அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, January 22, 2013

ரிசானா நபீக்............நடந்துக் கொண்டிருப்பது என்ன?..........எதுவரை...?




இலங்கை மக்கள் இன மொழி வேறுபாடின்றி ரிசானா நபீக்கின் விடுதலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்ததை விவரிக்கும் ஆவணப் பதிவு.........

ரிசானாவின் மரணத்தின் பின்னர் கவலையுடன் கை குலுக்கி தமது கவலைகளை வெளிப்படுத்துகின்ற புத்தி ஜீவிகள்.........

நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் சிலருடன் மூதூருக்கு கள நிலவரத்தை நேரடியாக அறிந்துக் கொள்ளும் ஆவலில் ரிசானா நபீக்கின் வீட்டுக்கு சென்றிருந்தோம்.

கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியானவை.


ரிசானாவுக்கு நடந்த அநியாயத்தைக் கேள்விப் பட்டவுடன் சவூதியின் நீதியான ஒரு குடிமகன்  நடந்த இழப்பின் வலியின் வேதனையை உணர்ந்து உடனடியாக அந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கும் நல்ல நோக்கத்துடன் ஒரு மில்லியன் ரியால்ககளை வழங்கி உதவி செய்ய முன் வந்திருக்கின்றார்.

அவருக்கு ரிசானாவின் வீட்டாருடன் நேரடியாக தொடர்புக் கொள்ளத் தெரியாது.

அதட்காகவேண்டி அவர் நமது நமது பிரபலமான அரசியல்வாதி ஹிஸ்புல்லாஹ்வையும்,பிரபலமான முக்கியஸ்த்தர்கள் சிலரையும் தொடர்புக் கொண்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றார்.

அந்த தனவந்தரை சுமார் ஆறு மணித்தியாலங்களில் அரசியல்வாதிகளின்  சொகுசுகார்களில் அவர்களினால் ரிசானாவின் குடும்பத்தினரை சந்திக்க வைக்கும்  வாய்ப்பு இருந்தும் அந்த உதவியாளர்கள் ஏனோ அதனை செய்யவில்லை.(கண்ணா.........லட்டு தின்ன ஆசையா...?என்று யாரோ சொல்லுவது நமக்குக் கேட்கிறது )

இது தவிர,அந்த தனவந்தர் சந்தித்த நமது அரசியல் பிரமுகர்களோ அல்லது  அல்லது அரசியல்வாதிகளின்  பிரமுகர்களோ அந்தக் குடும்பத்தவர்களை நாம் ரிசானாவின் குடும்பத்தவர்களை  சென்று சந்திக்கும்வரை சென்று சந்தித்திருக்கவில்லை.(கண்ணா ........ரெண்டு லட்டு தின்ன ஆசையா......என்று அந்த யாரோ சொல்லுவது மீண்டும்  நமக்குக் கேட்கிறது )?)

ஆனால், Jaffna muslim இணையத்தளத்தில் இன்று பதிவேற்றப் பட்ட செய்தியோ வேறு  விதமானது.

நமது அரசியல்வாதிகளின் சாமர்த்தியமான காய் நகர்த்தல்களுக்கு jaffnamuslim இணையத்தளமும் உதவுகின்றதோ என்ற சந்தகத்தை அந்த செய்தி ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் -கொடுக்கப் பட்ட தொகை  ஒரு மில்லியன் ரூபாயா அல்லது ஒரு மில்லியன் ரியாலா என்ற தெளிவான விடயத்தை ஆதார பூர்வமாக jaffna muslim முன் வைக்கும் என்று நம்புகிறோம்.

http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_4413.html

இந்த செய்தியில் அங்கும் இங்குமாக கசிந்த ஒரு மில்லியன் சவூதி ரியால் என்ற செய்தி  jaffnamuslilm இல் ஒரு மில்லியன் ரூபாவாக ஆச்சரியமாகவும் வேகமாகவும் கூர்ப்படைந்திருப்பதாக நமக்குத் தெரிகிறது.

பத்து இலட்சம் ரூபாய் என்றால் சுமார் இருபத்து எண்ணாயிரம் ரியால்களாகும்.

சவூதியில் எந்த தனவந்தரும் இருபத்து எண்ணாயிரம் ரியால்களைத் தருவதற்கு விசேட விமானம் மூலம் இலங்கை வந்து அரசியல் பிரமுகர்களை சந்திக்கப் போவதில்லை.

சவூதியின் ஒரு சாதாரண குடிமகன் தனது வீட்டுப் பணிப்பெண்ணை பெற்றுக் கொள்வதற்கு சுமார் ஆறு இலட்சம் ரூபாவை முகவர்களுக்கு 'கமிஷனாக ' வீசி எறியும் கதையை அனைவரும் அறிவோம்.

முதலில் நமது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பகிரங்கமாக தன்னை சந்தித்த சவூதி பிரதிநிதியின் விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்

அவ்வாறான பகிரங்க அறிவிப்பில் நம்மைப் போன்ற பாமர மக்களினால் அந்த தனவந்தர் ரிசானா நபீக்கின் குடும்பத்தினரின் மீது வைத்த அனுதாபத்தின் வெளிப்பாடாக அன்பளிப்பாக வழங்கிய ரூபாய்களின் உண்மையான பெறுமதியை அறிந்துக் கொள்ள முடியும்.அது மட்டுமன்றி இத்தகைய பகிரங்க செய்கைகள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மீது சுமத்தப் படுகின்ற அவதூறுகளையும் போக்கிவிடும் என்று நாம் நம்புகிறோம்.

எது எப்படிப் போனாலும் தருமமாக கொடுத்த ஒரு மில்லியன் ரியால்களை நிச்சயமாக சவூதி தனவந்தர் திருப்பி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ரிசானாவின் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ரிசானாவுக்கு ஒரு தம்பியும் இருக்கிறார்.

மூதூரில் யாருமே கவனிக்காத அனேக வறுமையான குடும்பங்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

அந்த ஊரில் ரிசானாவைப் போல வெளிநாடு செல்ல இன்னும் இரண்டு இளம் பெண்கள் தயாராகிக் கொண்டிருபதாகவும் நமது பயணத்தில் நாம் அறிந்துக் கொண்டோம்.

'ரிசானாவுக்கு நடந்த அநியாயத்தை நேரில் கண்டதன் பின்னர் இந்த முடிவா?' என்று கேட்ட கேள்விக்கு........

''குடும்பத்தின் வறுமையைப் போக்க நமக்கு இருக்கும் ஒரே வழி இதுதான்''  என்று பதில் கிடைத்தது.

இவ்வாறான நெஞ்சை நெருடுகின்ற வலியான வழி தெரியாத செய்திகள் இருந்தும்........மூன்று கோடிக்கும் அதிகமான தருமமான பணத்தை நீதியுடன்??? திருப்பி அனுப்ப முயலும் நமது புத்திஜீவிகளின் செயலின் அந்தரங்கம் என்னவாக இருக்கும்?

............. கண்ணா லட்டு தின்ன ஆசையா..........கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆ சையா ........என்ற கனவுகளில் நமது நாயகர்கள் இருந்துக் கொண்டிருப்பது மட்டும் புரிகிறது என்று நீங்கள் சொல்லுவது நமக்குக் கேட்கிறது..



நினைவுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற ரிசானா நபீக் சம்பந்தமாக NEWS  FIRST வழங்கியிருந்த அற்புதமான விவரண சித்திரம்........n

2 comments:

Dr.Anburaj said...

அல்லாஹ்வின் முகத்தில் குத்திய மூஸா !
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மலக்குல் மவ்த்' (உயிரை எடுத்துச்செல்ல வரும் வானவர்) மூஸா (அலை) அவர்களிடம் வந்து, உங்கள் இறைவன் (உங்கள் உயிரை எடுத்து வருமாறு உத்த்ரவிட்டுள்ளான் அவனது) உத்தரவுக்குப் பணியுங்கள்” என்று கூறினார்.
உடனே மூஸா (அலை) அவர்கள் வானவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பெயர்த்துவிட்டார்கள். அந்த வானவர் இறைவனிடம் திரும்பிச்சென்று, ”மரணத்தை விரும்பாத உன் அடியார் ஒருவரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்! அவர் எனது கண்ணைப் பறித்துவிட்டார்” என்று கூறினார்
அவருக்கு மீண்டும் கண்ணை வழங்கிய இறைவன், “நீர் என் அடியாரிடம் திரும்பிச் சென்று, நீங்கள் உயிர்வாழத்தானே விரும்புகிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (இன்னும் நீண்ட நாட்கள்) உயிர்வாழ விரும்பினால், ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் கையை வையுங்கள்; (அதன் முதுகிலுள்ள முடிகளில்) உங்களது கை மறைக்கும் அளவுக்கு ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில்) நீங்கள் வாழலாம் சொல்வீராக என்று கூறினான்…

Dr.Anburaj said...

புகாரி : 7517
...அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரு நதிகளைக் கண்டார்கள். உடனே ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்த போது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகதத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி (ஸல்) அவர்கள் தமது கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள், இது என்ன நதி ஜிப்ரீலே? என்று கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இது உங்களுக்காக உங்கள் இறைவன் ஒதுக்கிவைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும் என்று பதிலளித்தார்கள்...
புகாரி : 5610
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
...நான் (மிஅராஜ்' எனும் விண்ணுலகப் பயணத்தின் போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா' எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக் கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக் கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்திலுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள் என்று சொல்லப்பட்டது....

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad