அஹ்லுல்பைத் Headline Animator

Monday, June 13, 2011

"'மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்ற முதல் முஸ்லிம்" ----'ரஜப்' அவர் பிறந்த மாதம் -

"'மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்ற முதல் முஸ்லிம்" ----'ரஜப்' அவர் பிறந்த மாதம் -



இஸ்லாத்தின் முதல் முஸ்லிமும், மறுமையில் ஹவ்லுல் கவ்தரில் முதன் முதலில் தண்ணீர் அருந்தும் பாக்கியம் பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்களால்  நன்மாராயம்  சொல்லப் பட்டவருமான இமாம் அலி அவர்கள் ரஜப் மாதம் பிறை பன்னிரெண்டில்  இந்த உலகில் பிறந்தார்கள்.

அவர் பிறந்த அக்கால ஐயாமுல் ஜாஹிலிய்யா அராபியாவில் வழக்கில் இருந்த கொள்கைகளில் பிரதானமான கொள்கைகளில் ஒன்று ,அவர்கள்  அவர்களது மூதாதையர்களை கண்மூடித்தனமாக நம்பி அவர்களை பின்பற்றுவது ஆகும்.

"எங்களது மூதாதையர்கள் நேர் வழி நின்றவர்கள். அப்பழுக்கு இல்லாத அவர்களையே நாம் பின்பற்றுவோம்" என்கிற கொள்கை அழுத்தம் திருத்தமாக அன்றைய அராபியாவிலே நிலவியது.

ஆனால், நபித்துவ அழைப்பை தத்துவரீதியாக சிந்தித்த பத்து வயது நிரம்பிய இமாம் அலி , சிறு வயதிலேயே  அக்கால அராபிய கொள்கைகளுக்கு எதிராக ஒரு முடிவு எடுக்கிறார்.

பதின் மூன்று வருடங்களாக மக்கத்து அராபியர்களுக்கு புலப் படாத சத்தியங்கள் அந்த பத்து வயது சிறுவர் இமாம் அலிக்கு ஒரு நாளில் புலப்பட்டது எப்படி என்கிற ஆய்வு , சிறுவர் இமாம் அலியின் தர்க்கவியல் அடிப்படையில் முடிவு எடுக்கும் திறமைக்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்துக் கொண்டு இருக்கிறது.

தம்மை கட்டிப் போட்டு இருக்கிற நம்பிக்கைகளுக்கு முரணாக சிந்திக்கவே தயங்கிய அந்த அராபிய சமூகத்தில் , துணிந்து அவர் எடுத்த முடிவு ஆச்சரியமானது.

மூதாதையர்களை அச்சொட்டாக பின்பற்றுகின்ற வழமை இன்று கூட   எங்களிடையேயும்  நிலவுகிறது.


இந்த நிலையில், மூதாதையர்களின் மதத்துக்கு எதிராக நம்பிக்கைக் கொண்டு அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு புத்திசாலித்தனமான துணிவும் , தர்க்கவியலாக முடிவு எடுக்கும் திறமையும்,சவால்களை சமாளிக்கும் தைரியமும் வேண்டி நிற்கப்படுகிறது.

அறிவியல்  யுகத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் நாமே,இஸ்லாத்தில் நாம் அறியாமல் இருக்கின்ற சில நிஜங்கள் எம் மத்தியில் தோலுரித்து காட்டப் படும் கணங்களில்,  நம்மை கட்டிப் போட்டு இருக்கிற சில நம்பிக்கைகளை புறந்தள்ளி விட்டு வெளியே வருவதற்கு தயாராக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலையில்,  அக்கால ஐயாமுல் ஜாஹிளிய்யாவில் அசாத்தியமான அத்தகைய முடிவு எடுப்பதற்கு யாரும் துணிவது இல்லை.

நபி (ஸல்) அவர்களின் ,ஆரம்ப பதின் மூன்று வருடங்களில் சுமார் நூற்று ஐம்பது பேர்களே இஸ்லாத்தை ஏற்று இருப்பது இதற்கு வலுவான ஆதாரமாக இருக்கிறது.
ஆனால், சிறுவர் இமாம் அலி அதற்கு நேர் விரோதமாக இருந்து இருக்கிறார்.

முஹம்மத் (ஸல்)  அவர்களும், அன்னை கதீஜா (அலை) அவர்களும் தொழுதுக் கொண்டு இருக்கும் பொழுது, அந்த அறையினுள் சிறுவர் அலி நுழைந்து இருக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடியும் வரை அவர் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

அவர்கள் தொழுது முடிந்ததும், "நீங்கள் யாருக்கு சுஜூது செய்தீர்கள்?" என்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு இருக்கிறார்.

"நாம் சுஜூது செய்தது எங்களைப் படைத்த அல்லாஹ்வுக்கு." என்று மறு மொழி கூறிய நபி (ஸல்)  அவர்கள் தொடர்ந்து "அந்த அல்லாஹ் என்னை அவனது தூதராக தெரிவு செய்திருக்கிறான்.மக்களை அவன் பால் அழைப்பதற்கும் கட்டளைப் பிறப்பித்து இருக்கிறான்."என்று சொன்னார்கள்.

இமாம் அலி ஆச்சரியத்துடன் நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு இருந்து இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அதன் பின்னர் அவருக்கு அருளப் பட்ட அல் குரான் ஆயத்துக்களை ஓதிக் காட்டி , புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இமாம் அலி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

இமாம் அலி அவர்கள் நபி (ஸல்) அவர்களால் ஓதப்பட்ட அல் குரான் ஆயத்துக்களால் வசீகரிக்கப் பட்டு அப்படியே மெய் மறந்து போனார்கள்.

என்றாலும், அவர் உணர்ச்சிகளுக்கு அடிமைப் பட்டு அல்லது நபி (ஸல்) அவர்களின் செல்வாக்குக்கு கட்டுப் பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை உடனே ஏற்றுக் கொள்ள வில்லை.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நபி (ஸல்) அவர்களிடம் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் ,தனது தந்தை அபூதாலிப் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து கொஞ்சம் யோசிப்பதற்கு கால அவகாசம் கேட்டு இருக்கிறார்.

சிறுவர் இமாம் அலி அன்று இரவு முழுதும் நபி (ஸல்) அவர்களின் அழைப்பைப் பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டு இன்னதென்று வர்ணிக்க முடியாத எழுச்சியான , உற்சாகமான ஒருவகையான மன நிலையில் விடிவை எதிர்பார்த்து தவிப்புடன் இருந்து இருக்கிறார்.


அடுத்த நாள் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்.

அவர், அவரது புதிய மார்க்கத்தை அவரது தந்தை அபூதாலிபின் ஆலோசனையைப் பெறாமலேயே ஏற்றுக் கொள்கிறார்.

பின்னொரு நாள், அவரிடம் அவரது இந்த செய்கைப் பற்றி காரணம் கேட்கப் பட்டது.

அப்பொழுது அவர் "அல்லாஹ் என்னை , எனது தந்தை அபூதாலிபினுடன் ஆலோசிக்காமல் தான் பிறக்கச் செய்தான்.ஆகவே, அல்லாஹ்வை வணங்குவதற்காக  நான் எதற்காக எனது தந்தையுடன் ஆலோசிக்க வேண்டும்"என்றார்.
 (ஆதாரம்: டாக்டர் முஹம்மத் ஹுசைன் ஹைக்கால் எழுதிய "நபிகளாரின் வாழ்க்கை வரலாறு" (ஹயாத் முஹம்மத்)

இது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அவர் நிலைப் பற்றி அவர் சொன்ன சிறு குறிப்பாகும்.இந்தக் குறிப்பில் சிறு வயதிலேயே சுதந்திரமாக சிந்தித்து முடிவு எடுக்கும் அவரது  ஆழ்ந்த அறிவுப் புலன்  எது வித மறுப்புகளும் இன்றி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் புலப்படுகிறது.

அலி அவரது தந்தை மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.

மகனின் நலனில் தந்தை கொண்டிருக்கும் ஆளுமையையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

சரியான தெளிவுகள் இல்லாமல் சிக்கலான கட்டங்களில் தந்தையின் ஆலோசனையைப் பெற்று அதன் வழி நடந்து தந்தைக்கு மகன் முழுமையாக கட்டுப் பட வேண்டும் என்றும் அவர் தெரிந்து வைத்து இருந்தார்.

ஆனால்,  எதுவித குழப்பங்களும் இன்றி மிகத் தெளிவாக சத்தியம் புலப்படும் பொழுது அந்த கட்டங்களில் முடிவு எடுப்பதற்கு தந்தையின் ஆலோசனை அவசியம் இல்லை என்பதை அவரது செயல் எமக்கு புலப்படுத்துகிறது.

 இமாம் அலி அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களும், அவர்கள்  சொன்ன உண்மையும் பகல் பொழுதில் பிரகாசிக்கும் பகலவனைப் போல தெளிவானது.

அதனால், அல்லாஹ்வின் அழைப்பைப் பற்றி ஆலோசிப்பதற்கு அவருக்கு யாருமே அவசியப் படவில்லை.

அதனால், நபி (ஸல்) அவர்களின் அழைப்புக்கு சாதகமாக அவர்கள் பதில் சொல்கிறார்கள்.

சிறுவர் அலியை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் விடுத்த அழைப்பானது, நபி (ஸல்) அவர்கள், சிறுவர் அலி அவர்களை பத்தோடு பதினொன்றான சாதாரணதொரு சிறுவராக கணிக்க வில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இமாம் அலியைத் தவிர வேறு எந்த சிறுவரையும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழைக்கவில்லை என்பதையும் நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ  அழைப்பில் அவர்கள்  ஆண்களையும் , பெண்களையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியிருக்கிறார்கள்.ஏனெனில்,இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் அவர்களைப் பின் பற்றி அவர்களின் குழந்தைகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.

இது தவிர, சிறுவர்களுக்கு சுயமாக சிந்தித்து முக்கியமான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால், இதற்கு விதி விலக்காக நபி (ஸல) அவர்கள் சிறுவர் இமாம் அலிக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறார்கள்.

பத்து வயதே நிரம்பிய அசாதாரமான சிறுவர் இமாம் அலி அவர்களும், ஓரிரவு ஆழ்ந்து சிந்தித்து விட்டு அடுத்த நாளே புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அது மட்டுமன்றி, நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு ஆண் மகனையும் இஸ்லாத்துக்கு அழைப்பதற்கு முன்னர் சிறுவர் இமாம் அலிக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறார்கள்.

அந்த வகையில் முதல் முஸ்லிம் என்கிற கௌரவமான பட்டத்துக்கு இமாம் அலி உரித்தாகிறார்.

ஆண்களில் முதலாவது முஸ்லிம் இமாம் அலி அவர்களாகும். முதன் முதலில் இஸ்லாத்தை தழுவிய அவர் தனது பத்தாவது வயதிலேயே நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக தொழுது இருக்கிறார்.
(ஆதாரம்: இப்னு ஹுசாம்முடைய 'அல் சீராத்' (நபிகளாரின் வாழ்க்கை வரலாறு) பாகம் ஒன்று பக்கம் 245 ) 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

"நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் 'திங்கட் கிழமை'  அருளப் பட்டது.அலி அவர்கள் நபி (ஸல்) அவர்களை 'செவ்வாய்க் கிழமை ' ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தை தழுவுகிறார்கள்"
(ஆதாரம்: அல் ஹகீம் அல் முஸ்ததர்க் பாகம்: 03 பக்கம்:  112 )

முஹம்மத் இப்னு மாஜாஹ் தனது சுனன்னிலும், அல் ஹகீம் தனது முஸ்ததார்க்கிலும் பின் வருமாறு பதிந்து வைத்து இருக்கிறார்கள்.

அலி அவர்கள் அறிவிப்பதாவது" நான் அல்லாஹ்வின் ஊழியனும், நபி (ஸல்) அவர்களின் சகோதரனும்,  நபித்துவத்தில் மற்ற அனைவரை விடவும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவனாவேன்.(அதாவது என்னை மாத்திரமே 'சித்தீக் ' என்று அழைக்க முடியும்)

எனக்குப் பின்னால் வேறு யாராவது தன்னை 'சித்தீக்' என்று அழைத்துக் கொண்டால் அவன் ஒரு பொய்யனாகும்.நான் ஏனையவர்கள் தொழுவதற்கு ஏழு வருடங்களுக்கு முன்னரேயே தொழத் தொடங்கியும்  விட்டேன்" 
 (ஆதாரம்: இப்னு மாஜாஹ்- ஸுனன் இப்னு மாஜாஹ் பாகம்: 01  பக்கம்: 44     ஹதீத்: 120)

நபி (ஸல்)  அவர்கள் சொன்னதாக சல்மான் அல் பார்ஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

"மறுமை நாளில் , என்னுடைய ஹவ்லுல்  கவ்தரில் முதன் முதலில் நீர் அருந்தும் பாக்கியம் உங்களில் முதல் முஸ்லிமான அலி இப்னு அபூதாலிபுக்கே கிடைக்கும்."  
(ஆதாரம்: அல் ஹகீம் அல் முஸ்ததர்க் பாகம்: 03 பக்கம்:  112 )
நபி (ஸல்) அவர்கள் தனது அருமை மகள் பாத்திமா (அலை) அவர்களுக்கு கூறியதாக  மாகால் இப்னு யாசர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

" நான் உங்களை திருமணம் முடித்து வைத்த உங்களது மணாளனைப் பற்றி நீங்கள் மகிழ வில்லையா? அவர்தான்  எனது சமூகத்தின் முதலாவது முஸ்லிமாகும்.அது மட்டுமன்றி, அவரே என்னுடைய சமூகத்தினரில் அனைவரையும் விட அறிவிலும், ஞானத்திலும் முதன்மையானவர்"
 (ஆதாரம்: இமாம் அஹ்மத் அல் முஸ்னத் பாகம்: 03 பக்கம்:  136 )

உமையாக்களின் அஹ்லுல் பைத்களுக்கு எதிரான அரசியல் காய் நகர்த்தலின் விளைவாக இமாம் அலி அவர்கள் இஸ்லாத்தில் 'முதல் முஸ்லிம்' என்கிற பெருமைக்குரிய விடயம் மிகவும் சூட்சுமமாக சிதைக்கப் பட்டது.

அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் பொருந்திய இந்த அந்தஸ்த்து வயோதிகர்களில் முதல் முஸ்லிம் அபூபக்கர் (ரலி) எனவும், அடிமைகளில் முதல் முஸ்லிம் ஜைத் (ரலி) எனவும், பெண்களில்  முதல் முஸ்லிம் அன்னை கதீஜா (அலை) எனவும், சிறுவர்களில் முதல் முஸ்லிம் இமாம் அலி எனவும் பல கூறுகளாக பிரிக்கப் பட்டு வகை படுத்தப்பட்டன.

அதன் பின்னர் , முதல் முஸ்லிம் என்கிற அந்தஸ்த்து எல்ல தரத்தில் உள்ளவர்களுக்கும் ஒரே மாதிரி வழங்கப் பட்டது.

அனைவரும் ஒரே விதமாகவும் கணிக்கப் பட்டார்கள்.

இப்பொழுது , இந்த முக்கிய விடயம் பற்றி யாருமே அலட்டிக் கொள்ளாத நிலைமை கருக்கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய   விடயமாகும்.

11 comments:

Dr.Anburaj said...

I do not believe in the day of Judgement.It is a downright superstition.On what basis God would judge people on Judgement day. Human society is not made in a day.It is evolving socially,cultually,religiously and politically.If Judgement day is to be true, God must have given birth to a highly developed human society and the perfect code of social condut on that basis judgement day would be held.In reality it is not so.Even today several parts of the world is inhabited by Tribes,who do not know dress ie they live naked.The mercy of God has not yet reached them .why ? Why no prophet was sent to Andaman, Africa ? Swami Vivekananda says Mohammed stumpled on certain spiritual experiences .He sometimes speak like anm insane man.He had hallucinations.Judgement day/concept of Paradise/hell is the imagination of a insane mind.A story to frighten childrens.

Dr.Anburaj said...

I am ready to give my cell No.,if you want a proof.

அஹ்லுல்பைத் said...

அன்புள்ள எனது இனிய இணைய நண்பன் டாக்டர் அன்புராஜுக்கு அன்புடன் எழுதிக் கொள்வது என்னவென்றால்..........:

உங்களது நம்பகத் தன்மையில் எமக்கு ஒரு குழப்பமும் இல்லை.

நீங்கள் உங்களை பகிரங்கமாக வெளிக் காட்டவேண்டிய அவசியமும் இல்லை.

உண்மைகளைத் தேடிய எங்களது பயணத்தில் எங்களது நேரம் மட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது.

இஸ்லாம் அனைத்து விதமான அடக்கு முறைகளுக்கும், அநீதிகளுக்கும், அசத்தியங்களுக்கும் எதிரானது.

படைத்த இறைவனை அறிந்துக் கொள்ளவேண்டிய வழி முறைகளில் அவனை சரியான முறையில் இனம் காட்டிய ஒரு மகானினதும், அதே விதமான தலைமைத்துவத்தை கொண்டிருந்த மகோன்னிதமான அவரது குடும்பத்தினருக்கும் எதிராகவே அப்போதைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

அந்த ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் பெயரில் ஒளிந்துக்கொண்டிருந்த இஸ்லாத்தின் எதிரிகளாவார்கள்.

அந்த எதிரிகளை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டியது எமது பணி என்று உறுதியாக நம்புகிறோம்.

அதனைத்தான் செய்துக் கொண்டும் இருக்கிறோம்.

எங்களது இந்தப் பயணத்தில் திடீரென ஏதோ ஒரு விதத்தில் நாம் சந்தித்துக் கொண்டோம்.

இதில் இறைவனின் நாட்டம் என்னதென்று நாமறியோம்.

உண்மைகளை அறிந்துக் கொள்ள வேண்டும் என்கிற உங்களது இதய நாதம் எமக்குப் புரிகிறது.

அதனைப் புரிந்துக் கொள்ளாத எமது நண்பர் ஒருவர் சொன்ன விடயத்தைத்தான் நாம் பதிவேற்றினோம்.

அது உங்கள் மனத்தை நோவித்திருந்தால் அதற்காக உங்களிடம் மிகத் தாழ்மையுடன் மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்.

எம்முடைய ஆசிரியர் ஒருவர் ஒரு முறை சண்டை பிடித்துக் கொண்ட எங்களது இரண்டு நண்பர்களை அழைத்து சொன்னார்..."மனிதர்களில் சிறந்தவன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன்"

நண்பர்கள் இருவரும் உடனே ஒருவர் மற்றவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினர்.

ஆசிரியர் மீண்டும் சொன்னார்."அவனை விட சிறந்தவன் மன்னிக்கத் தெரிந்தவன்..."

நீங்கள் சிறந்தவனிலும் சிறந்த மனிதன் என்று நம்புகிறோம்.

வணக்கத்துடன்.........

அஹ்லுல்பைத் தமிழ் தளம்.

அஹ்லுல்பைத் said...

அன்புள்ள எனது இனிய இணைய நண்பன் டாக்டர் அன்புராஜுக்கு அன்புடன் எழுதிக் கொள்வது என்னவென்றால்..........:

உங்களது நம்பகத் தன்மையில் எமக்கு ஒரு குழப்பமும் இல்லை.

நீங்கள் உங்களை பகிரங்கமாக வெளிக் காட்டவேண்டிய அவசியமும் இல்லை.

உண்மைகளைத் தேடிய எங்களது பயணத்தில் எங்களது நேரம் மட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது.

இஸ்லாம் அனைத்து விதமான அடக்கு முறைகளுக்கும், அநீதிகளுக்கும், அசத்தியங்களுக்கும் எதிரானது.

படைத்த இறைவனை அறிந்துக் கொள்ளவேண்டிய வழி முறைகளில் அவனை சரியான முறையில் இனம் காட்டிய ஒரு மகானினதும், அதே விதமான தலைமைத்துவத்தை கொண்டிருந்த மகோன்னிதமான அவரது குடும்பத்தினருக்கும் எதிராகவே அப்போதைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

அந்த ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் பெயரில் ஒளிந்துக்கொண்டிருந்த இஸ்லாத்தின் எதிரிகளாவார்கள்.

அந்த எதிரிகளை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டியது எமது பணி என்று உறுதியாக நம்புகிறோம்.

அதனைத்தான் செய்துக் கொண்டும் இருக்கிறோம்.

எங்களது இந்தப் பயணத்தில் திடீரென ஏதோ ஒரு விதத்தில் நாம் சந்தித்துக் கொண்டோம்.

இதில் இறைவனின் நாட்டம் என்னதென்று நாமறியோம்.

உண்மைகளை அறிந்துக் கொள்ள வேண்டும் என்கிற உங்களது இதய நாதம் எமக்குப் புரிகிறது.

அதனைப் புரிந்துக் கொள்ளாத எமது நண்பர் ஒருவர் சொன்ன விடயத்தைத்தான் நாம் பதிவேற்றினோம்.

அது உங்கள் மனத்தை நோவித்திருந்தால் அதற்காக உங்களிடம் மிகத் தாழ்மையுடன் மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்.

எம்முடைய ஆசிரியர் ஒருவர் ஒரு முறை சண்டை பிடித்துக் கொண்ட எங்களது இரண்டு நண்பர்களை அழைத்து சொன்னார்..."மனிதர்களில் சிறந்தவன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன்"

நண்பர்கள் இருவரும் உடனே ஒருவர் மற்றவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினர்.

ஆசிரியர் மீண்டும் சொன்னார்."அவனை விட சிறந்தவன் மன்னிக்கத் தெரிந்தவன்..."

நீங்கள் சிறந்தவனிலும் சிறந்த மனிதன் என்று நம்புகிறோம்.

வணக்கத்துடன்.........

அஹ்லுல்பைத் தமிழ் தளம்.

Dr.Anburaj said...

Thank you for your kind reply.

Dr.Anburaj said...

Www.alisina.org web : Allah would give 72 horis women who could restore their virginity after every coitus, to each male inmate of jannat/heaven.Is it true ? What would a woman inmate get ? The description of jannat available in Islamic literature is downright nonsense.

அஹ்லுல்பைத் said...

எமது நண்பர் அன்புராஜின் கேள்வியில் மறைந்துள்ள இன்னொரு கேள்வி.......பெண் விடுதலைக்கு களம் அமைத்த இஸ்லாம் சொல்லும் சுவனத்தில் மீண்டும் பெண் அடிமைத்தனமா?

மன்னிக்கவும்......சுவனத்து ஹுருளீன்களைப் பற்றி நான் இன்னும் நினைத்துப் பார்க்கவில்லை.

டாக்டர் அன்புராஜின் கேள்வியில் அர்த்தம் உள்ளது.

சில சமயம் பல பதிவுகளை பதிலாக பதிவேற்றுகின்ற கேள்வியாக அது இருக்கலாம்.

பதில் சொல்ல எனக்கு கொஞ்ச கால அவகாசம் ஆய்வுக்காக தேவைப் படுகின்றது.

இப்பொழுது அன்னை கதீஜா (அலை) அவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு பதில் சொல் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

விரைவில் நீங்கள் திருப்தியடையும் பதிலுடன் சந்திக்கின்றேன்.

வணக்கத்துடன் .......

அஹ்லுல்பைத் தமிழ் தளம்.

அஹ்லுல்பைத் said...

எமது நண்பர் அன்புராஜின் கேள்வியில் மறைந்துள்ள இன்னொரு கேள்வி.......பெண் விடுதலைக்கு களம் அமைத்த இஸ்லாம் சொல்லும் சுவனத்தில் மீண்டும் பெண் அடிமைத்தனமா?

மன்னிக்கவும்......சுவனத்து ஹுருளீன்களைப் பற்றி நான் இன்னும் நினைத்துப் பார்க்கவில்லை.

டாக்டர் அன்புராஜின் கேள்வியில் அர்த்தம் உள்ளது.

சில சமயம் பல பதிவுகளை பதிலாக பதிவேற்றுகின்ற கேள்வியாக அது இருக்கலாம்.

பதில் சொல்ல எனக்கு கொஞ்ச கால அவகாசம் ஆய்வுக்காக தேவைப் படுகின்றது.

இப்பொழுது அன்னை கதீஜா (அலை) அவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு பதில் சொல் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

விரைவில் நீங்கள் திருப்தியடையும் பதிலுடன் சந்திக்கின்றேன்.

வணக்கத்துடன் .......

அஹ்லுல்பைத் தமிழ் தளம்.

Dr.Anburaj said...

Please explain Quranic verse " You have nothing to hide from your legally wed wife/wifes and women slaves/war captives.Is not this verse barbaric and inhuman ?.Does it justify rape of women who are wives and sisters of soldiers/members of a clan /who fought against a King / Leader.Those who had refused to accept Islam were subjected to inhuman harassments-this verse advocates cruel harassment to others/kafirs/non-muslims.That is why in India women suffered a lot ..lot..lot during foreign invasion especially those who know Namas and Quran,.I am waiting for your reply. Mohammed married Tmt.Kathija. The age of the bride is irrelevant and non-issue.Because they lived happily.Mohammed was chaste/ monogamous as long as Tmt.Kathija was alive.I harly understand your reply "the world is following " Islam of Abusubiyan ".Is there any other version of Islamic History- Biography of Mohammed and Quran.Shia Muslim.Sunni Muslim,Sufi Muslim.Quadian Muslim( One of my class mate is a Ahamathiya Muslim) Dharka worshiping Muslims,.... the list goes on I think.some dissatifaction is at the root of all this factions/ or growths god knows better. In my opinion the web newageislam is far more advance and highly responsible. But you seems to be swimming in the Arab History Well,like frog. Sorry if it offends you. But I would like to register my opinion.. Let us continue our correspondence,

Dr.Anburaj said...

Hooruns in Jannath -Please explain.

Dr.Anburaj said...

Islam and Arabia is same side of a single coin.So
1.Arab culture customs and beliefs are alone approved by Allah. No other culture is approved by Arab Allah. What a foolish belief. The Arab God Allah give to all the male inmates of Jannath 100 fold sexual power and 72 horis women -women with perunnal virginity-,who would restore their virginity after every intercourse.What would Arab Allah give to women inmates of Jannath ? Please answer my question at once. I am so eager about it.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad