அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, February 17, 2011

"அறிவியல் விபச்சாரர்கள்"



"அறிவியல் விபச்சாரர்கள்"

பேருவளையில்   தரீக்காக்களின் செல்வாக்கு அதிகம்.

அதனால் அங்குள்ள   மக்களில் பெரும்பாலோர் 'சுன்னத் வல் ஜமாத்தினர்.'  

சுன்னத் வல் ஜமாத்தினர் என்றாலே அவர்கள் நபி (ஸல்) அவர்களுடனும், அவர்களது குடும்பத்தவர்களுடனும் அதீத அன்பு கொண்டவர்கள் எனபது நாம் அறிந்ததே.

'வஹ்ஹாபிகளின்' பண உதவியில் 'ஜாமியா நளீமியா'  பேருவளையில் உருவாக்கப் பட்டதே இந்த 'தரீக்காக்'களின் செல்வாக்கை அங்கு சிதைத்து விடுவதற்கே என்ற நம்பிக்கையில் தவறு எதுவும் இல்லை.

பாவம் 'நளீமிய்யாவின்' ஏழை புத்திசாலி மாணவர்கள்.' 


கல்வி பொதுத் தராதரத்தில் நன்கு சித்தியடைந்த  ஏழை மாணவர்கள் இவர்களின் இலக்கு. 

'ஜாமியா நளீமியா'வின் நிலை கண்டு 'கக்கவும்' முடியாமல் 'விழுங்கவும்' முடியாமல் திணறும் பேருவளை முஸ்லிம்களின் நிலை பரிதாபம்.

இரண்டு வருடத்துக்கு முன்னர் 'ஜாமியாவின்' விரிவுரையாளரான   அஷ் ஷேக் 
பளீல் -தனது ஜும்மா பிரசங்கம் ஒன்றில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்கள் என்று உளறிக் கொட்ட பேருவளை அல்லோல கல்லோலமாகியது. 

துரதிஷ்ட வசமாக விரிவுரையாளர் பளீளுடைய கருத்தை அல் குரான் , அல்ஹதீத் ஆதாரங்களுடன் மறுக்கும் அளவுக்கு அந்த மக்கள் மார்க்கம் தெரிந்தவர்கள் இல்லை.

ஆனால், அவர்களது 'மார்க்க உணர்விலும், நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த பற்றிலும் இருந்த உயிரோட்டம் அபாரமானது.

இந்த இஸ்லாமிய உணர்வுகள் நிச்சயம் மறுமையில் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அத்தகைய உணர்வுகள் உஸ்தாத் பளீளிடம் துளி அளவும் இல்லை என்பது வருந்தக் கூடிய விடயம்.

பேருவளை மக்களின் 'ஆர்ப்பாட்டங்களினால்'  அவருக்கு ஜும்மா பிரசங்கம் செய்யும் வாய்ப்பு பறிக்கப் பட்டது.

என்றாலும்,அவர் அப்படி நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும்   எதிராக பேசியதன் காரணமாக அமெர்க்காவின் சி.ஐ.எ அவரை மாலை போட்டு வரவேற்றது.

அவர் பன்னாட்டு கம்பனியின் விருந்தாளி   என்ற போர்வையில் சி.ஐ.எ மூலம்    விசேஷ பயிற்சி ஒன்றிற்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்கள் போய் வந்தது இந்த உலகில் அவருக்கு கிடைத்த மகத்தான வெகுமதி.

இந்த கொசுறு செய்தி அநேகருக்கு தெரியாது

அவரது இரண்டாவது ஆட்டம் இன்னும் தொடங்கப் படவில்லை.

சி.ஐ.எ இந்தமுறை அவரை சிறந்த முறையில் உபயோகிக்கும் என்பது மட்டும் நிஜம். பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த வருடம் இன்னொரு சலசலப்பு.

இந்தமுறையும் ஒரு 'பளீல்.'

ஆனால் அது இந்த 'பளீல்' இல்லை.

இவர் அவரை விட விசேஷம்.

புதிய பளீல் ஒருபடி மேலே போய் "யாரும் ஆமினா அல்லது அப்துல்லா என்று பெயர் வைக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களான இந்த இருவரும் நரகத்துக்கு சொந்தமானவர்கள்" என்று பேசி இருக்கிறார்.

வழமை போல பேருவளை மக்கள் கொதித்துப் போனார்கள்.

மக்களின் கொந்தளிப்புக்கு பயந்த 'பளீல்' உடனே போலிசுக்கு உதவி கேட்டுப் போய் இருக்கிறார்.

போலிசும் உடனே இவரின் எதிராளியாக இருக்கும் ஊர் மக்களை அழைத்து விசாரித்து இருக்கிறார்கள். 

புதிய பளீல் "நபிகளாரின் பெற்றோர் நரகவாதிகள்" என்று சொல்ல , உஊர் மக்கள் "இல்லை அவர்கள் சுவர்க்கவாதிகள்" என்று சொல்லிருக்கிறார்கள்.

போலிஸ் அதிகாரி  புது பளீளிடம் "நாங்கள் எங்களது புத்த பெருமானின் பெற்றோரைப் பற்றி கூட விமர்சிப்பது இல்லை. நீங்கள் எதற்காக உங்களது நபியின் பெற்றோர்களை தூற்றுகிறீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.

"அவர்கள் நரகத்தில் இருக்கும் பொழுது , நான் எதற்காக அவர்கள் சுவனவாசிகள் என்று கூற வேண்டும்?" என்று சைத்தானின் நாயகன் பளீல் 
திருப்பிக் கேட்டிருக்கிறார்.

போலிசுக்கு தர்ம சங்கடம்.

'இது என்னடா புது தலை வலி' 


"அவர்கள் சுவனத்தில் இருந்தாலும், அல்லது வேறு எங்கு இருந்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. எங்களுக்கு இந்த ஊரில் அமைதி தேவை. எனவே இதன் பிறகு யாரின் மனமும் புண் படும் படி பேச வேண்டாம்"  என்று பளீலை எச்சரித்த போலிஸ், அவர்களது வாக்கு மூலங்களை எழுதுமாறு உத்தரவிட்டது.

சைத்தான் பளீல் எழுதினார்."அல் குரான் , அல் ஹதீத் ஆதாரங்களின் படி நபி (ஸல்) அவர்களது பெற்றோர் நரகவாதிகள்.அதற்கு நான் சாட்சி"

அப்பாவி பேருவளை மக்கள் எழுதினார்கள். "அல் குரான் அல் ஹதீத் எங்களுக்கு தெரியாது. எங்களை நரகத்தில் இருந்து பாதுகாத்த நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் சுவனவாசிகள். அதற்கு நாம் சாட்சி ".

இந்த இருவரில் யார் சொல்வது சரி?

அல் குரான் அல் ஹதீத் ஆதாரங்களின் படி ஒன்றும் தெரியாத , உணர்வு மட்டுமே கொண்டு நபி (ஸல்) அவர்களுக்காக எழுந்து நின்ற பேருவளை   மக்கள் சொன்ன கூற்று தான் மிக சரியானது.

நபிகளாரின் குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் மயப் படுத்தப் பட்டிருக்கும் 
நபி (ஸல௦ அவர்களின் பெற்றோர் பற்றிய விஷமக் கருத்துக்களை எமது அடுத்த பதிவில் தோலுரிக்கிரோம். 

அந்தத் தகவல்களுடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களை சந்திக்கின்றோம்.



No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad