அஹ்லுல்பைத் Headline Animator

Friday, February 4, 2011

"லாரன்ஸ் ஒப் அராபியாவின் சம கால ஏஜெண்டுகள் -"லாரன்ஸ் ஒப் அராபியாவின் சம கால ஏஜெண்டுகள் -
ஓர் ஆய்வு களம்.--   முதலில் இந்த ஆய்வு பிறந்த கதை.

நாம் இலங்கையில் மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரும், இஹ்வானுள் முஸ்லிமின் ஆரம்ப கர்த்தாவுமான உஸ்தாத் மன்சூரையும், அவர் கல்வி கற்றுக் கொடுத்த ஜமியாஹ் நளீமிய்யாவின் மாணவர்களையும் ஒரு ஆரோக்யமான ஆய்வுக்கு அழைத்து இருந்ததை இந்த தளத்துக்கு அடிக்கடி தடம் பதித்த எமது   மதிபிற்குரிய உலகளாவிய  வாசகர்கள் அறிந்து இருப்பீர்கள்.நேற்று இரவு எமது நண்பர் ஒருவர் எமக்கு தொலை பேசியில் பேசினார்.

இலங்கையில் இருக்கின்ற முன்னணி சட்டத்தரணிகளில் இவர் முக்கியமானவர். பல சமூக சேவை அமைப்புகளின்  தலைவர். இது தவிர இலங்கை பத்திரிகையாளர்களிலும் ஒருவா.கூடவே மிகப் பெரிய ஆய்வாளர்.

அவரது கருத்துக்கள் மிக ஆழமானவை

அவர் எம்மிடம் "உங்களது சவாலை ஏற்று உஸ்தாத் மன்சூர் அல்லது யாராவது நளீமிகள் அல்லது அவர்களின் கொள்கை உடைய இன்னொருவர் உங்களது ஆய்வுக்கு வரப் போவது இல்லை" என்று பெரும் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

ஒரு கணம் துணுக்குற்ற நாம் " ஏன்?" என்று வினவினோம்.

"இந்தத் தலைவர்கள் அனைவரும் லாரன்ஸ் ஒப் அராபியாவின் தற்போதைய  ஏஜெண்டுகள்" என்று சிரிப்புடன் சொன்னார்.

அவரின் கருத்து சரியானது என்று எமக்குப் பட்டது.

விளைவு-

இந்த புதிய ஆய்வு மலரத் துவங்கியது.

இந்தியாவின் 'முஹம்மத்', லண்டனில் 'ஹபீப்', துபாயில் 'ரபீக்', என்று எம்மை தெரியாமலேயே எங்களுடன் இணைநது இருக்கின்ற எமது உலகளாவிய இஸ்லாமிய நண்பர்களே:

எமது இஸ்லாமிய தலைவர்கள்  இஸ்லாத்தின் எதிரிகளுக்கு சோரம் போன கதை எப்படி துவங்கியது, அது எந்த இலக்கை நோக்கி நகர்கின்றது    என்று இனி ஆராய்ந்து பார்ப்போம்.

அத்துடன், எமது சட்டத்தரணி நண்பர் சொல்லுகின்றது போல  - "நளீமிகள் ஆய்வுக்கு வர மாட்டார்கள்" என்கிற  கூற்றும் உண்மையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

எம்மை இவ்வாறு கலந்துரையாட தளம் அமைத்து தந்த "தமிழ் மணத்துக்கு" எமது நன்றிகள்.

"வாழ்க தமிழ் மணம்"    
     

No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad