அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, February 15, 2011

இமாம்கள்' தவறே செய்ய மாட்டார்களாம்?



இமாம் அல்லது தலைவர் எனும் பதவி குறிப்பிட்டதொரு சமுகத்தில், சமுக தலைமையை ஏற்பவருக்கு வழங்கப் படுகிறது.

இஸ்லாம் மனித குலத்தை நேர்வழிப் படுத்த வந்த ஒரு மார்க்கமாகும்.

நபிமார்களின் காலத்தில் அக்கால நபிமார்கள் மனிதர்களின் தலைவர்களாக இருந்து இருக்கிறார்கள்.

இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவிற்குபப் பின்னர் உம்மமத்தை வழிநடாத்தும் பொறுப்பு அல்லாஹ்வாலும் அவனது துதராலும் நியமிக்கப் பட்ட  'இமாம்க'ளிடம் ஒப்புவிக்கப்படுகிறது.

அத்தகை இமாம்களுக்கு முற்றிலும் கட்டுப் பட்டு நடக்குமாறு அல் குரான் எம்மை வேண்டி நிற்கிறது.

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு  கீழ் படியுங்கள்; இன்னும் தூதருக்கும்,உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ் படியுங்கள்............. "
(அல் குரான் 4 : 59  )  



இங்கே அதிகாரம் வகிப்பவர்கள் எனப் படுவது நபி (ஸல்) அவர்கள் முன் அறிவித்த பன்னிரெண்டு இமாம்கள் என்பது நபி (ஸல்) அவர்களின் வழித் தோன்றலல்களான அஹ்லுல் பைத்தை நம்பிக்கைக் கொண்ட , உலமாக்களினதும் அவர்களது வழி துயருவோரினதும்  ஒருமித்த கருத்தாகும்.

ஒரு சமுகத்தின் தலைவராயிருப்பவர் அல்லாஹ்வாலும் நபி (ஸல்) அவர்களாலும் நியமிக்கப் பட்டவராயிருத்தல் வேண்டும் என்பது அஹ்லுல் பைத் ஆதரவாளர்களின் நம்பிக்கை.

ஆனால், சுன்னத் வல் ஜமாத் முஸ்லிம்களின் அறிஞர்கள் , இந்த குரான் ஆயாத்  எம்மை ஆளும் ஆட்சியாளர்களை குறிக்கிறது என்று சொல்லி எம்மை இஸ்லாமிய மன்னர்களின்  ஆளுமைக்கு அடிமைத்துவமாக அடிபணிய நிர்ப்பந்திக்கிறார்கள்.

நபிகளார் முன்னறிவித்த பன்னிரெண்டு இமாம்களைப் பற்றி "முஸ்லிம் உம்மத்தின் காலத்தின் தலைமைத்துவம் இமாம் மஹ்தி (அலை) "என்கிற அத்தியாயத்தில் சில விளக்கங்களை குறிப்பிட்டு இருந்தோம்.

அஹ்லுல் பைத்தின் ஆதரவாளர்கள் தங்களது ஆட்சித் தலைவர்களாக கருதும் அந்த பன்னிரெண்டு இமாம்களும் பாவம் செய்வதின் நின்றும் அல்லாஹ்வால் பாது காக்கப் பட்டவர்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

அவர்களின் அத்தகைய நம்பிக்கையை ஏளனம் செய்யும் வகையில் சில மார்க்க அறிஞர்கள் இணையத்தில் உரையாற்றி உள்ளார்கள்.

அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த ஆய்வுரை எழுதப் படுகிறது என்பதை கருத்தில்  கொள்ளவும்..

 இன்று, இலங்கையில் உள்ள மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரும் , தப்சீர் விரிவுரையாளரும், நளீமிய்யாவின் பிரபலமான விரிவுரையாளருமான அஸ் ஷெய்க் உஸ்தாத் மன்சூர் அவரது பகிரங்கமான இணையத்தள பேச்சொன்றில் அஹ்லுல்பைத் இமாம்கள் தவறு செய்வதில் நின்றும் அல்லாஹ்வால் பாதுகாக்கப் பட்டவர்கள் என்ற கருத்தை வன்மையாக எதிர்த்து பேசினார்.

அதேபோல  இணையத்தளம் ஒன்றில் இன்னுமொரு பிரபல பேச்சாளர் 'பிலால் பிலிப்ஸ்' அவர்களும் இதே கருத்தில் "பாவம் செய்வதில் நின்றும் மனிதர்கள் பாதுகாக்கப் பட்டவர்கள் என்று நம்புவது ஷிர்க்காகும். ஏனெனில் அல்லாஹ் மட்டுமே பாவம் செய்யாதவன் என்பதே எமது அகீதாவாகும்" என்கிற கருத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

இதே கருத்தில் எங்களது சுன்னி இமாம்களின் பகிரங்க பேச்சுக்களை நிறையவே இனைய தளங்களில் காண முடியும்.

இமாம்கள் தவறு செய்வதில் நின்றும் அல்லாஹ்வால் பாதுகாக்கப் பட்டவர்கள் என்கிற வாதம் சரியானது தானா?

அல்லது எங்களது இந்த 'இமாம்கள்' கூறும் கூற்று சரிதானா?  .

அண்மையில் கொழும்பு 'ஷின்னமன் கிராண்ட் ஹோடேலில்' ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

அதில் கொழும்பில் உள்ள முக்கிய பிரபலமான தொழில் அதிபர்கள் பலர்   பங்கேற்று இருந்தார்கள்.

அந்த கருத்தரங்கில்   உரையாற்றிய ஒரு பிரபலமான தொழில் அதிபர் "இன்று நாணயமாகவும் நேர்மையாகவும் யாராலும் வியாபாரம் செய்ய முடியாது. அப்படி செய்வதாக யாராவது சொன்னால் அதனை நம்பிவிட வேண்டாம்.ஏனெனில், அப்படி யாராவது வியாபாரம் செய்தால் அவர் நிச்சயமாக தோற்றுப் போவார்"  என்று தனது சகாக்களை பெருமையாக பார்த்தபடி பேசினார்.

அவர் தனது பேச்சை முடித்து அமரும் பொழுது , தான் தனக்குத் தெரிந்த வியாபாரத்தின் பெரிய 'புதிர்' ஒன்றை அவிழ்த்து விட்டது போன்ற ரீதியில் அமர்ந்தார்.

ஆனால், பாவம் அவர் தன்னைப் பற்றித்தான் அங்கிருந்த மக்களுக்கு பிரஸ்தாபித்தார் என்கிற 'இரகசியம்' அவருக்கு புரியாமல் போய்விட்டது.

அதென்ன இரகசியம்?

'ஓ..! இங்கு வந்திருக்கும் பிரமுகர்களே! நீங்கள்  என்னை நாணயமானவன், நேர்மையானவன் என்று நம்ப வேண்டாம்.எனது வியாபாரம் முழுக்க முழுக்க நேர்மையும், நாணயமும் இல்லாமலேயே பொய்யிலே வளர்ந்து உள்ளது' என்று அவர் பகிரங்கமாகவே ஒத்துக் கொண்டுள்ள இரகசியம் புரிகிறதா?

வியாபாரத்தில் நேர்மையும், நாணயமும் முக்கியம்.

நேர்மையும், நாணயமும் இல்லாத வியாபாரம் ஒருநாள் சர சரவென நொடிந்து நிலத்தில் விழுந்து விடும்.

இந்த உண்மையை புரிந்துக் கொண்ட ஒருவன் அந்த தொழில் அதிபரின் கருத்தை ஏற்றுக் கொள்வானா?

எனது நண்பர் ஒருவர் என்னுடன் பேச்சு கொடுத்தவாறு இணையத்தில் மேய்ந்து கொண்டு இருந்தார்.

திடீரென அவரது மொனிட்டர் கருப்பாகியது.

திடீரென அதில் ஒரு வாசகம்' நீங்கள் ஆபாசக் காட்சிகளை காணப் போகிறீர்கள்'

அடுத்த கணம் நிர்வான நிலையில் சில பெண்களின் காட்சிகள் மெது மெது வாக ஒளிரத் துவங்கியது.

நண்பர் அதிர்ந்து போனார்.

உடனடியாக 'சி. பி .யுவை 'ஆப்' பண்ணி இணையத்தினை முற்றாக துண்டித்தார்.

ஆபாசக் காட்சிகளை அடிக்கடி பார்த்து பழகிய 'பலவீனமான' ஒருவர் எனது நண்பர் ஆபாசக் காட்சியை பார்க்காமல் தவிர்ந்தார் என்கிற சேதியை நம்பப் போவது இல்லை.

ஏன் தெரியுமா?

அவர் அவரைபோலவே எல்லோரும் என்று நினைப்பார்.

இதோ இந்த வரிகளை வாசிக்கின்ற நீங்கள் ஒரு போதும் 'மது ' அருந்தாதவர் என்று என்னால் சொல்ல முடியும்.

எப்படி என்று கேட்கிறீர்களா?

ஏனெனில், இணையத்தில் 'அஹ்லுல் பைத்'களைப் பற்றி சொல்லப்படுகின்ற விடயங்களை அல்லாஹ்வை விசுவாசிக்காத , நபி (ஸல்) அவர்கள்மீதும் அவரது குடும்பத்தவர்கள் மீதும் அன்பு வைக்காத ஒருவர்  ஒருபோது தேடி வரப் போவது இல்லை.

நீங்கள் 'மது' அருந்தும் உங்களது நண்பர்களின் மத்தியில் இருந்தாலும் 'மது' அருந்த மாட்டீர்கள்  எனபது உங்களுக்கு தெரியும்.

ஏனெனில், நீங்கள் 'மது'வால் கவரப் பட்டவர் இல்லை.

இதேபோல, பாவத்தால் கவரப் படாதவர் பாவம் செய்யப் போவது இல்லைதானே?.

இது  எமது  நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட உண்மை அனுபவம்.

ஐவேளை தொழுகை தவறாத அவர் மிகவும் நல்லவர்.

பிரமச்சாரியான அவர் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அந்த நாட்டில், கிழமைக்கு ஒரு தரம் அவரது நண்பரின் வீடொன்றில் நம் நாட்டவர்கள் அனைவரும் ஒன்று கூடுவார்கள். அதில் இவரும் சேர்ந்து கொள்வார்.

குடியும் கும்மாளமும் வீடியோவில் தமிழ் படமும் கொடி கட்டிப் பறக்கும்.

எமது  நண்பர் படம் பார்ப்பார். குடியிலும் கும்மாளத்திலும் சேர்ந்து கொள்ள மாட்டார்.

நண்பரின் சுபாவத்தை பற்றி தெரிந்து கொண்ட மற்றவர்களும் அவரை வற்புறுத்துவது இல்லை.

ஒரு நாள் இவர்களது நண்பர்களில் ஒருவர் இரண்டு இளம் பெண்களை அந்த 'பார்ட்டிக்கு' அழைத்து வந்திருக்கிறார்.

குடி, கும்மாளம், வீடியோ என்றிருந்த ஒன்று கூடலில் இப்பொழுது பெண்களும் சேர்ந்தாகி விட்டது.

நாளடைவில் இந்த இரண்டு பெண்களும்  அவர்களது   பெண் நண்பர்களை அழைத்து வருவது என்றாகி இப்பொழுது கிழமைக்கு ஒரு நாள், ஆளுக்கு ஒரு பெண் என்ற நிலைமை உருவாகி விட்டது.

சாப்பாடும் படமும் என்று கட்டுப் பாடுடன் இருந்த  எமது பிரமச்சாரி நண்பருக்குள்  'ஆசை' மெது மெதுவாக துளிர் விடத் தொடங்கியது.

இப்பொழுது இவருக்கு ஆசை.அதேபோல பயம்.

ஆசையை அடக்க முடியாத நண்பர் மெதுவாக அவரின் ஆசையை அவரது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் முறையிட்டிருக்கிறார்.

அவரது நண்பர் சந்தோசத்தில் துள்ளி குதித்து இருக்கிறார்."இப்பத் தான் மச்சான் நீ சரியான ஆம்பிளை". என்று கூறிய அவர் உடனே எமது நண்பருக்கு பொருத்தமான பெண்ணை தேடுவதற்கு ஆயத்தமாகி இருக்கிறார்.

இந்த செய்தி இரகசியமாகவும் இருக்க வேண்டும். இவர்களது நண்பர்களில் யாரையும் தெரியாத பெண்ணாகவும் இருக்க வேண்டும்.

என்ன செய்வது?

ஒரு நாள், இவருக்கு இவரது நண்பரிடம் இருந்து தொலை பேசி அழைப்பு வந்தது. "மச்சான் ஒரு ஆள் சரி. அவளின் பெயர் ரோசி. முதலில் டெலிபோனில் பேசி எமது நண்பர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறாள்.நான் உனது முகவரியை   கொடுத்து இருக்கிறேன்.வரும் வெள்ளிகிழமை உன் வீட்டுக்கு வருவாள்"

எமது நண்பருக்கு நெஞ்செல்லாம் திக்.திக்.

தொழும் பொழுது ரோசியின் நினைப்பு வந்தது. "யா... அல்லாஹ் !. ஒரே ஒரு முறை. பின்னால் இதை நினைத்தும் பார்க்க மாட்டேன். என்னை மன்னித்து விடு"

ரோசியின் நினைப்பு வரும் பொழுதெல்லாம் அல்லாஹ்வின் நினைப்பும் கூடவே வந்தது.

பலவந்தமாக அல்லாஹ்வை மறக்க நினைத்தாலும் முடிய வில்லை.

'நிறுத்தி விடுவோமா?'

ஆசை விட்டபாடில்லை.

'சரி. கருணையாளனான அல்லாஹ் மன்னித்து விடுவான்.'

எமது நண்பர் அவரது நண்பருக்கு கோல் எடுத்தார்." மச்சான். ரோசி வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்.?"

"நீதான் சாராயம் குடிக்க மாட்டியே?. நல்ல கேக் ஒன்று வாங்கி வை. அவள் வந்தவுடன் கேக்கை கொடுத்து நெஸ் கோப்பி கொடு. மற்றது எல்லாம் சும்மாவே நடக்கும்."

விலை உயர்ந்த கேக் ஒன்றும் வாங்கி வைத்தாகிவிட்டது.

வியாழன் இரவு நண்பருக்கு தூக்கமே  இல்லை.

ஒருமாதிரி எதிர்பார்த்திருந்த வெள்ளிக்கிழமையும் வந்தது.

எமது நண்பர் அதிகாலையிலேயே நன்கு குளித்து புது உடை அணிந்து ஜும்மாவுக்கு சென்றுவிட்டு அவசர அவசரமாக வீடு வந்து மாலையில்  ரோசியை
எதிர்பார்த்து காத்திருந்தார். 

ஒரு முடிவுக்கு வந்த நிலையில் இப்பொழுது அல்லாஹ்வின் நினைப்பு முற்றாக இல்லை.

மனத்தில் எல்லாம் ரோசியும், அவளுடன் ஆடப் போகும் கும்மாளமும்தான்.

வாசல் மணி அடித்தது.

நண்பர் உற்சாகமாக எழுந்தார். ஒரு பெண்ணை முதன் முதலாக தனிமையில் சந்திக்கப் போகிறோம் என்கிற பட படப்பு நெஞ்சில் இருந்தது.

வாசலுக்கு சென்று மெதுவாக கதவை திறந்தார்.

வாசலில் கண்ட காட்சியில் துணுக்குற்று நின்றார்

கை நிறைய புத்தகங்களுடன் ஒரு பெண்ணுக்குப் பதிலாக இரண்டு அழகிய இளம் பெண்கள்.

இரண்டு பேருமே இளம் கிறிஸ்தவ 'கன்னியாஸ்திரிகள்'.

அவர்கள் அவர்களது மதத்தை பிரச்சாரம் செய்ய அங்கே வந்து இருக்கிறாகள்.

நண்பருக்கு அசடு வழிந்தது.

என்ன செய்வது?

இனி கட்டின மேளத்தை அடிப்போம் என்ற நிலையில், இரண்டு கன்னியாஸ்திரிகளையும் அழைத்துக் கொண்டு வீட்டினுள் வந்தார்.

கேக் வெட்டி காப்பி கொடுத்தார்.

கன்னியாஸ்திரிகள் நண்பருக்கு உபதேசிக்க துவங்கினார்கள்.

"சகோதரரே! உலகம் அழியப் போகிறது. உலகத்திலே பாவங்கள் பெருகி விட்டன.இயேசு நாதரின் வருகை அண்மித்துவிட்டது. நாங்கள் ஒரே இறைவனுக்கு அஞ்சி நடந்து  கொள்ள வேண்டும்."

இதுதான் அவர்கள் அவருக்கு சொன்ன முதல் வார்த்தைகள்.

நண்பர் சிலையாகி நின்றார்.

கன்னியாஸ்திரிகள் உடைய    உபதேசத்துக்கா?

இல்லை. அவர் மேல் அல்லாஹ் கொண்டுள்ள கருணைக்காக.

அல்லாஹ் அவரை அந்த பாவத்தில் இருந்து காப்பாற்றியது மட்டும் இன்றி பிற மத பெண் போதகர்களைக் கொண்டு அவனைப் பற்றி அவருக்கு நினைவு படுத்திய செய்கையின் அழகை என்னென்பது?

இதே மாதிரியான அனுபவம் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நிறையவே நடந்து இருக்கும்.

நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், அல்லாஹ் உங்களுக்கு ஆச்சரியமான முறையில் உதவியது இலையா?

எத்தனை முறை நீங்களே ஒத்துக் கொண்டு உள்ளீர்கள்  ."இது அல்லாஹ்வின் வேலை. அவன்தான் எனக்கு உதவினான். வேறு யாரும் எனக்கு உதவவில்லை"

மிக சாதாரணமான எம்மையே அல்லாஹ் இப்படி பாவங்களை விட்டும் பாதுகாத்து ,எமது தேவைகளின் பொழுது உடனடியாக உதவும் பொழுது "...பாவங்களை விட்டும் முற்றிலும் பரிசுத்தமாக்குவேன்" என்று புனித குர் ஆனில் வாக்களிக்கப் பட்ட அஹ்லுல் பைத் இமாம்களை அல்லாஹ் தவறு செய்ய அனுமதிப்பானா?

சரியாக் எழுத  தெரிந்த ஒருவருக்கு பிழையாக எழுதுவது தான் கஷ்ட்டம்.

சரியாக எழுத தெரியாத ஒருவர் மற்றவர்களுக்கும் சரியாக எழுத முடியாது என்று வாதிடுவது சரியா?

 எண்ணங்களில் இருந்து தான் செய்கைகள் பிறக்கின்றன.

ஆக, எண்ணங்கள் சரியானவை என்றால் செய்கைகளும் சரியானவைகள் தான்.

இந்த நிலையில் எண்ணங்களில் கூட அந்த இமாம்கள் தவறு  செய்யாதவர்கள்  என்ற கூற்றில் உள்ள பிழைகள் தான் என்ன?

மன்சூர் உஸ்தாதும், பிலால் பிளிப்சும் , அவர்கள் போன்று பேசிய அனைவரும் தாங்கள் பாவம் செய்யும் பலவீனமானவர்கள் என்று இணையத்தில் பரிதாபமாக தங்களை வெளிக்காட்டிக் கொண்டார்கள்.

பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் உதவும் முறைகளைப் பற்றி எந்த விதமான அனுபவமும் இவர்களுக்கு இல்லை என்பதே இவர்களின் கூற்றில் பொதிந்துள்ள   நிஜம்.

இந்த உலமாக்கள் யாரையும் எமக்கு தனிப் பட்ட முறையில் தெரியாது.

இவர்களின் நெருங்கிய சிஷ்யர்களுக்கு, அல்லது நண்பர்களுக்கு இவர்களைப் பற்றி நன்கு தெரியும் என்று நினைக்கிறோம்.

அப்படி நெருங்கிய ஒருவருக்கு நாம் அல் குரானில் இருந்து, இவ்வாறு அஹ்லுல் பைத்துடைய எதிரிகளின் தன்மையை விவரிக்கும் சில ஆயத்துகளை ஆதாரமாக தருகிறோம்.

அதன் மூலம், அல் குரான் சொல்லும் இந்த குண நலன்கள் கொண்டவர்களாக இந்த தலைவர்கள் இருப்பது உங்களுக்குப்  புரிந்து போகும்.

"அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்."'

"(அத்தகயவன்) குறை கூறி திரிபவன்.கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்"

"(எப்பொழுதும் ) நன்மையானவற்றை தடுத்துக் கொண்டு இருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி"

"கடின சித்தம் உடையவன்; அப்பால் இழிபிறப்பும் உடையவன்"

அல் குரானில் சூறா அல்  கலம் என்ற அத்தியாயத்தில் அஹ்லுல் பைத்களின் எதிரிகளின் இந்த அடையாளங்கள் சொல்லப் பட்டுள்ளன.

இவர்கள் தன்னின சேர்க்கை பிரியர்களாக இருப்பது இவர்களது இன்னுமொரு விசேஷமான அடையாளமாகும். இழி பிறப்பான குண நலனுக்கு இந்த குணம் தான் பொதுவான அடையாளம்..

இந்த தலைவர்களின் மிக நெருங்கிய சகாக்களுக்கு மட்டும்  இந்த ரகசியங்கள்  புரியுமே தவிர ஏனையவர்களுக்கு அல்ல.

தூரத்தில் உள்ள மக்களை பொறுத்தவரை இந்த தலைவர்கள் 'ஷாலிகான' அல்லாஹ்வின் நல் அடியார்கள்.

பாவம் இவர்கள்.

எனவே பரிதாபமான இவர்களுக்காக வருந்துவதை தவிர வேறு ஒன்றும் எங்களால் செய்ய முடியாது.

அல்லாஹ்வின் உதவிகளைப் பற்றி சரியாக தெரியாத பலவீனமான இவர்கள், அல்லாஹ்வின் முழுமையான பாதுகாப்பில் உள்ள பரிசுத்தமான இமாம்களைப் பற்றி பேசுவதற்கு  எந்தத் தகுதியிலும் இல்லை என்பதை புரிந்து கொள்வோமாக.

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad