அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, February 27, 2011

அஹ்லுல் பைத்களுக்கு எதிரான அரசியலின் புது வடிவம். -அபூதர் கிப்பாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

ஒருநாள் மதியவேளை நாம் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டு இருந்தோம்.

அப்பொழுது ஒரு வறியவர் வந்து எங்களிடம் உதவி கேட்டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் எவரும் அவருக்கு எதையும் கொடுக்க வில்லை.

அம்மனிதர் வானை நோக்கி கைகளை உயர்த்தி " இறைவா! நீயே சாட்சி.நபியின் பள்ளிவாசலில் ஒருவரும் எனக்கு எதையும் தரவில்லை" என முறையிட்டார். 

அப்பொழுது தொழுகையில் 'ருகூவில்' இருந்த  அலி (ரலி) அவர்கள் அம்மனிதரை நோக்கி விரலை நீட்டினார்.

அந்த விரலில் இருந்த மோதிரத்தை கழற்றி எடுத்துக் கொண்டு அம் மனிதர் அகன்றார்.

இதனை அவதானித்துக் கொண்டு இருந்த நபி (ஸல்) அவர்கள் விண்ணை நோக்கி தலை உயர்த்தி பின் வருமாறு மொழிந்தார்கள்
."இறைவா! என் சகோதரர் மூஸா உன்னிடம் 'என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசக் கூடியவர்.  அவரை நீ எனக்கு உதவியாக அனுப்பி வை.' என்று கேட்டார்கள். நானும் உன்னுடைய நபிதான்.என் இருதயத்தை விரிவாக்கியருள். என் பணிகளை எளிதாக்கியருள். அலியை எனது பிரதி நிதியாகவும்,  உதவியாளராகவும் ஆக்கியருள்" என பிரார்த்தித்தார்கள்.

அபூதர் தொடர்கிறார்கள்" நபிகளார் தம் வார்த்தைகளை முடிப்பதற்கு முன் ' 'நிச்சயமாக உங்கள் விவகாரங்களில் உங்களது அதிகாரிகள் அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும், இன்னும் எவர்கள் (உண்மையாகவே) விசுவாசங் கொண்டு , தொழுகையை கடைபிடித்து , ருகூவில் சக்காத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்கள்தாம்'  (அல் குரான் 5  :  55  ) என்ற திரு வசனம் இறக்கி அருளப்பட்டது. "

இஸ்லாமிய வரலாற்றில் 'ருகூவில்' தர்மம் செய்தவர்  என்கிற சிறப்பு இமாம் அலி அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
(ஆதாரம்- அல் தூர் அல் மன்தூர்' - பாகம் இரண்டு)

எமது தலைமைத்துவத்துக்கு உரிய அதிகாரிகளாக அல்லாஹ்வும், அவனது ரசூலும், அஹ்லுல் பைத்களும் மட்டுமே எனபது இதில் இருந்து புலனாகின்றது.

இத் திரு வசனம் இறக்கி வைக்கப் படுவதற்கான நிலைமைகள், காரணங்கள்  பற்றி பிரபல மார்க்க அறிஞர் பஹ்ராணி தனது 'காயத் அல் மராம்' பக்கம் நூற்று மூன்றில் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களின் ஆதாரங்களில் இருந்து இருபத்து மூன்று ஹதீத்களை குறிப்பிட்டு உள்ளார்.

 ஆனால், துரதிர்ஷ்ட வசமாக எங்களது சுன்னத் வல் ஜமாத்தினுள் ஊடுருவிய அஹ்லுல் பைத்களின் எதிரிகளும், அவர்களின் அடிச்சுவட்டை பின் பற்றும்  வஹ்ஹாபிகளும் , வஹ்ஹாபிகளின் தயவில் தமது வயிற்றுப் பிழைப்பை நடாத்தும் இலங்கையின் நளீமியா, இஸ்லாஹியா போன்ற இஸ்லாமிய மதரஸாக்களின் ,உஸ்தாத் மன்சூர் போன்ற விரிவுரையாளர்களும் இந்த அல் குரான் ஆயத்தை 'சர்ச்சைக்குரிய' அல் குரான் ஆயத் என்று  கூறி  இதனை  ஆராய  வேண்டாம்  என தங்களது சிஷ்யர்களுக்கு கூறுவது நாங்கள்   தினமும்  காணும்  ஒரு காட்சியாகும்.

இது மட்டுமின்றி அவர்கள் எதுவித பயமும் இன்றி இந்த அல் குரான் ஆயத்துக்கு கொடுக்கும் பல விளக்கங்களில் இதுவும் ஒன்று.

"நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள் ; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர்கள் ஈமான் கொண்டு , தொழுகையைக் கடைப்பிடித்து , சகாத்தும் கொடுத்து (அல்லாஹ்வின் கட்டளைக்கு என் நேரமும்) தலை சாய்த்தும் வருகிறார்களோ அவர்களும் தான்."

நீங்கள் உங்களிடம் இருக்கும் அல் குரான் தர்ஜுமாவை புரட்டிப் பாருங்கள் உண்மை புரியும்.   

நவீன கால இந்த இஸ்லாமிய அறிஞர்களின் இத்தகைய செய்கைகள் நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் தொடங்கி வைக்கப் பட்ட 'அஹ்லுல் பைத்'களுக்கு எதிரான அரசியலின் தொடர்ச்சி இன்னும் முடிய வில்லை என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். 

       .

1 comment:

Dr.Anburaj said...

The concept of Prophet hood is resposible for deadly bloodshed in the world. Hinduism though believes in god Incarnation, It firmly declare that all men are equal .All spiritual experiences are common to all.Jesus said " I and the father in heaven is same. that high spiritual experience is possible to all.It is not the monopoly of anyone. In science we never strive to justify a particular Scientists.Science is impersonnel.Anybody can challenge any concept,provided there is evidence. Religion must emulate science.All men are like signs along the Highways.One must go ahead of sign posts.thus says Swami Vivekananda in his essay " The universal religion". Please taught muslims such lofty concepts.Do not keep them in a prison- prisioner of Koran, which is out dated now.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad