அஹ்லுல்பைத் Headline Animator

Friday, May 20, 2011

பெருமிதத்துடன் ஒரு அறிமுகம்!...உலக வரலாற்றிலே முதலாவது தாதி.........


பெருமிதத்துடன் ஒரு அறிமுகம்!...உலக வரலாற்றிலே முதலாவது தாதி.........
மூடி மறைக்கப் பட்ட அவரது சேவைகள்......முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் உத்திகள்???????


ப்லோரேன்ஸ் நைட்டிங்  கேர்ளின் பிறந்த தினம் சர்வதேச தாதிமார்களின் தினமாக கொண்டாடப் படுகிறது.

அதற்கு காரணமும் இருக்கிறது.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர், ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து மூன்றில் இருந்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து ஆறாம் வருடம் வரை, அதாவது சுமார் மூன்று வருடங்கள் 'க்ரிமீன் ' யுத்தம் ரஷ்ய பேரரசுக்கும், பிரான்ஸ் பேரரசுக்கும் இடையே நடைபெற்றது.

இதில், பிரான்சுக்கு ஆதரவாக அதன் நேச அரசுகளான பிரிட்டிஸ் பேரரசு,உதுமானிய பேரரசு, சர்டினியா இராஜ்யம் ஆகியன துணை நின்றன.

இந்த யுத்தத்தின் போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த ப்லோரேன்ஸ் நைட்டிங் கேர்ள் தனக்கு இறைவன் தாதியாக கடமை செய்யுமாறு கட்டளை பிறப்பித்ததாக கூறிக் கொண்டு போர் களம் வந்து காயம் பட்ட யுத்த வீரர்களுக்கு பணிவிடை செய்ய துவங்கினாள். 

சரித்திரத்தில் முதன் முதலில் யுத்த களத்துக்கு துணிவுடன் வந்த அவளது சேவையை உலகம் இன்றுவரை நன்றியுடன் நினைவு கூர்கிறது.

ஆனால், முதன் முதலில் தாதியாக யுத்தகளத்தில் சேவை செய்தவர் யார் என்று ஆராய்ந்துப் பார்த்தால் அதிர்ச்சியான சில உண்மைகள் வெளி வருகின்றன.

உலகத்தின் முதலாவது தாதி யார்?


சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னர் யுத்த களத்தில் துணிவுடன் சேவை செய்த அவர் வேறு யாருமில்லை.

எங்கள் நபி மகள் பாத்திமா (அலை) அவர்கள்தான் அந்த மகத்தான கௌரவத்துக்கு உரித்தானவராக இருக்கிறார்.

பிரமிப்பாக இல்லை?

உலக வரலாற்றிலேயே முதன் முதல் யுத்த களத்துக்கு வந்து காயம் பட்டவர்களுக்கு பணிவிடை செய்த "முதல் தாதியாக' அவர் இருந்தாலும், வரலாற்றிலே பலவந்தமாக மறைக்கப் பட்ட பக்கங்களில் அவரது தன்னலம் இல்லாத சேவைகளும், முன் உதாரணங்களும் இரகசியமாக ஒழித்து பதிக்கப் பட்டிருக்கின்றன.

இதற்கு பிரதான காரணமாக அவர்களுக்கு எதிரான அரசியல் அடக்கு முறை  இருந்திருக்கிறது.

வாழ்க்கையின் முன் உதாரணமாக அவர்களின் கதைகள் வெளியே சொல்லப் படுவதை தடுப்பதில் அக்கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள். 

அடக்கி வாசிக்கப் படுகின்ற இஸ்லாமிய அரசியலில் அஹ்லுல் பைத்களுக்கு எதிரான கொடூரங்களில் இதுவும் ஒன்று.

புஹாரி ஹதீத் கிரந்தத்தில் அந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது.

சஹ்ல்  பின் சஆத்  (ரலி௦) அவர்கள் கூறியதாவது;

"உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே நொறுக்கப் பட்டு , முகம் முழுவதும் இரத்தமயமாகி அவர்களுடைய பற்களில் ஒன்று உடைக்கப் பட்டு விட்ட போது அலியவர்கள் தனது கேடயத்தில் அவ்வப் போது தண்ணீர் கொண்டு வந்தார்கள்.

பாத்திமா (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காயத்தை கழுவிக் கொண்டு இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காயத்தில் இருந்து இரத்தம் வடிவது நிற்க வில்லை.

இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட பாத்திமா (அலை௦) அவர்கள் ஒரு பாயை எடுத்து அதை எரித்து அதனை நபி (ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள்.

அதன் பின்னர் இரத்தம் வழிவது நின்று விட்டது.
(ஆதாரம்; புஹாரி பாகம்: மூன்று ஹதீத் : 2903 / 2911 )       

இதன் பிறகு , யாராவது எங்களிடம் உலகத்தின் முதலாவது தாதி யார் என்று கேட்டால் ,பெருமிதமாக அது நபி மகள் பாத்திமா (அலை) என்று கூறத் தொடங்குவோமாக.

எங்களது குழந்தைகளுக்கும் அந்த உண்மையை சொல்லிக் கொடுப்போமாக.

1 comment:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad