அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, July 25, 2017

அஹ்ளுல்பைத்தினர் யார்?


நபிகளாரின் உறவினர்கள் அனைவரும் அஹ்ளுல்பைத்தினர் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்த ஹதீஸ் ஆஹாதான ஹதீஸாகும். இந்த ஹதீஸை அவர் மாத்திரமே அறிவித்திருக்கிறார். இதனைச் சொல்லி சொல்லி அஹ்ளுல்பைத்தினரின் எதிரிகள்
சாமான்யர்களை குழப்புகிறார்கள்.
அஹ்ளுல்பைத்தினர் ஐவர்தான் என்கிற ஹதீஸ் முதவாத்திரான ஹதீஸாகும். நபியின் மனைவியரில் முக்கியமான இருவர் முதன்மையாக அந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள்.
கருத்து வேறுபாடு உண்டாகின்ற ஒரு விடயத்தில்
முதவாத்திரான ஹதீஸும், ஆஹாதான ஹதீஸும் ஆதாரத்துக்காக முன் மொழியப்பட்டால் ஆஹாதான ஹதீஸை ஒதுக்கிவிட்டு முதவாத்திரான ஹதீஸ் சொல்கின்ற முடிவையே இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில், முதவாத்திரான அனைத்து ஹதீஸ்களும் எக்காரணம் கொண்டும் அல் குர்ஆணின் போதனையுடன் முரண்படுவதில்லை. ஆஹாதான ஹதீஸ்கள் முரண்படும் வாய்ப்புகள் உண்டு.
நானும், அஹ்ளுல்பைத்தினரை நேசிக்கின்ற எனது நண்பர்களும் முதவாத்திரான ஹதீஸை ஏற்றுக் கொள்கிறோம். அதனை பகிரங்கமாக வெளியில் சொல்கிறோம்.
ஏற்றுக் கொள்ள முடியாதா? ஆட்சேபனையில்லை.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad