அஹ்லுல்பைத் Headline Animator

Friday, February 24, 2012

உன் வாழ்க்கை உன் கையில்...........?புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்!!!!



எமது நண்பர் டாக்டர் அன்புராஜ் சுவனத்து ஹூருல் ஈன்களைப்பற்றி தனது பின்னூட்டம் ஒன்றில் சில சந்தேகங்களைக் கேட்டிருந்தார்.

அவர் தனது பின்னூட்டத்தில்......... "சுவனம் செல்லும் பாக்கியம் கிட்டும் ஒரு ஆண் மகனுக்கு சுவனத்தில் எழுபத்து இரண்டு ஹூருல் ஈன்கள் மனைவிமார்களாக கிடைப்பார்கள் என்று அலிஸீனா என்பவரின் இணையத் தளத்தில் கண்டேன்.அப்படி என்றால் சுவனம் செல்லும் பாக்கியம் பெற்ற பெண்களுக்கு சுவனத்தில் யார் கிடைப்பார்கள்........?"

இதுதான் அவர் கேட்ட  கேள்வி.

கேள்வி நமக்கு புதிது.

நமக்கு மட்டுமல்ல எமது இந்த ஆய்வில் நாம் சந்தித்த முஸ்லிம்கள் அனைவருக்கும் இந்தக் கேள்வி புதிது.

ஏனெனில், நம்மை படைத்த இறைவனை விசுவாசித்து ,மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை அதாவது மறுமையை விசுவாசித்து , மறுமை வாழ்க்கையை விபரித்த நபிமார்களை விசுவாசித்து ,அந்த நபிமார்களுக்கு தூது கொண்டு வந்த வானவர்களை விசுவாசித்து இருக்கின்ற மக்கள் அனைவருக்கும் சுவனத்தைப் பற்றியோ , அதில் இருக்கின்ற   ஹூருல் ஈன்களைப் பற்றியோ எதுவித கனவுகளோ அல்லது குழப்பங்களோ இருக்க வில்லை.

அவர்கள் அனைவரின் மனத்திலும் தாங்கள் அனைவரும் மரணத்தின் பின்னால் இறைவனின் சந்நிதியில் ,அவனது ஆதரவில் தங்கி ...தப்பி பிழைத்து இருப்போம் என்கிற ஆறுதல் இருந்தது.

ஆனால், இறைவனின் ஆதரவில் நம்பிக்கை வைக்க தவறிய உலகத்துக்கும் உலகத்து மக்களுக்கும் ஹூருல் ஈன்களைப்   பற்றிய இந்தக் கேள்வி புதிதல்ல என்பதை நாம் நமது ஆய்வில் அறிந்துக் கொண்டோம்.

ஆச்சரியமாக அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் மறுமை வாழ்க்கையை விசுவாசித்து இருந்தார்கள்.

மறு பிறப்பு என்று சிலர் மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

அனைத்து ஆசா பாசங்களையும்   துறந்து நிர்வான் நிலையை அடைந்துக் கொள்வதில் விமோசனம் இருக்கிறது என்று இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

தான் செய்யும் செய்வினைக்கு தக்க பல பிறவிகள் எடுத்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் இறைவனுடன் சங்கமமாகி விடுவதாக சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

நல்லறங்கள் செய்வதன் காரணமாக இறைவனை தன்னுள்ளேயே கண்டு தனது செய்கைகளை இறைவனின் செயல்களாக கருதி இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவதாக இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது விசுவாசத்தில் ஒரு குழப்பம்.

அதன் காரணமாக அவர்கள் முஸ்லிம்களின் மறுமை விசுவாசத்தில் குறை கண்டு தங்களது விசுவாசத்தை சரி காணும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.


எது எப்படி போனாலும் இவ்வாறான அனைத்து நம்பிக்கைகளிலும் மரணத்தின் பின்னால் ஏதோ இருக்கிறது என்று மனித மனம் நம்பிக் கொண்டிருந்தது பேராச்சரியம்.

அத்தகைய நம்பிக்கையில் வாழ்கின்ற அனைவரும் மரணத்தின் பின்னர் இருக்கின்ற வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற நப்பாசையில் தீமை செய்யப் பயந்து தங்களால் முடிந்த வரை நன்மைகளையே செய்து கொண்டிருந்தனர்.

மக்களின் மறுமை வாழ்வு சம்பந்தமான  அந்த நம்பிக்கையின் செயல் விளைவு உலகத்துக்கு நன்மையாகவே இருப்பதும் புரிந்தது. 

இனி, இணையத்தில் இறைவன் வாக்களித்த மறுமை வாழ்வில் மனிதனுக்கு வழங்கும் சொகுசான , நிம்மதியான வாழ்க்கை சம்பந்தமாக பெரும் வாதப் பிரதி வாதமே நடந்துக் கொண்டிருப்பதை நண்பரின் கேள்விக்கு விடை தேடும் பொழுது புரிந்தது.

எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படித்துக் கொள்ளவும்,எங்கள் பெண்களின் மன நிலையைப் பற்றி புரிந்துக் கொள்ளவும், எமது அறிஞர் நண்பர்களை சுவனத்து ஹூருல் ஈன் களைப் பற்றி சில நிமிடங்கள் சிந்திக்கவும் வைத்த நண்பர் அன்புராஜுக்கு நன்றிகள்.

நமது நண்பர் அன்புராஜ் இணையத்தில் நடந்துக் கொண்டிருக்கும் சுவையான வாதப் பிரதிவாதங்களை (நிச்சயமாக) பார்த்திருப்பார் என்று நம்புகிறோம்.

ஹூருல் ஈன் களைப் பற்றி நமது நண்பர்   நம்மிடம் கேள்வி கேட்டதும் நாம் வழமைப் போல அந்தக் கேள்வியை நமது அறிஞர்களிடம் ஒப்புவித்தோம்.

நமது அறிஞர்களுக்கு உடனே பதில் சொல்லத் தெரிய வில்லை.

ஏனெனில், மக்களில் சிலரைக் குழப்பி தடுமாற வைத்திருக்கும் அழகிய சுவனத்து மங்கையர்கள் பற்றிய கதைகள் அந்த  அறிஞர்கள் மனத்தில் நிறைந்து இருக்கவில்லை. அதனால் அந்தக் காரிகைகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக அலட்டிக் கொண்டிருக்கவில்லை.

அதே போல , அந்த அறிஞர்கள் சுவனத்துக்கு ஆசை வைத்து நரகத்துக்கு பயந்து இருக்கவும் இல்லை.

அவர்களின் நோக்கமெல்லாம் படைத்த இறைவனின் திருப்தியை எப்படி அடைந்துக் கொள்வது என்பதில்தான் தங்கி இருந்தது என்கின்ற உண்மை  எமது கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்களில் புரிந்துப் போனது.

அவர்களைப் பொறுத்தவரை ஏக வல்ல இறைவனின் திருப்திதான் முதன்மையில் இருந்தது.

வல்ல இறைவனின் திருப்தி எதனை செய்தால் கிட்டும் என்ற ஆராய்ச்சியிலும்,அதன் வழி பிறந்த செய்கைகளிலும் அவர்கள் முழுமூச்சாக ஈடுபாடு கொண்டிருப்பதும் புரிந்தது.  

அதனால், அவர்களின் கண்ணோட்டத்தில் சுவனத்தின் சுகங்களும், நரகத்தின் அவலங்களும் இரண்டாம் பட்சத்தில் இருந்தன.

எனவே அவர்களுக்கு இந்தக் கேள்விக்கு பொருத்தமான பதில் சொல்லவும்,  இது சம்பந்தமாக ஆய்வு செய்யவும் எம்மைப் போலவே நேரம் அவசியப் பட்டது.

இரவில் எனது மனைவியுடன் இருக்கையில் நான் கேட்டேன்"சுவனத்துக்கு செல்லும்  ஆண்களுக்கு சுவனத்தின் ஹூருல் ஈன்களில் எழுபத்து இரண்டு பேர்களை மனைவிமார்களாக அல்லாஹ் கொடுப்பானாம்...நீங்கள் என்றாவது சுவனத்தில் பெண்களுக்கு அல்லாஹ் யாரை மணாளனாக கொடுப்பான் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?"



எனது மனைவி சிரிப்புடன் என்னிடம் திருப்பிக் கேட்டாள்."இதென்ன கேள்வி...?"

நான் சொன்னேன்."எனது இணைய நண்பர் ஒருவர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.தற்போதைய அரபுலகின் கிழட்டு மன்னர்களின் இழிவான அந்தப்புரம் போல சுவனத்தில் பெண்ணடிமைத்தனம் இருக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கு அந்தக் கேள்வியில் வந்தது." என்ற நான் தொடர்ந்து "உலகத்தில் இருக்கின்ற ஒரு முஸ்லிம் பெண்ணின் மன நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் இந்தக் கேள்வியை உங்களிடம்  கேட்டேன்.எனக்கு தயங்காமல் உண்மையை சொல்லுங்கள். ஏனெனில் நான் இதற்கு சரியான் பதிலை எனது நண்பருக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் "என்றேன்.

என்னுடைய மனைவி யோசனையில் ஆழ்ந்தாள்.

அஹ்லுல்பைத் தளத்தில் அவளது பதில் ஒரு கேள்விக்கு பதிலாக இருக்கப் போகிறது என்பதை அவள் புரிந்துக் கொண்டாள் போலும்.

"நான் இதுவரை அப்படி எதையும் யோசித்துப் பார்க்கவில்லை." அவளின் குரல்    தீர்க்கமாக ஒலித்தது."நரகத்தை விட்டும் தப்பி சுவனம் போனாலே போதுமஎன்ற நிலையில் தான் நான் இருக்கிறேன்.சுவனத்துக்குப் போனதன் பின்னர் மற்ற விடயங்களைப் பார்த்துக் கொள்ளலாம்."

நான் கேட்டேன்"இல்லை......நீங்கள் என்றாகிலும் இதனைப் பற்றியோசித்து இருக்கிறீர்களா?"

"யோசிப்பதற்கு என்ன இருக்கிறது..?" அவள் திருப்பிக் கேட்டாள்."அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும், அவன் நமக்கு வழிக்காட்ட அனுப்பிய தூதர்களையும், மறுமை நாளையும் விசுவாசிக்கும் ஒருவன்தானே முஸ்லிமாக இருக்க முடியும்.மறைவானவற்றை விசுவாசிப்பதிலே தானே எங்களின் ஈமான் முழுமை பெறுகிறது.இந்த நிலையில் மரணத்தின் பின்னால் நடைபெறும் என்று அல்லாஹ்வின் அல் குர்ஆன்   சொல்லும் போதனைகளை என்னால் எப்படி விசுவாசிக்காமல் இருக்கமுடியும்?"

அவளின் பதிலின் மூலம் எனக்கு இன்னொன்றும் புரிந்தது.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கும் முஸ்லிம் பெண்களுக்கும்   இந்த விடயத்தில் ஒரு குழப்பமும் இல்லை.

எனக்கு கிடைத்த இந்த தீர்வுகள் நான் தேடிய திருப்தியான பதிலை எனக்கு தரவில்லை.

அதன் பின்னர் வீட்டிலும், படுக்கையிலும் , பாதையில் நடக்கும் பொழுதும் ,அலுவலகத்திலும் ...என்று எல்லா இடங்களிலும் , எல்லா நேரங்களிலும் என் மனத்தில் நண்பர் அன்புராஜின் கேள்வி சுற்றி சுற்றி அடிக்கடி வந்துக் கொண்டேயிருந்தது.      

இரண்டு நாள்களுக்குப் பின்னால் என்னுடைய கல்லூரி  நண்பர்  ஒருவருடன் இது சம்பந்தமாக உரையாடும் பொழுது அவர் என்னிடம் எங்களது  பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுப் படுத்தி ஒரு உண்மையைப் புரிய வைத்தார்.

(பள்ளிப் பருவத்தின் மறந்துப் போயிருந்த பசுமையான நினைவுகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்க்க துணை நின்ற கேள்வியைக் கேட்ட டாக்டர் அன்புராஜுக்கு மீண்டும் ஒரு நன்றி.)

அந்தக் கதை இதுதான்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்   எங்களுக்கு அரை நாளில் கல்லூரி முடிந்து விடும்.

ஜுமமாஹ் தொழுகையின் பின்னால் நாம் பகல் உணவை முடித்து விட்டு நண்பர்கள் கூட்டம் ஒன்று கூடி கல்லூரி விடுதியில் அரட்டையடித்துக் கொண்டிருப்போம்.

எங்கள் நண்பர்களில் சிலர் எங்களது ஆசிரியர்களைப் போல மிமிக்கிரி செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள்.

ஒருவருக்கு ஒருவர் போட்டியாக மிமிக்கிரி செய்ய நாம் அவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்போம்.

ஒரு நாள் எங்களின் நண்பர் ஒருவர் எங்களது கல்லூரி அதிபரைப் போல  மிமிக்கிரி செய்ய, அந்த நண்பரின்   முக பாவங்களையும், சாட் சாத்தாக அவர் நமது கல்லூரி அதிபரை போலவே நடித்துக் காட்ட நாம் நாம் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தோம்.

எங்களுடன் இந்தக் கூத்துக்களை ரசித்துக் கொண்டிருந்த எங்களது இன்னுமொரு நண்பரும் அதனைக் கண்டு சிரித்தார்.

சத்தமாக சிரித்தார்.

வயிற்றைப் பிடித்துக் குனிந்துக் கொண்டு வாய் விட்டு சிரித்தார்.

அப்படியே நிமிர்ந்து வாய் பிளந்து சிரித்தார்.

அவரின் சிரிப்பைப் பார்த்தஎங்களுக்கு திக் கென்றது.

உடனே , எங்களது சிரிப்பு சட்டென்று நின்றும் போனது.

ஏனெனில், வாய்பிளந்து சிரித்த நண்பர் அப்படியே வாய் பிளந்து திக் பிரமைப் பிடித்து விளித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தார்.

அவரால் அவரது வாயை மூட முடியவில்லை.

அவரது வாய் பிளந்த சிரிப்பின் காரணமாக அவரின் தாடை தன்னிலை விட்டும் விலகி விட்டிருந்தது.

நாங்கள் பயந்துப் போனோம்.

பலவந்தமாக நண்பரின் வாயை மூட முயலும் பொழுது அவர் வீரிட்டு அலறினார்.

வாயை பிளந்த நிலையில் அங்கும் இங்கும் தடுமாறி ஓடிக் கொண்டிருந்த அவர் , அவரது முகத்தில் கை வைக்கக் கூட எங்களை விடவில்லை.

நாம் உடனே விடுதி பொறுப்பாளரிடம் முறையிட்டோம்.

வாய் பிளந்த நண்பரைக் கண்ட அவர் அச்சத்தில் உறைந்துப்   போனார்.

உடனே அவர் எங்களில் சிலருடன் வாய் பிளந்த நண்பரை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

நண்பருடன் துணைக்கு சென்றவர்களில் நானும், நான் இப்பொழுது உரையாடிக் கொண்டிருக்கும் நண்பருமிருந்தோம்.

வாயைப் பிளந்தபடி மிரண்டு வந்துக் கொண்டிருந்த நண்பரைக்  கண்டவுடன் மருத்துவமனையில் இருந்தவர்கள் மௌனித்து அச்சத்துடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.

மருத்துவமனை தாதிமார்கள் உடனே நண்பரை டாக்டரின் அறைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றார்கள்.

நாங்களும் கூடவே சென்றோம்.

ஒரு நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்த டாக்டர், அறையினுள் பதட்டத்துடன் நுழையும் எங்களையும் மிரண்டுப் போயிருந்த வாய் பிளந்த   நண்பரையும் பார்த்தார்.

அவர் பார்வையில் எது வித சலனமும் இல்லை.

எங்களின் வருகையை முற்றிலும் அலட்சியப் படுத்திய அவர் தான் கவனித்துக் கொண்டிருந்த நோயாளியை நிதானமாக பரிசோதித்து   முடித்தார்.

பின்னர் எங்களை நோக்கிய அவர் பார்வையில் எங்களது பதட்டங்களோ , நமது நண்பரின் பரிதவிப்போ எதுவித மாற்றங்களையும் கொண்டு வந்ததாக தெரிய வில்லை.

வாய் பிளந்த நண்பரின் வாய் பிளந்த கணத்தில் இருந்து நாம் சந்தித்த அவசர அவசரமான பதட்டமான நிமிடங்களுக்கு முற்றிலும் மாற்றமான சூழலை அந்த அறையில் கண்டோம்.

நாம் சந்தித்த அனைவரையும் அச்சத்துக்குள்ளாக்கிய விடயம் அந்த டாக்டரையோ, அவரது அலுவலக அறையையோ பாதித்ததாக தெரியவில்லை.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்த டாக்டரின் அலட்சியப் படுத்திய போக்கும் அந்த அறையின் அமைதியான சூழலும் வாய் பிளந்த நண்பரையும்   திகைத்துப் போக வைத்தது அவரது பார்வையில் புரிந்தது.

டாக்டர் சாகவசமாக என்ன நடந்தது என்று கேட்டார்.

எங்களின் நண்பர்களில் ஒருவர் நடந்த சம்பவத்தை விபரித்தார்.

அந்தக் கொஞ்ச நேரத்தில் ,ஆச்சரியமாக அவரும் அமைதியடைந்திருப்பது அவரின் குரலில் புரிந்தது.

இதென்ன மாற்றம்.

எல்லாவற்றையும் கேட்ட டாக்டர் நிதானமாக சொன்னார்."இது சிம்பலான விடயம்..."

நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

எங்களின் பார்வைகளை பொருட் படுத்தாத டாக்டர் தனது கதிரையை விட்டும் எழுந்து அலுமாரியைத் திறந்தார்.

நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அலுமாரியில் இருந்து எத்தனையோ எடுத்த அவர் எங்களை நோக்கி வந்தார்.

அவரது கையில் ஒரு நீண்ட சற்றே பெரிய ஊசி இருந்தது.

அந்த ஊசியை அவர் அவருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு காஸ் அடுப்பின் மீது வைத்து சூடேற்றினார்.

அந்த ஊசி சூடாகின்ற நேரத்தில் எங்களிடம் எங்கள் கல்லூரியின் கிரிக்கட் குழுவினரைப் பற்றி கேட்கத் தொடங்கினார்.

வாய் பிளந்த நண்பரை   அவர் ஏறிட்டும் பார்க்க வில்லை.

எங்களுக்கு சங்கடமாக இருந்தது.

வாய் பிளந்த நண்பரோ மிரள மிரள விளித்துக் கொண்டிருந்தார்.

அடுப்பில் இருந்த ஊசி மெது மெதுவாக செந்நிறமாக சூடேறியது.

நன்கு சூடேறிய ஊசியை கையில் எடுத்த டாக்டர் அதில் ஒரு சொட்டு நீரை   தெளித்துப் பார்த்தார்.

ஊசி உஸ்ஸ் சென்று சீறியது.

செந்நிறமான ஊசி சட்டென்று நிறம் மங்கியது.

மீண்டும் அதனை அடுப்பில் வைத்த டாக்டர் தனக்குள் "சூடாகியது போதாது...."என்று சொல்லிக் கொண்டார்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாய் பிளந்த நண்பர் நன்கு பயந்துப் போயிருப்பது இப்பொழுது புரிந்தது.

அடுப்பில் இருந்த ஊசி இன்னும் சூடாகியது.

அதன் சூடு மெலிதாக அந்த அறையையும் சூடாக்குவது தெரிந்தது.

மீண்டும் ஊசியை எடுத்த டாக்டர் அதில் சிறிது நீரைத் தெரித்தார்.

இப்பொழுதும் ஊசி உஸ்ஸ்ஸ்   சென்று சீறியது.

இம்முறை ஒரு சிறிய வித்தியாசம்.

நீர் விழுந்தும் அதன் செந்நிறம் மாற வில்லை.

"இப்பொழுது சரி ...' என்ற டாக்டர் அதனை மீண்டும் அடுப்பில் சூடேற்ற வைத்து விட்டு எங்களிடம் "உங்களில் இருவர் இவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்." என்றார்.

எங்களில் இருவர் வாய் பிளந்த நண்பரைக்   கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

நண்பர் நன்கு பயந்து போயிருப்பதை அவரது கண்கள் காட்டிக் கொடுத்தன.

செந்தணலாக நிறம் மாறி கொதித்துக் கொண்டிருந்த ஊசியைக் கையில் எடுத்த டாக்டர் "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.இந்த ஊசியினால் இவரது தொண்டை குழியில் ஒரு சூடு போட வேண்டும்..........." என்று சொல்லியவாறு அந்த ஊசியை நண்பரின் பிளந்து போய் மூட மறுக்கும் வாயின் அருகே கொண்டு வந்தார்.

கொதிக்கும் ஊசி வாயின் அருகே வந்ததுதான் தாமதம்.

'டக்'கென்று ஒரு சத்தம்.

என்ன ஆச்சரியம்.

நண்பரின் வாய் டக்கென்றுமூடிக் கொண்டது.

இப்பொழுது டாக்டர் சிரிப்புடன் நிமிர்ந்தார்.

எங்களுக்கு எங்களையே நம்ப முடியவில்லை.

ஆச்சரியத்தில் உறைந்துப் போயிருந்த எங்களிடம் அந்த டாக்டர் சொன்னார்.

"இதெல்லாம் எங்களது உள்ளமும் அதன் எண்ணங்களும் செய்கின்ற ஆச்சரியமான விளைவுகள்.

"உங்கள் நண்பரின் உள்ளம் முதலில் அவரினால் அவரது வாயை மூட முடியாது என்று சொல்லி அந்த அதில் அவரை நம்பவைத்தது. அவரும் அதனை நம்பி வாயை   மூடாது வைத்துக் கொண்டிருந்தார்.

"அந்தக் கட்டத்தில் அவர் சந்தித்த அனைவரும் அந்த நம்பிக்கையே அவருக்கு கொடுத்துக் கொண்டும் இருந்தனர்.

"ஆனால், நான் ஊசியை சூடேற்ற தொடங்கியதும் அவரது உள்ளம் தடுமாறத் துவங்கியது.

"கொதிக்கும் ஊசியை அவரின் வாயின் அருகே கொண்டு போன அந்தக் கணத்தில் சூடான ஊசியின் சூட்டுக்கு பயந்த அவரது உள்ளம் அவரை அறியாமலேயே அவரின் வாயை மூட வைத்து விட்டது.

"எங்கள் உள்ளம் இருக்கிறதே அதற்கு நல்லது கெட்டது என்று ஒன்றுமே தெரியாது.நாம் எதை சொல்கிறோமோ அதனைத் தான் எங்கள் உள்ளம்  நம்பும்.நாம் நல்லதை சொன்னால் அதனையும் அது   நம்பும்.அதேபோல நாம் ஒரு கெடுதியை நல்லதாக உருவகித்து சொன்னாலும் அதனையும்   அது நல்லதென்றே நம்பும்.

"வாழ்க்கையின் அனைத்து விடயங்களும் நல்ல நம்பிக்கையில்தான் தங்கி இருக்கின்றன.

"ஆகவே, நல்லதையே நம்புங்கள்.நல்லவைகளே நடக்கும்"

இது தான் அந்தக் கதை.

கதை சொல்லும் கதையில் ஒரு உண்மை இருக்கிறது.

நாம் எதைப் பற்றி அதிகமாக  நினைக்கிறோமோ அதைப் பெறுகிறோம்.

நமது மனம், ஒரே சமயத்தில் எதிர் எதிரான எண்ணங்களையோ , உணர்வுகளையோ தன்னுள் கொண்டிருக்க முடியாது எனபது ஓர் அறிவியல் உண்மை.

இந்தத் தன்மைதான் நம்மை நமது தலை விதியின் முழு எஜமானனாக ஆக்குகிறது.

நாம் மேல் நோக்கி வாழ்வதோ, சீரழிந்து போவதோ அல்லது வெற்றிகரமாக வியாபிப்பதோ அல்லது தோல்வியில் துவண்டு  போவதோ--இது எதுவானாலும் மிகச் சாதரணமான தேர்ந்தெடுக்கும் செயலில் உள்ளடங்கி நிற்கிறது.

எங்கெங்கு காணினும் நம்பிக்கை ஒன்றுதான் சாத்தியம் இல்லாதவற்றை சாதிக்க செய்துள்ளது.

பிரபஞ்ச வெளியில் அளப்பரிய மகா பிரபஞ்ச அறிவுப் பெருங்கடலில் , புலன்களால் அறியப்படாத உலகில்   அற்புத ஆற்றல் கொண்ட பயன்பாடுகள் , எல்லை இல்லாத நலன்கள், வர்ணிக்க முடியாத அழகுகள் நமது பயன் பாட்டுக்காகவும் நுகர்வுக்காகவும் நிறைந்து தயாராக வைக்கப் பட்டுள்ளன.

என்றாவது ஒரு நாள் அழிந்துப் போகும் என்று உறுதியாக நம்புகின்ற இந்தப் பிரபஞ்சமே மனித அறிவுக்குள் அடங்காத நிலையில் , வேதங்கள் அனைத்தும் மறுப்பின்றி உடன் படுகின்ற மறுமை வாழ்வின் அல்லது மரணத்தின் பினனால் எதிர்பார்க்கப் படும்  நித்திய வாழ்வின் இரகசியங்கள் எத்துனையாக இருக்க வேண்டும்.

அவற்றை  எங்களின் அறிவினால் அடைய முடியாது.உணரத்தான் முடியும்.

அதன் படி, அல்லாஹ்வை விசுவாசித்து, அவன் தூதர்களை விசுவாசித்து மறுமையை விசுவாசித்து இருக்கின்ற உள்ளங்களில் அல் குர் ஆன் சொல்லும் சுவனத்து ஹூருல் ஈன்கள் பற்றிய வசனங்கள் ஒரு சர்ச்சை அல்ல.

ஆனால், துரதிர்ஷ்ட வசமாக மறுமை விசுவாசம் தொலைத்த உள்ளங்களில் ஹூருல் ஈன்கள் பற்றிய கனவுகளும் கற்பனைகளும் அபத்தமானவை தான்.

எங்கள் அறிஞர்களின் ஹூருல் ஈன்கள் பற்றிய ஆய்வுடன் இன்னொரு பதிவில் சந்திக்கும் வரை ...................

நமது நண்பர் டாக்டர் அன்புராஜ் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவேண்டும்.

13 comments:

Dr.Anburaj said...

You are tactfully off the road.I do expect short answer. I am not conversant with Islamic Literature.So i would like to know the opinion of
a Islamic Scholar. Hence I refered the question to me. Instead of telling Yes, such verse exists in Koran or ... or No it is not available in Islamic Literature.Alisina is preaching fraud news about Islam. Instead of such short answers, you say we do not bother about what is available in Heaven.That is what Bhagavad -Gita says as Nishkamiyakarmam. Your answer to my question is too shallow and off the point. I feel disppointed.

அஹ்லுல்பைத் said...

எமது இணைய நண்பர் டாக்டர் அன்புராஜின் பின்னூட்டத்திற்கு நன்றி.

ஹூருல் ஈன்களைப் பற்றிய நமது தேடல் இன்னும் முடியவில்லை.

ஹூருல் ஈன்கள் பற்றி அல் குர்ஆன் அல் ஹதீஸ் பதிவுகளை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம்.

ஹூருல் ஈன்களைப் பற்றிய பல ஹதீஸ் பதிவுகள் நிஜத்தில் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன.

அத்தகைய பதிவுகளின் நிஜத் தன்மையை தெரிந்துக் கொள்ளும் வரை அவை பற்றி எங்களால் எதுவும் சொல்ல முடியாதுள்ளது.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி.

அசிங்கமான அத்தகைய அனைத்து பதிவுகளும் அல் குர் ஆனுக்கு முற்றிலும் முரண் படுகின்றன.

எம்மைப் பொறுத்தவரை நண்பர் அன்புராஜ் மிக முக்கியமானவர்.

அவரையும் அவரது கருத்துக்களையும் எங்களால் அலட்சியப் படுத்த முடியாது.

அவரது கேள்விகளுக்கும், அவரது பின்னூடடங்களின் தெளிவுகளுக்கும் நாம் தேடும் பதில்களின் தேடல்களில் இஸ்லாத்தின் புனிதத்துவம் காக்கப் படுகின்ற செயல் ஆச்சரியமாக ஒளிந்து நிற்கிறது.

அஹ்லுல்பைத் தளத்துடன் அவர் கொண்ட உறவின் உண்மையான இரகசியத்தை இறைவனே அறிவான்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

அவர் இறைவனைத் தேடுகிறார்.

இறைவனை இனம் காட்டவேண்டிய முஸ்லிம்களும், அவர்கள் பின் பற்றும் ஹதீஸ் கிரந்தங்களும் , அவர்கள் நேசிக்கும் அராபிய ஏகாதிபத்திய வாதிகளும் இறைவனை அடையும் பாதையில் அவருக்கு முட்டுக் கட்டையாக இருக்கின்றார்கள்.

இதே நிலை தொடர்ந்தால்........

மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் அவர் எங்களை...எங்களது செயல்களை.....எங்களது முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினால் ......அவர் தப்பி விடுவார்.

நாம் மாட்டிக் கொள்வோம்.

இது தான் நிதானமான எங்களது பதிலுக்கு காரணம்.

Dr.Anburaj said...

www.alisina says Allah would provide 100 fold sexual power and 72 horis women to all male inmate of Heaven. Is is true ? Muslim TV programmes all the speakers have referred to this Horis women. So I believe that the above statement of Alisina is true. But I wanted a confirmation from a authoritative man. I found many Muslims are unable to bear any kind of criticism of Mohammed.Hence i kept mum.But You have nothing with your wife and slave women - this verse exists in Quran. is it holy ?

Dr.Anburaj said...

அசிங்கமான அத்தகைய அனைத்து பதிவுகளும் அல் குர் ஆனுக்கு முற்றிலும் முரண் படுகின்றன.You have nothing to hide with your wife and women slaves/war captives/wife, sisters of soldiers who are arrested/defeated. This barbaric verse is available in Quran - So what you say is a blatant lie

Dr.Anburaj said...

Yesterday I saw a Muslim programme -IMAYAM TV- the speaker may be Mr.Jainulatheen- the speaker said that Mohamed addressing assembly of women had said " Hell is predominantly populated by Women.Hell /heaven would be occupied only after Judgement Day - the chidish doctrine of Arabia -
As per the details of Judgement day - Hell/Heaven must be vacant at present.Mohammed the Arabiabian tribal religious Leader is pathetically wrong.Hell not occpied by anyone.It confirms Alisina that Mohammed is insane and suffers from hallucinations. ஹூருல் ஈன்களைப் பற்றிய பல ஹதீஸ் பதிவுகள் நிஜத்தில் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன.What are they ? You admit reference to Horis women exists in Islamic literature.But in fact you are too ashamed to discuss about itin public. I waiting for your article.

Dr.Anburaj said...

அஹ்லுல்பைத் தளத்துடன் அவர் கொண்ட உறவின் உண்மையான இரகசியத்தை இறைவனே அறிவான்.
I have no secret plan. without religion humanity would go astry. Hence I am a spritualist. Of course hinduism is to be desilted / modernised t0 a great extent,there is enough Hope.Because there is freedom for growth and innovation. But in Islam/christianity there no scope for growth.
They are beating the same Bush for the 2000 yrs.
Jesus is great, But the verse " Go ye not unto gentiles " limits Jesus. He is not universal. Islam is Arab imperislism.I wish muslims must get out of Koran which is out of date. I am searching for proofs.

Dr.Anburaj said...

www.alisina -Muhammad Ibn Yahya Ibn Hayyan narrated, "The Messenger of God came to Zaid Ibn Haritha's house seeking him. Perhaps the Messenger of God missed him at that time, that is why he said, 'Where is Zaid?' He went to his house seeking him and, when he did not find him, Zainab Bint Jahsh stood up to [meet] him in a house dress,(2) but the Messenger of God turned away from her. She said, 'He is not here, Messenger of God, so please come in; my father and mother are your ransom.' The Messenger of God refused to come in. Zainab had hurried to dress herself when she heard that the Messenger of God was at her door, so she leapt in a hurry, and the Messenger of God liked her when she did that. He went away muttering something that was hardly understandable but for this sentence: 'Praise be to God who disposes the hearts.' When Zaid came back home, she told him that the Messenger of God came. Zaid asked, 'You asked him to come in, didn't you?' She replied, 'I bade him to, but he refused.' He said, 'Have you heard [him say] anything?' She answered, 'When he had turned away, I heard him say something that I could hardly understand. I heard him say, "Praise be to God who disposes the hearts." ' Zaid went out to the Messenger of God and said, 'O Messenger of God, I learned that you came to my house. Did you come in? O Messenger of God, my father and mother are your ransom. Perhaps you liked Zainab. I can leave her.' The Messenger of God said, 'Hold on to your wife.' Zaid said, 'O Messenger of God, I will leave her.' The Messenger of God said, 'Keep your wife.' So when Zaid left her, she finished her legal period after she had isolated herself from Zaid. While the Messenger of God was sitting and talking with `A´isha, he was taken in a trance, and when it lifted, he smiled and said, 'Who will go to Zainab to tell her that God wedded her to me from heaven?' The Messenger of God recited, 'Thus you told someone whom God had favoured and whom you yourself have favoured: "Hold on to your wife." ' `A´isha said, 'I heard much about her beauty and, moreover, about how God wedded her from heaven, and I said, "For sure she will boast over this with us." ' Salama, the slave of the Messenger of God, hurried to tell her about that. She gave her some silver jewellery that she was wearing."(3)

Dr.Anburaj said...

Verses from the Koran
LIX/5-6: "Whatsoever palm trees ye cut down or left standing on their roots, it was by by Allah's leave, in order that He might confound the evil-livers. And that which Allah gave as spoil unto His messenger from them, ye urged not any horse or riding-camel for the sake thereof, but Allah giveth His messenger lordship over whom He will. Allah is Able to do all things."
XLVIII/20-21: "Allah promiseth you much booty that ye will capture, and hath given you this in advance, and hath withheld men's hands from you, that it may be a token for the believers, and that He may guide you on a right path. And other (gain), which ye have not been able to achieve, Allah will compass it. Allah is able to do all things."
In the above verse, Allah is bribing the believers to make wars with the Kafirs. He promises them a lot of booty, which they will gain from these wars. He has also said that He will magically stop the kafirs from striking back and He will guide the believers on the right path (the path of killing, plundering, looting and raping).
VIII/41: "And know that whatever ye take as spoils of war, lo! a fifth thereof is for Allah, and for the messenger and for the kinsman (who hath need) and orphans and the needy and the wayfarer, if ye believe in Allah and that which we revealed unto Our slave on the Day of Discrimination, the day when the two armies met. And Allah is able to do all things."
Here we see another case of bribery by Allah. Four fifths of the loot goes to invaders and the remaining one fifth goes to Mohammed or the Caliphs or any other Muslim leaders in their absence. Here Allah tries to bring out His kindness again by telling the Muslims to give to the poor. And how much do the poor get? They get from the one fifth of the loot and only after Mohammed and other religious leaders have taken their share. And don't forget where this loot is coming from--Killing and murdering the kafirs. What a genuine Robin Hood Allah is!!!
VIII/65: "O Prophet! Exhort the believers to fight. If there be of you twenty steadfast they shall overcome two hundred, and if there be of you a hundred steadfast they shall overcome a thousand of those who disbelieve, because they (the disbelievers) are a folk without intelligence."
VIII/67-69: "It is not for any Prophet to have captives until he hath made slaughter in the land. Ye desire the lure of this world and Allah desireth (for you) the Hereafter, and Allah is Mighty, Wise. Had it not been for the ordinance of Allah which had gone before, an awful doom had come upon you on account of what ye took. Now enjoy what ye have won, as lawful and good, and keep your duty to Allah. Lo! Allah is Forgiving, Merciful."

Dr.Anburaj said...

Koran 78:31
As for the righteous, they shall surely triumph. Theirs shall be gardens and vineyards, and high- bosomed virgins for companions: a truly overflowing cup.
Koran 37:40-48
...They will sit with bashful, dark-eyed virgins, as chaste as the sheltered eggs of ostriches.
Koran 44:51-55
...Yes and We shall wed them to dark-eyed houris. (beautiful virgins)
Koran 52:17-20
...They shall recline on couches ranged in rows. To dark-eyed houris (virgins) we shall wed them...
Koran 55:56-57
In them will be bashful virgins neither man nor Jinn will have touched before.Then which of the favours of your Lord will you deny ?
Koran 55:57-58
Virgins as fair as corals and rubies. Then which of the favours of your Lord will you deny ?
Koran 56:7-40
...We created the houris (the beautiful women) and made them virgins, loving companions for those on the right hand..
Koran 55:70-77
"In each there shall be virgins chaste and fair... Dark eyed virgins sheltered in their tents whom neither man nor Jin will have touched before..
In the Hadiths, Mohammed goes one step further and expands the promise of virgins to include a free sex market where there is no limit of the number of sexual partners. Women and young boys are on display as if in a fruit market where you can choose the desired ripeness.
Quote from Hadith:
Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, "There is in Paradise a market wherein there will be no buying or selling, but will consist of men and women. When a man desires a beauty, he will have intercourse with them."
YOUNG BOYS
Homosexuality was and is widely practised in Islamic conutries. To please the homosexuals among his followers he promised them pre-pubescent boys in Paradise. So after committing plunder, loot, rape and murder in this life, the followers of Islam get "rewarded" by untouched virginal youths who are fresh like pearls.



The relevant verses from the Koran are:
Koran 52:24
Round about them will serve, to them, boys (handsome) as pearls well-guarded.
Koran 56:17
Round about them will serve boys of perpetual freshness.
Koran 76:19
And round about them will serve boys of perpetual freshness: if thou seest them, thou wouldst think them scattered pearls.
As mentioned in my previous article, famous poets in Arabia glorified homosexuality. As an example I am including a poem in 'Perfumed Garden' by Abu Nuwas:
O the joy of sodomy!
So now be sodomites, you Arabs.
Turn not away from it--
therein is wondrous pleasure.
Take some coy lad with kiss-curls
twisting on his temple
and ride as he stands like some gazelle
standing to her mate.
A lad whom all can see girt with sword
and belt not like your whore who has
to go veiled.
Make for smooth-faced boys and do your
very best to mount them, for women are
the mounts of the devils
Need I say anything more after this colorful rendition by Abu Nuwas ?

WATER

Dr.Anburaj said...

அவர்களது விசுவாசத்தில் ஒரு குழப்பம்.

அதன் காரணமாக அவர்கள் முஸ்லிம்களின் மறுமை விசுவாசத்தில் குறை கண்டு தங்களது விசுவாசத்தை சரி காணும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
completely wrong statement.Why should I find fault with Muslims ? As a Lover of truth i have every right to examine what various religions of the world say about Life after death. Hinduism categorically says - rebirth or eternal rest at the feet of God. Islam which claims itself to be a only true religion of God, offer Heaven which is full of wordly things.Beautiful girls are available in plenty in the world itself.Then why should we go to Heaven to fug beautiful women, drink and eat?
Koran teems with lot of such absurdities.
Another question is the war of Bathar, in which mohamed way laid /ambush/encounter the cargo of Merchants of Mecca. Is it a holy act ?

Dr.Anburaj said...

Please take note -who is SALAMA - SALVE GIRL OF mESSENGER Mohamed. Is salama a Kumus Girl ? Like Maria ? A man can have sex with his slave women- Koran permits that. so salama is concubine OF yOUR mOHAMMED ?
DURING HARVEST SEASON A MALE RAT WOULD HAVE PLENTY OF WIFES. WWW.ALISINA SAYS mOHAMMED HAD 13 WIFES AND MANY CONCUBINES.pLEASE PUBLISH ARTICLES REFUTING THAT. WE MUST PROTECT THE HONOUR OF RELIGION.

Dr.Anburaj said...

அசிங்கமான அத்தகைய அனைத்து பதிவுகளும் அல் குர் ஆனுக்கு முற்றிலும் முரண் படுகின்றன. It is Koran which promises 72 horis women not Bhagawad gita.Do you mean the verses which refers to Horis women in the Koran, are interpolated or satanic verses.Do you mean Koran is bad ?

Dr.Anburaj said...

Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely, 'tis full 'propriety' of life.
.
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;
At least, 'tis good if neighbour's wife he covet not.
.Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely, 'tis full 'propriety' of life.

Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;
At least, 'tis good if neighbour's wife he covet not.

Thirukkural is morethan 2000 years old.When compared to Koran Kural is the best. Sri Rama said " I would not even take a glance of a woman otherthan Sita.Kural never advocates a concept of slave women. All women should be respected, whatever maybe her social status.Koran has a undignified concept of womanhood, particularly when it comes to Non-muslims.It advocates illtreatment to women of Non-muslims family. When a country becomes fully occupied by Muslims, the powerful strong Muslims would impose slavery on Muslims women
of weeker sections. Sadam Hussen asked a Pilot of Iraq to divorce his beautiful wife, and married her.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad