அத்தியாயம் நான்கு........அன்னை ஆயிஷா (ரலி) ......மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்
சென்ற பதிவில்.......நான் என்னுடைய நண்பருக்கு இவற்றை விளக்கியவுடன் அவர் மீண்டும் அந்த முஸ்லிம் அறிஞருக்கு செல்பேசி அழைப்பை எடுத்து நான் சொன்ன விடயங்களை அக்குவேறு ஆணிவேராக விளக்கினார்.
அவரது விளக்கங்களைக் கேட்ட அந்த அறிஞர் சொன்ன விடயங்கள் நகைப்புக்கிடமானவை.
அப்படி அவர் என்னதான் சொன்னார்?

"உங்களது நண்பர் சொல்லும் விடயங்கள் அனைத்தும் உண்மையானவை.ஆனால்,அவற்றை நாம் பிரசித்தமாக பேசக் கூடாது.அதனை யாருக்கும் விளக்கமாக சொல்லிக் கொடுக்கவும் கூடாது. மீறி நாம் அப்படி செய்தால்,அது இஸ்லாத்துக்கு இழுக்கை கொண்டுவரும்.ஆகவே,இந்த விடயங்களில் நாம் மௌனம் காப்பதே சிறந்தது."
அந்த அறிஞரின் நிலையும் அவர் சொல்லுவதும் சரியானதா?
இல்லை....தவறானது! மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதும்கூட .!!
நாம் சர்ச்சைக்குரிய இந்த விடயங்களைத் தெளிவு படுத்தும் செய்கையில் புனித இஸ்லாத்தின் கௌரவமும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது கண்ணியமும் காக்கப் படுகின்ற செயல் விளைவுகளுக்கு களம் அமைக்கப் படுகிறது.
அதற்கு மாற்றமாக இந்தத் தவறான செய்திகளைக் கேட்டு மௌனித்துப் போகும் செய்கையானது இத்தகையத் தவறான செய்திகளுக்கு அங்கீகாரம் அளித்து ஏற்றுக் கொள்ளும் செயல் விளைவுகளுக்கு காரணமாக அமைந்துப் போகிறது.
அதனால் நாம் அறிந்த உண்மைகளை மக்கள் மயப் படுத்துவது அத்தியாவசியமாகிறது.