அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, February 7, 2012

அன்னை கதீஜா (அலை) அவர்களின் திருமண வயது...........குழப்பத்துக்கு ஒரு தீர்வு....?????!!!!!!





எமக்குக் கிடைத்த தகவல்களின்  படியும் அநேக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப் படியும் அன்னை கதீஜா (அலை) அவர்களை நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரியும் பொழுது அன்னை கதீஜா (அலை) அவர்களின் வயது நாற்பது.

நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் இருபத்து ஐந்து வயது இளைஞராக இருந்து இருக்கிறார்கள்.

அன்னை கதீஜா (அலை) நாற்பது வயது நிறைந்த மூதாட்டியாக இருந்து இருக்கிறார்கள்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் ஒரு முறை இந்தியாவைச் சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர் தனது பகிரங்க பிரசங்கம் ஒன்றில் இந்த வயது வித்தியாசத்தை இப்படி நியாயப் படுத்துவதைக் கேட்டு நானும் அப்படியே பலரிடம் காவிக் கொண்டு சொல்லியிருக்கிறேன்.

"தன்னை விட வயதில் மூத்த, நாற்பது வயதுப் பெண்ணை எங்கள் நபி நாயகம் சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரிந்ததில் ஒரு இரகசியம் பொதிந்து இருக்கிறது.அன்னை கதீஜா அவர்கள் வயதில் மூத்த தன்னை நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரிந்துக் கொண்டதற்கு நன்றிக் கடனாக ஒரு தாயாரைப் போல அவரைக் கவனித்துக் கொண்டார்கள்.அதனால் தான் அவர்கள் தினமும் ஹிரா குகைக்கு நபிசல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்களுக்கு தேவையான  உணவை ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்து  இருக்கிறார்கள்.ஒரு இளம் பெண்ணிடம் எங்களால் இவ்வாறான தியாகத்தை எதிர்பார்க்க முடியாது...."

இந்தக் கருத்தின் தரம் தாழ்ந்த பொருள் வடிவம்  இப்பொழுதுதான் எனக்கும் புரிகிறது.


ஒரு இளம் பெண் இவ்வாறான தியாகத்தை தனது கணவனுக்கு செய்திருந்தால் அதில் இழைந்து இருக்கின்ற அழகிய காதலின் இனிமையான உணர்வின் ஸ்பரிசம் எப்படி இருக்கும் என்று அந்த அறிஞருக்குப் புரிந்திருக்கவில்லை.

அவர் காதலித்து இருக்க மாட்டார்.

அதனால், அவர் தான் அறிந்திருந்த தாய்மையின் அன்புடன் அந்தத் தியாகத்தை ஒப்பிட்டு இருக்கிறார்.

எனக்கும் இப்பொழுதுதான் அந்தக் காதல் கதையின் ஆழம் , அதன் இலாவகம் ,அதில் பொதிந்திருந்த தியாகம்,  காதலின் முன்னால் எல்லாமே துச்சம் என்கிற வேகம் புரிந்தது.

மூச்சு முட்ட முழங்காலில் கைகளை வைத்து மெது மெதுவாக ஏறி ஹிரா குகையை தரிசித்த ஹாஜிகளிடம் கேட்டுப் பாருங்கள்.

அந்த மலையில் ஏறுவதில் உள்ள சிரமங்களை மூச்சு வாங்கி விபரிப்பார்கள்.


அன்னை கதீஜா (அலை) அவர்களினதும் நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்களினதும் தூய்மையான அந்தக் காதலின் வேகத்தின் முன்னால் ஹிரா மலைகூட பணிந்துப் போனது.


அந்தக் காதலின் தியாகத்தின் முன்னால் பாலைவன வெய்யில் கூட காஸ்மீரின் குளிராக சிலிர்த்துப் போன கதைதான் நிஜமானது. 

எனக்கு மட்டுமல்ல, காதலின் இனிமையை சுவைத்த அனைவருக்கும் அந்த உணர்வுகளின் நளினமான ஸ்பரிசம் புரிந்துப் போகும்.

ரோஜாவின் மெல்   இதழை விட மெலிதான அற்புதமான காதல் உணர்வை சிதைத்து சின்னா  பின்னப் படுத்திய பரிதாபகரமான அநியாயத்தை அன்னை கதீஜா (அலை௦) அவர்களினதும் நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்களினதும் திருமணக் கதையில் வரலாறு பலவந்தமாக திணித்தது.

வரலாற்று ஆசிரியர்கள் இந்த வயதை அடிக்கடி தமது வரலாற்றுப் புத்தகங்களில் எழுதிய காரணத்தாலும், அதனைப் பிரச்சாரகர்கள் அடிக்கடி எடுத்து சொன்ன காரணங்களினாலும் இன்று நம் மத்தியில் 'வஹி' அருளப் பட்டதைப் போல இந்த நாற்பது வயதுக் கதைக்கு வலுவான உறுதியும் அதனை நாம் அல்லாஹ்வின் அருள் வாக்கு என்று நம்பவும் துவங்கி விட்டோம்.

அன்னை பாத்திமா (அலை) அவர்களின் பிறந்த தினம் என்ன என்பதில் இன்றுவரை வரலாற்று ஆசிரியர்களிடையே முரண்பாடு தொடர்கிறது.

நுபுவ்வத்துக்கு ஐந்து வருடத்துக்கு முன்னர் அவர் பிறந்தார் என்று ஒரு சாராரும் , இல்லை....இல்லை..... நுபுவ்வத்துக்கு ஐந்து வருடம் கழிந்து அவர் பிறந்தார் என்று ஒரு சாராரும் இன்று வரை முரண் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்களுக்கும் அன்னை ஆயிசா (ரலி) அவர்களுக்கும் இடையில் நடை பெற்ற திருமணத்தின் பொழுது அன்னை ஆயிசா (ரலி) அவர்களின் வயது என்ன என்பதிலும் இன்று வரை சர்ச்சை தொடர்கிறது.

ஆனால், மிகவும் விநோதமாக அநேக வரலாற்று ஆசிரியர்கள் , அவர்கள் நேரில் கண்டது போல நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் அன்னை கதீஜா (அலை) அவர்களைத் திருமணம் செய்த பொழுது அன்னை கதீஜா (அலை) அவர்களின் வயது நாற்பது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வரலாற்று விற்பன்னர்கள் யாரும் அன்னை கதீஜா (அலை) அவர்களின் பிறந்த தினத்தை சரியாக அறிய மாட்டார்கள்.

அதற்கான எதுவித ஆதாரமும் எங்கும் இல்லை.

இனி,


ஹசரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சஹாபாக்களிடையே இருந்த விரல் விட்டு எண்ணக் கூடிய அறிஞர்களில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

இவருடைய பல ஹதீஸ் அறிவிப்புகள் சிஹாஹுஸ் சித்தாக்களில் பதிவாகி இருக்கின்றன.

அன்னை கதீஜா (அலை) அவர்களினதும் நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்களது திருமணத்தைப் பற்றி ஹசரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பு இப்படி ஒலிக்கிறது.

"இருபது இளம் ஒட்டகைகளை மஹராக கொடுத்து அன்னை கதீஜா (அலை௦) அவர்களை  நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் செய்தார்கள்.அப்பொழுது அன்னை கதீஜா (அலை) அவர்களின் வயது இருபத்து எட்டை தாண்டி இருக்கவில்லை."

(ஆதாரம்; இப்னு ஹிஸாம்-  பக்கம் : 200 - 201 )
(இப்னு சையிடி அல்  நாஸ் - பக்கம் : 115 - 117 )
                              - 
இப்னு ஹிசாமிலும், இப்னு சையிடி அல் நாஸ் இலும் ஹசரத் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக பதியப் பட்டிருக்கும் இந்தப் பதிவுகள் எனது பெரிய தந்தை சொன்ன அன்னை கதீஜா (அலை) அவர்களின் திருமண வயதைப் பற்றிய குழப்பத்துக்கு தீர்வாக எனக்கு அமைந்துப் போனது.

உங்களுக்கு?

1 comment:

Dr.Anburaj said...

Dr.Zahir Naik says Mohammed married Mrs.Katheja who was a widow twice.Ref:Tamilan tV programmes

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad