அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, May 21, 2013

விடை தேடுகின்ற கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வி?



நமது நண்பர் அன்புராஜின் பல கேள்விகளில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு பதிலாக ஒரு கேள்வியை நண்பர் அன்புராஜிடமும் நமது இன்னுமொரு இணைய நண்பர் சுகுமாரிடமும் கேட்கிறோம்.



அவர்கள் நிச்சயமாக விடை சொல்வார்கள் என்று உறுதியாக நம்ப முடியும்.ஏனெனில்,நண்பர் அன்புராஜ் நமது மௌலவி அகாரை விடவும் புனித அல் குர்ஆன் சம்பந்தமாக நிறையவே ஆய்வு செய்திருக்கிறார்.

நம்மிடம் வந்த ஒரு இந்து சாது இப்படிக் கேட்டார்..............

"கடவுள் தான் செய்வதாக வாக்களித்த வாக்குறுதிகளை மனிதர்களினால் மாற்றியமைக்க முடியுமா?" என்று கேட்ட சாது தொடர்ந்து "கடவுள் அருளிய இறுதி வேதம் என்று நீங்கள் சொல்லும் புனித குர்ஆனில் எனது இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறதா?" என்று முடித்தார்.

சாதுவின் கேள்விக்கு உங்களது பதில் என்ன?


3 comments:

Dr.Anburaj said...

கேள்வி எண் 1கடவுள் தான் செய்வதாக வாக்களித்த வாக்குறுதிகளை மனிதர்களினால் மாற்றியமைக்க முடியுமா?"
பதில் கடவுள் யாருக்கு என்ன வாக்குறுதியை எப்பொழுது அளித்துள்ளார். எனக்குத் தெரிந்து கடவுள் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை.எந்த மதத்தில் இருந்தாலும் வாக்குறுதி அளித்த கதை யெல்லாம் சற்று ஒதுக்கி வைப்பது நலம்.பழையன கழிதலும் புதியன சேர்தலும் வழுவன்று வாழும்வகைதான். அதிசயங்கள் ஆன்மீகத்திற்கு கேடுவிளைவிக்கின்றன.

கேள்வி 2 "கடவுள் அருளிய இறுதி வேதம் என்று நீங்கள் சொல்லும் புனித குர்ஆனில் எனது இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறதா?"
குரான் கடவுள் அருளியது அல்ல.முகம்மதுவின் கைச்சரக்குதான் குரான் என்பது எனது முடிவான நன்கு ஆராய்ந்த கருத்து.இதற்கு மேல் தாங்கள்தான் பதில் அளிக்க வேண்டும். திரும்பவும் உறுதியாகச் சொல்கின்றேன் ஆன்மீகத்தில் குரான் மட்டும் தனித்து இயங்க முடியாது.இயங்கினால் அது உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.. பிறரை காபீர் என்று கொன்றொழிக்கச் சொல்லும் ஒரு போக்கை குரான் முகம்மது காலம் தொட்டு வளர்த்து வருகின்றது. பிறமதத்தவர்களை காபீர் என்று சொல்லி அழிப்பது.பின் முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் காபீர் என்று சொல்லி அழிப்பது அடுத்த நடவடிக்கை. முஸ்லீம் அல்லது இஸ்லாமிய அல்லது அரேபிய வரலாறு முழுவதும் -இன்றும் --- இதைப் பார்க்கலாமே.குரானை மட்டும் படிக்கும் நாடுகளில் அமைதி எத்தனை நாடுகளில் உள்ளது?விஞ்ஞானப் புத்தகங்கள் அனைத்தும் பொதுவுடைமையாக இருப்பதுபோல்
சமய புத்தகங்கள் அனைத்தையும் மக்களுக்கு பொதுஉடைமையாக்கி அளியுங்கள். படித்துக் கொள்ளட்டும். வாழ்வை வளமாக்கிக் கொள்ள ட்டும் . அந்தணனாக -முமீனாக -இரட்சிக்கப்பட்டவனாக ...... மனித நேயத்தை முன்நிறுத்துபவனாக வாழட்டும். நிச்சயமாக ஆன்மீகம் என்பது அரேபியன் போல் வாழ்வதல்ல.அரேபிய கலாச்சாரம் மட்டும் அல்லாவின் கலாச்சாரம் என்பது பையித்தியக்காரத்தனம். தங்களோடு உறவாடியது எந்த மதத்தையும் குறைப்பதற்கோ கூட்டுவதற்கோ அல்ல. அல்லா ஈசன் பராபரம் பிதா நினைத்தால் நான் சார்ந்த சமயம் வாழும்- காலத்தின் ஒட்டம் ஏற்படுத்தும் வளர்சியை எற்றுக் கொண்டால்-. நான் ஒரு இந்து. இறைவன் எலலையற்றவன். இறைவனைப் பற்றிய புத்தகமும் எல்லையற்றப் பக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும். இதுவரை உள்ளவற்றைத் தெளிந்து புதுமைகள் செய்ய புதியவற்றை உருவாக்க அனுமதி சுதந்தரம் அளிக்கும் ஒரு மதமாக இந்து சமூகம் உள்ளது.
சுவாமி விவேகானந்தர்கூறிதை நினைவில் கொள்ளுங்கள் Every Religion has produced men and women of most exalted characters- இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களும், சமூகங்களும் -அனைத்து துறைகளிலும் மகத்தான உன்னதமான தகுதி படைத்த மக்களை உலகிற்கு அளித்துள்ளது.

Dr.Anburaj said...

என்னைச் சந்திக்க வந்த ஒரு பெரியவரின் நெற்றியில் தழும்பு இருந்தது. முதலில் பொட்டு-குங்குமம் வைத்து ஏதோ புண்ணாகி இருக்க வேண்டும் என்று நினைத்த நான் அவரது பெயர் சாகுல் கமீது என்று தெரிந்ததும் ஆர்வத்தால் நெற்றியில் என்ன தழும்பு என்றுக் கேட்டேன். சதா ” தொழுவதால் -தரையில் நெற்றியை தொட்டு -தொழுவதால் ” நெற்றியில் காய்ப்பு எற்பட்டுள்ளது என்றார். நான் அதிசயத்துப்போனேன்.அவரை ஒரு புனிதராகவே நான் நினைத்தேன். காலில் விழுந்து வணங்கத்தக்க தகைமை உடைய ஒரு பெரியவராக அவரை நான் கருதுகின்றேன்.
தமிழ்நாட்டில் காயல் பட்டணம் என்ற ஊரில் உள்ள என் நண்பரின் கடைக்குச் சென்ற பொழுது பழைய புத்தகங்கள் மத்தியில் மறுமலர்ச்சி என்ற பத்திரிகையை எடுத்துப் படித்தேன். முஸ்லீம் பெண்கள் பொட்டு வைக்கலாமா ? என்ற கேள்விக்கு ”காபீர்களின் பழக்க வழக்கங்களை நாம் கைக்கொள்ளலாகாது ” என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஏன் இந்துக்களின் பழக்கங்கள் என்று சொல்லவில்லை என்று நினைத்து முஸ்லீம் சமய அரேபிய கலாச்சார நூல்களை படிக்க ஆரம்பித்தேன். என் மனதில் உள்ள சந்தேகங்களை எல்லாம் நிறைய தங்களிடம் கொட்டியிருக்கின்றேன்.
இந்துகளை காபீர் என்று கருதுவது பெரும் தவறு என்று இப்பொருள் குறித்து முஸலீம்களிடம் விவாதிப்பது வழக்கம். இதுவரை யாரும் - தாங்கள் உட்பட - இந்துக்களை காபீர் என்று சொல்ல மாட்டோம் என்றுக் கூறவில்லை. மனிதனின் செக்குமாட்டுத்தனத்திற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. எனது முயற்சியெல்லாம் வீண்தான். வானத்தை வளைத்து விடலாம். மண்ணைக கயிறாகத் திரி்த்து விடலாம். ஆனால் இந்துக்களை காபிர்கள் என்று சொல்லியே தீருவார்கள் அரேபியர்கள் -அரேபியர்கள் போல் நடிப்பவர்கள்.
இந்துக்கள் காபீர்களா ? எனது கெளரவத்தைப் பாதிக்கும் ஒரு கேள்வி . பதில் அளியுங்களேன்.

Dr.Anburaj said...

எனது கடிதங்களுக்கு வாசகர்களிடமிருந்து எந்தவிதமான கருத்துரையாடல்களும் வரவில்லையே ஏன் ? வாசகர்களே ! தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்ளைப் பதிவு செய்யுங்கள். நான் ஒரு இந்துசமய வெறியன் அல்ல.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad