அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, January 24, 2013

முஸ்லிம் சிங்கள நல்லுறவின் நிஜமான எதிரிகள் யார்?..........கேட்பது Bodu Bala Sena விழிப்பது முஸ்லிம் சமூகம்.........!!! முஸ்லிம் சிங்கள நல்லுறவின் நிஜமான எதிரிகள் யார்?..........எம்முடைய  கேள்விகளுக்கு என்ன பதில்? .......கேட்பது Bodu Bala Sena இலங்கையின் Bodu Bala Sena நெத் FM வானொலியில் கேட்ட கேள்விகள் சில நமது ஜம்மியத்துல் உலமா சபையின் அறிஞர்களினால் பதில் சொல்ல இயலாத கேள்விகளாக மாறி நின்றன.

அப்படி அவர்கள் என்னதான் கேட்கிறார்கள்...?இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரால் சான்றுப் படுத்தப் படுகின்ற ஹலால் சான்றிதல் சம்பந்தமான விழிப்புனர்வை இந்த சமூகத்துக்கு நாம்தான் 
வெளிப் படுத்தினோம்.இந்த சான்றிதலின் காரணமாக வியாபார சமூகம் சுரண்டப் பட்டு குறிப்பிடத்தக்க சில உலமா சபை உறுப்பினர்கள் செல்வந்தர்களாகி இருக்கின்றார்கள்.அந்த உலமாக்களினால் நமது விழிப்புணர்வு போராட்டத்துக்குப் பின்னர் பல வாராந்தப் பத்திரிகைகளில் ஹலால் சம்பந்தமான விளக்கங்களை பல இலட்சம் ரூபா செலவழித்து விளக்கி இருக்கின்றார்கள்.இதனை அல்லது இந்த விளக்கத்தை அவர்கள் ஹலால் சான்றிதல் செயல்முறைக்கு பிரவேசிக்கும் பொழுதல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்?

இதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது?

சவூதி சார்ந்த சலபி இயக்கங்களும், வஹ்ஹாபிய அமைப்புக்களும் பள்ளிவாசல் கட்டுவதற்கு பல கோடிக்கணக்கான ரூபாய்க்களை செலவளிக்கின்றார்கள்.அந்த அமைப்புக்களினால் முஸ்லிம்களின் கல்விக்கு உதவ முடியும்தானே?அவர்களில் யாராவது முஸ்லிம்களின் கல்விக்கு உதவி இருக்கிறார்களா?

இதற்கான பதிலை இலங்கை சலபி ,வஹ்ஹாபிய இயக்கங்களிடம் பதில் இருக்கும் என்று நம்புகிறோம். என்ன பதில்...?

ஹஜ் மாதம் வந்து விட்டால் சவூதி அல்லது அராபி நாடுகளில் இருந்து மாடுகளை அறுத்து பலியிடுவதற்கும் பல்லாயிரம் ரூபாய்க்கள் இலங்கைக்கு அனுப்பபப் பட்டு செலவிடப் படுகின்றன.அந்தப் பணத்தைக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் வறுமையைப் போக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமல்லவா? 

இலங்கையில் இருக்கின்ற ஷியா, சுன்னி இயக்கங்களின் பொறுப்பில் இதற்கான விடை வேண்டப் படுகின்றது. என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.?

சவூதி சலபி அல்லது சவூதி வஹ்ஹாபிய அமைப்புக்களின் செல்வாக்கில் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் மனிதர்களின் மத சுதந்திரம் முழுமையாக பறிக்கப் பட்டிருக்கின்றன.அந் நாட்டு மக்கள் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.மத்திய கிழக்கு நிலைமைகளை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்?அது மட்டுமன்றி,அந்த நாடுகளில் வேற்று மதத்தவர்களின் மத நம்பிக்கையை அலட்சியப் படுத்தி அவர்களின் தலைகள் துண்டிக்கப் படுகின்றன.இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று நாம் கண்டிக்கின்றோம்.இதில் என்ன தவறிருக்கின்றது?

முஸ்லிம்கள் யாருக்கும் பதில் சொல்லத் தெரியாத கேள்வியிது?

மத்திய கிழக்கில் நமக்கு நமது புத்தரை வணங்கும் அனுமதி இருக்கின்றதா?

முஸ்லிம்களை மௌனித்துப் போக வைக்கும் கேள்வியிது.......என்ன சொல்கிறீர்கள்?

இங்குள்ள முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முழுமையான காரணகர்த்தாக்களாக இலங்கையில் இருக்கும் தலைமைத்துவ உலமாக்கள்......குறிப்பாக சலபி அல்லது வஹ்ஹாபிய அல்லது சவூதி அரசின் இஸ்லாத்தை நியாயப் படுத்தி அந்தக் கொள்கைகளை இலங்கையில் உருவாக்குவதற்கு முயற்சிக்கும் உலமாத் தலைவர்கள் இருக்கின்றார்கள்?

உண்மைப் போலத் தெரிகிறதே?

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஒருவர் ஹலால் சான்றிதல் உணவு பண்டங்களுக்கும் உணவு பொருட்களுக்கும் மட்டுமே உரித்தானது என்று பத்திரிகை அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.சீமெந்துக்கும் ஹலால் இருக்கின்றது.நாம் சீமெந்து சாப்பிடுவதில்லையே?கையில் பூசுகின்ற கை மைக்கும் ஹலால் தேவைப் படுகின்றது.நாம் கை மையை சாப்பிடுவதில்லையே?

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரிடம் இதற்கான பதில் இருக்கப் போவதில்லை.?

நாம் அவதானித்த இன்னுமொரு விடயம் என்னவென்றால் பெருநாள்  காலங்களில் ஏழை முஸ்லிம்கள் தமது தங்க ஆபரணங்களை ஈடு வைத்து தமது செலவினங்களை நிவர்த்தி செய்கிறார்கள். இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையில் வட்டிக்கு வாங்குவதும், வட்டிக்கு கொடுப்பதும்,வட்டிக்கு துணை போவதும் கூடாது.இந்த ஏழை முஸ்லிம்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதட்கு இந்த உலமா தலைவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

மறுக்க முடியாத சத்தியம்!

சவூதி உளவுப் பிரிவின் முக்கியஸ்தர் ஒருவர் அடிக்கடி இலங்கைக்கு வந்து இங்குள்ள பல சலபி ,வஹ்ஹாபி இயக்கங்களுக்கு நிதியுதவி செய்துக் கொண்டிருக்கின்றார்.ஆகவே,முஸ்லிம்களும் சிங்களவர்களும் முகமூடி அணிந்த இத்தகைய வேடதாரிகளை இனம் காண வேண்டும் என்ற நோக்கில்தான் நாம் நமது செயல் பாடுகளை முன்னெடுக்கிறோம்.இதிலுள்ள தவறென்ன?

இதிலுள்ள தவறென்ன?

3 comments:

Safeer Hafis said...

எல்லாமே நியாயமான கேள்விகள்தான்.

Dr.Anburaj said...

சவூதி உளவுப் பிரிவின் முக்கியஸ்தர் ஒருவர் அடிக்கடி இலங்கைக்கு வந்து இங்குள்ள பல சலபி ,வஹ்ஹாபி இயக்கங்களுக்கு நிதியுதவி செய்துக் கொண்டிருக்கின்றார்.ஆகவே,முஸ்லிம்களும் சிங்களவர்களும் முகமூடி அணிந்த இத்தகைய வேடதாரிகளை இனம் காண வேண்டும் என்ற நோக்கில்தான் நாம் நமது செயல் பாடுகளை முன்னெடுக்கிறோம்.இதிலுள்ள தவறென்ன? Sri Lankan Muslims should break themselves from Arab imperialims,may remain muslims-without slavery to Arab nations.They must foster good relationship with Tamilians and SriLankan Sinnhalese.That is one of the best way to solve life problems of poor Muslims. Muslims in Sri Lanka may face a volley of problems,fellow Muslims alone cannot solve that problems.Muslims are not frogs in well.
They should get help from all others.No society is island.Muslims should not live like a island.

Dr.Anburaj said...

சவூதி சலபி அல்லது சவூதி வஹ்ஹாபிய அமைப்புக்களின் செல்வாக்கில் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் மனிதர்களின் மத சுதந்திரம் முழுமையாக பறிக்கப் பட்டிருக்கின்றன.அந் நாட்டு மக்கள் நிம்மதி இழந்து தவித்துக் ொண்டிருக்கின்றார்கள்.மத்திய கிழக்கு நிலைமைகளை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்?அது மட்டுமன்றி,அந்த நாடுகளில் வேற்று மதத்தவர்களின் மத நம்பிக்கையை அலட்சியப் படுத்தி அவர்களின் தலைகள் துண்டிக்கப் படுகின்றன.இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று நாம் கண்டிக்கின்றோம்.இதில் என்ன தவறிருக்கின்றது?..........சவூதி சார்ந்த சலபி இயக்கங்களும், வஹ்ஹாபிய அமைப்புக்களும் பள்ளிவாசல் கட்டுவதற்கு பல கோடிக்கணக்கான ரூபாய்க்களை செலவளிக்கின்றார்கள்.அந்த அமைப்புக்களினால் முஸ்லிம்களின் கல்விக்கு உதவ முடியும்தானே?அவர்களில் யாராவது முஸ்லிம்களின் கல்விக்கு உதவி இருக்கிறார்களா?The light is on .I am happy.
Arab wants all muslims to remain fools/frogs in well /slave-intelectual and social / to thems. If Sri lankangovt. rules permits Muslims can establish an Educational Institution equivalent to Indian Institute of science and Indian Institute of Management and Indian Institute of Science - with financial aid from Southi Arabia. Try -----

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad