C.I.A. யின் கறிவேப்பிலையான கதாநாயகன்....??
ஒசாமா பின் லேடன் கொல்லப் பட்ட செய்தி கிடைத்தது.
மனத்தின் ஓரத்தில் மெலிதான ஒரு நெருடல்.
அமெரிக்காவின் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு பலி கடாவாக பயன்படுத்திக் கொள்ள தன்னையே தானமாக கொடுத்த அவரது நிலைப் பாடு அவரில் பரிதாபத்தைக் கொண்டு வந்தது.
தன்னைக் கொலை செய்ய இருப்பவர்களுடனேயே தான் இருக்கிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வு கூட இல்லாமல் அவர் இருந்து இருப்பதை அவரது பரிதாபகரமான மரணம் எமக்கு எடுத்து சொல்கிறது.
அவரது இரண்டு மனைவியரையும் ஆறு குழந்தைகளையும் பாகிஸ்தான் இராணுவம் கைது செய்துள்ளது.
அவரது இரண்டு மனைவியரையும் ஆறு குழந்தைகளையும் பாகிஸ்தான் இராணுவம் கைது செய்துள்ளது.
தன்னை நம்பியவர்களின் கழுத்தை அறுத்து ISI தனது சுய ரூபத்தை வெளிக் காட்டி இருக்கிறது.
இது தவிர, I.S.I. அமெரிக்காவுக்கு நன்றியுள்ள நாயாக தனது விசுவாசத்தை வெளிப் படுத்தியுள்ளது.
இந்தியாவின் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இது நல்லதொரு பாடம்.
பாகிஸ்தானின் இஸ்லாத்தை நம்பி மோசம் போய் விடாதீர்கள்.
'தனது குடும்பத்தவர்களின் பாதுகாப்பையே உறுதி செய்துக் கொள்ளத் தெரியாத உசாமா பின் லேடன் எப்படி உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தரப் போகிறார்?' என்கிற கேள்வி, அவரது மரணக் கதையில் தொக்கி நிற்கிறது.
பாவம் அல் கைதா கடை நிலை அங்கத்தவர்கள்.
பிடித்த கொப்பையும் இருந்த கொப்பை நம்பி கை விட்ட நிலையில் அவர்கள் தடுமாறிப் போய் இருப்பார்கள்.
மக்களுக்கு இவர்களின் இந்த இரகசியங்களை எப்படி புரிய வைப்பது?
பிடித்த கொப்பையும் இருந்த கொப்பை நம்பி கை விட்ட நிலையில் அவர்கள் தடுமாறிப் போய் இருப்பார்கள்.
மக்களுக்கு இவர்களின் இந்த இரகசியங்களை எப்படி புரிய வைப்பது?
C.I.A . உடைய ஏஜென்டாக செயல் பட்டவர் இந்த ஒசாமா பின் லேடன் என்றால் யாரும் நம்பப் போவது இல்லை.
அவரை இஸ்லாமிய விடுதலை வீரராக காட்டுவதில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் வெற்றி பெற்றுள்ளன.
அதே போல அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் அவரை அமெரிக்காவின் எதிரி என்று அச்சாணி குத்தி உலக பயங்கரவாதியாக செவ்வனே இனம் காட்டியும் இருக்கின்றன.
இந்த நிலையில், உண்மையை அறியாத உலக முஸ்லிம்கள் நீங்காத கவலையிலும் - சில நாள்களுக்கு மாத்திரம்- ஏமாந்து போன அமெரிக்கர்கள் குதூகலத்திலும் - சில நாள்களுக்கு மாத்திரம் - இருக்கப் போகிறார்கள்.
மக்களிடம் நாம், அவர் இஸ்லாத்தின் எதிரிகளின் பங்காளி என்று சொன்னால் எல்லோரும் அதிசயித்துப் போவார்கள்.
யாருமே நம்ப மாட்டார்கள்.
ஆனால், உண்மை அதுதான்.
C.I.A. உடைய பாதுகாப்பில் தான் அவர் இவ்வளவு காலமும் இருந்திருக்கிறார் என்பதை , பாக்கிஸ்தானில் அவரது மாளிகையில் வைத்து அவர் கொல்லப் பட்ட செய்தி ஒன்றே எடுத்துச் சொல்ல போதுமான ஆதாரமாகும்.
'மறைமுக சக்திகளினதும்', 'ப்ரீ மேசனினதும்' நிலைப் பாடுகள் அவர்களது தளங்களில் ஆட்டம் காணும் பொழுது அவர்கள் இப்படியான நாடகங்களை திறமையாக அரங்கேற்றுவார்கள்.
'ப்ரீ மேசனுடைய' இந்தக் காய் நகர்த்தலின் பின்னணியில் என்ன செய்தி ஒளிந்திருக்கிறது என்பது இன்னும் கொஞ்ச நாள்களில் தெரிந்து விடும்.
நிஜத்தில், ஒசாமாவை விடவும் அவரது கதாபாத்திரம் தான் அமெரிக்காவுக்கு அதனது செயல்களை நியாயப் படுத்த தேவையாக இருந்து இருக்கிறது.
இன்று 'ப்ரீ மேசனுக்கும்' 'மறைமுக சக்திகளுக்கும்' எதிரான கருத்துக்கள் மேற்கிலேயே வலுப் பெற்று வருகின்றன.
இந்த நிலையில், அவர்களின் சில இரகசியங்களை பாது காத்துக் கொள்வதற்காக பின் லேடன் என்கிற கதா பத்திரம் கொல்லப் படவேண்டிய கட்டாயத்தில் இருப்பது என்னவோ உண்மை.
எது எப்படிப் போனாலும், ஒசாமா கொல்லப் பட்டது (???) மட்டும் உண்மையானால், அவரது படு கொலை அவரைப் போல மேற்குக்கு விலையாகி இருக்கின்ற எங்களது தலைவர்களுக்கு ஒரு அபாய சங்காகும்.
அமெரிக்காவை நம்பி ஏமாந்து போன அவரது இழப்பு அமெரிக்காவை நம்பிக் கொண்டு இஸ்லாத்தைப் பாதுகாக்க நினைக்கும் எங்களது தலைவர்களுக்கு ஒரு நல்ல பாடமாகும்.
இரகசியங்களை நன்கு புரிந்துக் கொண்ட எங்களது இஸ்லாமிய இயக்கங்களும், அதன் தலைவர்களும் இனியாவது விழித்துக் கொள்வார்களா?
No comments:
Post a Comment