ஆறுதலான செய்தி......உசாமாவின் பூதவுடல் கடலில் வீசப் படவில்லை?????
அப்படியானால்..............?
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சில் அதுவும் C.I.A. யில் பல முக்கியமான பொறுப்புக்களை வகித்தவரும், 1980 களில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இஸ்லாமிய ஜிகாதுக்கு ஒசாமா பின் லேடனை தயார் படுத்தியவரும் தட் பொழுதும் அமெரிக்காவின் பாது காப்பு அமைச்சில் முக்கியமான பொறுப்பில் வேலை செய்துக் கொண்டிருக்கும் Dr. Pieczenik ஒசாமா பின் லேடனின் மரணம் சம்பந்தமான உண்மைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Lawrence Eagleburger என்பவர் அமெரிக்காவின் துணை செயலாளராக இருக்கையில் அவர் Dr. Pieczenik ஐ "உளவியல் யுத்த நிபுணத்துவம், பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசனை, கலாச்சாரத்துக்கு எதிரான செயல் பாடுகள், இராணுவ உளவுப் பிரிவுக்கான ஆலோசகர் " போன்ற பல பொருப்புகளுக்குரிய நிபுணராக நியமித்து இருந்தார்.
இவரைப் பற்றி மேலதிக விபரங்களை தெரிந்துக் கொள்ள விரும்புவோர் இவரது பெயரை Google இல் டைப் செய்து சேர்ச்சுக்குப் போனால் பெற்றுக் கொள்ள முடியும்.
அமெரிக்காவில் Alex Jones Show என்று ஒரு தனியார் வானொலியும் தொலைக் காட்சி வலை அமைப்பும் உள்ளது.
Google இல் உங்களால் இவர்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
ப்ரீ மேசனினதும் மறைமுக சக்திகளினதும் இரகசியங்களையும், மக்கள் அதனால் எதிர் கொள்ளும் அபாயங்களையும் எதுவித தயக்கமும் இன்றி இவர்கள் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இணையத்தில் இவர்களது விடயங்கள் பிரசித்தம்.
Dr. Pieczenik வெளியிட்ட் ஒப்புதல் வாக்கு மூலம் கடந்த சில தினங்களாக எம்மைக் குழப்பிக் கொண்டிருந்த செய்திகளின் நிஜமான பின்னணிகளை எமக்கு தெளிவு படுத்தி விட்டன.
Dr. Pieczenik வெளிட்ட தகவல்களின் படி ஆப்கானிஸ்தானை நேடோ படையினர் ஆக்கிரமிப்பதற்கு முன்னரேயே ஒசாமா பின் லேடன் 'மர்பான் சின்றோம்' என்கிற பரம்பரை நோய் தாக்கி அதனால், இயற்கையாகவே இறந்து விட்டார்.
எந்த அதிரடிப் படையினரும் அவரைக் கொலை செய்ய வில்லை.
2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இந்த உலகை விட்டும் பிரிந்து விட்டார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப் படுத்திய ஜோர்ஜ் டப்ளிவ் புஷ்சுக்கு 'மர்பான் சின்றோம்' நோயில் ஒசாமா பின் லேடன் அவதிப் படுவது தெரிந்து இருந்தது.
அவரது ஆட்சியில் C.I.A. யின் விஷேட வைத்தியர்களின் குழுவினர் ஜூலை 2001 இல் துபாயில் இருக்கும் அமெரிக்க மருத்துவ மனையில் அவருக்கு விஷேட சிகிச்சை அளித்தனர்.
அவரைப் பீடித்து இருந்த நோயின் காரணமாக அவர் மெல்ல மெல்ல இறந்துக் கொண்டு இருந்தார். ஆகவே, அவரைக் கொலை செய்ய எந்த அதிரடிப் படையினரின் தேவையும் இருக்க வில்லை.
9/11 நாடகம் அரங்கேறி சில மாதங்களிலேயே அவர் இயற்கையாக அவருடைய "டோரா போராகுகை" பதுங்கு தளத்திலேயே இறந்துப் போனார்.
என்றாலும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் அவரது மறைவை வெளியிடவில்லை.
அந்த செய்தியை வெளியிட சரியான தருணத்தை எதிர் பார்த்து மறைத்து வைத்துக் கொண்டார்கள்.
நிஜத்தில் அவருக்கு அமெரிக்காவினாலேயோ, C.I.A. வினாலேயோ எது விதமான அச்சுறுத்தலும் இருக்கவில்லை.
அதே போல அவரினால், அமெரிக்காவுக்கோ, அல்லது அதன் நேச நாடுகளுக்கோ எது விதமான அச்சுறுத்தலும் இருக்க வில்லை.
அவர் அமெரிக்காவுக்கு மிகவும் தேவைப் பட்ட ஒருவராகவே இறுதிவரை இருந்தார்.
ஏனெனில், ஒசாமா பின் லேடன் என்கிற 'பயங்கரவாத பாத்திரப் படைப்பு' அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை நெறிப் படுத்த அவர்களுக்கு தேவையாக இருந்தது.
ஒசாமா பின் லேடன் இறந்து சுமார் பத்து வருடங்கள் பேணிப் பாதுகாத்து வந்த 'பயங்கரவாதி பின் லேடன்' திடீரென கொலை செய்யப் பட்டதில் என்ன இலாபம் அமெரிக்க அரசாங்கத்தை தீர்மானிக்கும் ப்ரீ மேசனுக்கும், மறைமுக சக்திகளுக்கும் இருக்கப் போகிறது?
ஒரு அடியில் இரண்டு மாங்காய்.
அமெரிக்காவின் அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.
ஒசாமாவை 'ஹீரோயிசமாக 'கொலை செய்ததில் பாரக் ஒபாமா சிதைந்துப் போய் இருந்த அவரது பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.
இனி ஒரு வருடத்துக்கு அவரது தேர்தல் பிரசாரத்துக்கு வேறு கதைகள் தேவை இல்லை.
பாக்கிஸ்தானை நேடோ படையினர் சுதந்திரமாக ஆக்கிரமிப்பதற்கு பயங்கரவாதி பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுக்கப் பட்டது அழுத்தமான காரணமாக அமையப் போகிறது.
சொல்லி வைத்த மாதிரி பின் லேடன் கொலையுடன் பாகிஸ்தானில் உள் நாட்டுக் கலவரங்கள் வெடித்து விட்டது.
நேடோ படையினர் சம்பந்தப் பட்ட தாக்குதல்கள் தாலிபானால் தொடர செய்யப் படும்.
இனி, பாகிஸ்தானை உலக நாடுகளை விட்டும் தனிமைப் படுத்திவிடலாம்.
அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தானிய இராணுவம் ஒரு முஸ்லிம் இராணுவமாகும்.
மத்திய கிழக்கில் அனைத்து முஸ்லிம் இராணுவங்களும் பலவீனப் படுத்தப் பட்டாகி விட்டது.
பாக்கி இருப்பது பாகிஸ்தான்.அதுவும் அணு ஆயுத பலத்துடன்.
அந்த இராணுவத்தை சிதைப்பதற்கு பின் லேடனின் பெயரில் பிள்ளையார் சுழி போட்டாகி விட்டது.
பாகிஸ்தான் முடிந்ததன் பினனால்'ப்ரீ மேசனினதும்' 'மறைமுக சக்திகளினதும்' இறுதி இலக்கு மிக இலகுவாகி விடும்.
அது?
தனித்து தாக்குப் பிடிக்கப் போகின்ற ஈரான்.
ஈரானால் முடியுமா?
காலம்தான் பதில் சொல்லும்.
No comments:
Post a Comment