அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, February 19, 2013

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது....?


தகவல்: அன்புராஜ்.


பெக்ரெயின் நாட்டிலும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் கலவரம் ஆரம்பித்து விட்டது.

பாக்கிஸ்தானில் நிலைமையைப் படிப்போமே!http://youtu.be/UxprkrL7RCw
http://youtu.be/fPRpgakV2CA
பாகிஸ்தானின் குவெட்டா நகரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வரை, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்று, ஷியா பிரிவு முஸ்லிம்கள் மறுத்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை குவெட்டாவின் ஹஜாரா நகரத்தில் பல்வேறு இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 92-ஆக உயர்ந்துள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-ஜாங்வி இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


போர்க்கொடி: குவெட்டா நகர் முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான ஷியா பிரிவு முஸ்லிம்கள், பலியானவர்களின் உடல்களை வைத்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக 48 மணி நேரத்துக்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கெடு விதித்துள்ளனர். 

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அமைப்புகள் சில ஆதரவு அளித்து வருகின்றன என்று ஷியா பிரிவினர் அப்போது குற்றம்சாட்டினர். குவெட்டா நகர போலீஸ் அதிகாரி வஜிர் கான் நசீர் கூறுகையில், ""ஷியா பிரிவு தலைவர்களை சமாதானப்படுத்தி, உடல்களை அடக்கம் செய்ய வைப்பதற்காக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்,'' என்று தெரிவித்தார்.

ஆனால், அதிகாரிகளின் இந்த சமாதானத்தை ஷியா பிரிவு தலைவர்கள் ஏற்கவில்லை. ""பயங்கரவாதிகளை குறி வைத்து ராணுவ நடவடிக்கை தொடங்கும் வரை, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம்,'' என்று ஷியா தலைவர் கய்யூம் சங்கேஜி தெரிவித்தார்.

ஷியா பிரிவுகள் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரான சயீத் முகமது ஹடி அளித்த பேட்டியில், ""குவெட்டாவில் ஷியா பிரிவினருக்கு பாதுகாப்பு வேண்டும். இந்த நகரத்தின் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,''என்று வலியுறுத்தினார்.

ஷியா பிரிவு முஸ்லீம்கள் பிற முஸ்லீம்களின் பார்வையில் ” கா பீ ர் ” ஆகிப்போனார்களோ ! 

என்னக் கொடூரம். 

அகமதி காதியானி முஸ்லீம்கள் என்றால் வேறுபாடு தெரிகின்றது.

 ஷியாப்பிரிவு சன்னிபிரிவு என்றால் எப்படி இத்தகைய பிரிவுகள் வந்தது என்று தெரியவில்லை.

 ஆனால் சென்னை மக்கா மஸஜித் செமசுதீன் இந்தஷியாக்களுக்கு என்ன திமீர். நமது கண்ணமணி நபித்தோழர்கள் கல்லறையின் முன் நின்று கடுமையாக அவர்களை திட்டுகிறார்கள் . இது என்ன நியாயம் என்று எங்கள் ஊரில் அரபி பள்ளி ஆண்டுவிழாவில் பேசினார்.

 மேலும் இந்துக்களும் கிறிஸதவர்களும் வழிகேடர்கள். நரகவாசிகள் என்று பேசியதால் காவல் துறை அவரை தடுத்து வீட்டுக்கு ஒழுங்காகப் போய் சேர் என்று அனுப்பி வைத்தது.

9 comments:

Dr.Anburaj said...

, இந்து காபீர்களின் நிலைமை
சிறுபான்மையினர் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களது மத நம்பிக்கையும், ஆன்மீகமும் பாதுகாப்பாக இருக்கும். அவர்களது வழிபாட்டு உரிமையில் எந்த வித இடையூறும் இருக்காது. அவர்களது கலாச்சாரம், மதம், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும். பாகிஸ்தானின் குடிமக்கள் என்ற அளவில், அவர்களது ஜாதி, மதம் ஆகிய எந்த விதமான வகையிலும் பாரபட்சம் காட்டப்படாது” என்று குவாயிதே ஆஸம் முகம்மது அலி ஜினா நியு தில்லியில் ஜூலை 14, 1947இல் பத்திரிக்கையாளர் நடுவே சொன்னார்.

65 வருடங்களுக்கு பிறகு, பாகிஸ்தானின் சிறுபான்மையினர், முக்கியமாக இந்துக்கள், அவர்கள் காலம்காலமாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து சமீபகாலங்களில் துரத்தப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் அவர்களது மதம் இங்கே பாதுகாக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் இருப்பது கூட கடினமாக ஆகிவருகிறது. மேலும், அவர்கள் பாகிஸ்தானின் உண்மையான குடிமக்களாகக் கூட கருதப்படவில்லை. அதனால்தான் அவர்களை கடத்துவதும், அவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதும் அதிகரித்துவருகிறது. குவேயிதே ஆஸம், 1947இல் பேசிய பேச்சை கேட்க இங்கே யாருமில்லை. இங்கிருந்து இந்துக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக குரல் எதுவும் எழவில்லை.

இந்துக்களின் வெளியேற்றத்தின் காரணங்களை புரிந்துகொள்ள பலுச்சிஸ்தானில் உள்ள இந்துவான ஷாம் குமாரிடம் பேசினேன். நவாப் அக்பர் கான் பக்தி( விக்கி இணைப்பு) என்ற கொல்லப்பட்ட மூத்த தலைவரின் கருத்தின்படி, இந்துக்கள் புராதன காலம் தொட்டு இந்த நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது பலுச்சிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு பலூச்சிகள் இங்கே வந்து குடியேறினார்கள். ஆனால், இந்துக்களே இந்த நிலத்தின் பூர்வகுடிகள். மேலும், பலுச்சிஸ்தானின் மூத்த தலைவர்களும் அறிவுஜீவிகளும் இந்துக்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். (அருகே உள்ள) சிந்து மாகாணத்தில் அரபுகள் வருவதற்கு முன்னால், இந்துக்கள் பௌத்தர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ராஜா தாஹிரின் தோல்விக்கு பிறகு முஸ்லீம்கள் சிந்து மாகாணத்தில் குடியேற ஆரம்பித்தார்கள்.

Dr.Anburaj said...

பலுச்சிஸ்தானின் இந்துக்கள் ஆரம்ப காலம் முதலே, வியாபாரிகளாகவும் கடைக்காரர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலத்தின் வளமைக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தங்களது சொத்துக்களை செலவழித்தார்கள். ஆரம்ப காலம் தொட்டே, இந்துக்கள், பலுச்சிஸ்தானின் முன்னேற்றத்துக்காவும், சமூக செழிப்புக்காகவும் உழைத்து வந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட பலுச்சிஸ்தானில் இந்துக்கள் செழிப்பாக இருந்தார்கள் என்ற காலம் இப்போது போயே போய்விட்டது. சிந்து மாகாணத்தில் ஆரம்ப காலம் தொட்டே இந்துக்களை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதும் நடந்துவந்திருக்கிறது. அது போல பலுச்சிஸ்தானில் நடந்ததில்லை. 1970, 80, 90களில் சிந்து மாகாணத்தில் இது மிகவும் அதிகமாக இருந்தது. இந்த வியாதி பலுச்சிஸ்தானில் 1990களில் ஆரம்பித்தது. ஜெனரல் ஜியா உல் ஹக்கின் காலத்தில் மோசமான பிரச்னைகள் தோற்றுவிக்கப்பட்டன. கலாஷ்னிகோவ் துப்பாக்கி கலாச்சாரமும், ஹெராயின் போதைப்பொருள் கலாச்சாரமும் துவக்கப்பட்டன. இந்த மோசமான விஷயங்கள் மெல்ல மெல்ல பரவின. கடைசியில் இந்துக்களை கடத்துவதும், பணம்பறிப்பதும் துவக்கப்பட்டுவிட்டது. அந்த நோய், ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலத்திலும், ஆசிப் அலி ஜர்தாரி ஆட்சியிலும் கேன்ஸராகவே ஆகிவிட்டது.

இன்னும் கூடவே மற்ற வியாதிகளும் தீவிரத்தன்மை அடைந்துள்ளன. பணத்துக்காக கடத்துவது, முக்கிய பிரமுகர்களை குறிவைத்து கொல்வது, இன வன்முறை, மதப்பிரிவு வன்முறை, காணாமல் போனவர்கள், கெட்டுப்போன உடலை தூக்கி எறிவது, பணம் பிடுங்குவது ஆகியவை. அதே வகையில் இந்துக்களை குறிவைத்து கடத்துவதும், அவர்களை திருப்பி கொடுக்க குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டுவதும், கொடுக்க முடியாதவர்களை கொல்லுவதும் அதிகரித்துள்ளது. கூடவே, இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றுவதும் சிந்து, பலுச்சிஸ்தான் மாகாணங்களில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளம் பெண்களையும் ஏன் முதிய இந்து பெண்களையும் கடத்தி கட்டாய மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது.

Dr.Anburaj said...

Kaffir - இந்துக்களுக்கு கொடுமை -பத்தி -3
இப்படிப்பட்ட மனித நேயமற்ற குற்றங்களை பார்த்துகொண்டு, அதிகார வர்க்கம், நீதித்துறை மற்ற அரசாங்க அமைப்புக்கள் கையாலாகாமல் வெறுமனே இருக்கின்றன. சொல்லப்போனால், அரசாங்கமே, அரசாங்கத்தில் உள்ளவர்களே இந்த சட்டப்பூர்வமற்ற, ஒழுக்கமற்ற, அரசியலமைப்புக்கு பொருந்தாத, சிறுபான்மையினருக்கு எதிராக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நோக்கில், பலுச்சிஸ்தானின் அமைதியான இந்துக்கள், தங்களது சொந்த நிலத்திலேயே, தங்களை “வேண்டப்படாதவர்களாகவும் விரும்பத்தகாதவர்களாகவும்” கருதப்படுவதை பார்க்கிறார்கள். அவர்களது தாய்நாட்டை விட்டுவிட்டு ஓடும்படியும், இல்லையெனில் அவர்களது வியாபாரம், உயிர் உடமை ஆகியவை அழிக்கப்படும் என்றும் குறிப்பால் உணர்த்தப்படுகிறார்கள்.

இந்த காரணங்களால், உயர்மட்ட அதிகாரிகளின் கதவுகளை பலமுறை தட்டி பார்த்து, ஒன்றும் நடக்காததால், 21ஆம் நூற்றாண்டில் இந்துக்கள் அங்குமிங்கும் ஓடி பாதுகாப்பாக இருக்க அலைகிறார்கள். ஹஸரத் மூஸாவின் தேசம் வெளியேற்றப்பட்டதை பழைய ஏற்பாட்டில் சொல்லியிருப்பது போல இன்று இந்துக்கள் ஓடுகிறார்கள். ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டார்கள். ஆகவே, இந்துக்களின் வெளியேற்றத்தையும் அத்துடன் ஒப்பிடலாம்.

இறுதியாக, ஐக்கிய நாடுகள், மனித உரிமை கழகம், அகில உலக நீதி மன்றம் ஆகியவற்றுக்கு என்னுடைய மனு என்னவென்றால், இந்த விஷயத்தில் அவர்கள் தலையிட்டு இந்த அமைதியான சிறுபான்மையின் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே.

The writer is a columnist at Daily Balochistan Express, Quetta and blogs at www.akbarnotezai.wordpress.com. He can be reached at akbarnotezai@yahoo.com adn on twitter @Akbar_notezai

Dr.Anburaj said...

சிலப்பதிகாரம் - காட்டும் சமயசமரசம் (கலை மணம் கமழும் சிலம்பு )

சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலம்; ஆடல் கலைக் களஞ்சியம். அதன் கதையில் ஒரு முக்கிய பாத்திரம் மாதவி; ஆடல், பாடல், அழகு மூன்றிலும் சிறந்தவள். அவளது அரங்கேற்றம் அரங்கேற்று காதை என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆடலாசிரியன், பாடல் ஆசிரியன், மத்தளம் கொட்டுவோன், யாழ் இசைப்பவன், ஆடும் பெண் ஆகியோர்க்கு உரிய தகுதிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆடலரங்கத்தின் நீளம், அகலம், உயரம் பற்றிக் கூறும் கலை நூல் இதுவே.

அழகு மிக்க பெண்களுக்கு ஐந்தாவது வயது தொடங்கி ஏழாண்டுகள் ஆடல் பாடல் பயிற்றுவிப்பர். பயின்று முடித்தபின் மன்னர் காண அரங்கேற்றம் நிகழும். இவ்வகையில் பயின்று அரங்கேறிய மாதவி ஆடும் பதினொரு ஆடல்கள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன.

சிறப்பியல்புகள்

சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகள் பல. இது தமிழ்நாட்டின் முப்பகுதிகளைப் பற்றியும், மூவேந்தர்களைப் பற்றியும், மூன்று தலைநகரங்களைப் பற்றியும், விரிவாகக் கூறும் நாட்டுக் காவியம் ஆகும். அரச மரபுகள் பற்றிய நூல்போல் தோன்றினாலும் காவியத்தின் தலைவன் தலைவியாக உள்ளவர் சோழநாட்டு வாணிகக் குடும்பத்து மக்களே ஆதலின், இது குடிமக்கள் காப்பியம் ஆகும். அவ்விருவருள்ளும் கண்ணகியாகிய தலைவியே சிறந்து விளங்குவதால், பெண்ணினத்திற்குப் பெருமை தரும் காவியமாக இது அமைந்துள்ளது. அக்காலத்தில் விளங்கிய சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய ஒன்றையும் பழிக்காமல் பொதுமை போற்றுதல் இதன் சிறப்பாகும். காவியத்தின் இன்னொரு சிறப்பு நாடாளும் வேந்தனை எதிர்த்துப் பெண் ஒருத்தி நீதியை எடுத்துரைத்துப் புரட்சி செய்த பெருமையாகும். தன் ஆணைக்குக் குறுக்கே வாய்திறப்போர் இல்லாத வகையில் நாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெரும்படை உடையவனாய் அரசு நடத்திய வேந்தன், நங்கை ஒருத்தியின் துயரக் கண்­ரால் கலங்கிச் சோர்ந்து மடிந்த காட்சி, துன்புறுவோரின் சி?று கண்­ர்த் துளிகளால் துன்புறுத்துவோரின் இணையிலா ஆற்றலும் தேய்ந்து மாய்வதைக் காட்டுகிறது. ஆயினும் அந்த வேந்தனின் பெருமை உயர்கிறது.

சிலப்பதிகாரமே முதலில் தமிழகத்தை ஒன்றாகக் கண்டது;
தமிழன் என்ற இன உணர்ச்சிக்கு வித்திட்டது; பிறவிப்
பகைவர்களாகத் தம்முள் போரிட்டழிந்தனர் தமிழ் மன்னர்கள்.
அடிகளோ பாண்டியன் அவல முடிவைக் கேட்டுச் சேரன்
வருந்துவதனைக் காட்டியுள்ளார். தமிழரசர் வீரத்தை இகழ்ந்த
ஆரிய மன்னரை அடக்க ஒன்றுபட்ட தமிழ் இனத்தின்
சார்பாளனாக வடநாடு சென்றான் சேரமன்னன். வாழ்த்துக் காதையில் சேரநாட்டுப் பெண்கள் சோழநாட்டுப் பெண்களோடு கூடிநின்று மூவேந்தர் புகழையும் பாடி மகிழ்கின்றனர். இவ்வாறு, தம் காப்பியத்தைக் கருவியாகக் கொண்டு ஒன்றுபட்ட தமிழகத்தை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த இளங்கோவடிகள் பாராட்டுக்கு உரியவர்.

சிலம்புக்குள்ள இன்னொரு சிறப்பாவது அது
சமயங்களுக்கிடையே சகிப்புத் தன்மையை வற்புறுத்துவதாக
அமைந்துள்ளது. அடிகள் சமணர். ஆனால் பிற சமய வெறுப்பை
ஓரிடத்தும் காட்டவில்லை. சமணத் துறவி கண்ணனை வழிபடும்
மாதரியிடம் மதிப்புக் கொண்டுள்ளார். மாதரியும் சமணத்
துறவியைக் கண்டு காலில் வீழ்ந்து பணிகின்றாள். குன்றக்
குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும்,
ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் அடிகள் வாழ்த்துகிறார்.
அவ்வக் கடவுளையும் பாடும்பொழுது சமமான பக்தி
கொண்டவராக அடிகள் தோன்றுகின்றார். சாவக நோன்பியான
கோவலன் வைதீக அந்தணர்களிடம் பரிவு காட்டுகிறான்;
அவர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்குகின்றான். மாடல
மறையோன் என்ற அந்தணன் கோவலனை உளமார
வாழ்த்துகின்றான். இங்ஙனம் பல நிலையினரும் பகையின்றிக் கூடி
வாழும் இனிய நிலையினை ஒரு சமரச ஞானியைத் தவிரப் பிறர்
யாரும் காட்ட முடியாது.

Dr.Anburaj said...

An urgent Message: Mecca masjid chennai என்ற வலைதளத்தில் சம்சுதீன் என்ற மௌலவியின் சொற்பொழிவு விடியோ ஆடியோ உள்ளது . 8.2.2012 தேதியிட்ட இச்சொற்பொழிவு தமிழன் டிவியில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
உடனே தாங்கள் அவசியம் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
முகம்மதுவைப்பற்றி ஒருதகவல் அதில் உள்ளது.அதை எழுதுவதற்கு கை கூசுகிறது. மகம்மது தனது மனைவியர்கள் இருவரை மக்காவிலிருந்து வந்தவர்களிடம்காட்டி ” இவர்களில் யார் உங்களுக்கு வேண்டும் என்று கூறுங்கள். நான் அவர்களை தலாக் செய்து விடுகிறேன்.நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் ” என்று கூறினார் என்து மெளாலானா சம்சுதீன் அவர்களின் அறிக்கை உண்மையா ??????
படிப்பதற்கு அசீங்கமாக உள்ளது.
2.22.2.13 தேதியிட்ட உரையில் ” இந்துக்களை தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாத சமூகம் என்றும் திட்டுகிறார். காபீர்களை அப்படி திட்டுவது சுன்னாதான்.
தங்கள் கருத்தை அறிய ஆவல்.

Dr.Anburaj said...

Please refer to the lecture Loving Prophet by Moulana Samsuddin .Please download and make a copy of that before writing any comments.

அஹ்லுல்பைத் said...

அன்புள்ள நண்பர் அன்புராஜ்.....

நீங்கள் குறிப்பிட்ட மௌலானா சம்சுதீனின் ஜும்மாஹ் பிரசங்க இணைப்பை யூ டியூபில் தேடினோம்.நீங்கள் குறிப்பிட்ட சரியான பிரசங்கத்தை தேட முடியவில்லை.

மீண்டும் ஒருமுறை சரியான இணைப்பை குறிப்பிடவும்.

மற்றது.......நமது சப்பரை உலமாக்களினது உளறல்களைப் பொருட்படுத்தாதீர்கள்.

அஹ்ளுல்பைத்களை நேசிக்காத உலமாக்கள் சரியான தகவல்களைத் தரப் போவதில்லை.

மௌலானா சம்சுதீனின் உரையின் காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலின் வலி நமக்குப் புரிகிறது.

அதற்காக முஸ்லிம்களை மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் - மௌலானா சம்சுதீனின் உரையில் இருக்கின்ற முரண்பாடுகளை நம்மால் சுட்டிக் காட்ட முடியும்.

தயவு செய்து சரியான இணைப்பைக் குறிப்பிடவும்.

நன்றி.

வணக்கம்.

Dr.Anburaj said...

www.makka masjid chennai என்று goodle ல் டைப்செய்தால் மேற்படி இணையதளத்தைக் காணலாம். அண்ணல் நபி என்ற சொற்பொழிவில் மேற்படி தகவல் காணப்படுகிறது.தமிழன் தொலக்காட்சியில் 8.2.2013 அன்று ஒளிபரப்பப்பட்டது.

Dr.Anburaj said...

ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டார்கள். ஆகவே, இந்துக்களின் வெளியேற்றத்தையும் அத்துடன் ஒப்பிடலாம்.ஆசிரியரின் கருத்து குறைபாடுடையது.
பாக்கிஸ்தானில் உள்ள இந்துக்கள் பன்னெடுங்காலமாக அங்கு வாழும் மண்ணின் மைந்தர்கள். ஆதிக்க சக்தியான என்றும் அம்மண்ணில் இருந்ததில்லை என்பது முக்கியம்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad