அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, February 1, 2011

"அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு சார்பான சாட்சியாளனாக இருப்பதற்கு மறுத்த நபி (ஸல்) அவர்கள்."
இமாம் மாலிக் (ரஹ்) உடைய 'அல் முவத்தாவில்' பின் வரும் ஹதீத் பதிவாகி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் விதாவின் பின்னர்,தங்களது மறைவிற்கு சில நாள்களுக்கு முன்னர் உஹத் மலை அடிவாரத்துக்கு சென்றார்கள்.

அங்கே உஹத் ஷஹீத்களுக்காக பிரார்த்தித்த பிறகு, அவார்களைப் பற்றி கூறும் பொழுது  "நான் உங்களுக்கு சார்பான சாட்சியாளனாக இருக்கிறேன்" என்றார்கள்.

அப்பொழுது அவ்விடத்தில் இருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் இதனைக் கேட்டவுடன்"அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் அந்த ஷஹீதுகளின் சகோதரர்களிலும் உள்ளவர்கள் தானே?, அவர்களைப் போன்று நாங்களும் முஸ்லிம்கள் தானே?, அவர்களைப் போன்று நாங்களும் உஹதில் யுத்தம் புரிந்தவர்கள் தானே? எங்களுக்கும் நீங்கள் சாட்சியாக இருக்க மாட்டீர்கள?" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.அதற்கு நபி (ஸல்) அவர்கள்" உண்மைதான். ஆனால், என்னுடைய மறைவிற்குப் பின்னர் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாதே ? " என்று விடை அளித்தார்கள்.

அதனைக் கேட்டவுடன் அபூபக்கர் (ரலி) அவர்கள்" எங்களுக்குப் பிடித்த கேடே! உங்களது மறைவிற்குப் பின்னர் உங்கள் மார்க்கத்தில் நாங்கள் மாறுதல்கள் செய்வோமா? " என்று    கூறியவர்களாக அழத் தொடங்கி விட்டார்கள்.

ஆதாரம்: அல் முவத்தா --இமாம் மாலிக் (ரஹ்) 

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad