிற்றே...நீங்கள் அதைத் தூய தமிழில் சாறு விடும்மா! என்று கூறலாமே?” என்றார்.

இதைக் கேட்ட கதிரேசன் செட்டியார், “அதுவும் சரிதான். அம்மா கருப்பாயி, கொஞ்சம் சாறு ஊற்றம்மா” என்றார்.

நீலாம்பிகை, “என் பெயர் நீலாம்பிகையை கருப்பாயி ஆக்கிவிட்டீர்களே?” என்று கேட்டார்.

உடனே கதிரேசன் செட்டியார், “நான் சொன்னதில் எந்தத் தவறுமில்லை” என்றார்.

நீலாம்பிகை விழித்தார்.

அதற்கு கதிரேசன் செட்டியார், “நீலம் என்பதைத் தமிழில் கறுப்பு என்கிறோம். அம்பிகை என்பதைத் தூய தமிழில ஆயி என்று சொல்வார்கள். எனவே, “நீலாம்பிகை” என்கிற உன்னை “கருப்பாயி” என்றேன். “ரசத்தைச் சாறு என்று சொல்வது போல...” என்றார்.

3.சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''
4.தர்மத்துக்கு என் சொத்து

ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.

அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.

தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். உடனே ஊர் பொதுமக்களை அழைத்து "எனக்குப் பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கே!" என்றார்.

ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.

உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம், "ஐயா! உங்கள் சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி! இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் "அட நீங்க ஒண்ணு, இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம்” என சொன்னாராம்.

Dr.Anburaj said...

பட உடைப்பாகமலிருக்க

ஒரு சிற்றூரில் கலைஞர் கருணாநிதி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அசோகன் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அசோகன், “கஜினி முகம்மது சோமநாதபுரத்தின் மீது பதினாறு முறை படையெடுத்து பதினேழாவது முறை வெற்றி கண்டது போல், நான் தேதி கேட்டு கலைஞரிடம் பலமுறை படையெடுத்து இன்று வெற்றி கண்டேன். இப்போது கலைஞர் பேசுவார்” என்றார்.

கலைஞர், “அசோகனை இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசவிடுங்கள் என்றேன். காரணம் கஜினி முகம்மதுவின் படையெடுப்பு சிலை உடைப்பில் முடிந்தது. அசோகன் படையெடுப்பு (பலமுறை அழைத்தது) என் பட உடைப்பில் முடிந்து விடக் கூடாது என்பதால் கூட்டத்திற்கு வந்து விட்டேன்” என்றார்.

கூட்டத்தில் பலத்த கர ஒலியும், சிரிப்பொலியும் எழுந்தன.பேயைப் பார்த்ததில்லை.

சுவாமி சின்மயானந்தா ஒருமுறை சென்னையில் கீத ஞான யக்ஞம் நடத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.

அந்தணர்கள் வசமிருந்த பலகோவில்கள் அவருக்கு இடம் கொடுக்க மறுத்தன. அப்போது அவரது சீடர் அவரிடம் ஓடி வந்தார். "ஒரு இசுலாம் இனத்தவர் தனது இடத்தைக் கொடுக்கிறேன்" என்று சொல்கிறார், "ஆனால்" என்று தயங்கியவாறே, "அந்த இடம் பேய் இருக்கும் இடமாம்" என்று சொன்னார்.

சுவாமி உடனே," அதனாலென்ன, நான் இன்னும் பேயைப் பார்த்ததே இல்லை. ஒரு நல்ல சந்தர்ப்பம்" என்றார்.

யாருக்கு யார் தரிசனம்?

ரமண மகரிஷி ஒருமுறை வழக்கம்போல அருணாச்சல மலையை வலம் வந்து கொண்டிருந்தார்.

அவரிடம் பற்றுதல் கொண்ட ஒருவர் அவர் பின்னாலேயே வேகமாக ஓடிவந்து ரமண மகரிஷியின் முன்னால் நின்று, "நான் உங்கள் தரிசனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இன்று நீங்கள் தரிசனம் கொடுத்துவிட்டீர்கள்"என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

ரமண மகரிஷி உடனே, " நான் எங்கே தரிசனம் கொடுத்தேன்? நீங்கள்தானே என் முன்னால் வந்து நின்று எனக்கு தரிசனம் கொடுத்தீர்கள்" என்று சொன்னார்.

ஆசிக்கு எவ்வளவு தூரம்?

ஒருமுறை அமெரிக்க பக்தர்கள் சிலர் ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பின் வரிசையில் இருந்தார்கள்.

அவர்கள் மகரிஷியிடம் அவரது அருளைப் பெற முன்னால் வந்து அமரலாமா? என்று கேட்டார்கள்.

மகரிஷி, " நீங்கள் முன்னால் வந்து அமர்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எனது அருள் தூரத்தைப் பொருத்தது அல்ல, நீங்கள் பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் என் ஆசி இருக்கும்." என்று சொன்னார்.

அருள் கிடைக்கக் கோர்ட்டுக்குப் போகலாமோ?

சில பக்தர்கள் மகரிஷியை அவர்கள் தலைமேல் அவரது கையை வைத்து ஆசீர்வதித்தால் பூரண அருள் கிடைக்கும்' என்று சொன்னார்கள்.

மகரிஷி உடனே," இது என்ன வேடிக்கையாய் இருக்கிறது- இன்னும் கொஞ்சம் போனால் என்னை அருள் தரச் சொல்லி பத்திரத்தில் எழுதி வாங்குவீர்கள் போலிருக்கிறது- அப்படி அருள் கிடைக்காவிட்டால் கோர்ட்டுக்குக் கூட என்னை இழுப்பீர்களோ என்னவோ" என்றார்.

நல்ல டாக்டரைப் பார்க்க...

சுவாமி தயானந்த சரஸ்வதி ஒருமுறை இந்தக் கதையைச் சொன்னார்.

சாகப் போகும் நிலையிலிருந்த மூன்று பேரிடம் டாக்டர் "அவர்களுடைய கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்.

அதற்கு முதலாமவன் சொன்னான், "தான் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் மன்னிப்புக் கேட்க விரும்புவதாக"

இரண்டாவதாக இருந்தவர் "தன்னுடைய குடும்பத்தவர்க்ள் அனைவரையும் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

மூன்றாவது ஆளோ நான் வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.

கீதையைக் கேட்க ஒருவர்

படித்த பண்டிதர் ஒருவர் காஞ்சிபரமாச்சாரியாரிடம் தான் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பதாக பீற்றிக் கொண்டிருந்தார்.

சுவாமிகள் அவரிடம் அங்குள்ள கோவில் ஒன்றில் அவரால் பத்துநாட்கள் கீதை உபன்னியாசம் செய்ய முடியுமா? என்று கேட்டார். அந்தப்

பண்டிதரும் சம்மதிக்க உபன்னியாசம் நடந்தது. முதல் நாள் நல்ல கூட்டம் வந்தது.

இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று நாள் செல்லச் செல்லக் கூட்டமும் குறைந்து கொண்டே வந்தது.

அவர் பரமாச்சாரியாரிடம் ," என்ன ஊர் இது? முதல் நாள் 50பேர் வந்தார்கள். இரண்டாம் நாள் 25 பேர். பிறகோ இரண்டே பேர்தான் வந்தார்கள்- யாருக்குமே கீதையைக் கேட்க ஆசையில்லை போலிருக்கிறது" என்று அலுத்துக் கொண்டார்.

பரமாச்சாரியார் ஒரு புன்முறுவலுடன், " ஏன் வருத்தப் படுகிறீர்கள்? கண்ணன்

கீதையைச் சொன்ன போது அதைக் கேட்க ஒரே ஒருவர்தானே இருந்தார்" என்று சொன்னார்.

Dr.Anburaj said...

பகலில் காண முடியாததை...

பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தான்.

தூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் இதைக் கண்டு பலமாகச் சிரித்தார்.

"எதற்கு சிரிக்கிறாய்?" என்றான் திருடன்.

" நான் பகலில் காண முடியாத பணத்தை நீ இரவில் கண்டு விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாயே... அதை நினைத்துத்தான் சிரித்தேன்." என்றார்.

உனக்கு மூளை இல்லை என்று...

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ஸ்ரீ.ஏ.எஸ்.பி.அய்யர். தெய்வபக்தியுடையவர். நகைச்சுவையுடன் நல்ல பேசும் திறனுடைய இவரை நாத்திக அமைப்பு ஒன்று ஒரு கூட்டத்திற்குப் பேச அழைத்திருந்தது.

அவர் பேசத் துவங்கியவுடன் ஒருவர் எழுந்து, "எனக்கு கடவுளிடம் நம்பிக்கை இல்லை" என்று பெருமிதத்துடன் கூறினார்.

உடனே அய்யர், "அதனால் கடவுளுக்கோ, ஆத்திகர்களுக்கோ நஷ்டம் ஒன்றுமில்லை." என்று கூறினார்.

அய்யரை மடக்க எண்ணிய அவர் சிறிது நேரம் கழித்து மறுபடியும் எழுந்து, " நம் கண்களுக்குத் தெரியாத எதையும் நம்புவது முட்டாள்தனம் என்று நினைக்கிறேன்" என்றார்.

உடனே அய்யர், "அய்யா, உன் மண்டைக்குள் இருக்கும் மூளை என் கண்களுக்குத் தெரியவில்லை. அதற்காக உனக்கு மூளை இல்லை என்று நான் எடுத்துக் கொள்ள முடியுமா?" என்றார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, கேள்வி கேட்டவர் வெட்கப்பட்டுத் தலை குனிந்தார்.
ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!

Dr.Anburaj said...

குழந்தைகள் திருமணத்தை எங்கிருந்தாலும் ஒழிக்க வேண்டும்.பெண்களுக்கு குறைந்த பட்சம் 22 வயதுக்குப் பின்னர் தான் திருமணம் செய்ய வேண்டும்.தமிழில் வெளியிடுவது நன்று.
Nigeria: More Than 140 Million Girls to Become Child Brides in 2020

March 13, 2013

The UN on Friday said that by 2020 more than 140 million girls would have become child brides globally if the current marriage rates continue.

It warned that little progress has been made towards ending the harmful practise.

According to the Executive Director of the UN Population Fund (UNFPA), Dr Babatunde Osotimehin, of the 140 million girls, 50 million will be under the age of 15.

The News Agency of Nigeria (NAN) reports that Osotimehin spoke at a special session on child marriage at the ongoing UN Commission on the Status of Women (CSW) in New York.

Some of the issues focused on during the session include supporting and enforcing legislation to increase the minimum age of marriage for girls to 18 years.

Others are providing equal access to quality primary and secondary education for girls and boys; mobilising girls, boys, parents and leaders to change practises that discriminate against girls among others.

He said that while 158 countries have set the legal age for marriage at 18 years, laws are rarely enforced since the practise

of marrying young children was upheld by tradition and social norms.

He stated that the practise was most common in rural sub-Saharan Africa and South Asia.

The UNFPA Executive Director said that currently, 10 countries with the highest rates of child marriage are Niger, Chad, the Central African Republic, Bangladesh, Guinea, Mozambique, Mali, Burkina Faso, South Sudan and Malawi.

According to him, in terms of absolute numbers and because of the size of its population, India had the highest number of child marriages in 47 per cent of all marriages, stressing that the bride was a child.

Osotimehin explained that young girls who marry before the age of 18 have a greater risk of becoming victims of intimate partner violence than those who marry later.

"Child marriage is an appalling violation of human rights and robs girls of their education, health and long-term prospects.

"A girl who is married as a child is one whose potential will not be fulfilled. Since many parents and communities also want the very best for their daughters, we must work together and end child marriage," he said.

He added that child marriage was increasingly recognised as a violation of the rights of girls as it interferes with their education, blocks their opportunity to gain vocational and life skills, and increases their risk to sexual violence as well as their chances to contract HIV.

"No girl should be robbed of her childhood, her education and health, and her aspirations.

http://allafrica.com/stories/201303081194.html

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad