அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, February 7, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?.........கேட்பது நண்பர் முஹம்மத் அலி.........


அன்பு நண்பர் முஹம்மத் அலியின் கேள்வியொன்று இப்படி ஒலித்தது...........

Salaam Alaikum Brother,
I think your wrote this Article in " Vancha Pugazhchi Ani". I am not understand what you mean by இந்த இணைப்பில் ஈரானின் PRESS TV சவூதி அரசாங்கத்தின் மாற்றத்தின் நிஜமான பரிமாணத்தைப் புரிந்துக் கொள்ளாமல் அல்லது புரிந்துக் கொள்ளும் மன நிலையில் இல்லாமல் தவிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. What is the changes happened in Saudi and Bahrain????????


சவூதி அராபியாவில் இஸ்லாமிய ஆட்சி முறையோ அல்லது இஸ்லாமிய ஷரியா சட்ட அமைப்போ கிஞ்சித்தும் இல்லை.

அதில் எமக்கு அணுவளவேனும் சந்தேகம் இல்லை.

இஸ்லாமிய வாழ்க்கை செயல் முறையை உலகுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஐரோப்பிய முஸ்லிம்களுக்கும்,தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்களுக்கும்,பாகிஸ்தானின் பஞ்சாபிய முஸ்லிம்களுக்கும் கடமையான தார்மீகப் பொறுப்பாக நாம் கருதுகிறோம்.

ஏனெனில்..........



நாம் குறிப்பிட்ட இந்தக் கூட்டத்தார் கல்வி அறிவில் முன்னேறியவர்களாகவும்,பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாகவும் , தம்மை சுற்றி நடக்கின்ற அரசியல் விளையாட்டுக்களின் மூலத்தை இனம் காணும் அறிவு பெற்றவர்களாகவும்,முக்கியமாக மற்றவர்களின் சரியான கருத்துக்கு உரிய கௌரவமும் கொடுக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

சவூதி அராபியா வஹ்ஹாபிய இஸ்லாத்தின் பிறப்பிடமாகவும் வஹ்ஹாபிசத்தின் பரிணாம மாறுதலைக் கொண்டிருக்கின்ற சலபி இஸ்லாமிய அமைப்பை உலகுக்கு அறிமுகப் படுத்தும் அடிப்படைத் தளமாகவும் இருந்துக் கொண்டிருக்கின்றது.

சலபி இஸ்லாத்தில் பெண்களுக்கு எதுவித உரிமையும் இல்லை.

அந்தக் கொடூரத்தின் உச்சவரம்பு ஆண்களுக்கு கொடுத்திருக்கும் உரிமையின் அளவீடு பெண்களின் உயிர் வாழுகின்ற உரிமைக்கே உலை வைத்திருக்கிறது.

சவூதியில் அமுலில் இருக்கின்ற அரச நீதி ஒரு ஆணின் பாதுகாவலில் இருக்கின்ற பெண் குழந்தையை கொலை செய்யும் உரிமையை தந்தைக்கும் மனைவியைக் கொலை செய்யும் உரிமையைக் கணவனுக்கும் அனுமதித்து ஆண் ஆதிக்கத்துக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

அங்கே இருக்கின்ற பெண்கள் விரக்தியின் உச்ச கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சவூதி அராபியாவில் ஆண்களே கல்வி கற்க அனுமதிக்கப் படுவதில்லை.

அப்படியென்றால் பெண்களின் நிலை?

இந் நிலையில் சவூதி பெண்களின் உரிமைக்கு மிகக் கடுமையாக குரல் கொடுத்து பெண்களின் கல்விக்காக.........பெண்களின் உரிமைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்ற இளவரசர் வலீத் பின்த் தலாலும் அவரது மனைவி அமீராவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உள்ளவர்கள் என்பது நமது கருத்து.

இளவரசி அமீரா சவூதி பெண்களில் முதலாவது டிரைவிங் லைசன்ஸை பெற்று வாகனம் ஒட்டுவதாக பகிரங்கமாகக் கூறி அதற்கான முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இளவரசர் வலீத் பின்த் தலாலின் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஆதரவில் சுமார் 600 சவூதி அராபிய அரபிப் பெண்கள் சட்டத்துறையில் கல்விக் கற்று சட்டத்தரணிகளாக பட்டம் பெற்று வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

பெண்கள் கல்வியில் முன்னேறுவது முன்னேற்றமிக்க ஒரு சமூகத்தின் இருப்புக்கு காரணமாக இருக்கிறது.

சலபி உலமாக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இவர்கள் புரட்சிகரமான இத்தகைய மாறுதல்களை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இளவரசர் வலீத் பின்த் தலால் மிகவும் செல்வாக்குள்ள வெற்றிகரமான வியாபார நிபுணர்.

அவரை எதிர்க்கும் துணிவு சவூதி சலபி உலமாக்களுக்கு இல்லை.

அதே போல இவர்களை எதிர்க்கும் துணிவு சவூதி அரசின் அரசியல்வாதிகளுக்கும் இல்லை.ஏனெனில்,அந்த அரசியல்வாதிகளை விடவும் அதிகமான உலக அரசியல் நிபுணர்களுடன் இவர்களுக்கு தொடர்பிருக்கிறது.

அண்மையில் சவூதி அரசு தனது சூரா சபைக்கு பரிந்துரை செய்த முப்பது பெண்களின் நியமனத்தின் பின்னணியில் இளவரசர் வலீத் பின்த் தலாலினதும் அவரது மனைவி இளவரசி அமீராவினதும் செல்வாக்கு இருக்கின்றது.

நாம் இவர்களை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ........சவூதி அராபியாவில் அடக்குமுறைக்கு ஆளாகி இருக்கின்ற அனைவரும் இவர்களின் சேவையின் மகிமையைப் புரிந்துக் கொண்டு இவர்களை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், PRESS TV பதிவேற்றியிருக்கின்ற பதிவைக் கவனியுங்கள்..........

அதில் கருத்து சொல்கின்ற அநேகர் சவூதி அரசு முன்னெடுத்திருக்கிற இத்தகைய செய்கையின் தோற்றுப் போகின்ற விளைவுகளை விபரிக்கிறார்கள்.

சவூதி அரசின் இந்த நகர்வு நாளடைவில் வெற்றிகரமான ஒரு சமூக மாற்றத்துக்கு வழிகோலும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

அவர்களிடம் உயரிய கருத்து பரிமாறல்களை எதிர்பார்த்த நாம் அவர்களின் சிறு பிள்ளைத்தனமான செய்கையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

வஹ்ஹாபிய சலபி முல்லாக்களின் கருத்துக்களுக்கும்  PRESS TV ஊடகவியலாரகளின் கருத்துக்களுக்கும் இடையில் நாம் ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை.

உதாரணமாக ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அரைவாசி நீர் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.


அதனைப் பார்க்கின்ற ஒருவர் அதில் அரைவாசி தண்ணீர் இருக்கிறது என்று சொல்லலாம்.

அதே போல அதனைப் பார்க்கின்ற இன்னொருவர் அப் பாத்திரத்தில் அறைவாசின் ஒன்றுமே இல்லை என்றும் சொல்லலாம்.

ஈரான் நாட்டின் மார்க்க அறிஞர்கள் சவூதியின் இந்த நகர்வை நிச்சயம் வரவேற்பார்கள்.

மாற்றுக் கருத்துக்கு  நெகிழ்வு கொடுத்து இடம் தராத கல்வி நாளடைவில் ஏகாதிபத்திய அமெரிக்காவின் தாலிபான்களையும்,அல் கைதா அடிவருடிகளைப் போன்றவர்களையே  உலகுக்கு அறிமுகப் படுத்தும்.

மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட கல்வி அறிவு சுதந்திரமான தேடல்களுக்கு களம் அமைத்து இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் சூழலுக்கு வித்திட்டு இஸ்லாத்தின்பால் மக்களை ஈர்த்தெடுக்கும்.

இஸ்லாத்தை அறிந்துக் கொண்ட அறிவு அல்லாஹ்வை அறிந்துக் கொள்ளத் துடிக்கும் அறிவை விதைத்து அஹ்ளுல்பைத்களை அறிந்துக் கொள்ளத் துணை நிற்கும்.


சவூதி அராபியாவில் பெண்களுக்கு என்ன சுதந்திரம் கொடுக்கிறார்களோ அதனை முதலில் மறுக்காமல் ஏற்றுக் கொள்வோம்.

சவூதி அராபியப் பெண்கள் முதலில் சுதந்திரமாக கல்வி கற்கட்டும்.

அந்தக் கல்வி அராபிகளின் சுதந்திரத்துக்கு களம் அமைக்கும்.

பெண் சுதந்திரம் சுதந்திரமான ஒரு அராபிய சமூகத்துக்கு வித்திடும்.

சுதந்திரமான அராபிய சமூகம் உண்மையான இஸ்லாத்தைப் புரிந்துக் கொள்ளும் சூழலை உலகத்தில் உருவாக்கும்.

உண்மையான இஸ்லாம் உலக அமைதிக்கு வழி சொல்லும்.

அவ்வளவுதான்.

2 comments:

Dr.Anburaj said...

பெண்கள் முதலில் சுதந்திரமாக கல்வி கற்கட்டும்.
அந்தக் கல்வி சுதந்திரத்துக்கு களம் அமைக்கும்.
பெண் சுதந்திரம் சுதந்திரமான ஒரு முஸ்லீம் சமூகத்துக்கு வித்திடும்.முதலில் 1.பெண் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த வயதில் திருமணம் செய்யும் செய்கையை நிறுத்தவேண்டும்.பெண்களுக்கு திருமண வயது 22 என நிர்ணயம் செய்ய வேண்டும். முடியுமா ? சுன்னா சுக்கு மல்லி திப்பிலி என்று போலி வாதம் செய்தால் .... ? அலோபதி மருத்துவர் கருத்துப்படி வயதை நிர்ணயம் செய்ய வேண்டும்.
2. முகத்தை மறைக்கும் உடை ஆகாது.பெண்கள் எந்தவிதமானக் கல்வியும்,பெற சுழ்நிலைக்கு பொறுத்தமாக தேவையின் அடிப்படையில் சுதந்திரமாக வெளிவே சென்றுவர அனுமதிக்க வேண்டும்.3.ஆசிரியர் , மருத்துவம் தையல் போன்ற துறைகளில் பெண்களை அதிகம் ஈடுபடுத்தலாம்.4.சுயவேலைதரும் திறனை வளர்க்க ஆவன செய்யலாம்.5.தாங்கள் ” முஸ்லீம் ” என்று இறுமாந்து பிறரை ”காபீர்” என்று இழிவாக எண்ணி மற்றவர்களிடம் சுமுகமாகப பழக முடியாமல் தவிக்கும் நிலை மாற வேண்டும்.

6.உண்மையான இஸ்லாம் உலக அமைதிக்கு வழி சொல்லும் ??? இதுதான் பத்தி 5யில் சொன்னது. இஸ்லாம் -அரேபிய கலாச்சாரம் மட்டும் உலகத்திற்கு அமைதியைக் கொடுக்காது.கெடுத்துக் கொணடிருப்பது தொடர்ந்து கெடுக்கும். பிற கலாச்சாரங்களிலும் உன்னதங்கள் உள்ளன.அதைப்புரிந்து கொள்ளவும், பின்பற்றவும்
தெளிவான அரேபியஅடிமைப்புத்தியில்லாத மனம் வேண்டும்.
அரேபியா கலாச்சாரம் உலகத்திற்கு வழிகாட்ட வேண்டும், தலைமை தாங்க வேண்டும் என்பது முட்டாள்தனமாக வாதம். அதற்கான யோக்கியதை அதற்கு இல்லை. ஒருபோதும் வராது.இந்த உலகை அரேபியர்களும்,அரேபியர்கள் போல் நடித்துக் கொண்டிருக்கும் மக்களும் வெல்ல வேண்டும் எனற பேராசை அரேபிய மேலாதிக்கம் ஆகும்.மேலாதிக்க சிந்தனையாளர்கள் மற்றவர்களோடு இணக்கம் வைக்க மாட்டார்கள்.யுத்தம் ,கலகம் செய்பவர்களாகவே இருப்பார்கள்.அரேபிய கலாச்சாரம் பிற மக்களை வெல்ல வேண்டும் என நினைப்பு வேண்டாம். பிறமக்கள் கொண்டையில் ,,,,,,,, வைத்திருக்கவில்லை.பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல் முறையில் நன்மை அடையலாம்.அரேபியா அல்லாத மக்களின் அழிவை நாடும் அனைவரையும் அல்லா அழிப்பார். இறைவன் தங்களின் மனதில்அரேபிய மேலாதிக்க அடிமைப்புத்தியை நீக்கி அனைத்து சமய கலாச்சார மற்றும் பிற குழுக்கள் கொண்டிருக்கும் கல்வி,கலாச்சார சமய அறிவியல் உன்னதங்களை அடையாளம் காணும் நல்லறிவை, தெளிந்த புத்தியை அளிக்க இறைஞ்சுகிறேன்.உங்களது நயவஞசக திட்டம் தோல்வி அடைவது திண்ணம்.அரேபியமேலாதிக்க குரானுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய ரிக் வேதம் சொல்கிறது” உன்னதமான நல்லறிவு நான்கு திசையிலும் இருந்து நம்மை வந்து சோ்வதாக” !Let Noble thoughts come to us from Every side. இந்தியாவில் தோன்றிய புத்தகங்கள் மக்களை கிணற்று தவளை ஆக்கவில்லை என்பதற்கு மேற்படி சுலோகம் நிருபணம் ஆகும். முஸ்லீம்களை அரேபிய மேலாதிக்கம் என்ற பேரால் கிணற்று தவளையாக ஆக்காதீர்கள்.குடி கெடுக்காதீர்கள்.

Dr.Anburaj said...

சமூக நீதி அறக்கட்டளை சார்பில் தமிழன் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பப்பட்ட அரேபிய கலாச்சார நிகழ்ச்சியில் பேச்சாளர் ” எனது மகளிளின் திருமணத்தை திருமண வயதை நான்தான் நிர்ணயம் செய்வேன். அமொரிக்கா முடிவு செய்ய முடியாது என்று ஆவேசமாகப் பேசினார்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad