யசீதின் கொடூரமான செயல்களுக்கு களம் அமைத்த நமது முதல் இரண்டு கலீபாக்கள்......????? ஜீரணிக்க கஷ்டமான நிஜங்கள்!
இமாம் ஹுசைன் கர்பலா கொலைக் களத்தில் மிகக் கொடூரமாக படு கொலை செய்யப் பட்ட கதை நமக்கு புதிதல்ல.
யசீத் , இமாம் ஹுசைன் அவர்களைக் கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன?
விடை மிக இலகுவானது.
இமாம் ஹுசைன் யசீதுக்கு 'பைஆத்' செய்யவில்லை.
அவர் யசீதுக்கு பைஆத் செய்திருந்தால் கொலை செய்யப் பட்டிருக்க மாட்டார்.
இமாம் ஹுசைனை படு கொலை செய்ததன் பின்னர் அநியாயக் காரன் யசீதின் தலைமையை ஏற்றுக் கொள்ள மதீனா வாசிகள் மறுத்து விட்டனர்.
உடனே அவன் தனது படையினரை மதீனா நோக்கி அனுப்புகிறான்.
இஸ்லாமிய வரலாற்றில் இரத்தக் கரை படிந்த எண்ணிலடங்காத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
வரலாற்று ஆசிரியர்கள் இதனை 'ஹர்ரா போர்' என்று வர்ணிக்கிறார்கள்.
ஒரு நாட்டின் பலமிக்க படையினரால் அந்த நாட்டின் ஒரு நகரம் ஆக்கிரமிக்கப் படுவதை எப்படி போர் என்று கூற முடியும் என்று கேட்கிறோம்?
உமைய்யாக்களினதும் அப்பாசியா ஆட்சியாளர்களினதும் அடி வருடிகளான அறிஞர்களால் இத்தகைய அநியாயங்களை நியாயப் படுத்த எடுத்து விடப் பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் தான் இவ்வாறான போது மக்களின் கலகங்களை போர் என்று மிகைப் படுத்தி கூறுவதாகும் என்று நாம் கருதுகிறோம்.
அநியாயக் காரப் படையினர் மூலம் மதீனா மக்களை கொடுங்கோலன் யசீதுக்கு -அல்லாஹ்வின் சாபம் அவன்மீது உண்டாகட்டும்- பைஆத் செய்யுமாறு அரை கூவல் விடுக்கப் பட்டது.
உண்மையான முஸ்லிம்கள் யசீதின் - அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்- தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
(எங்களது சில உலமாக்களின் புண்ணியத்தால் நாம் யசீதை எங்களது தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருப்பது வேறு விடயம். இல்லாவிட்டால், சகீர் நாயக் மிகப் பகிரங்கமாக "யசீத் ரலியல்லாஹு அன்ஹு" என்று கூறுவதை நாம் அனுமதிப்போமா?)
அதன் பின்னர், மதீனா நகர் யசீதின் படையினரால் துவம்சம் செய்யப் படுகிறது.
அந்த சம்பவத்தின் போது, மதீனா நகரில் சுமார் ஏழு நூறு சஹாபாக்களும் பத்தாயிரத்துக்கு அதிகமான பொது மக்களும் கொன்று குவிக்கப் படுகிறார்கள்.
ஆயிரம் அராபிய பெண் சஹாபா பெண்கள் வயது வித்தியாசம் பாராது கொடூரமாக கற்பழிக்கப் படுகிறார்கள்.
ஹாபீஸ் இப்னு கதீர் கூறுகிறார்கள்"அந் நாட்களில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் தங்கள் கணவர்மார் அல்லாத வேறு நபர்களால் கற்பவதியாக்கப் பட்டார்கள்"
இந்த கொடூரமான சம்பவம் பற்றி மேலும் அறிய விரும்புவோர் அத்தபரி பாகம் நான்கையும், இப்னு அசீர் மூன்றாம் பாகத்தையும், அல் பிதாயா வந்நிஹாயா எட்டாம் பாகத்தையும் பார்க்குமாறு வேண்டுகிறோம்.
மதீனாவாசிகள் இத்தகைய கொடூரத்தை எதிர்கொள்ள அவர்கள் செய்த தவறு என்ன?
அவர்கள் செய்த தவறும் யசீதுக்கு- அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்- பைஆத் செய்ய மறுத்தது ஆகும்.
அதன் பின்னர் யசீதின் - அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்- படையினர் மக்கா நோக்கி அப்துல்லா இப்னு ஸுபைரை எதிர் கொள்ள சென்றனர்.
யசீதுக்கு பைஆத் செய்ய மறுத்த அப்துல்லா பின் ஸுபைர் இமாம் அலியின் தீவிர ஆதரவாளர்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மூத்த சகோதரி அஸ்மாவின் மகன்.
அவரது தந்தை தனது மரணத்தின் பொது பன்னிரண்டு இலட்சம் திர்ஹம் பெறுமதியான சொத்துக்களையும், இருபத்து நான்கு இலட்சம் திர்ஹம்கள் பெறுமதியான கடன்களையும் மகன் அப்துல்லாவின் பொறுப்பில் விட்டு விட்டு சென்றார்கள்.
அது மட்டுமன்றி மகனின் ஆளுமையில் முழு நம்பிக்கை வைத்து, தனது கடன்களை அடைத்து விடும்படியும், மிகுதியான சொத்துக்களை பிரித்து பங்கீடு செய்யும் விதத்தையும் மரண சாசனமாக சொல்லிவிட்டு போனார்கள்.
தகப்பனின் கணிப்பு வீண் போகவில்லை.
தந்தையின் சொல் தவறாது, மொத்த கடன்களையும் அடைத்து, ஐந்து கோடி திர்ஹம்களுக்கு உரிமையாளரானர் வெற்றிகரமான பொறுப்புள்ள மகன்.
அவர், புனித கஹ்பதுல்லாவில் வைத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப் படுகிறார்.
அவரது தலை துண்டிக்கப் படுகிறது.
அவரது முண்டம் கஹ்பதுல்லாவில் அழுகி நாற்றம் எடுக்கும் வரைக்கும் தொங்கவிடப் படுகிறது.
அவரது தலை துண்டிக்கப் படுகிறது.
அவரது முண்டம் கஹ்பதுல்லாவில் அழுகி நாற்றம் எடுக்கும் வரைக்கும் தொங்கவிடப் படுகிறது.
படு கொலையை செய்தவர்கள் அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளான அநியாயக் காரர்கள்.
அந்த அநியாயக்காரகளின் தலைவர் எங்களது சுன்னத் வல் ஜமாத்தின் பிதாமகன் அமீர் முஆவியாவின் அருமை மகன் யசீத் இப்னு முஆவியா.
- அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்-
கோடீஸ்வர வியாபாரியும் மக்கா மதீனா மக்களின் ஏகோபித்த தலைவருமான அப்துல்லா இப்னு ஸுபைர் செய்த தவறு என்ன?
யசீதுக்கு- அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்- பைஆத் செய்ய மறுத்தார்.
கோடீஸ்வரர் அப்துல்லா இப்னு ஸுபைர் யசீதுக்கு- அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்- பைஆத் செய்திருந்தால் அநியாயமாக கொலை செய்யப் பட்டிருக்க மாட்டார்.
சொத்து செல்வம் இல்லாத , சுவனத்தின் ஆண்களினது தலைவர்களில் ஒருவர், நபிகளார் தனது உயிரினும் மேலாக அன்பு வைத்த நபி (ஸல்) அவர்களது அருமைப் பேரன் கொலைசெய்யப் படுகிறார்.
செய்த தவறு தலைவருக்கு பைஆத் செய்யாதது.
நபிகளாரின் அன்புக்கு பாத்திரமான மதீனா நகர் மக்கள் கொன்று குவிக்கப் படுகிறார்கள்.
செய்த தவறு அநியாயக்கார ஆட்சியாளனுக்கு ஆதரவாக பைஆத் செய்ய மறுத்தது.
மறு புறம் பெரும் கோடீஸ்வரர் அப்துல்லா இப்னு ஸுபைரும் இமாம் ஹுசைன் பாணியிலேயே கொலை செய்யப் படுகிறார்.
அவர் செய்த தவறும் தலைமைக்கு பைஆத் செய்யாதது.
இவர்களைப் போலவே இமாம் அலியும் அவர் மனைவி பாத்திமாவும் கோடீஸ்வரர் அப்துல்லா இப்னு ஸுபைரின் தந்தை ஸுபைர் இப்னு அவ்வாமும் முதலாம் கலீபா அபூபக்கருக்கு பைஆத் செய்ய மறுக்கிறார்கள்.
புஹாரி ஹதீத் கிரந்தத்தில் இந்த ஹதீத்கள் பதிவாகி இருக்கின்றன.
ஹசரத் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் "நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் எங்களுடன் முரண் பட்ட அன்சாரிகள் பணி சாயிதாவில் ஒன்று திரண்டிருப்பதாக எங்களுக்கு கேள்விப் பட்டது.
சந்தேகம் இல்லாமல், அலியும்,ஸுபைரும் அவர்களின் ஆதரவாளர்களும் எங்களை எதிர்த்துக் கொண்டிருந்த வேளையில் முஹாஜிரீன்கள் அபூபக்கருடனும், எங்களுடனும் எங்களது ஆதரவாளர்களாக இருந்தார்கள்"
(ஆதாரம் புகாரி: அராபி, ஆங்கில மொழி மூலம் பாகம் : 8 , ஹதீத்: 817 )
பணி சகீபாவைப் பற்றிய அறிவிப்பில், உமர் (ரலி) அறிவிப்பதாவது:
"அலி இப்னு அபீதாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம் ஆகியோருடன் மிக சொற்பமான சஹாபாக்கள் எங்களை எதிர்த்துக் கொண்டு எங்களை விட்டும் பிரிந்து இருந்தார்கள்.அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமாவின் வீட்டில் ஒன்று கூடி இருந்தார்கள்"
(ஆதாரம் அஹ்மத் இப்னு ஹன்பல்: பாகம் : 1 , பக்கம்: 55 )
(இப்னு ஹிசாமின் சீறா அல் நபவிய்யா பாகம்: 44 பக்கம்: 309 )
தபாரியில் பதிவாகியிருக்கும் இந்த அறிவிப்பைக் கவனியுங்கள்
"அவர்கள் அபூபக்கருக்கு பைஆத் செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர்.ஆனால், அலியும் , ஸுபைரும்அபூபக்கருக்கு பைஆத் செய்வதில் நின்றும் விலகி இருந்தனர்.
ஸுபைர் தனது உடை வாளை உருவியவராக "அலிக்கு மக்கள் பைத் செய்யும் வரையில் நான் இதனை எனது உரையில் வைக்க மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
செய்தி அபூபக்கர் (ரலி) ,உமர் (ரலி) ஆகியோருக்கு எட்டியது.
அவர்களது படையினருக்கு கடிதம் மூலம் உத்திரவு பிறப்பிக்கப் பட்டது.
"கற்களினால் அவரைத் தாக்குங்கள். அவரது வாளை பிடுங்கி எடுங்கள்."
உத்திரவுப் படியே செய்யப் பட்டது.
அதன் பின்னர் அவ்விடத்துக்கு வந்த உமர் அன்னை பாத்திமா (அலை) அவர்களின் வீட்டினுள் சரேலென நுழைந்தார்.
அவர் அலியையும், சுபைரையும் அபூபக்கருக்கு பைஆத் செய்விப்பதற்காக கைது செய்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்.
(ஆதாரம் அத தபாரியின் வரலாறு ஆங்கில மொழி மூலம் பாகம் : 5 , பக்கம்; 188 / 189 )
இதே சம்பவம் பற்றிய குறிப்பொன்று சில ஹதீத் கிரந்தங்களில் பின்வருமாறும் பதியப் பட்டுள்ளது.
உமர் (ரலி) பாத்திமா (அலை) அவர்களின் வீட்டின் அருகே வந்து கூக்குரலிட்டார்.
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து அபூபக்கருக்கு பைஆத் செய்யாவிட்டால் நான் இந்த வீட்டை எரித்துவிடுவேன்"
( ஆதாரம்: இப்னு அதீரின் வரலாறு பாகம்: 02 பக்கம்: 325 )
(இப்னு அப்துல் பாறுடைய அல் இஸ்தியாப் பாகம்: 03 பக்கம்: 9975 )
(இப்னு குதைபாவின் தாரீக் அல் குலபா பாகம்; 01 பக்கம்; 20 )
இந்தத் தகவுகளில் இருந்து முக்கியமான இந்த சஹாபாக்களும் அபூபக்கர் (ரலி௦) க்கு பைஆத் செய்ய மறுத்திருக்கிறார்கள்.
ஹசரத் உமர் (ரலி) அப்படி மறுத்தவர்களை பலவந்தமாக இஸ்லாமிய தலைமைக்கு பைஆத் செய்ய நிர்ப்பந்தித்து இருக்கிறார்கள்.
ஹசரத் உமர் (ரலி) அப்படி மறுத்தவர்களை பலவந்தமாக இஸ்லாமிய தலைமைக்கு பைஆத் செய்ய நிர்ப்பந்தித்து இருக்கிறார்கள்.
அப்படி என்றால், இஸ்லாமிய சரீஆவில் பைஆத் அவ்வளவு முக்கியமானதா?
பைஆத் என்றால் நிஜத்தில் என்ன?
பைஆத் என்பதன் சரியான இலக்கண அர்த்தம் விற்பனை செய்தல் என தொணிக்கும்.
யாராவது ஒரு பொருளை விற்பனை செய்ததன் பிறகு அப்பொருளுக்கு அவரால் அதன் பின்னர் உரிமைக் கோர முடியாது.
இஸ்லாமிய ஷரியாவில் ஒரு இமாமுக்கு அல்லது தலைவருக்கு பைஆத் செய்வது என்பது பைஆத் செய்தவர் தனது நப்ஸை அந்த இமாமுக்கு அல்லது தலைவருக்கு விற்று விட்டதாக ஆகிவிடும்.
அதன் பின்னர், பைஆத் செய்தவரின் செயல் சுதந்திரம் அனைத்தும் மட்டுப் படுத்தப் பட்டதாக ஆகிவிடும்.
பைஆத் செய்தவரின் அனைத்து விடயங்களும் அந்த இமாமின் அல்லது தலைவரின் உரிமையாக மாறிவிடும்.இந்த வகையில், தனது நப்ஸை விற்று விட்டவரின் அனைத்து அதிகாரங்களும், தெரிவுகளும் தான் பைஆத் செய்து ஏற்றுக் கொண்ட அந்த அதிகாரம் அளிக்கப் பட்டவரின் தெரிவுகளாகவும், ஆசைகளாகவும் ஆகி விடல் வேண்டும்.
இதுதான் பைஆத் என்பதன் சரியான விளக்கம் ஆகும்.
பைஆத்தின் இந்த அர்த்தம் தெரிந்ததன் காரணமாகத்தான் எங்களது கலீபாக்கள் தமக்கு பைஆத் செய்ய மறுத்தவர்களை பலவந்தமாக வற்புறுத்தி பைஆத் பெற்றுக் கொள்ள முயன்று இருக்கிறார்கள்.
பைஆத்தின் நிஜமான அர்த்தம் தெரிந்ததன் காரணமாகத்தான் இமாம் அலியும், அன்னை பாத்திமா (அலை) அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இஸ்லாத்துக்கு முரண் பட்ட தலைமைக்கு பைஆத் செய்ய மறுத்தது மட்டுமன்றி அத்தகைய தலைமைகளுக்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள்.
கலீபாக்களின் சுன்னாவை பின்பற்றிய யசீத் ஒரு படி மேலே போய் நபி (ஸல்) அவர்களின் பேரனையும் அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களையும் பச்சை பச்சையாக கொன்று குவித்தார்.
அப்படி அநியாயமாக கொன்றது மட்டுமன்றி அவரது தந்தை அமீர் முஆவியாவின் சுன்னாவைப் பின்பற்றி அவர்களது தலையையும் கொய்து ஊர்கோலம் போனார்.
இந்தளவு வலிமை வாய்ந்த பைஆத் எங்களது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் புண்ணியத்தால் நாளுக்கு நாள் நலிவடைந்து அர்த்தம் சிதைந்து இன்று அமெரிக்க ஆதரவு சவூதி நிதியியலில் தங்கி இருக்கின்ற இயக்கங்களின் தலைமைக்கு கட்டுப் படுவதாக சத்தியப் பிரமாணம் செய்தல் என்ற அளவில் வந்து நிற்கிறது.
நாம் எமது விமோசகர்களாக சர்வதேச ரீதியில் யூசுப் அல் கர்ளாவியையும்,
ஒசாமா பின் லேடனையும், தேசிய ரீதியில் ரிஸ்வி முப்தியையும், அகார் சேரையும், ஹஜ்ஜுல் அக்பரையும் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ சலபி தலைவர்களையும் பைஆத் செய்ய நம்பி இருக்க அவர்களோ அமெரிக்கக் டொலர்களுக்கும் சவூதி ரியால் களுக்கும் குவைத்திய தீனார்களுக்கும் பைஆத் செய்து விலை போய்விட்டார்கள்.
எங்கள் நப்ஸை விற்பனை செய்ய நாம் தயார்.
அதனை வாங்கி எம்மை சரியாக வழிநடாத்த தேவை ஒரு இமாம்!
அவரை எமக்கு இனம் காட்டுங்கள். உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்போம்.

1 comment:
In a salty land no plant would grow.Koran and Mohamed responsible for all this tragey.You have nothing to hide from your wife and slave /war captive/women belonging to weeker families.- Yasin and others simply followed Mohammed/ Koranic directive and raped thousands of innocent women.That was repeated when Pakistan -(Urdu speaking Muslims )-forces occupied Bangaladesh- lakhs of Hindus and Bengali speaking Muslims women were cruelly raped . Iraq Military under the Leadership of Sadam Qusain raped the Kuwait women as directed by Allah in Koran.That is why I am saying that Mohammed and Koran is out of date. liberate Yourselves from Koran/Mohammed - it is better for the world and Arab nation.
Post a Comment