அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, August 13, 2013

ஈரான் தூதரகம் தடம் பிரளக் காரணம் என்ன?



கனடாவில் நடந்து முடிந்த பிரமாண்டமான 'குத்ஸ் தின' நிகழ்வுகள்.......


இமாம் கொமைனியின் ';பத்வா'வின் பிரகாரம் ரமழான் மாத இறுதி வெள்ளிக் கிழமை 'குத்ஸ்' தினமாக பிரகடனப் படுத்தப் பட்டு வருடந்தோறும் நினைவு படுத்தப் பட்டு வருகிறது.

நாமறிந்த 'சியொனிசத்துகும்' நாமறியாத 'சுதந்திர சிற்பிகளின்' இராஞ்சங்கத்துக்கும் எதிரான இந்த பிரகடனம் சென்ற வருத்துக்கு முந்திய வருடம் இலங்கையில்  இருக்கும் ஈரான் கலாசார நிலையத்தினால் இலங்கையில் இருக்கும் பிரபலங்களை அழைப்பிதல் அனுப்பி வர சொல்லி 'கஞ்சியை' மட்டும் வழங்கி விடியோ பண்ணி ஆஹா.......ஓஹோ' என்று கொண்டாடினார்கள்.

அந்த நிகழ்வு சம்பந்தமான 'அஹ்லுல்பைத் தமிழ்த் தளம் உற்சாகமாக  பதிவேற்றிய பதிவு இப்படி பதிவேறியது ...........



தலைப்பு :ஈரான் கலாசாரப் பிரிவு தடம் பிரளக் காரணம் என்ன? 

புனித ரமழானில் கடைசி வெள்ளிக் கிழமை குத்ஸ் தினம் நெகிழ்ச்சியான பாலஸ்தீன போராட்டத்தை நினைவு படுத்தும்.

பாலஸ்தீனம் சியோனிச பிடியில் இருந்தும், ப்ரீ மேசனின் நெறிப் படுத்தலில் இருந்தும் விடுவிக்கப் படும் வரை இந்த நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது அஹ்லுல்பைத்களின் அரசியலுக்கு புனர்நிர்மாணம் செய்த இமாம் கொமைனி அவர்களின் பத்வாவாக இருக்கிறது.

முதல் முறையாக இம்முறை இலங்கையில் இருக்கின்ற ஈரான் கலாசார நிலையத்தில் இருந்து குத்ஸ் நினைவு நிகழ்ச்சியில் பங்கு பற்றி சிறப்பிக்குமாறு எமக்கு ஒரு அழைப்பிதல் வந்தது.

நன்றி.

அழைப்பிதழில் இராஜாங்க வாடை வீசியது.

Dress code: Smart Casual என்று அணியும் ஆடைபற்றிய குறிப்பும் இருந்தது.

குத்ஸ் தினநிகழ்ச்சிகள் தடபுடலாக மெரைன் டிரைவ் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

ஐந்து நட்சத்திர பாணியில் இருந்த சாப்பாட்டு மேசை ஆசன ஏற்பாடுகள் உள்ளே நுழைவதற்கு கொஞ்சம் தயக்கத்தை ஏற்படுத்தியது.


அரசியல் தூதுவர்கள் கலந்துக் கொள்ளும் சிட்டிங் டின்னெர் முறையில் அந்த மண்டபம் அலங்கரிக்கப் பட்டு அனைத்து ஆசனங்களும் ஆடை அணிவிக்கப் பட்டு... இல்லை ...இல்லை...வெள்ளை துணியினால் போர்த்தப் பட்டு மேசைகளில் எல்லாம் ஐந்து முறை உணவு பரிமாறப் படுவது போன்ற தோரணையில் உணவுத் தட்டுக்களும் கைதுடைக்கும் துணிகளும் மிக அலங்காரமாக வைக்கப் பட்டிருந்தன.


பக்கத்தில் அரைக் கோப்பை கஞ்சியும், சில பேரீத்தப் பழங்களும் மூன்று சோர்ட் ஈட்ஸ் வகைகளும் ஒரு கிளாஸ் பலூடாவும் மேசையை இன்னும் அழகு படுத்தின.

ஒரே வயதுடைய இளைஞர்கள் சீருடையில் உணவு பரிமாற்ற தயாராக காத்திருந்தார்கள்.

அழைப்பிதழில் Dress Code பற்றி குறிப்பிட்டது நியாயம்தான். 

ஒரு புறம் குடும்பத்தவர்கள் சகிதம் வந்த சிலர் இருந்தார்கள்.

ஆண், பெண் சிறு பிள்ளைகள் என்று உற்சாகமாக இருந்த அவர்கள் யார் என்று பார்த்ததில் கலாசார நிலையம் வழங்க இருக்கின்ற பரிசில்களைப் பெற்றுக் கொள்ள வந்தவர்கள் என்று அறிந்தோம்.

என்ன பரிசில்கள் என்று ஆராய்ந்ததில், பாலஸ்தீன நினைவு சம்பந்தமாக ஒரு ஓவியப் போட்டி நடந்ததாகவும், அதில்பங்கு பற்றிய மாணவர்களில் வெற்றிப் பெற்ற பத்துப் பேர்களுக்கு பரிசில்கள் வழங்கப் படுவதாகும் அறிந்துக் கொண்டோம்.

இன்னொரு புறம் மீடியா குழுவினர் ஒலி, ஒளியில் கேமரா மைக் சகிதம் அசத்த தயாராக இருப்பது தெரிந்தது.

மீடியாக்கள் எவ்வாறு இப்படி மொய்த்தார்கள் என்று பார்த்ததில் ஈரான் கலாசார
நிலையத்தின் புதிய PRO நௌசார்ட் மொஹிதீன் என்று தெரிந்தது.

அந்த வைபவத்தில் ஊடகவியலாளர் நவ்சார்ட் மொகிதீனின் செல்வாக்கின் வலிமை புரிந்தது.

வைபவத்துக்கு நிறைய்ய்ய்ய்ய்ய்ய தனவந்தர்கள் வந்திருந்தார்கள்.சில அரசியல் வாதிகளும் வந்திருந்தார்கள்.

வைபவம் ஆரம்பமாகியது.

ஆச்சரியமாக ஈரான் தூதுவர் அவரது உரையை முடித்தவுடன் வெளியேறி சென்று விட்டார்.

பிரச்சாரகர்கள் பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி உணர்ச்சிவசப் பட்டவர்களாக பேசத் தொடங்கினார்கள்.

யாரும் அவற்றை சட்டை செய்ததாக தெரியவில்லை.

ஏனெனில், சிட்டிங் டின்னர் முறையில் சாப்பாட்டு மேசை தயார் செய்யப் பட்டிருந்த காரணத்தினால் ஒருவருக்கு எதிராக மற்றவர் அமர்ந்திருந்த காரணத்தால் அதுவும் கிட்டத்தட்ட எல்லாமே அறிமுகமான முகங்களாக இருந்த காரணத்தினால் அதிகமானவர்கள் தனவந்தர்கள் என்ற காரணத்தினால் தங்களுக்குள்ளேயே எல்லோரும் குசுகுசுக்க தொடங்கியிருந்தார்கள்.

பாலஸ்தீனும் மண்ணாங்கட்டியும்?

நிகழ்ச்சியை கவனிக்காத அவர்களின் குசு குசுப்பு நியாயமானது என்று சட்டென்று புரிந்தது.

எங்கோ தொலை தூரத்தில் இருக்கின்ற பாலஸ்தீன பிரச்சினையை இலங்கை ஈரான் கலாசார நிலையம் இலங்கையில்நினைவு படுத்தும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் பாலஸ்தீன தூதுவரலாயத்தில் இருந்து ஒரு கொசு கூட கலந்துக் கொள்ளவில்லை.

அவர்களுக்கே அவர்களைப் பற்றிய கவலை இல்லாத நிலையில் அவர்களைப் பற்றிய கவலைகளை வலிந்து நமது தனவந்தர்களின் உள்ளத்தில் திணிக்க முடியுமா?

என்றாலும், சில விடியோ கேமரா படப் பிடிப்பாளர்கள் வந்திருந்த கூட்டத்தையும், மேசை அலங்காரத்தையும் தங்களது கேமராவினுள் அவசர அவசரமாக உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பசி எங்களது வயிற்றைக் கிள்ள கேமராக்களோ எங்களை விழுங்கிக் கொண்டிருந்தன.

மக்ரிப் தொழுகைக்கு அதான் ஒலிக்கும் நேரம் வந்தது.

அரசியல் வாதிகளும் தனவந்தர்களும் செர்வியட்டை எடுத்து உதறி கழுத்தில் செருகிக் கொண்டார்கள்.

உணவு உண்ணும் பொழுது உணவுத் தெறிப்புகள் ஆடையில் பட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை காரணமாக அவர்கள் அப்படி செய்தார்கள்.

கழுத்தில் செர்வியட் மாட்டி உணவு உண்டு நமக்குப் பழக்கம் போதாது.

சங்கடத்துடன் சுற்றிலும் பார்த்தால் நிறையப் பேர் செர்வியட்டில் கை வைக்காதது தெரிந்தது.

அப்பாடா!

செர்வியட்டை கழுத்தில் செருகி கஞ்சிக் குடித்து முடிக்கும் பொழுது நௌசார்ட் மொகிதீனின் உற்சாகமான குரல் எங்கள் கவனத்தை ஈர்த்தது.

"ஈரான் கலாசார நிலையம் ஏற்பாடு செய்திருந்த குத்ஸ் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பத்து மாணவர்களுக்கு இப்பொழுது ஆளுக்கு ஐயாயிரம் ரூபா வீதம் பரிசளிக்கப் போகிறோம்"

நாம் பரிசு பெற்றவர்களைக் கவனிக்கத் தொடங்கினோம்.

அதில் எல்லோருமே கொழும்பை விட்டும் தூர இடத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.

அக்குரணை, திகாரிய, பாணந்துறை என்று அந்த இடங்கள் தூரப்படுகின்றன.

அதிலும் அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.

மகிந்த ராஜபக்ச அரசுக்கு டாலர்களை ட்ரில்லியன் கணக்கில் வாரி வழங்குகின்ற , நிறைய முஜ்தகித்களின் ஆதரவில் கோடிக் கணக்கில் நல்ல செயல்களுக்கு பணத்தை வாங்கி எடுக்கக் கூடிய அஹ்ளுல்பைத்களின் அரசியல் நாடொன்று இலங்கையில் பாலஸ்தீன மக்களின் துயரை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் நெகிழ்ச்சியான வாழ்க்கையை தூரிகைக்கு கொண்டு வந்த ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மெரைன் டிரைவ் சிட்டிங் டின்னர் பாணியில் அமைந்த ஒரு வைபவத்தில் வழங்கும் பரிசுத் தொகை வெறும் ஐயாயிரம் ரூபாய்?

பரிசுத் தொகை ஐயாயிரம் என்றவுடன் எனக்குப் பக்கத்தில் இருந்த கௌஸ் சேர் என் முகத்தைப் பார்த்தார்.

கௌஸ் சேர் எழுபதுகளில் ஈரான் புரட்சியில் மிகத் தீவிரமாக ஈடுபாடு  கொண்ட ஒரு போராளி.

ஈரான் தூதுவராலயத்தில் இப்பொழுதும் அவரது பேச்சுக்கு மதிப்பு இருக்கிறது

"பெரு நாள் உடை வாங்க செலவுக்கு கொடுக்கிறார்கள் போலும்" என்றேன்.

கௌஸ் சேர் பலமாக சிரித்தார்.

ஏமாற்றத்தை மறைக்க போலியாக சிரிப்போமே.அப்படியானதொரு வேதனை கலந்த சிரிப்பு.

அவசர அவசரமாக பரிசு கொடுத்தாயிற்று.

எல்லாவற்றையும் விடியோ எடுத்தாகியுமாகிவிட்டது.

நௌசார்ட் மொஹிதீன் ஒலிவாங்கியில் சொன்னார்."இப்பொழுது சலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெரும்"

ஈரான் தூதுவர் அவரது உரையை முடித்தவுடன் 'தட்டி மாறியதன்' இரகசியம் இதுதானோ?

 அவர்களது அழைப்புக்கு மரியாதைக் கொடுத்து குறைந்தது ஐநூறு ரூபா செலவழித்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் திகைத்தார்கள்.

நோன்பு துறக்க வர சொல்லி பசியுடன் திருப்பி அனுப்பும் இதென்ன இப்தார்.

அழைப்பிதல் அனுப்பாமல் பொதுவாக அறிவித்து இருந்தால் இந்த செய்கையில் ஒரு தவறும் இல்லை.

நேரம் செலவழித்து அழைப்பிதல் அனுப்பி, அதிலும் அணியவேண்டிய ஆடையைப் பற்றியும் குறிப்பிட்டு, இலட்சக் கணக்கு செலவழித்து மெரைன் டிரைவ் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து..................

இதென்ன நாடகம்?

நாடகத்தை அவர்கள் நடிப்பதில் ஒரு தவறும் இல்லை.

அவர்களது நாடகத்துக்கு எங்களது நேரத்தைக் கற்பழிக்க அவர்களுக்கு யார் அனுமதி வழங்கினார்கள்?

இலங்கையில் எந்த இடத்திலும் இருக்கின்ற உணவு சாலைகளில் இப்தாருக்கு கஞ்சும், பேரீத்தம் பழமும் ஒரு சோர்ட் ஈட்சும் இலவசமாக கிடைக்கும்.

ஆனாலும், யாரும் அந்த இலவச இப்தாருக்கு ஓடுவதாக  தெரியவில்லை.

அல்லாஹ்வுத்தாலா இலங்கை முஸ்லிம்களை அப்படியானதொரு சோதனையில் பரீட்சிக்கவில்லை.

இலங்கையின் தனவந்தர்களோ தாராள மனம் படைத்தவர்கள்.

நோன்பில் அவர்கள் அள்ளி அள்ளி வழங்கும் தயாலசீளர்கள்.

அன்றைய நிகழ்ச்சிக்கு வந்த பல தனவந்தர்களை எமக்கு தனிப் பட்டமுறையில் தெரியும்.

அன்றைய மெரைன் டிரைவ் மண்டபத்தின் செலவுகள் அவர்களைப் பொறுத்தவரை கிள்ளுக் கீரைக்கு சமம்.

அழைப்பிதழில் Dress Code யும் குறிப்பிட்டு ஐந்து நட்சத்திர பாணியில் மண்டபத்தையும் அலங்கரித்து பசியுடன் வந்த தனவந்தர்களை பசியுடன் திருப்பி அனுப்பி தண்டித்தது ஏன் என்று புரியவில்லை.

பரிசு பெற சிறுவர்களுடன் வந்த குடும்பத்தவர்களின் நிலை இதைவிடவும் மோசம்.

வந்த செலவு போக இப்பொழுது இரவு உணவு செலவும் சேர்ந்துவிட்டது.

யோசனையுடன் இருந்த கௌஸ் சேரிடம் கேட்டோம்."இதென்ன....?"

"எங்களை தந்திரமாக உபயோகித்துக் கொண்டார்கள்" கௌஸ் சேர் வேதனயுடன் தொடர்ந்தார்."இந்த வைபவத்தையும் இதனை விடியோ பண்ணிய வேகத்தையும் பார்த்தால் பெரியதொரு போலி பில்லை தயாரித்து அநீதமான முறையில் கணக்கை சேகரிக்கும் கணக்கொன்று நடக்கப் போகிறது" 

இதே போன்ற நிறைய ஊழல் பேர்வழிகளை பிடித்துக் கொடுத்தவர் அவர்.

அவர்  சொன்னால் சரியாக இருக்கும்.

ஜம்மியத்துல் குர் ஆன் ஆரிப் மௌலவியை துகிலுரித்த இளமையான அதே நவ்சார்ட் மொஹிதீன் உள்ளத்தின் இளமை மாறாமல் அதே வேகத்துடன் இன்னும் இருந்தால் சங்கடத்தில் தவிக்கப் போகின்ற ஈரான் கலாசார நிலையத்தின் எதிர்காலம் பற்றிய நினைப்புகள் எங்கள் முகத்தில் குறு நகையைக் கொண்டு வந்தது.

மரம் கொத்தி வாழை மரத்தைக் கொத்திய கதையாக இருக்குமா?

பொறுத்திருந்துப் பார்ப்போம். 

நாம் இரண்டு வருடங்கள் பொறுத்துப் பார்த்தோம்.

சகோதரர் நவ்சாட் மொஹிதீனுக்கு வயதாகி விட்டது.

அவர் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமலேயே 'ஓய்வு' கொண்டு ஓய்ந்துப் போய்விட்டார்.

கழுதைத் தேய்ந்து கட்டெரும்பானக் கதையாக இந்த வருடம் ஈரான் தூதரகமும் ஈரானின் ஆதரவில் ஆரம்பிக்கப் பட்டதாக சொல்லப் படுகின்ற 'முஸ்தபா' பல்கலைக் கழக கல்லூரியும் 'குத்ஸ்தினத்தை சுத்தமாக மறந்துப் போனார்கள்.

இதன் மர்மம் என்னவாக இருக்கும்.....?


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad