அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, January 9, 2013

மரத்துப் போன மனித நேயம்........

குழந்தை வயதில் தெரியாமல் செய்த தவறுக்காக ரிசானா நபீக் இஸ்லாத்துக்கு முரணான சவூதி அரசினால் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு முரணாக சிரச்சேதம் செய்து கொலை செய்யப் பட்டார்........

இக் கொலைக்கு உடந்தையானவர்களுக்கு என்ன தண்டனை?

நீதி வழங்கும் நீதி மன்றம் எங்கே?

"யா! அல்லாஹ்........அநீதத்தை கண்டும் எதுவும் செய்ய நாதியில்லாமல் தவிக்கும் நம்மை வழி நடாத்த ...அநீதத்துக்கு ஆளானவர்களை மீட்டெடுக்க இமாம் மஹ்தியை விரைவாக அனுப்பி வைப்பாயாக...! "



வாழ்க சவூதி இஸ்லாம்..........

பணத்துக்காக ஹலாலுக்கு வழி சொல்ல தெரிந்திருக்கும் இலங்கை ஜம்மியத்துல் உலமா.........ஏழைக் குடும்பங்களின் விடிவுக்கு எப்பொழுது வழி சொல்லப் போகிறது....?

சவூதி அரசுக்கு காக்காய் பிடிக்கும் ஜம்மியத்துல் உலமாவுக்கு வாழ்த்துக்கள்.......


நரகத்துக்கு வழி சொல்லும் நாயகர்கள்..........

4 comments:

Dr.Anburaj said...

Heartless,arrogant,stagnant, pagan yet to grow fully is Arab culture - This is sharia. Unless the world throw away all the Arab Books into the Bay of Bengal and adopt a spring like life philosophy freely drawn from all available sources
such tragedy could never be averted. I am praying for her. O God save us from the cruel Arab Books.

அஹ்லுல்பைத் said...

நன்றி .....அன்புராஜ்! உங்களது மனமுருகிய பிரார்த்தனைக்கு நன்றி.!

நேற்று நமது நண்பர் ஸைபின் மகள் எனது அலுவலகத்துக்கு வந்திருந்தாள்.

அவளை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவளைத் தெரியாதவர்கள் நமது "நேட்டோ படையினரின் மனோவியல் யுத்த நகர்வுகள்" பதிவுக்கு சென்றால் அவளை இனம் காண முடியும்.

ரிசானா நபீக்கின் கொலை செய்தியைக் கேட்டவுடன் அவள் நேரே என்னைக் காண எனது அலுவலகத்துக்கு வந்திருந்தாள்.

அவள் என்னிடம் ஆற்றாமையுடனும் வெறுமையுடனும் இப்படி சொன்னாள்.

"அங்கிள்.......ஆக்கிரமிப்பும்,அராஜகமும்,அத்துமீறலும்,கொலையும்,கொள்ளையும்,கற்பழிப்பும் என்ற அராஜகமான இஸ்லாத்தை சின்ன வயதில் கண்டிருந்த ......வாசித்து அறிந்திருந்த எனக்கு இஸ்லாம் என்றாலே அலர்ஜிக்காக இருந்தது.இதோ........உமையாக்கள் தொடக்கி வைத்த அநியாயம் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. எனக்கு அறிமுகப் படுத்தப் பட்ட அந்த இஸ்லாம் பனு உமையாக்களின் இஸ்லாம் என்று புரிந்ததன் பின்னர்தான் கடுமையான தாக்குதலுக்கும்,கண்டனங்களுக்கும் ஆளாகி இருக்கின்ற தூய இஸ்லாத்தின் மீது எனக்கொரு அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது.நல்லவேளை.......அஹ்ளுல்பைத்களையும் சரியான இஸ்லாத்தையும் நீங்கள் எனக்கு புரிய வைத்தீர்கள்.அதற்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கு உளமார நன்றி செலுத்துகிறேன்"

ரிஸானா நபீக்கின் அநீதத்துக்கு என்ன செய்வதென்று அறியாமல் மனமுடைந்து கூனிக் குறுகி நின்ற வேளை இளம் தென்றலின் மெலிதான வருடலாக நெஞ்சுக்கு இதமாக அந்த மகளின் வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளித்தது.

Dr.Anburaj said...

Thank you . We should take up this matter through diplomatic channel and the Ambassador of SriLanka for Sauthi Arabia should negotiate the matter and get her extradiction at once.Desiltation of Arabic religious field is a tremendous task.May God bless you

irukkam said...

சவூதி அரசாங்கம் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இறையாண்மை உடைய ஒரு நாடு என்ற வகையில் அதன் உரிமையாகும். என்றாலும், அதனை நடைமுறைப்படுத்தும் போது எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை என்பதை 100% உறுதிப்படுத்த வேண்டியது அதன் கடமையாகும். கொலைக்கு மரண தண்டனை வழங்கப்படுவது அங்குள்ள தண்டனை முறை. எனினும், நடந்தது கொலைதானா என்பதை சந்தேகத்துக்கிடமின்றி உறுதிப்படுத்திய பின்பே அது தண்டனையை அமுல்நடாத்தி இருக்க வேண்டும்.

உதாரணமாக, நடந்தது கொலைதானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இறந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அது உத்தரவிட்டிருக்க வேண்டும். (இதனை இலங்கை அரசும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்க வேண்டும். அதைக் கோட்டைவிட்டு விட்டு, எல்லாம் நடந்து முடிந்தபின் தனது தூதுவரைத் திரும்ப அழைத்துக்கொள்வது தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் செயலாகும்).

இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான "நீதி நிலைநிறுத்தப்படுதல்" என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!

பெற்ற பிள்ளைக்கு முலைப்பால் ஊட்டும்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்த சம்பவங்கள் நிகழவே செய்கின்றன. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் "தாய் குழந்தையை கொலை செய்துவிட்டாள்" என்று மரணதண்டனை விதிப்பது எவ்வளவு அநீதியானதோ, அதுபோலவே ரிஸானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் அநீதியானதே. ஷரீஆ சட்டம் உட்பட உலகில் நடைமுறையில் உள்ள எந்த ஒரு சட்டமும் நீதியையும் தர்மத்தையும் நிலைநிறுத்தும் பொருட்டே வகுக்கப்பட்டுள்ளன. அவை, அநீதிக்குத் துணைபோகின்ற நிகழ்வுகள் வேதனை அளிப்பதே.

www.inneram.com

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad